ஐயமும்! தெளிவும்!!

in 2017 ஆகஸ்ட்,ஐயமும்! தெளிவும்!!

ஐயம் : இன்ஷா அல்லாஹ் இவ்வருடம் ஹஜ் செய்ய இருக்கிறேன். (என்னுடன் என் மனைவியும் வருகிறார்) ஊரில் உள்ளபோது என் குடும்பத்திற்கு ஒரு குர்பானிதான் கொடுப்பது வழக்கம்; நபி(ஸல்) அவர்களின் வழிமுறைப்படி தான். ஹஜ் காலத்தில் நானும் என் மனைவியும் தனி தனியே குர்பானி கொடுக்க வேண்டுமா? ஒரு குர்பானி கொடுத்தால் போதுமா?
வாசகர், போன் மூலம்.

தெளிவு: ஹஜ் கடமையை நிறைவேற்றச் செல்லும் ஒவ்வொரு ஆணும், பெண்ணும் அவர்கள் கணவன் மனைவியாக இருந்தா லும் தனித்தனியாக குர்பானி கொடுப்பதே நபிவழியாகும். அதற்கு மாறாக ஹஜ்ஜுக் குச் செல்லாதவர்கள் கணவன், மனைவி, பிள்ளைகள் அனை வருக்கும் சேர்த்து ஒரு குர்பானி கொடுப்பதே நபி வழியாகும். நீங்கள் கணவன் மனைவி இருவரும் ஹஜ்ஜுக்கு சென்ற நிலையில் ஊரில் உங்களோடு இருக்கும் மக்களில் யாரும் இருந்தால் அவர்கள் ஊரில் அவர்களுக்காக குர்பானி கொடுக்கலாம். காரணம் நீங்கள் இருவரும் அங்கு குர்பானி கொடுப்பது, ஹஜ் கிரியைகளில் உள்ளதாகும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் உங்கள் இருவரின் அனைத்துப் பாவங்களையும் மன்னித்து அன்று பிறந்த பாலகர்கள் போலாக்கி, உங்கள் இருவருடைய ஹஜ் ஜையும் ஏற்று அருள்புரிய அல்லாஹ்விடம் துஆ செய்கிறோம்.

ஐயம்: ஹஜ் காலத்தில் குர்பானி நிறைவேற்ற ஹஜ் செய்பவர் பிராணியை குர்பானி கொடுக்கும் இடத்திற்குச் சென்று அவரே குர்பானி பிராணியை அறுக்க வேண்டுமா? அல்லது அரசாங்கத்தில் குர்பானிக்கு பணம் கட்டினால் போதுமானதா? மேலும் ஹஜ் செய்யாதவர்களும் குர்பானி கொடுக்க கூடியவர்கள் பிறை 1 முதல் குர்பானி பிராணி அறுக்கும் வரை முடி, நகம் இவைகளை நீக்கலாமா?
அபூ அஸ்லம், பாண்டிச்சேரி.

தெளிவு : யூத, கிறித்தவ, முஸ்லிம் மூன்று சாராரின் மூலவரான இப்றாஹீம்(அலை) அவர்களுக்கும், அவரது மனைவி ஹாஜரா (அலை) அவர்களுக்கும் மகன் இஸ்மாயீல் (அலை) அவர்களுக்கும் அல்லாஹ் ஏற்படுத் திய மிகமிகக் கடுமையான சோதனையில் அவர்கள் மூவரும் மகத்தான வெற்றி பெற்றதின் நினை வாகவே முஸ்லிம்களுக்கு ஹஜ் கடமையாக்கப்பட்டிருக்கிறது.

ஹஜ்ஜில் ஹாஜிகள் செய்யும் ஒவ்வொரு செயலும் அம்மூவரும் செயல்படுத்திய செயல்களை நினைவு கூர்வதாகவே அமைந் துள்ளன. இஸ்மாயீல்(அலை) அவர்களை அறுக்கும்படி இப்றாஹீம்(அலை) கனவு கண்டார்கள். (பார்க்க 37:102) நபிமார்க ளின் கனவு இறைக் கட்டளையே. இந்த இறைக் கட்டளையை நிறைவேற்ற அம் மூவரும் துணிந்தனர். அல்லாஹ் ஏற்படுத் திய சோதனையில் மகத்தான வெற்றி பெற்ற னர். அதற்குப் பகரமாக ஒரு ஆட்டைக் குர்பானி கொடுக்க அல்லாஹ் கட்டளை யிட்டான்.

அதன் ஞாபகார்த்தமாகவே ஒவ்வொரு ஹாஜியும் அங்கு குர்பானியை நிறைவேற்று கிறார்கள். எனவே இப்றாஹீம்(அலை) ஆட்டை குர்பானி கொடுத்த இடத்தில் நபி (ஸல்) அவர்களும் குர்பானி கொடுத்து நமக்கு வழிகாட்டி இருக்கிறார்கள். எனவே ஹஜ் செய்பவர்கள் குர்பானி கொடுக்கும் இடத்திற்குச் சென்று அவரே குர்பானி பிராணியை அறுப்பதே நபி வழியாகும். அதே போல் அறுத்த அப்பிராணியின் மாமிசத்தை வீணாக்காமல், அங்கேயே போட்டு விட்டு வராமல் நபி(ஸல்) அவர்கள் அம்மாமிசத்தை மக்களின் உணவுத் தேவைக்கு பயன்படுத்தியது போல் நாமும் முழுமையாக பயன்படுத்த வேண்டும். அதுவே நபிவழியாகும்.

ஆனால் இன்று என்ன நடக்கிறதென் றால் குர்பானி நடக்கும் இடத்தில் தங்கள் குர்பானி பிராணியை அறுத்துவிட்டு அப் படியே போட்டு விட்டு வந்து விடுகிறார் கள். அல்லது அதில் ஒரு சிறு பகுதியை மட்டும் எடுத்துக் கொண்டு எஞ்சிய பெரும் பகுதியை அப்படியே போட்டு விட்டு வந்து விடுகிறார்கள். அவை அங்கு மலை போல் குவிந்து விடுகின்றன. பின்னால் குர்பானி கொடுக்கச் செல்லும் ஹாஜிகள் அவற்றில் ஏறி மிதித்துக் கொண்டு செல்லும் சிரமம் ஏற்படுகிறது. அதனால் வயதானவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிறார்கள். சவுதி அரசு இப்போது சில வசதிகள் ஏற்படுத்தித் தந்திருந்தாலும், அதனால் சிரமங்கள் குறைந்திருந்தாலும், அங்கு விடப்படும் லட்சக்கணக்கான பிராணிகளின் மாமிசம் அழுகி பெரும் சுகாதாரக் கேட்டை ஏற்படுத்துகிறது.

சில மவ்லவிகளும், அவர்களை கண் மூடிப் பின்பற்றுபர்களும் (முகல்லிதுகள்) ஹாஜிகள் தங்களின் குர்பானி பிராணிகளை தங்கள் கைகளால் அறுப்பதே அசலான சுன்னத்-நபி வழி என்பார்கள். உண்மை தான். ஹாஜிகள் அறுப்பதே நபி வழி; அதே போல் அந்த அறுத்த பிராணிகளை வீணாகா மல் சாப்பிடுவதும் அதை விட முக்கியமான நபிவழி; தனது உணவுத் தேவை அல்லாமல் ஒரு சிறு குருவியை அறுப்பதும் அல்லது ஒரு மரத்தின் ஒரு சிறிய கிளையை முறித்து எறிவதும் நபிவழிக்கு முரணாகும். இந்த நிலையில் ஒரு ஆட்டையே அறுத்துவிட்டு அதை முறையாகப் பயன்படுத்தாமல் குவிய விட்டு, அழுகச் செய்து, அவற்றை குழி தோண்டி புதைப்பது எப்படி நபி வழி யாகும்? இதை அந்த மவ்லவிகளும் அவர் கள் பின்னால் கண்மூடிச் செல்பவர்கள் களும் உணர்வதாக இல்லை.

எனவே ஹாஜிகள் அவர்கள் அறுக்கும் பிராணிகளை முழுமையாக உணவுக்குப் பயன் படுத்துவதாக இருந்தால் மட்டுமே, மேலும் அந்தப் பெருங்கூட்டத்தில் பெரும் சிரமம் எடுத்து அறுக்கும் இடத்திற்குச் சென்று தங்கள் பிராணியை தாங்களே அறுக்கும் உடல் தகுதி இருந்தால் மட்டுமே, தாங்களே சென்று அறுக்க முற்பட வேண்டும்.
அறுத்த பிராணி பயன்படாமல் அழுகி வீணாகும் நிலையோ, பெரும் சிரமப்பட்டு அறுக்கும் இடம் சென்று அவர்களே அறுக் கும் நிலையோ இருந்தால் அதை தவிர்ப் பதே சரியாகும். எந்த ஒரு ஆத்மாவையும் அதன் சக்திக்கு மீறி அல்லாஹ் சோதிப்ப தில்லை என அல்லாஹ் திட்டமாகப் அல்குர் ஆனில் பல இடங்களில் கூறியுள்ளான்.
(பார்க்க : 2:233, 286, 6:152, 7:42, 23:62)

அறுத்த பிராணியை முழுமையாகப் பயன்படுத்த முடியாதவர்களும், அறுக்கும் இடம் சென்று தானே அறுப்பதை பெரும் சிரமமாகக் கருதுகிறவர்களும், சவுதி அரசிடம் குர்பானிக்கு பணம் கொடுத்து விடுவதே நல்லது. ஹஜ் செய்யாதவர்கள் தங்கள் ஊர்களில் குர்பானி கொடுப்பவர் களும் துல்ஹஜ் பிறை ஒன்றிலிருந்து குர்பானி கொடுக்கும் வரை நகம் இவற்றை நீக்காமல் இருப்பதே நபிவழியாகும்.

Previous post:

Next post: