சகாப்தங்கள் மறைவதில்லை!

in 2017 ஆகஸ்ட்

மீரான், துபை.

அளவற்ற அருளாளனும் நிகரற்ற கிருபையுடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப் பெயரால் ஆரம்பம் செய்கின்றேன்.

1. சகாப்தங்கள் மறைவதில்லை.
2. தொடங்கிய சகாப்தங்கள் கியாமத் நாள் வரை தொடர்ந்து கொண்டேயிருக்கும்.
3. இறுதித் தூதர் ரசூல்(ஸல்) அவர்கள் தொடங்கிய ஏகத்துவப் பணியை கியாமத் நாள் வரை வல்ல அல்லாஹ் யார் மூலமாவது தொடர்ந்து கொண்டேயிருப்பான்.

நம் தமிழ்நாட்டில் புரையோடிக் கிடந்த ´ஷிர்க், பித்அத், தனி நபர் வழிபாடு, புரோகிதம் இவைகளுக்கு எதிராக வல்ல அல்லாஹ் நமக்களித்த வாழ்க்கைத் திட்டம் “”அல்குர்ஆன்” மற்றும் நம் தூதர் நபி முஹம்மது (ஸல்) அவர்களின் சொல் செயல்பாடு மற்றும் அங்கீகாரம் இதன் அடிப்படையில் ஏப்ரல் 1986ல் தொடங்கியதே “”அந்நஜாத்” என்ற இஸ்லாமிய மாத இதழ்.

இதற்கு உறுதுணையாக துபையிலிருக்கிற இஸ்லாமிய சகோதரர்களின் முயற்சியால் இந்த மாத இதழ் உருவானது.
இந்த பத்திரிக்கையின் நோக்கம் ´ஷிர்க் விழிப்புணர்வு, பித்அத், தனி நபர் வழிபாடு, புரோகிதம் இவைகளை எந்த காம்ப்ரமைஸ் இல்லாமலும், உண்மையை உரக்கச் சொல்வது தான். இதன் பொறுப்பாளராக பத்திரிகையின் தொடக்கத்தில் இருந்து ஹத்தாதின் மகன் அபூ அப்தில்லாஹ் என்ற K.M.H .ஷாகுல் ஹமீது, இதன் ஆசிரியராக P.ஜைனுல் ஆப்தீன் உலவி நியமிக்கப்பட்டார். தொடங்கிய குறுகிய காலத்தில் இந்த பத்திரிகையின் கொள்கையிலிருந்து மாறுபட்டதால் ஆசிரியராக அபூ அப்தில்லாஹ்வே இருந்து வந்தார்.

இந்தபத்திரிக்கை ஆரம்பம் செய்த முதலே மக்களிடம் ஏகத்துவ கொள்கை விழிப்புணர்வு ஏற்பட்டது. இதனால் ஏழு வருடம் படித்து பட்டம் பெற்ற ஆலிம்கள் மூலம் கடுமையாக எதிர்ப்பு கிளம்பியது. எல்லா எதிர்ப்புகளையும் சமாளித்து ஜூலை 2017 வரை இந்த பத்திரிக் கையை சகோதரர் அபூ அப்தில்லாஹ் அவர்கள் நடத்திக் கொண்டிருந்தார்கள். இந்த கொள்கையில் முழுவதுமாக நிலைத்து வந்து, விரல் விட்டே எண்ணக்கூடிய சில பேர்களின் உதவியால் 2017 ஜூலை இதழ் வரை திடமாக வந்தது.

ஆம் அன்று 13.07.2017 சூரத்துல் அன்னிஸா 114வது வசனப்படி அல்லாஹ்வின் பொருத்தத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு ஒரு குடும்பத்தில் சீர்திருத்தத்தை ஏற்படுத்துவதற்காக தன் குடும்பத்துடன் வீட்டை விட்டு சென்றவர் வழியிலேயே வாகன விபத்திற்குள்ளாகி மரணம் எய்தினார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன், வல்ல அல்லாஹ் ஹதீஃத்களின் அடிப்படையில் இவருடைய மரணம் ஷிஹதாக்களின் மரணத்திற்கு ஈடாக்குவானாக. வல்ல அல்லாஹ் அவரை பொருந்திக் கொண்டு அவரின் எல்லா பாவங்களையும் மறைத்து மன்னித்து அவரை புது மாப்பிள்ளை போல் அடக்கஸ்தலத்தில் தூங்க வைக்க போதுமானவன். வல்ல அல்லாஹ். அவரை இழந்து பரிதவிக்கும் குடும்பத்தாருக்கும், ஏனைய அனைவருக்கும் அழகிய பொறுமையை கொடுத்து அருள்பாலிப்பான்.

நாம் படிப்பினை பெறவேண்டும் என்பதற்காக அவர் கடந்து வந்த பாதையை பின்னோக்கி சென்று சிறிது பார்ப்போமாக.

1942ல் K.M.ஹத்தாத் அவர்களின் மகனாக (அப்போதையய நெல்லை மாவட்டம் இப்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள) உடன்குடியில் பிறந்தார். சிறு வயது முதலே மார்க்கத்தின் மீதும், மார்க்கப் பணியின் மீதும் பற்றுடையவராக அல்லாஹ் ஆக்கி வைத்தான். அவனுக்கே எல்லாப் புகழும்!

முதலில் தப்லீக் ஜமாஅத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அதில் முழுமூச்சாக இறங்கி செயல்பட்டார். அவர்களின் கொள்கை கோட்பாடுகளில் அவருக்கு சந்தேகம் பிறந்தது. அது முதல் அவர்களின் புத்தகங்களில் உள்ள விஷ்யங்களை குர்ஆன், ஹதீஃதோடு ஒப்பிட்டுப் பார்க்க முயன்றார். அதில் பல வி­யங் கள் இஸ்லாமிய அகீதாவிற்கு (கொள்கைகள்) முரண்பட்டிருப்பதை கண்டார். அப்போதிலிருந்து இது சம்பந்தமாக அமீர்களிடம் மற்றும் பல அறிஞர்களிடம் ஆதாரங்களோடு சமர்ப்பித்தார். இதற்காக டெல்லி சென்று தப்லீக் ஜமா அத்தின் தலைமையிடம் முறையிட்டு குறை களை நிவர்த்தி செய்ய கேட்டுக் கொண்டார். ஆனால் அவர்கள் எந்த ஒன்றையும் மாற்றுவதாக இல்லை. அன்று முதல் தப்லீக் ஜமாஅத்தை விட்டு ஒதுங்களானார்.

இந்த சம்பவத்திற்குப் பிறகு குர்ஆன், ஹதீஃதை அதன் மொழி பெயர்ப்புடன் நேரடியாக பார்த்து மார்க்க விஷயங்களை விளங்க வேண்டும். மற்றவர்களுக்கும் விளங்கச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவரிடம் மிகுந்து இருந்தது. திருச்சி சூசையப்பர் தேவாலயத்தில் “”பல்சமய சிந்தனை” என்ற தலைப்பில் அவர் பேசிய பேச்சு இஸ்லாமிய கொள்கைகள் என்ன என்று மக்களுக்கு புரியத் தொடங்கியது.

ஆம்! அது ஏப்ரல் 1986! தமிழ்நாடு முஸ்லிம் சமுதாயத்தில் ஏற்பட்ட மிகப் பெரிய எழுச்சி அபூ அப்தில்லாஹ் அவர்களை நிர்வாகியாக்கி P.ஜைனுல் ஆபிதீன் அவர்களை ஆசிரியராக கொண்டு “”அந்நஜாத்” என்ற இஸ்லாமிய மாத இதழ் துவங்கப்பட்டது. இது தமிழ் சமுதாயத் தில் புரையோடிக் கிடக்கும் ´ஷிர்க், பித்அத் களை எடுத்துச் சொல்லி முஸ்லிம்களை சீர் திருத்த வெண்டும் என்ற நல்லுள்ளம் கொண்ட அப்போதைய துபை இஸ்லாமிய சகோதரர்களின் கூட்டு முயற்சி. குறிப்பிட்ட சிலரின் பங்கு மாசற்ற அல்லாஹ்வின் பொருத்தத்திற் காகவே அமைந்திருந்தது. அல்லாஹ் அவர் களை பொருந்திக் கொள்வானாக. துபை இஸ்லாமிய இளைஞர் இயக்கம் சேர்ந்த சகோதரர்கள் பங்கு மாசற்ற அல்லாஹ்வின் பொருத்தத்திற்காகவே அமைந்திருந்தது.

முதல் இதழ் வந்தவுடனேயே ஆலிம்களிட மிருந்து கடுமையான எதிர்ப்புகள் வந்தாலும் மக்களிடையே விழிப்புணர்வு வந்ததை நாங்கள் நேரடியாகக் கண்டோம். கூட்டம் கூட்டமாக அதரவுகள் பெருகின. இதைக் கண்ட ஷைத்தான் இதில் ஈடுபட்ட உலமாக்களிடையே பல பிரச்சினைகளை உண்டுபண்ணி அபூ அப்தில்லாஹ் மீது பொருளாதார மோசடி என்ற குற்றச் சாட்டை வைத்தனர். அதற்கு ADHOC கமிட்டி அமைத்து அவர்களின் கணக்குகளை சரிபார்க்க வைத்தனர். ADHOC கமிட்டி அதன் ஆய்வின் இறுதியில் எந்த பண மோசடியோ, கணக்கு மோசடியோ இல்லை யயன்று தீர்ப்பு கொடுத்து அதில் கையயழுத்து இட்டனர்.

இதற்கு பிறகு ஷைத்தான் மேலும் அவன் வேலையைக் காட்டி அபூ அப்தில்லாஹ் மெளலவி அல்ல நாம் மெளலவி என்ற பிரிவினை ஏற்படுத்தி இவரை விட்டுபிரிந்து சென்றனர். அதன் பிறகு ஏகப்பட்ட பிரிவினைகள் உண்டானதை எல்லோரும் அறிந்ததே.

P. ஜைனுல் ஆபிதீன் அவர்கள் பல குற்றச் சாட்டுகளை வைத்தார். மேலும் பிரிவினை வாதத்தை ஆதரித்தார். அவரோடு நேரடியாக பல விஷயங்களை அழகிய முறையில் விவாதம் செய்வதற்கு அந்ஜாத் பத்திரிகையிலேயே அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் P. ஜைனுல் ஆபிதீன் அவர்களோ அவரிடம் அபூ அப்தில்லாஹ் விவாதம் செய்வதற்கு தகுதியற்றவர். காரணம் ஏழு வருடம் மதரஸாவில் ஓதி ஆலிம் பட்டம் பெற்றவரல்ல.

இத்தனை பிளவுகளுக்கும், பிரிவுகளுக்குப் பிறகு அந்நஜாத் பத்திரிகையை ஒருசில நல்ல உள்ளங்களின் உதவியால் ஜூலை 2017 இதழ் வரை நடத்தி வந்தார். இந்தச் சமுதாயத்தில் நிறைந்து கிடக்கும் ´ஷிர்க், பித்அத், மெளட்டீகம் அத்தனைக்கும் ஏழு வருடம் மதரஸாவில் பயின்று பாக்கவி, மஹ்லரி, உலவி போன்ற பட்டங்களை பெற்று வந்த ஆலிம்கள்தான் மூல காரணம் என்ற கொள்கையில் எந்த உடன் பாடும் செய்யவில்லை. அவர்களை விமர்சனம் செய்வதில் முதலாம் நபராக இருந்தார். ஆனால் எந்த ஆலிமையும் எதிரியாக கருதி அவர்களை வெறுத்தோ அவர்கள் சொல்லும் விளக்கத்திற்கு பதில் சொல்லாமல் இருந்ததில்லை. இதுதான் இந்த இஸ்லாமிய அழைப்பாளருக்கு அல்லாஹ் கொடுத்த பெரிய நிஃமத்.

அல்லாஹ் அவருக்கு என்ன முன்னறிவிப்புச் செய்தானோ அதனை அவன் மட்டுமே அறிவான். அதனால்தான் ஜூலை 2017 இதழில் “”அந்நஜாத்தின் பணி தொடர வேண்டிய அவசியம்” என்ற தலைப்பில் தலையங்கம் ஒன்றை எழுதி அதில் நஜாத்தின் பொருளாதார நிலைமை குறிப்பிட்டுள்ளார். அதில் இந்த நஜாத் மீண்டும் தொடர்வதற்கு எல்லோருக்கும் பொறுப்பளித் துள்ளார் தன்னோடு இந்த நஜாத் இதழ் நின்று விடக் கூடாது என்ற நல்லெண்ணத்திலும் இத்தோடு தொடர்புள்ள அனைவரும் இதில் பொறுப்பாளியாகி இதை தொடர்வதற்கு தங்களை உட்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற பரந்த எண்ணத்திலும் எழுதியுள்ளார்.

தற்சமயம் இதை படிக்கும் பொழுது தான் பிரிந்து விடுவோம் என்ற எண்ணம் அவர் மனதில் தோன்றி எழுதியது போல் உள்ளது. மேலும் அந்த உண்மையை அல்லாஹ் அறிந்தவன்.
எனவே இதை படிக்கும் அனைவரும் மீண்டும் நஜாத் தொடர்ந்து நடைபெற தங்கள் சக்திக்கு உட்பட்டு உதவி செய்ய வேண்டு கிறோம். அந்த உதவி கீழ்கண்ட எந்த வகையிலும் இருக்கலாம்.

1. உங்களுடைய ஆக்கங்கள் குர்ஆன், ஹதீஃதுக்கு உட்பட்டு எங்களுக்கு அனுப்பி தரவும்.
2. குறைந்தது 10 சந்தாதாரர்களுக்கு நீங்கள் பொறுப்பேற்று அதன் மூலம் பத்திரிக்கையின் எண்ணிக்கையை உயர்த்தவும்.
3. உங்கள் ஜகாத் மூலமும், ஸதகா மூலமும் உங்களில் இயன்ற உதவி அளித்து பொருளாதார சிக்கலில் இருந்து நீக்கலாம்.
4. கட்டுரை எழுதி அனுப்புபவர்கள் தாங்கள் ஒன்றும் பெரிய ஆலிமாகவோ, பெரிய எழுத்தாளராகவோ இல்லையே என்ற கவலைப்படாமல் தங்களுக்கு தெரிந்த வி­யங் களை அதற்குத் தகுந்த குர்ஆன், ஹதீஃத் ஆதாரங்களுடன் இணைத்து 4 பக்கங்களுக்கு மிகாமல் அனுப்பினால் நல்லது.
மேலும் அபூ அப்தில்லாஹ்வைப் பற்றி குறிப்பிட வேண்டிய ஒன்று கடுமையான உழைப்பு, நேர்மையான பிழைப்பு, ஆரம்பக் கட்டத்தில் வாட்ச் ரிப்பேர் செய்பவராக இருந்தார். அதன் பிறகு பிரிண்டிங் தொழிலும் அனுபவம் பெற்று தன் பிள்ளைகளையும் மார்க்க இல்மோடு (Printing Technology) பிரிண்டிங் டெக்னாலஜி யிலும் ஈடுபட வைத்து ஒரு பிரிண்டிங் பிரஸை தாங்களாகவே நடத்தும் அளவிற்கு திறமை உள்ளவர்களாக ஆக்கிவிட்டார். அந்த மூவரும் தான் இன்று அந்நஜாத் மீண்டும் தொடர்வதற்கு தூண்களாக உள்ளனர்.

வல்ல அல்லாஹ் அவர்களுக்கு அழகிய பொறுமையை கொடுத்து மர்ஹூம் அபூ அப்துல்லாஹ் அவர்கள் விட்டுச் சென்ற பணியை தொடர அருள் பாலிப்பானாக என்று நாம் அனைவரும் துஆ செய்வோமாக.

“”எல்லா ஆத்மாக்களும் மரணத்தை சுவைத்தே தீரும்” என்ற வல்ல அல்லாஹ்வின் வாக்கை முழுமையாக விசுவாசம் கொண்டு நம் வாழ்க்கையை தொடர்வோமாக. அல்லாஹ் அருள்புரிவானாக.

Previous post:

Next post: