நேர்வழி அல்லாத இதர பிற வழிகளைப் பின்பற்றாதீர்கள்….

in 2017 செப்டம்பர்

நிச்சயமாக இதுவே எனது நேரான வழியாகும். இதையே நீங்கள் பின்பற்றி நடப்பீர்களாக. அல்குர்ஆன்: 6:153

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் தமது கரத்தால் ஒரு கோட்டைக் கிழித்தார்கள். பின்னர் “”இது அல்லாஹ்வின் நேரான வழி” என்று தனது விரலால் சுட்டிகாட்டினார்கள். பிறகு அந்த கோட்டின் வலப் பக்கத்தில் இரு கோடுகளையும், இடது பக்கத்தில் இரு கோடுகளையும் போட்டார்கள்.

பின்னர் “”இந்த இரண்டு கோட்டிலும் ஒவ்வொன்றிலும் கைவிரலை வைத்து சுட்டிகாட்டினார்கள்; இந்த வழிகள் ஒவ்வொன்றிலும் ஷைத்தான் நின்று கொண்டு மக்களைத் தன் பக்கம் அழைத்துக் கொண்டிருக்கிறான்” (ஷைத்தானின் வழிகள்) என்று கூறிவிட்டு இந்த இறைவசனத்தை (அல்குர்ஆன் : 6:153) ஓதிக் காட்டினார்கள்.
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்லூத்(ரழி), ஆதாரம் : முஸ்னத் அஹ்மத், தாமீ, ஹாகீம், நஸயீ இப்னுல் மர்தவைஹி, திர்மிதி, தஃப்சீர், தபரீ.

“”நீங்கள் இதையே பின்பற்றுங்கள்; வேறு வழிகளைப் பின்பற்றாதீர்கள்” (அல்குர்ஆன் : 6:153)

இறை நம்பிக்கையாளர்களுக்கு அல்லாஹ்வே பாதுகாவலன்; அவன் அவர்களை இருள்களிலிருந்து வெளியேற்றி வெளிச்சத்திற்குக் கொண்டு வருகிறான். ஆனால் நிராகரிப்பாளர்களுக்கு புரோகித மனித ஷைத்தானாகிய தாகூத்களே பாதுகாவலர்கள் ஆவர்கள். புரோகித மனித ஷைத்தானாகிய தாகூத்களே பாதுகாவலர்கள் ஆவர்கள். புரோகித மனித ஷைத்தானாகிய தாகூத்கள் அவர்களை வெளிச்சத்திலிருந்து இருள்களுக்கு அவர்கள் கொண்டு செல்கிறார்கள். அவர்கள்தாம் நரகவாசிகள், அதில் நிரந்தரமாக இருப்பார்கள். (அல்குர்ஆன்:2:257)

Previous post:

Next post: