எது நாகரீகம்?

in 2017 நவம்பர்

– மண்டபம் M. அப்துல்காதிர்

நாகரீகம் எனும் பெயரில் அநாகரிகமான வாழ்க்கை முறையில் மனிதர்கள் இன்று பலர் மாறி வருகின்றனர். உடை விஷயத்திலும், தங்களது அங்கங்கள் விஷயத்திலும் மனிதர்கள் நிலை தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள்.
பெண்களை பொறுத்தவரையில் மிகவும் கவனமாக வாழவேண்டிய கால கட்டம் இது.

எப்படியும் வாழலாம் என்பது அல்ல… இப்படித்தான் வாழவேண்டும் என்று நமக்கு மார்க்கம் கட்டளையிடுகிறது.
பெண்களின் வாழ்க்கை தரத்தை வல்ல இறைவன் தன் அருள்மறையாம் குர்ஆன் மூலம் தெளிவுபடுத்துகிறான்.
தங்கள் அங்கங்களை மூடிக் கொள்ளுங்கள்.. என்றும், வெளியில் நடக்கும்போது கால்களை தட்டி, தட்டி நடக்கக்கூடாது என்றும், அறிவுறுத்தலாகவும், எச்சரிக்கையாகவும் குர்ஆன் வசனத்தின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளான்.

இன்றைய சில பெண்களின் நிலை கவலைக் குரியதாகவே அமைந்துவிட்டது.
அங்கங்களை மறைக்க பர்தா அணியும் பெண்கள் சிலர் வாசனை திரவியங்கள் மூலமா கவும், தங்களின் நீளமான கூந்தல் தெரியும் விதமாகவும், பூமியில் நடக்கும்போது சலங்கை ஒளி எழுப்பும் கொழுசுகள் மூலமாகவும் தங்களை வெளிப்படுத்துவது முற்றிலும் மார்க்கம் தடை செய்த ஒன்றாகும்.

இதனை பெண்கள் கவனத்தில் கொண்டு செயலாற்ற வேண்டியதாகும். மேலும் தற் போது புதிதாக குடிபுகுந்துள்ள மோகம் யாதெ னில்… திருமணக் கோலம்தான். மணப்பெண் களை அலங்கரிக்க பியூட்டிபார்லர் கடைக்கு அழைத்து சென்று ரூபாய்களை அள்ளிக் கொடுத்து தங்களது இயற்கை அலங்காரத் தையே மாற்றி, செயற்கை அலங்காரத்திற்குள் மாறி தங்கள் நிலையை சில மணித்துளிகளுக் காக மாற்றிக் கொள்கிறார்கள். இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் ஒட்டு முடி வைப்பவர்களையும், ஒட்டு முடிகளை செய்பவர்களையும் சபித்துள்ளான் என்று கூறியுள்ளார்கள். அறிவிப்பு : அஸ்மா(ரழி), நூல் : புகாரீ, முஸ்லிம்.

நாகரீகம் எனும் பெயரில் அநாகரிகமான வாழ்க்கை முறையில் மனிதர்கள் இன்று பலர் மாறி வருகின்றனர். உடை விஷயத்திலும், தங்க ளது அங்கங்கள் வி­யத்திலும் மனிதர்கள் நிலை தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள்.
பெண்களை பொறுத்தவரையில் மிகவும் கவனமாக வாழவேண்டிய கால கட்டம் இது.

எப்படியும் வாழலாம் என்பது அல்ல… இப்படித்தான் வாழவேண்டும் என்று நமக்கு மார்க்கம் கட்டளையிடுகிறது.
பெண்களின் வாழ்க்கை தரத்தை வல்ல இறைவன் தன் அருள்மறையாம் குர்ஆன் மூலம் தெளிவுபடுத்துகிறான்.
தங்கள் அங்கங்களை மூடிக் கொள்ளுங்கள்.. என்றும், வெளியில் நடக்கும்போது கால்களை தட்டி, தட்டி நடக்கக்கூடாது என்றும், அறிவுறுத்தலாகவும், எச்சரிக்கையாகவும் குர்ஆன் வசனத்தின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளான்.
இன்றைய சில பெண்களின் நிலை கவலைக் குரியதாகவே அமைந்துவிட்டது.

அங்கங்களை மறைக்க பர்தா அணியும் பெண்கள் சிலர் வாசனை திரவியங்கள் மூலமாகவும், தங்களின் நீளமான கூந்தல் தெரியும் விதமாகவும், பூமியில் நடக்கும்போது சலங்கை ஒளி எழுப்பும் கொழுசுகள் மூலமாகவும் தங்களை வெளிப்படுத்துவது முற்றிலும் மார்க்கம் தடை செய்த ஒன்றாகும்.

இதனை பெண்கள் கவனத்தில் கொண்டு செயலாற்ற வேண்டியதாகும். மேலும் தற்போது புதிதாக குடிபுகுந்துள்ள மோகம் யாதெனில்… திருமணக் கோலம்தான். மணப்பெண்களை அலங்கரிக்க பியூட்டிபார்லர் கடைக்கு அழைத்து சென்று ரூபாய்களை அள்ளிக் கொடுத்து தங்களது இயற்கை அலங்காரத்தையே மாற்றி, செயற்கை அலங்காரத்திற்குள் மாறி தங்கள் நிலையை சில மணித்துளிகளுக்காக மாற்றிக் கொள்கிறார்கள். இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் ஒட்டு முடி வைப்பவர்களையும், ஒட்டு முடிகளை செய்பவர்களையும் சபித்துள்ளான் என்று கூறியுள்ளார்கள். அறிவிப்பு : அஸ்மா(ரழி), நூல் : புகாரீ, முஸ்லிம்.

Previous post:

Next post: