முஹிப்புல் இஸ்லாம்
கூடிச் செல்லும் சர்ச்சைகள் :
மார்க்க ஆய்வுகளும், திறனாய்வுகளும் பெருகிக் கொண்டிருக்கும் காலத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம். அல்ஹம்துலில்லாஹ். அதே நேரத்தில் அதைக் காட்டிலும் கூடுதலாய் மட்டுப்படுத்த இயலாத அளவு கருத்து வேறுபாடுகளும், சர்ச்சைகளும் கூடிக் கொண்டே செல்கின்றன.
கடல் அலை ஓய்ந்தாலும் : இந்த விசயத்தில் உண்டு; இந்த விசயத்தில் இல்லை என பாகு படுத்த முடியாத அளவு எதை எடுத்தாலும், எதற்கெடுத்தாலும் சர்ச்சைகள், முற்றுப் பெறாமல், தொடரும் விவாதங்கள்,கடல் அலை ஓயினும் சொற்போரும், எழுத்துப் போரும் ஓயாது, ஓயவே ஓயாது. மார்க்க நலன் விரும்பிகள் வேதனைப்படுகிறார்கள்.
சர்ச்சைகளின் மூலகர்த்தாக்கள் :
சர்ச்சைகளின் மூலகர்த்தாக்கள் மார்க்க அறிஞர்களே! இவர்களில் விரல் விடும் வெகு சிலர் விதிவிலக்காய் இருக்கலாம். மார்க்க அறிஞர்கள் கிளப்பும் சர்ச்சைக ளுக்கு முஸ்லிம் பொதுமக்கள் பெரிதும் பலியாகி வருகிறார்கள். பொதுமக்கள் அவரவர் விரும்பி நம்பி ஏற்ற மார்க்க அறி ஞர்களின் கருத்துக்களைக் கண்மூடித்தன மாய்ச் சார்ந்து இருப்பதில் உறுதியாய் நிற்கிறார்கள்.
விளைவு, அன்றாட வாழ்வில் ஒருவரை ஒருவர் தனியே அல்லது சிலராய் அல்லது பலராய் சந்திக்கும் சமயங்களில் பரஸ்பர விசாரிப்புக்கள், வந்த பணிகள் முடிந்த வுடன் வேண்டாத விருந்தாளியாக மார்க் கச் சர்ச்சைகள் தலை நீட்டுவதைத் தவிர்க்க முடியவில்லை.
பல நேரங்களில் இந்த மார்க்க சர்ச்சை கள் பலரின் அன்றாட அலுவல்களை வெகு வாய்ப் பாதித்து வருவதைக் கண்டும் கேட் டும் வருகிறோம். இவை சில நேரங்களில் உறவுக்கும், நட்புக்கும், மனித நேயத்துக் கும் நச்சுக் கொல்லியாக மாறிவிடுகின்றன. நம்மில் பெரும்பாலோர் அனுபவமும் இது தான்.
கசக்கும் உண்மை :
மக்களிடம் பெருகி வரும் மார்க்க ஆர் வத்தை இம்மார்க்க சர்ச்சைகள் வெகு வாய்க் குறைத்தும் பல நேரங்களில் முற்றாக துடைத்தெறிந்தும் வருகின்றன. இதைச் சம்பந்தப்பட்டவர்கள் இன்றளவும் உணராதிருப்பது வேதனைக்குரிய கசக்கும் உண்மை.
முரண்பாடுகளால் மோதல்கள் :
மனித சமுதாயத்தில் மதங்கள், தத்துவங் கள், சித்தாந்தங்கள் அனைத்தும் மனித அபிப்பிராயங்களில் உருவானவை. ஒத்த கொள்கை உடையோரும் மாறுபாடுகளால் முரண்பட்டு ஒருவருக்கொருவர் வேறுபட்ட கருத்துக்களால் முட்டி மோதிக் கொள்கிறார்கள். தவிர்க்கவும் முடியாது. தடுக்கவும் முடியாது முரண்படும் மனிதர்களால் உருவானவைகளில் பெருக்கெடுக் கும் முரண்பாடுகளுக்கு அணை போடவும் முடியாது. கட்டுக்குள் கொண்டு வரவும் முடியாது.
தீர்க்கமானத் தீர்வு : ‘
இறையருளிய இஸ்லாம் அப்படியா? மனிதர்கள் எங்கே? எப்போது? எப்படி? முரண்பட்டாலும் அவை அனைத்துக்கும் தீர்க்கமானத் தீர்வைத் தரும் வாழும் வாழ்க்கை நெறியே இஸ்லாம்.
நெஞ்சு பொறுக்குதில்லையே! :
ஏற்றிருக்கும் மார்க்கத்தை ஏற்றமுறச் செய்யாவிட்டாலும் பரவாயில்லை. அன் றும், இன்றும் இஸ்லாத்தைக் கருத்து வேறு பாட்டுத் தீயிலிட்டு பொசுக்கும் திருப் பணியை முஸ்லிம்கள் மார்க்க அறிஞர்கள் என நம்பும் மார்க்க நச்சுக் கொல்லிகள், திறம்படச் செய்து வருகிறார்கள் மக்கள் அறியாவண்ணம் என்றால் நெஞ்சு பொறுக் குதில்லையே! மார்க்க நச்சுக் கொல்லி களான மார்க்க அறிஞர்களின் கைங்கரியத் தால், பெயர் தாங்கி முஸ்லிம்கள், மார்க் கத்தை தரைமட்டமாக்கிக் கொண்டிருக்கி றார்கள். இம்மாபாதகத்தைத் தடுக்கக் கட மைப்பட்டுள்ள உண்மை உணர்ந்த உத்த மர்கள் ஒரு சிலரும், நமக்கு ஏன் இந்த வீண் வேலை? என ஒளிந்து, ஒதுங்கிக் கொள்கி றார்களே! நாளுக்கு நாள் நிலைமை விபரீத மாக இதுவே பிரதான காரணம்.
இதைவிடக் கொடுமை, நம்மில் பலர் கருத்து வேறுபாடுகள் நீடிப்பதையும், நிலை ப்பதையும் விரும்புவதுடன் அதை நியாயப் படுத்தி இதழ்களிலும், நூல்களிலும் எழுதுவ தும், மேடைகளில் முழங்குவதும் கடும் கண்டனத்துக்குரிய அன்றாட வழக்கமாகி விட்டது.
வேறுபடுவதில் ஒருமிக்கும் அறிஞர்கள்:
மார்க்கத்தைக் கடும் சர்ச்சைக்குரியதாக மாற்றும் மாபாதகத்தை விட மெகா மாபாத கம் வேறேதும் உண்டா? இதிலிருந்து இந்த அறிஞர், அந்த அறிஞர் என எந்த அறிஞரும் நீக்கம் பெறவில்லை. கட்டாயம் களையப் பட வேண்டிய கருத்து வேறுபாடுகளை ஓர் கலையாகக் கொழுக்கச் செய்யாத அறிஞர் எவரேனும் உண்டா? தேடுகிறோம். யாரும் தென்படவில்லை, தென்படுவோர் எமக்கு உடன் அறியத்தருமாறு அன்போடுக் கேட்டுக் கொள்கிறோம்.
மனித முரண்பாடுகளுக்கு ஒரு முற்றுப் புள்ளி :
முரண்படுவதை, வேறுபடுவதை இயல் பாகக் கொண்ட மனிதர்களுக்கு, மனித சமு தாயத்துக்கு, அல்லாஹ் இஸ்லாத்தை மார்க்கமாக்கியுள்ளான். மேலும், மேலும் மனிதர்கள் முரண்படுவதற்காகவா அல்லாஹ் இஸ்லாத்தை மார்க்கமாய் அருளி னான்? மனித முரண்பாடுகள் உருவாக்கும் மனித மோதல்களுக்கு நிரந்தர முற்றுப் புள்ளியாக, அனைத்தும் அறிந்த அல்லாஹ் இஸ்லாத்தை மார்க்கமாக மானுடத்துக்கு அருட்கொடையாக்கியுள்ளான். (காண்க. அல்குர்ஆன்: 5:3)
முன்னரே முரண்பாடுகளால் முட்டி, மோதி உடலாலும், உள்ளத்தாலும் ஆறாத காயங்களோடு சிதறுண்ட மனிதர்களை, மேலும், மேலும் முரண்பாட்டுக்குள் வலி யத் தள்ளவா அல்லாஹ் இஸ்லாத்தை அருளினான்? விடுவிக்க முடியாத முரண்பாட் டுச் சிக்கலிலிருந்து நிரந்தரமாய் மானு டத்தை விடுவிப்பதற்கே அல்லாஹ் இஸ் லாத்தை மானுடத்துக்கு மார்க்கமாய் அருளியுள்ளான்.
வாழ்வியல் அறநூல்களை அல்லாஹ் அருளியது ஏன்?
அல்லாஹ் அருளிய இறுதி வாழ்வியல் அறநூல் அல்குர்ஆன், அல்லாஹ் அல்லாத வர்களிடமிருந்து வந்திருப்பின். அது முரண் பாடுகளின் மொத்த உருவாய் உருவெடுத் திருக்கும். அல்குர்ஆன் முரண்பாடுகளைத் தோற்றுவிக்காது. முரண்பாடுகளுக்கு ஒரு நிரந்தர முற்றுப்புள்ளி அல்குர்ஆன் என அனைத்து அறிவுகளின் ஒரே உரிமையா ளன் அல்லாஹ் உத்திரவாதம் தந்துள்ளான்.
அல்லாஹ் அருளிய வாழ்வியல் அறநூல் களுக்கு அவற்றைத் தாங்கி வந்த நபிமார்களே செயல் வடிவமானார்கள். வாழ்வியல் அறநெறியை அல்லாஹ் மானுடத்துக்கு ஏன் அருளினான்?
இறைவாக்குகளை சற்று தடித்த எழுத்துக்களில் ஏற்றி செய்க.
(அ) (தொடக்கத்தில்) மக்கள் அனை வரும் ஒரே கொள்கை வழி நடக்கும் சமுதா யத்தவராகவே இருந்தனர்.
(ஆ) பின்னர் (இந்நிலை நீடிக்கவில்லை, அவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு களும், பிணக்குகளும் தோன்றவே நேர்வழியில் செல்வோர்க்கு) நற்செய்தி அறிவிப்போ ராகவும், (வழிகேட்டில் செல்வோர்க்கு) எச் சரிக்கை செய்வோராகவும் அல்லாஹ், நபி மார்களை அனுப்பி வைத்தான்.
(இ) மேலும் கருத்து வேறுபாடு ஏற் பட்ட வியங்களில் அவர்களிடையே தீர்ப்பு வழங்க வேண்டும் என்பதற்காக, சத் திய நெறிநூல்களையும் அந்நபிமார்களு டன் அல்லாஹ் அருளினான்.
(ஈ) ஆனால் எவர்களுக்குச் சத்தியத்தைப் பற்றி அறிவு வழங்கப்பட்டதோ அவர்கள் தாம் வேற்றுமையைத் தோற்றுவித்தனர்.
(உ) தம்மிடம் தெளிவான (இறை) வழி காட்டுதல்கள் வந்துவிட்ட பின்னரும்,
(ஊ) ஒருவர் மீது ஒருவர் கொடுமை புரி யும் பொருட்டு (சத்தியத்தை கைவிட்டு) வேற்றுமைகளை தோற்றுவித்தனர்.
(எ) எனவே சத்தியத்தைக் குறித்து அவர் கள் பிணங்கிக் கொண்டிருந்த வியங்க ளில், ஈமான் கொண்டோருக்கு தன் உத்தரவினால் அல்லாஹ் நேர்வழியைக் காட்டினான்.
(ஏ) மேலும் தான் நாடியோரை அல்லாஹ் நேர்வழியில் செலுத்துகிறான். (அல்பகரா : 2:213)
மனிதக் கருத்து மோதல்களுக்குத் தீர்வாக, முற்றுப்புள்ளியாக வாழ்வியல் அற நெறிகளை நபிமார்களுக்கு அருளியதாக அல்லாஹ் தெளிவுபடுத்திவிட்டான்.
இதை அல்லாஹ், நிறைவாக அருளிய வாழ்வியல் அறநெறி அல்குர்ஆனில் (2:213) விளக்கமாய் விவரித்துள்ளான். மானுடம் படிப்பினைப் பெறுவதற்காக, முஸ்லிம் களே படிப்பினைப் பெறவில்லையே! மானு டத்துக்கு எப்போது உணர்த்துவார்கள்?
இதற்குத் தெளிவுரையாக, விளக்க உரைகளை வரும் எண்ணற்ற இறை அறி வுரைகள் அல்குர்ஆன் நெடுகிலும் காணக் கிடக்கிறது.
கட்டுக்கடங்கா கருத்து மோதல்கள் :
இந்த (2:213) இறை அறிவுரை அல்குர் ஆன் விரிவுரையாளர்கள் பார்வையில் படவேயில்லையா? அல்லாஹ் அல்குர் ஆனில்தானே பதிவு செய்துள்ளான்?
இதற்கும் இதை அழுத்தமாய் வலியு றுத்தி அல்குர்ஆன் நெடுகிலும் இதற்குப் பொருளாக விளக்கமான விரிவுரையாக வரும் ஏராளமான இறை அறிவுரைகளுக்கு விளக்கம் எழுதுவதோடு அல்குர்ஆன் விரி வுரையாளர்கள் நின்று விட்டார்கள், நின் றும் விடுகிறார்கள். எந்த அல்குர்ஆன் விரி வுரையாளரும் இந்த இறை அறிவுரையிலி ருந்து பாடமும் கற்றுக் கொள்ளவில்லை. படிப்பினையும் பெற்றுக் கொள்ளவில்லை. இதை அல்குர்ஆன் விரிவுரைகள் நெடுகிலும் பெருக்கெடுத்துள்ள கட்டுக் கடங்கா கருத்து வேறுபாடுகளும், கருத்து மோதல்களும் நமக்கு உணர்த்தி நம்மை உஷார் படுத்துகின்றன.
விரிவுரையாளருக்கு விரிவுரையாளர் :
கருத்து மோதலை உருவாக்குவதிலி ருந்து விடுபட்ட அல்குர்ஆன் விரிவுரை யாளர் யாரும் உண்டா? நிச்சயம் இல்லை என்பதுதான் நிதர்சனம். கருத்து வேறுபாடு களை குவிக்கும் விசயத்தில் விரிவுரை யாளருக்கு விரிவுரையாளர் போட்டியிடு கின்றனர். விகிதாச்சாரம் வேண்டும் என் றால் சற்று கூடலாம். அல்லது சற்று குறைய லாம். கருத்து வேறுபாடு மட்டுமின்றி, பல நேரங்களில் அல்குர்ஆன் விரிவுரையாளர் கள் முரண்பாடுகளையும் தோற்றுவித்து விடுகிறார்கள். முஸ்லிம்கள் முட்டிக் கொள் ளவும், மோதிக் கொள்ளவும், பிளவுபடவும் இதுவே பிரதான காரணம். அரும்பாடு பட்டு மண் குவியலைக் கூட எண்ணி முடித்து விடலாம். ஆனால் மார்க்க அறிஞர்கள் உருவாக்கியுள்ள கருத்து மோதல்களை எண்ணிவிட முடியாது.
சர்வ சாதாரண அன்றாட வழக்கம் :
மார்க்க நூல்களில் அதிகப் பக்கங்களை ஆக்கிரமித்திருப்பது, மார்க்க அறிஞர்களின் கருத்து மோதல்களே! கருத்து மோதல்களை உருவாக்குவதும், அதை முஸ்லிம்களிடம் வலம் வரச் செய்வதும் மார்க்க அறிஞர் களின் சர்வசாதாரண அன்றாட வழக்கங்களில் ஒன்று. இது அவர்களுக்கு சந்தோத் தைத் தந்தாலும் வியப்பதிற்கில்லை.
பாதிக்கப்படுவோர் :
அந்த கருத்து வேறுபாடுகளால் அப் பாவி முஸ்லிம் பொதுமக்கள் எந்த அளவு பாதிக்கப்படுகிறார்கள்? இதைக் காரணமாக்கி, அவர்களுக்குள் நீடிக்கும் மோதல் களைத் தவிர்க்கவும், தடுக்கவும் முடிய வில்லை. மார்க்க அறிஞர்களின் கருத்து மோதல்கள் முஸ்லிம்களைப் பிரித்தும் பிளந்தும் வருகிறது. பிரிவுகளைத் தோற் றுவிப்பதும், பிரிவுகளை நிலைநிறுத்துவதும் மார்க்க அறிஞர்களால் உருவாக்கப்படும் கருத்து மோதல்கள் தான் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.
தஃப்ஸீர் இப்னு கஃதீர் :
சுன்னா பிரிவினரும் தவ்ஹீத் பிரிவின ரும் ஒருமித்து அங்கீகரித்துள்ள அல்குர்ஆன் விரிவுரையாளர்களில் இமாம் இப்னு கஃதீர் (ரஹ்) குறிப்பிடத்தக்கவர், சாதக, பாதகங் கள் இருசாரரும் அவரவர் சார்ந்துள்ள பிரி வுக்குச் சாதகமான விளக்கங்களைத் தப்ஸீர் இப்னு கஃதீரிலிருந்து மேற்கோள் காட்டு வதும், பாதகமானவைகளைக் கண்டு கொள்ளாமல் மறைத்து விடுவதும் இன்றள வும் வழக்கத்திலுள்ள மார்க்க மாபாதக நடைமுறை.
மறைக்காதீர் :
முன்னாள் நெறிநூலுடையோர் (வேதங்கள்) போல் நபி(ஸல்) அவர்கள் சமுதாயத்தவரும் மார்க்கத்தை மறைக்கக் கூடாது என்பது அல்லாஹ்வின் கண்டிப் பான கட்டளை. காண்க. அல்குர்ஆன் : 3:187. இதை இப்னு கஃதீர்(ரஹ்) அவர்கள், தஃப்ஸீர் இப்னு கஃதீரின் முன்னுரையில் மேற்கோளாக்கியிருப்பது குறிக்கத்தக்கது. (காண்க : தஃப்ஸீர் இப்னு கஃதீர் தமிழாக் கம், தஃப்ஸீர் இப்னு கஃதீரின் முன்னுரை பாகம் : 1, பக். 8)
சார்பு நிலை :
இறைவாக்குகளுக்கு, அல்குர்ஆனுக்கு அல்குர்ஆனில் இருந்தும், நம்பகத்தன்மை ஊர்ஜிதம் செய்யப்பட்ட நபி வழிகாட்டு தலில் இருந்தும் இமாம் இப்னு கஃதீர் ரஹ் அவர்கள், பொருள் விளக்கம் கொடுத்துள் ளார்கள். அவை ஏற்கத்தக்கவையே. அல்ஹம்துலில்லாஹ்.
அவை ஏற்கத்தக்கவையே!
வேறு பல இறைவாக்குகளுக்கு இப்னு கஸீர் தந்துள்ள விரிவுரைகள் இரு வேறு மாறுபட்ட அபிப்பிராயங்களை தந்துள் ளன. அவற்றில் அவரவர் சார்ந்துள்ள பிரிவு களுக்கும், அணிகளுக்கும் சாதகமானதை ஏற்பதும், பாதகமானதை மறுப்பதும், மறைப்பதும் உலகளாவிய முஸ்லிம்களின் கடும் கண்டனத்துக்குரிய தவறான நடை முறையாகும். நடுநிலையாக சிந்திப்போர் நாளுக்கு நாள் அருகிக் கொண்டிருப்பதால் இவைப் போன்ற விபரீதங்கள் அதிகரித்துக் கொண்டுள்ளன.
விமத்தனங்கள் :
அதே நேரத்தில் பிரிவுகளின் பிடியில் சிக்கியுள்ளோரின் விமத்தனங்கள் கூடிக் கொண்டிருப்பதைத் தடுக்கவும், தடை செய்யவும் முடியவில்லை.
மார்க்க அட்டகாசங்கள் :
தமிழகத்தில் தொன்றுதொட்டு நிலைப் பெற்றுள்ள மத்ஹப் பிரிவினரும் அவற்றின் உட்பிரிவினரும், தஸவ்ஃப்-தரீக்கத் அணியி னரும், அவற்றின் உட்பிரிவினரும், அவர் களுடன் புதிய வரவாகிய தவ்ஹீத் பெய ரைத் தாங்கியவரும், ஸலஃபி பிரிவினரும், அவற்றின் உட்பிரிவினரும் செய்து வரும் மார்க்க அட்டகாசங்கள் சாதாரண சாமான்யர்கள் தாங்கிக் கொள்ளக் கூடியதாய் இல்லை. அதனால் மார்க்கம் என்றால் சாதா ரண சாமான்யர்கள் வெறுண்டோடு கிறார்கள்.
இன்ஷா அல்லாஹ் அடுத்த ஆய்வில் சந்திப்போம். சீர் பெறுவோம்.