பிறை பற்றி! ஆலிம்களிடம் (மார்க்க அறிஞர்களிடம்) ஒரு அவாமின் (பாமரனின்) கேள்வி?

in 2018 ஆகஸ்ட்,பிறை

பிறை பற்றி! ஆலிம்களிடம் (மார்க்க அறிஞர்களிடம்) ஒரு அவாமின் (பாமரனின்) கேள்வி?

M. சையித் முபாரக் நாகை.

பால் கொடுக்கும் தாய்மார்கள் நோன்பு பிடிப்பது பற்றிய சட்டத்தில் ஐந்துவித கருத்துகள் ஆலிம்கள் மத்தியில் இருக்கின்றனவாம். பிறைப் பற்றியும் இரு கருத்துகள் இருக்கின்றன. 1. தத்தமது பகுதி பிறை, 2.பிறை பார்த்த தகவல் முன்பே கணக்கிடப்பட்ட  நேரத்தில், அதே நேரத்தில் சூரிய, சந்திர கிரகணங்கள் நிகழ்கின்றன. அப்படியிருக்கும்போது பிறைக் கணக்கீடு முறையும் சரியாகத்தானே இருக்கும்.

அதனை ஏற்று ஒரே நாளில் நோன்பு பிடிக் கலாம்,பெருநாள் கொண்டாடலாம்தானே. பிறை என்பது ரமழான் மாதத்தைக் கண்டு அமலை மேற்கொள்வதற்கான வழித்துணைச் சாதனம்தானே. (அதாவது, ஹஜ்ஜுக்குச் செல்ல வழித்துணைச் சாதனம் அன்று ஒட்டகம்; இன்று விமானம், பஸ், கார், போருக்கானச் சாதனம் அன்று ஒட்டகம், குதிரை, வாள்; இன்று துப்பாக்கி, பீரங்கி, குண்டு மழை, அதுபோல ரமழான் மாதத்தை அறிந்து கொள்ள அன்று பார்க்கும் பிறை, தகவல் பிறை; இன்று கணக்கீட்டுப் பிறை என்று சில அவாம்கள் கூறினால், “அவாம்கள் மார்க்கத்தில் தலையிடலாமா?” என ஆலிம்கள் கொதித்தெழுந்து, “பிறையைக் கண்ணால்தான் பார்க்க வேண்டும்” என்று ஹதீஃத் சொல்கிறது. ஆகவே, அவாம்கள் கருத்தைத் தூக்கிக் குப்பையில் போடுங்கள் என்று ஆர்ப்பரிக்கின்றனர். ஆனால், அதில் உண்மை இருக்கிறதா என்று ஏன் ஆலிம்கள் ஆராய்ச்சி செய்யவில்லை? ஆராய்ச்சி செய்யும் அளவிற்கு வானியல் அறிவு இல்லையயன்றால் அறிந்தவர்களிடம், வானியல் நிபுணர்களிடம், ஆலோசனை செய்யலாம் அல்லவா? அவர்கள் தவறான தகவல்கள் தருவார்கள். அதனால் நம்பிக்கை இல்லை என்றால், சிலர் முயற்சி செய்து வானியல் அறிவு பெறலாம் இல்லையா?

இதற்கு இஸ்லாம் தடையா செய்கிறது? அல்குர்ஆன் இறக்கப்பட்ட பின்புதான் பல்துறை அறிஞர்கள் அதிகம் உருவாகியிருப்பதை வரலாறு காண்பித்துக் கொண்டிருக்கிறது. தவறான சூரிய காலண்டரை கணக்கீடு செய்து, அதுதான் சரியானது என்று உலகை நம்ப வைத்துக் கொண்டிருக்கிறது. யூத, கிருஸ்துவ சமுதாயம் (4 வருடத்திற்கு ஒரு முறை 1 நாளைக் கூட்டியும், 100 வருடத் திற்கு ஒரு முறை 1 நாளைக் குறைத்துச் செயல்படுவது; நடு இரவில் நாள் மாறுகிறது என்பது போன்றவைகள்) (நேரத்தைக் கணக்கிட சூரியன்) மாத, வருடத்தைக் கணக்கிட சந்திரன் பயன்படுகிறது (அல்குர்ஆன் 2:189, 10:5) என அல்லாஹ் கூறுகின்றான்.

இதன்மூலம் நாம் துல்லியமான சந்திர காலண்டரை (ஸிற்ஐழிr ளீழியிeஐder)த் தயாரித்துப் பயன்படுத்த முடியாதா? அதனைத் தயாரிக்க நாம் எடுத்த முயற்சி என்ன? சந்திர காலண்டர் தயாரிக்க இஸ்லாம் தடுக்கிறதா? என்னிடம் இரு பிரச்சனைகள் வந்தது.

1. சென்னையிலிருந்து நாகை வந்து பணி புரியும் டாக்டர் கேட்டார். “பெரு நாள் என்றைக்கு” என்று? பெருநாளைக்கு அரசு விடுமுறை. அதன் பிறகு இரு நாட்கள் விடுமுறை எடுத்தால் உறவினர்களைச் சந்தித்து வர செளகரியமாக இருக்கும். பெருநாள் வெள்ளிக்கிழமை என நினைத்து விடுமுறை எடுத்தால், பெருநாள் சனிக்கிழமை என்று சொல்லிவிட்டால் என்ன செய்வது? என மன உளைச்சலுடன் கேட்டார். சரியாக முடிவெடுக்க முடியவில் லையே ஆதங்கம் அவரது குரலில் தெரிந்தது.

2. நாகூரில் உள்ள எனது உறவினர் சஹர் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது, அவரது மகள் “பிறை பார்த்தாகிவிட்டதாம் என்ற செய்தி இப்போதுதான் வந்தது என்று கூறினாள். இங்கு செய்தி எதுவும் வரவில்லை. நோன்பை விடுவதா? நாளை பெருநாள் தொழுகை எங்கு தொழுவது?” என்று இக்கட்டில் மாட்டிக் கொண்டவர் போல் சுமார் 4 மணி இருக்கும்போது கேட்டார். இது தவிர, நான் ரமழான் பிறை 20ல் இருக்கிறேன். ஷவ்வால் 5ல் வெளிநாடு அல்லது வெளியூர் செல்ல வேண்டும். அதற்கான விமான, இரயில், பஸ் டிக்கட் எப்படி முன்பதிவு செய்வது? ரமழான் 29 என்று நான் நினைத்திருக்க ரமழான் 30 வந்து விட்டால் டிக்கட் முன்பதிவு செய்ததன் நிலை என்ன? ஹிஜ்ரி காலண்டரைக் கடைபிடித்தால் மேற்கண்டவாறு மன உளைச்சல், ஆதங்கம், இக்கட்டு, பரபரப்பு கொள்ளத்தான் வேண்டுமா?

ஆகவே யூத, கிறிஸ்துவ காலண்டர் களைத்தான் பின்பற்றவேண்டும் என்று ஆலிம்கள் சொல்வார்களோ? ஆலிம்களுக்கு இந்த இக்கெட்டல்லாம் வராது. ஏனெனில் ஆலிம்களுக்கு வருடம் முழுவதும் லீவ் தானே. தேவைப்பட்டால்தான் உமர்(ரழி) அவர்கள் ஹிஜ்ரியைக் கடைபிடித்தார்கள். நாமும் கடைபிடிக்க முடியாதா? துல்லிய இஸ்லாமிய ஹிஜ்ரி காலண்டரை? சுருங்கச் சொல்லி விளங்க வைத்தவர்கள் தானே அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் பிறையைப் பார்த்து நோன்பு பிடியுங்கள். பிறையைப் பார்த்து நோன்பை விடுங்கள் என்று சொல்லியிருந்தார்கள். அது போதுமே, அடுத்த பிறையைப் பார்த்து பெருநாள் கொண்டாடுவோம் நாம்.

ஆனால் நபி (ஸல்) அவர்கள் மேலதிகமாக, மாதத்தை (30ஆக) பூர்த்திச் செய்யுங்கள் என்று கூறியதிலிருந்து இது கணக்கீட்டிற்கான ஆதாரமாகத்தானே. அதனால்தான் அடுத்த நாள் பிறை பார்க்காது நோன்பை விடுகிறோம். மார்க்கம் ஒரு செயலைச் சொன்னால் அதன்மூலம் நன்மை இருக்கும். “மற்றவரைப் பார்த்து புன்முறுவல் செய்வதும் தர்மமே” என்பதுபோல, இது நன்மையைத் தரக்கூடியது. ஆனால், பிறையைப் பார்த்தால் நன்மை என்று எங்கே சொல்லப்பட்டிருக்கிறது? (பிறைப் பார்த்து துஆ செய்யும் போது நன்மை கிடைக்கும் என்பது வேறு) இதன் மூலம் உணர்ந்து கொள்ள வேண்டியது பிறை என்பது வழித்துணைச் சாதனம் தான் என்பதை. ஹஜ் நன்மையைத் தரும் இபாதா. அங்கு செல்ல ஒட்டகம், விமானம், பஸ் வழித்துணைச் சாதனம். வழித்துணைச் சாத்தியத்தைப் பயன்படுத்துவது நன்மை இல்லை. அதுபோலத்தான் பிறையும், ரமழான் மாதத்தை அடைய வழித்துணைச் சாதனம் முன்பு பார்க்கும் பிறை. தற்போது கணக்கீட்டு பிறை, பிறை பார்ப்பது இபாதா இல்லை. பார்க்கும் பிறை மூலமாக இந்த வருட மும் 3 தினம் பெருநாள் கொண்டாடப்பட்டது (2018). இதில் 1 சரி, மற்ற இரண்டு தவறு. (எது சரி? எது தவறு? என இங்கு வியாக்கியானம் செய்யவில்லை) பலர் கணக்கீடு செய்தாலும் முடிவாக தெரிவது 1 நாள் மட்டுமே.

இது துல்லியமான கணக்கீடு. இது சரியா? புறக்கண்ணால் ஓரிருவர் பார்த்து 2, 3 தினங்கள் பெருநாள் கொண் டாடுவது சரியா? ஆனால், தவறை ஏற்படுத்தும் புறக்கண் ணால் பார்க்கும் பிறையைத்தான் ஏற்றுக் கொள்வோம் என்று கூறும் ஆலிம்கள் கூமுட்டைகளா? அவர்கள் கூற்றை வேத வாக்காக ஆ… வென வாய் பிளந்து கேட்கும் அவாம்களாகிய நாம் கூமுட்டைகளா? ஒரே நாளில் நோன்பு பிடிக்கலாம். அவ்வாறே ஒரே நாளில் பெருநாள் கொண்டாடலாம் (சர்வதேச தேதிக் கோட்டின் அருகில் மாறுதல் ஏற்படும்; மற்ற பகுதியில் ஏற்படாது) என்றால், ஆலிம்கள் என்ன சொல்கிறார்கள். நம் பகுதியில் லுஹர் தொழுகை இந்திய நேரப்படி 1.00 ஸ்ரீது என்றால், லுஹர் தொழுகை சிங்கப்பூரில் 10.30 ழிது சவுதியில் 3.30 ஸ்ரீது. இப்படி இருக் கும்போது, பிறையும் மாறி மாறி வரும் என்று ஒரு நாளில் இருக்கும் நேர மாறுதலுக்கும், நாளே மாறுவதற்கும் உள்ள வித்தியாசத்தை உணராத ஆலிம்கள் அவாம் களா? ஆலிம்கள் கூறிவிட்டால் அதுவெல்லாம் சரியாகத்தான் இருக்கும் என்று நம்பும் நம்மைப் போன்ற அப்பாவிகள்தான் அவாம்களா? “பிறை மறைக்கப்பட்டால் மாதத்தைப் பூர்த்தி செய்யுங்கள்” (புகாரி : 1906)

மனைவிகள் மீது கோபப்பட்டு பிரிந்திருந்த மாதத்தில் இரு மாதம் 29 நாட்கள்(புகாரி 1910),இரு பெருநாட்களுக்குரிய இரு மாதங்களும் சேர்ந்தார்போல் குறையாது (புகாரி 1912), நாம் உம்மி சமுதாயம், எழுதுவதை, விண் கலையை அறியமாட்டோம் (புகாரி : 1913) என்பவைகளையயல்லாம் சொன்ன அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர் களின் பொன்மொழிகளையயல்லாம் ஆராய்ந்து பாருங்கள். பிறைக் கணக்கீட்டிற்கான ஆதாரம் தெரியலாம். இன்ஷா அல்லாஹ். அல்லாஹ் அருள் புரிவான்!

Previous post:

Next post: