அந்நஜாத் டிசம்பர் 2018

ர.அவ்வல் -ர.ஆகிர் 1440

“நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்”

சமீப காலமாக இஸ்லாத்திற்கு எதிரான பல பொய் பிரசாரங்கள், நாடெங்கும் பலரின் பேச்சுக்களிலிருந்தும், சில பத்திரிகைகளிலும், ஊடகங்கள் வாயிலாகவும், சமூக வலைதளங்கள் மூலமாகவும், சுலபமாக பரப்பப்பட்டு வருகின்றன.

அவைகளில் ஒன்று: முஸ்லிம்களின் உணர்வைத் தூண்டிவிட்டு கலவரங்களை நிகழ்த்த வேண்டும் என்ற நோக்கத்திற்காக முஸ்லிம் பெண்கள் பிறமத ஆடவர்களைத் திருமணம் செய்து கொள்வதாக பல செய்திகள் சமூக வலைதளங்களில் திருமணப் பத்திரிகைகளுடன் பதிவிடப்பட்டு வருவதேயாகும். ஒரு திருமணத்திற்கு மட்டும் திருமண வீடியோ பதிவிடப்பட்டது. வீடியோ இருந்ததேயயாழிய அந்தப் பெண் முஸ்லிம் என்பதற்கான ஆதாரம் எதுவும் இல்லை. விலாசம் மட்டும் இருந்தது. விலாசத்தில் அப்பெண் குடியிருப்பதற்கான ஆதாரமில்லை. இந்த நிலையில் எதிர் தரப்பினர் ஒருவருடன் மூன்று முஸ்லிம்கள் ஆடியோக்களில் பேசியவை பதிவிடப்பட்டன. இந்த பேச்சில் மேற்படி நோக்கம் இருப்பதைக் காணமுடிந்தது.

முஸ்லிம் பெண்களை மட்டும் குறிப்பிட்டு திருமண அழைப்பிதழ் பகிர்பவர்கள், முஸ்லிம் ஆண்கள் மாற்று மத பெண்களைத் திருமணம் செய்த செய்திகள் எதுவுமே திட்டமிட்டவர்களால் பதிவிடப்படாததேன்? இதுவே, இவைகள் பொய் என்பதற்கு போதிய சான்றுகளாகும். அது மட்டுமல்ல! திருமணப் பத்திரிக்கைகளைப் பார்த்து வந்த சென்னைவாசி ஒருவர், சென்னையில் நடைபெறவிருந்த திருமண மண்டபத்திற்கு குறிப்பிடப்பட்ட நாளில், குறிப்பிடப்பட்ட நேரத்திற்கு சென்றதாகவும், மண்டபம் பூட்டி இருந்ததாகவும், அலுவலகத்திலிருந்த மண்டபத்தின் பொறுப்பா ளர் ஒருவர் அந்த தேதியில் மண்டபம் புக் ஆகவில்லை என்று சொன்னதாகவும் ஒரு ஆடியோப் பதிவை அதே வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். பல வலைதளங்களில் பதிவேற்றமும் செய்யப்பட்டிருந்தது.

சமூக வலைதளங்களில் அதிக விஷயங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கும் முஸ்லிம்களில், அந்த மூன்று நபர்களைத் தவிர ஏனையோர் ஏன் இதைக் கண்டுகொள்ளவில்லை. செய்திகள் உண்மையாக இருந்தால், முஸ்லிம் பெண்களாக இருந்தாலும் அல்லது முஸ்லிம் ஆண்களாக இருந்தாலும் அவர்கள் முஸ்லிம்கள் அல்ல என்று குர்ஆன் 24:3 வசனம் கூறுகிறது.

அது மட்டும் இல்லை! “மனிதர்களே! நீங்கள் அல்லாஹ்வின்பால் தேவையுடையவர்கள். ஆனால், அல்லாஹ் தேவையற்ற வன்; புகழுக்குரியவன்” (35:15) “”அவன் நாடினால், உங்களைப் போக்கிவிட்டு வேறொரு புதிய படைப்பைக் கொண்டு வருவான்” (35:16) ஆகவே இஸ்லாத்தை விட்டுச் சென்றவர்களுக்கு பகரமாக வேறு நபர்கள் இஸ்லாத்திற்கு வரவிருக்கும்போது இப்படிப்பட்ட சம்பவங்களை மார்க்கம் அறிந்த முஸ்லிம்கள் கண்டுகொள்ள மாட்டார்கள். மாறாக ஏவப்பட்ட காரியங்களில் இன்னும் பக்தியுடன், கவலையுடன் செயல்படுவர்.

அடுத்ததை இப்போது கவனிப்போம். நம் தாய்நாட்டில் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட கொலை, கற்பழிப்பு போன்ற அராஜ கங்களுக்காகவும், முஸ்லிம் அல்லாதவர்கள் மீது நடைபெற்ற அராஜகங்களுக்காகவும் பிற மதத்தினரும் சமூக ஆர்வலர்கள் பலரும் கண்டனக் குரல் எழுப்பிய போது, பொது ஜன முஸ்லிம்கள் எதிர்வினை ஆற்றாமல் அமைதி காத்து வந்தது போல் தோற்றம் அளித்தது. இது ஏன்? காரணம் பின்னால் தரப்பட்டுள்ளது.

தன்னுடைய எழுத்தாற்றலை தமது படைப்பில் ஒவ்வொரு வாக்கியத்திலுள்ள வார்த்தைகளிலும், அழகான வார்த்தைக் கையாடல் மூலம் வெளிப்படுத்தி எழுதும் திறன் கொண்ட எழுத்தாளர் ஒருவர், முஸ்லிம்கள் மீது இதை ஒரு குறையாகக் கருதி கட்டுரை ஒன்றை “தி ஹிந்து” தமிழில் ஏறக்குறைய ஒரு ஆண்டு காலகட்டத்திற்கு முன் எழுதியிருந்தார். எதிர்வினையாற்றல் வெளிப்படையாக இல்லாத காரணத்தால், எழுதப்பட்ட கட்டுரையில் எவராலும் குறைகூற முடியவில்லை.

வெளிப்படையாக இல்லை என்பதால், நடைபெற்ற அராஜக நிகழ்வுகளில் முஸ்லிம்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பதை தெரிவிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகி விட்டது.

இதுபோன்ற சமயங்களில் இறைவனுடைய வழிகாட்டல் என்ன கூறுகிறதோ, அதை செயலில் காண்பிப்பார்கள் முஸ்லிம்கள். அது என்ன என்பதை இறைவன் அகில உலகத்தாரும் நேர்வழி பெற அருளிய குர்ஆன் விவரிப்பதைப் பாருங்கள்.

“அவர்களுக்கு துன்பம் ஏற்படும்போது, நிச்சயமாக “நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்” என்று கூறுவார்கள்” (அல்குர்ஆன் : 2:156)

இதன் பொருள் துன்பம் ஏற்படும்போது எதிர்வினையாற்றி இருந்தால் நாட்டில் கலவரங்கள் மூண்டிருக்கும். அப்போது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருந்திருக்கும். இந்த தீய செயலுக்காக மரணித்த பின் மறுமையில் இறைவனிடம் திரும்பச் செல்லும்போது, இறைக் கட்டளையை மீறி எதிர்வினை ஆற்றியதற்காக இறை தண்டனையைப் பெற வேண்டி இருக்கும். எனவே, முஸ்லிம்கள் எதிர்வினையாற்றாமல் இருந்தனர். மேலும், இதுபோன்ற சமயங்களில் என்ன செய்யவேண்டும் என்று இறைக் கட்டளையுள்ளதோ, அதன்படி செய்ய வேண்டியதை அந்தரங்கமாக செய்து கொண்டிருந்தனர்.

முஸ்லிம்கள் செய்தது என்ன? எதிரிகள் அராஜகத்தை கைவிட்டு நேரிய வழியில் செல்லவும், எதிரிகளிடமிருந்து எல்லா மக்களையும் பாதுகாக்க வேண்டுமாறு இறைவனிடம் பிரார்த்திப்பது முஸ்லிம்களின் வழக்கம். வரம்பு மீறினால், இறப்பிற்குப் பின் இறைவனிடம் திரும்பிச் செல்லும்போது இறை தண்டனையை அனுபவிக்க வேண்டி வரும் என்ற பயமே அதற்கான காரணமாகும்.

இதை முஸ்லிம்கள் கற்றுக்கொண்டது குர்ஆனிடமிருந்தும், இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்துமேயாகும். அந்த கால கட்டத்தில் இது சாத்தியமா என்று வினவலாம். உலகம் உள்ளளவும் எல்லா கால கட்டங்களிலும் இது சாத்தியமே என வரலாறு நிரூபித்துக் கொண்டிருக்கிறது.

எதிரிகள் சொல்லொணா துன்பம் தந்தபோது கூட, அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (அவர்கள் மீது சாந்தி உண்டாவதாக), “இறைவா! அவர்களை நேர்வழியில் செலுத்துவாயாக” எனப் பிரார்த்தித்தார்கள். இந்த பிரார்த்தனையை ஏற்ற அல்லாஹ், எதிரிகளுடனிருந்த மாவீரர். உமர் கத்தாப் அவர்களை இஸ்லாத்தைத் தழுவச் செய்தான். நபியின் மரணத்திற்குப் பின் இவருடைய ஆட்சி காலத்தில் தான் இஸ்லாமிய சமுதாயம் விரிவடைந்தது.

இந்த அழகிய முன்மாதிரியின் பிரகாரம், ஒவ்வொரு முஸ்லிமும் துன்பம் ஏற்படும் போது, எதிரிகள் நேர்வழி பெறவும், எதிரிகளிடமிருந்து தம்மையும், எல்லா மக்களையும் பாதுகாக்கும்படியும் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வார்கள். அதன் பலன் என்னவென்று இறைவன் கூறுவதைப் பாருங்கள்.

“நன்மை புரிந்தோருக்கு கூலி, நன்மை யையும், மேலும் அதைவிட அதிகமும் கிடைக்கும். அவர்களின் முகங்களை இருளோ, இழிவோ சூழ்ந்து இருக்காது. அவர்கள்தான் சுவர்க்கத்திற்கு உரியவர்கள்; அதில் அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள்”. (அல்குர்ஆன் : 10:26)

அடுத்ததை இப்போது கவனிப்போம். எதிரிகள் சண்டைக்கு வந்தபோது கூட வரம்பு மீறாமல், அல்லாஹ்வின் கட்டளையை பின்பற்றினார்கள், அல்லாஹ்வின் கட்டளை என்ன?

“நாம், போரில் “உயிருக்கு உயிர், கண்ணுக்கு கண், மூக்குக்கு மூக்கு, காதுக்கு காது, பல்லுக்குப் பல் ஆகவும்; காயங்களுக்கு சமமான காயங்களாகவும் நிச்சயமாக பழி வாங்கப்படும் என்று அவர்களுக்கு (முஸ்லிம்களுக்கு) விதித்திருந்தோம். எனினும், பழி வாங்குவதை ஒருவர் தர்மமாக விட்டுவிட்டால், அது அவருடைய பாவங்களுக்குப் பரிகாரமாகும். எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்தபடி தீர்ப்பு வழங்கவில்லையோ, நிச்சயமாக அவர்கள் அநியாயக்காரர்களே!” (அல்குர்ஆன்: 5:45)

அல்லாஹ்வின் கட்டளையை மீறி கண்ணுக்குக் கண் என்பதை மீறி எதிரிகளை அதிகமாகப் பழி வாங்கி இறைவன் விதித்த வரம்பை மீறினால் மறுமையில் தண்டிக்கப் படுவோம் என்பதற்கு பயந்து, முஸ்லிம்கள் எதிர்வினையாற்றி தீமையை செய்வ தில்லை. இதற்கான இறைக் கட்டளையை கவனியுங்கள். “ஆனால், தீமையை சம்பாதிப்பவர்களுக்கு, தீமைக்கு கூலியாக அதுபோன்ற தீமையாகும்! அவர்களை இழிவு சூழ்ந்து கொள்ளும்; அவர்களை அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து காப்பாற்றுபவர் எவருமிலர்; இருண்ட இருளுடைய இரவின் ஒரு பாகம் அவர்கள் முகங்களை சூழ்ந்து சுற்றிக் கொள்ளப்பட்டது போல அவர்கள் முகங்கள் காணப் படும். அவர்கள் நரக நெருப்புக்கு உரிய வர்கள் அவர்கள் அங்கேயே என்றென்றும் இருப்பார்கள். (அல்குர்ஆன் : 10:27)

எனவே, உண்மையான இறைவனின் வழிக்காட்டல் இருக்கும்போது முஸ்லிம்கள் ஏன் பயப்பட வேண்டும்? ஏன் எதிர் வினையாற்ற வேண்டும்? அதுவும் பிறருக்கு காட்டுவதற்காகவோ, சுய லாபத்திற் காகவோ ஏன் அரசியல் ஆதாயம் தேட வேண்டும்?

Previous post:

Next post: