பகிரங்க எதிரி யார்…?

in 2021 செப்டம்பர்

பகிரங்க எதிரி யார்…?

இப்னு சித்தீக்

மனித சமுதாயத்தை இவ்வுலகில் படைக்க நாடிய அல்லாஹ் தன்னுடைய உண்மை அடியார்களாகிய மலக்குகளிடம் தன்னுடைய நாட்டத்தை தெரிவிக்கிறான். இந்த பூகோளத்தில் என்னுடைய கலீஃபா (பிரதிநிதியை) படைக்கப்போகிறேன் என்று, ஒருவரையயாருவர் அழித்து பூமியில் இரத் தத்தை ஓட்டக்கூடிய மனித இனத்தையா படைக்கப் போகிறாய்? மலக்குகள் பதிலு ரைக்கிறார்கள். மேலும் இந்த மனித இனத்தை விட நாங்கள் உனக்கு மிகவும் வழி படக்கூடியவர்கள், கட்டுப்படுபவர்கள் என்று மறுமொழியுரைக்கிறார்கள்.

ஆனால் அகிலங்களையும் படைத்து இரட்சித்துப் பாதுகாத்துக் கொண்டிருக்கக் கூடிய அந்த ஒரே இறைவன் நிச்சயமாக நீங் கள் அறிந்துகொள்ள இயலாததை நான் நன்கு அறிவேன் என்று அவர்களைக் கட்டுப்படுத்தி தனது பிரதிநிதியை இப்பிரபஞ்சத்திற்காகப் படைக்கிறான்.

“நபியே! உமதிரட்சகன் மலக்குகளிடம், நான் பூமியில் என்னுடைய பிரதிநிதியை (ஆதமை) படைக்கப் போகிறேன் எனக் கூறியபோது, அவர்கள், “இரட்சகா! பூமியில் வி­மம் செய்து இரத்தம் சிந்தக்கூடிய (மனித இனத்)தையா படைக்கப் போகிறாய்? நாங் களோ உன்னுடைய புகழைக் கொண்டு உன் னைத் துதிக்கிறோம்; உன்னுடைய பரிசுத்தத் தன்மையை போற்றுகிறோம் என்று கூறினர். அதற்கு நீங்கள் அறியாதவற்றை நிச்சயமாக நான் அறிவேன் என்று கூறினான். அல்குர்ஆன் 2:30

தன்னுடைய பிரதிநிதியாக ஆதம் (அலை) அவர்களைப் படைத்த இறைவன் தன் மலக்குகளுக்கு, ஆதமுக்கு சிரம் தாழ்த் துங்கள் என்று பணிக்கவே அனைவரும் சிரம் பணிகின்றனர்; பெருமைக்காரனாகிய இப்லீஸைத் தவிர,

“மலக்குகளே! நீங்கள் ஆதமுக்கு ஸுஜூது செய்யுங்கள் எனக் கூறியபோது இப்லீஸைத் தவிர மற்ற அனைவரும் ஸுஜூது செய்தனர்’. அல்குர்ஆன்2:35, 7:11

ஆணவக்காரனான இப்லீஸ் சிரம் பணிய மறுத்ததற்காக அகம்பாவமானதொரு காரணத்தைக் கூறுகிறான். அதாவது நெகிழ் வுத் தன்மை கொண்ட எவ்வித பண்புகளு மற்ற களிமண்ணால் படைக்கப்பட்ட கீழான இந்த மனிதனுக்கு (ஆதமுக்கு) மண்ணைவிட சக்தி வாய்ந்த நெருப்புச் சுவாலையிலிருந்து படைக்கப்பட்ட என்னை சிரம் பணியச் சொல்வது சாத்தியமா? என்று இறுமாப்புடன் படைத்த இறைவனிடம் கூறுகிறான்.

“(காய்ந்தால்) சப்தம் தரக்கூடிய பிசு பிசுப்பான களிமண்ணால் நீ படைத்த மனிதனுக்கு (நெருப்பால் படைக்கப்பட்ட) நான் சிரம் பணிவதற்கில்லை’ என்று கூறி னான்.
அல்குர்ஆன் 15:33

கட்டளை பிறப்பித்தது யார் என்பதை அறிந்து கொண்டே தன்னை நெருப்பால் படைத்து, ஆதமை (மனிதனை) மண்ணால் படைத்த இறைவனிடமே அவனது ஆணையை புறந்தள்ளிவிட்டு தன் பெருமை யான எண்ணத்தின் காரணமாக சிரம் பணிய மறுத்த இப்லீஸ், மலக்குகளின் திருச்சமூகத்தி லிருந்து அப்புறப்படுத்தப்படுகின்றான். மறுமை நாள் வரும் வரை தன்னுடைய ஆண வமான, கேடான இச்செயலின் காரணமாக இறைவனுடைய கோபத்தையும், சாபத்தை யும் பெற்றுக்கொண்டு இவ்வுலகிற்கு வருகின்றான்.

“…இறைவன், நீ இங்கிருந்து வெளியேறி விடு! நிச்சயமாக நீ விரட்டப்பட்டவனாகி விட்டாய்! மேலும், விசாரணை நாள் வரும் வரை என்னுடைய சாபம் உண்டாவதாக!” என்று கூறினான். அல்குர்ஆன் 15:34,35

இப்லீஸ் (ஷைத்தான்) தன்னுடைய பிற்போக்குத்தனமான செயலால் அல்லாஹ்வின் அருளிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டபின், தான் செய்ததவறை எண்ணி காலங் கடந்து வருந்துகிறான். அதன் வெளிப்பாடாக தன்னுடைய தண்டனைக் காலத்தை தாமதிக்கும்படி இறைவனிடம் மன்றாடுகிறான். இறைவனால் அவ்வாறே அவன் வாய்ப்பளிக்கப்படுகிறான்.

“என் இறைவா! உயிர் பெற்றெழும் நாள் வரை நீ எனக்கு அவகாசம் அளிப்பாயாக! அதற்கு இறைவன் நீ அவகாசம் அளிக்கப்பட்டோரில் ஒருவனாய் இருக்கிறாய்” என்று கூறினான். அல்குர்ஆன் 15:37,38

தான் செய்த மாபாதகமான, அடிபணிய மறுத்த பெருந்தவறின் காரணமாக இறை நிராகரிப்பில் வீழ்ந்த ஷைத்தான், தன்னுடைய பெருமையான எண்ணத்தின் மூலம் அழிவைத் தேடிக்கொண்டது போல் பொறாமையான எண்ணத்துடன் அல்லாஹ்விடம் ஒரு கோரிக்கையை வைக்கிறான். நான் எப்படி உனது அருளிலிருந்து விரட்டப்பட்டேனோ, அதுபோல இந்தப் பூமியிலுள்ள மனிதர்களுக்கு இணை வைத்தல், வட்டி, கொலை, மது, சூது, மாது, பணம், பதவி, பேராசை, பொய், புறம், கோள், மோசடி, கோபம், அகம்பாவம், ஆணவம் உள்ளிட்ட பாவங்களை அழகாகக் காண்பித்து அவர்க ளும், உனது அருளிலிருந்து எடுத்தெறியப் பட்டு எனது அணிக்கு அழைத்துக் கொள் வேன் என்று கூறுகிறான்.

“”என் இறைவனே! நீ என்னை வழிதவறச் செய்துவிட்டதால், நான் இவ்வுலகில் வழிகேட்டை(த் தரும் அனைத்தையும்) அவர்களுக்கு அழகாகத் தோன்றும்படி செய்து அதன்மூலம் அவர்களை வழி கெடுப்பேன்”.  அல்குர்ஆன் 15:39

இவ்வுலகில் வாழும் மனிதர்களுக்கு பாவங்களைச் செய்வதில் ஆர்வமூட்டி, அதைச் செய்த பிறகு இன்பமூட்டி அதனை அவர்களுக்கு அழகாகக் காண்பித்து வழி கெடுக்கும் மிகப் பெரிய பொறுப்பை பெற்ற பின் ஷைத்தான் தன் இயலாமையையும் இறைவனிடம் ஒத்துக்கொள்கிறான். எப்படி யயனில், உனது அடியார்களில் உன்னை அஞ்சி, பயந்து பாவங்களிலிருந்து விலகி தூய எண்ணங்களைத் தம்முடன் சுமந்து கொண்டி ருக்கும் உனது உண்மையான அடியார்களி டம் எனது திட்டம் பலிக்காது என்று ஷைத்தான் மிகப் பகிரங்கமாகவே ஒத்துக் கொள்கிறான்.

“கலப்பற்ற பரிசுத்த உள்ளத்தையுடைய உன் நல்லடியார்களைத் தவிர, (அவர்களை என்னால் வழிகெடுக்க இயலாது)” என்று கூறினான். அல்குர்ஆன் 15:40

இவ்வாறாக இறைவனால் எடுத்தெறி யப்பட்ட ஷைத்தானின் திட்டம் பற்றி, இவனது மாயவலை என்னும் பாவக்கடலில் மூழ்கி முத்தெடுக்கும் மனிதர்களிடத்திலும், ஓரிறைக் கொள்கையை நிராகரித்து இறைவனுக்கு இணை வைக்கும் பாவத்தில் ஈடுபடும் மக்களிடமுமே எடுபடும். தூய இஸ்லாத்தைப் பின்பற்றி அல்லாஹ்வுக்கு அஞ்சி நடக்கும் அடியார்களிடத்தில் அவனது மாயாஜால வார்த்தைகளுக்கு மதிப்பில்லை என்பதைப் பற்றி அல்லாஹ் தெளிவாகக் கூறுகிறான்.

“(ஷைத்தானுடைய) அதிகாரமெல் லாம் அவனுடன் உறவு வைப்பவர்களிட மும், இணைவைப்பவர்களிடமுமே செல்லும்”. அல்குர்ஆன் 16:100

நம்மை வழிகெடுப்பதையே பிரதானமாகக் கொண்டு செயல்படும் ஷைத்தான் நம்மிடம், எப்படி நடந்து கொள்கிறான் என்றால், நம்முடைய பகிரங்க எதிரியாக செயல்படுகிறான். இதுபற்றி அல்லாஹ் கூறுகிறான்.

“நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்கு பகிரங்க எதிரியாக இருக்கிறான்; நீங்களும் அவனை எதிரியாகவே கருதுங்கள்”. அல்குர்ஆன் 35:6

நம்முடைய முக்கிய, பகிரங்க எதிரியாக, நம்மை படைத்த அல்லாஹ் ஷைத்தானை சுட்டிக்காட்டுகிறான். ஆனால் நாமோ ஷைத்தானுடன் சேர்ந்துகொண்டு வேறு யார் யாரையயல்லாமோ எதிரிகளாக நினைத்துக் கொண்டு அவனது அணிக்குவலு சேர்த்துக் கொண்டிருக்கிறோம்.

ஷைத்தான் நம்மை வழி தவறச் செய்ய முயலும் போது நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி திருமறையில் அல்லாஹ் கூறுகிறான்.

“ஷைத்தானுடைய ஊசலாட்டம் (தீய காரியங்களை செய்யும்படி) உங்களைத் தூண்டும் சமயத்தில் உங்களை காக்கும்படி இறைவனிடத்தில் கோருங்கள்! அவன் செவி யுறுபவன் நன்கறிபவன்” அல்குர்ஆன்41:36

“என் இறைவனே! (பாவமான செயல்களைச் செய்யத் தூண்டும்) ஷைத்தானின் தூண்டுதல்களிலிருந்து என்னைக் காப்பாற்றும்படி நான் உன்னிடம் வேண்டுகிறேன்! ஷைத்தான் என்னிடம் வராமலிருக்கவும் நான் உன்னிடம் காவல் தேடுகிறேன்!”  அல்குர்ஆன் 23:97, 98

மனிதகுல விரோதியாகிய ஷைத்தானின் பாவத்தூண்டுதல்களிலிருந்து அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாக! அல்லாஹ்வால் பகிரங்க எதிரியாக அறிவிக்கப்பட்ட ஷைத்தானை நம்முடைய முதல் எதிரியாக எடுத்துக்கொண்டு, அவனது தீங்குகளிலிருந்து விலகி நடக்க அல்லாஹ் நம்மனை வருக்கும் அருள் செய்வானாக.

Previous post:

Next post: