படியுங்கள்! சிந்தியுங்கள்! வாழ்வியலாக்குங்கள் குர்ஆனை!

in 2022 பிப்ரவரி

படியுங்கள்! சிந்தியுங்கள்! வாழ்வியலாக்குங்கள் குர்ஆனை!

ஷரஹ் அலி, உடன்குடி

உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தார் மீதும் சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்! (படைத்த) அந்த ஒரே இறைவன் உங்களுக்கு அருள் புரியட்டும்.

அந்த ஒரே இறைவனின் பெயரால்…

பொறுமை இறையச்சம் நன்னடத்தை இவற்றை கடைபிடித்தலே நன்மையை தேடி தரும் செயல்கள்.

(முஸ்லிம்களே!) உங்கள் உடைமைகளிலும், உயிர்களிலும் நீங்கள் நிச்சயமாக சோதிக்கப்படுவீர்கள்.

உங்களுக்கு முன் இறைநூல் அருளப் பட்டவர்களிடம் இருந்தும், இணை வைப்போரிடம் இருந்தும் அதிகமான வேதனை தரும் பல வார்த்தைகளை நிச்சயமாக நீங்கள் கேட்பீர்கள். இத்தகைய நிலைமைகளில் நீங்கள் பொறுமையும், இறையச்சம் கொண்ட நடத்தையை வலுவாகக் கடைபிடித்தால் நிச்சயமாக அதுவே எல்லாக் காரியங்களிலும் நன்மையைத் தேடி தரும் செயலாகும். (இறைநூல் 3:186)

இறைநம்பிக்கை கொண்டவர்களே! பொறுமையுடன் இருங்கள்; சகித்துக் கொள்ளுங்கள்; உங்களைப் பலப்படுத் திக் கொள்ளுங்கள்; அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்; நீங்கள் வெற்றியடைவீர்கள்! (இறைநூல் 3:200)

இறுதி இறைத்தூதர் (ஸல்) அவர்களின் முன்னறிவிப்பு!

ஹிஜாஸ் பகுதியிலிருந்து ஒரு நெருப்பு கிளம்பாத வரை அதாவது, எமன் நாட்டில் இருந்து நெருப்புத் தோன்றி மக்களை விரட்டிச் செல்லும், அந்நிகழ்வு ஏற்படாத வரை உலக அழிவு நாள் ஏற்படாது என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் சொன்னார்கள். முஸ்லிம் 5561

நீங்கள் பொறுமையாக இருப்பீர்களாயின் திண்ணமாக இதுவே பொறுமையை கடைப்பிடிப்பவர்களுக்கு மிகச் சிறந்ததாகும். நீர் பொறுமையுடன் பணியாற்றிக் கொண்டிருப்பீராக! மேலும் உம்முடைய இந்தப் பொறுமை அல்லாஹ்வின் பேருதவி யால்தான் கிடைக்கின்றது. அவர்களின் செயல்கள் குறித்து நீர் வருந்த வேண்டாம். அவர்களின் சூழ்ச்சிகளைக் குறித்து நீர் மனம் நொந்துபோகவும் வேண்டாம். எவர்கள் இறையச்சத்துடன் நன்னடத்தையை மேற்கொள் கிறார்களோ அத்தகையவர்களுடன் நிச்சயமாக அல்லாஹ் இருக்கின்றான். (இறைநூல் 16:126-128)

Previous post:

Next post: