சோதனைகளின்போது பொறுமை கொள்ள வேண்டும்
அபூ அஸீம், இலங்கை
எங்களில் மேம்போக்கான கருத்து டைய (அதாவது ஆழமாகச் சிந்திக்கத் தெரியாத) எடுத்து எடுப்பிலேயே விபரமில்லா மல் முடிவு செய்யக்கூடிய சிறு சிறு வியாபாரிகள், நெசவாளர்கள், நாவிதர்கள், செருப்புத் தைப்பவர்கள், அன்றாடம் கூலி வேலை செய்பவர்கள், பலவீனமானவர் கள், எளியவர்கள், இழிவானவர்கள் போன்ற அடிமட்டத்திலுள்ள தாழ்ந்தவர் கள்தான் உம்மைப் பின்பற்றுவதைக் காண்கிறோம். அத்தகையவர்களைத் தவிர வேறு யாரும் உம்மைப் பின்பற்றுவதை நாங்கள் காணவில்லை. தாழ்ந்தோராகிய இவர் களோடு அமர்ந்தால் நாங்களும் சமமாகி விடுவோம், அவர்களோ எங்களை விடத் தாழ்ந்தோராவர். ஆகவே இத்தகைய எளிய மக்களை உம்மிடமிருந்து விலக்கி, விரட்டி, வைத்தால்தான் நாங்கள் உம்மைப் பின் பற்றுவோம். இல்லாவிடில் “உம்மீது நாங் கள் நம்பிக்கை கொள்ளவும் மாட்டோம். உம்மைப் பின்பற்றவும் மாட்டோம் என்ற தோரணையில்தான் இறைத்தூதர் நூஹ் (அலை) அவர்களின் சமூகத்திலுள்ள இறை நிராகரிப்பாளர்களான பிரமுகர்கள் கூறி னார்கள். (தஃப்ஸீர் இப்னு கஸீர், பாகம் 6, பக்கம் 581)
அப்போது அவர்களது கோரிக்கையை நிராகரித்த நூஹ்(அலை) அவர்கள்; நீங்கள் அற்பமாகக் கருதுகின்ற, அல்லது உங்களு டைய பார்வைக்கு இழிவாகத் தெரிகின்ற “இறை நம்பிக்கை கொண்டோரை நான் துரத்தப் போவதில்லை, நான் வெறுக்கப் போவதுமில்லை” என்று கூறி, (தஃப்ஸீர் இப்னு கஸீர் பாகம் 4, பக்கம் 616, 617) எனது சமூகத்தாரே! நான்(உங்க ளது பார்வையில் இழிவாகத் தெரிகின்ற) இவர்களைத் துரத்தி விட்டால் அல்லாஹ் விடமிருந்து என்னைக் காப்பாற்றுபவர் யார்? (என்பதை) நீங்கள் சிந்திக்க மாட்டீர் களா? (11:30) என்று கேட்டார்.
மேலும், உங்களின் கண்கள் யாரைக் குறித்து (எங்களில் மேம்போக்கான கருத்து டைய (அதாவது ஆழமாகச் சிந்திக்கத் தெரி யாத) எடுத்த எடுப்பிலேயே விபரமில்லா மல் முடிவு செய்யக்கூடிய சிறு சிறு வியா பாரிகள், நெசவாளர்கள், நாவிதர்கள், செருப்புத் தைப்பவர்கள், அன்றாடக் கூலி வேலை செய்பவர்கள், பலவீனமானவர்கள், எளியவர்கள், இழிவானவர்கள் என) மதிப் பிடுகின்றனவோ அவர்களைக் குறித்து, “”அவர்களுக்கு அல்லாஹ் எந்தவொரு நன்மையையும் ஒருபோதும் தரவே மாட் டான்” என்று நான் கூறமாட்டேன். (ஏனெ னில்) அவர்களின் உள்ளங்களில் உள்ள வற்றை அல்லாஹ்தான் நன்றாக அறிந்தவன் ஆவான். அவ்வாறாயின் நிச்சயமாக நான் அநீதியாளர்களில் ஒருவனாகி விடுவேன். (11:31) என்றும் இறைத்தூதர் நூஹ்(அலை) அவர்கள் கூறினார்கள்.
அதுபோன்றே, ஒருமுறை அல்லாஹ் வின் தூதர்(ஸல்) அவர்களுடன், நபித் தோழர்களான ஸஹ்து இப்னு அபீவக்காஸ் (ரழி), இப்னு மஸ்ஊத்(ரழி), பிலால்(ரழி), சுஹைப்(ரழி, அம்மார்(ரழி), கப்பாப்(ரழி) மற்றும் ஹுதைல் கூட்டத்தைச் சேர்ந்த பெயர் கூறப்படாத இருவர், ஆகிய ஏழை கள், பலவீனமானவர்கள், அடிமைகள் என அமர்ந்திருந்தார்கள். அப்போது அல்லாஹ் வின் தூதர்(ஸல்) அவர்களிடம் மக்கத்துக் குறை´களில் இணை வைப்பாளர்களான, உயர் கோத்திரத்தைச் சேர்ந்த அக்ர உ பின் ஹாபிஸ், அத்தமீமீ, உயைனா பின் ஹிஸ்ன், அல்ஃபஸாரீ ஆகிய இணை வைப்பாளர் களான குறை´த் தலைவர்கள் அல்லாஹ் வின் தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து அங்கு அமர்ந்திருப்பவர்களைக் கண்டபோது அவர் களை இவர்கள் இழிவாகக் கருதினார்கள்.
பின்னர் அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து தனியாக உரை யாடினார்கள். அதில் “”எங்களது சிறப்பை அரபியர் அறியும் வகையில் எங்களுக்குத் தனி இடத்தை நீங்கள் ஒதுக்கித் தர வேண் டும். ஏனெனில் அரபியர் குழுக்கள் உங்களி டம் வருவார்கள். அப்போது இந்த அடிமை களுடன் சேர்ந்து எங்களை அரபியர் காண் பதை நாங்கள் அவமானமாகக் கருதுகி றோம். எனவே நாங்கள் உங்களிடம் வரும் போது அவர்களை எங்களிடமிருந்து எழுந்து சென்றுவிடுமாறு நீங்கள் உத்தரவிட வேண்டும். நாங்கள் சென்ற பின்னர் நீங்கள் விரும்பினால் அவர்கள் உங்களுடன் அமர்ந்து கொள்ளட்டும். அல்லது “இவர் களை விரட்டி விடுவீராக! (அப்போதுதான்) எங்களுக்கு எதிராக அவர்கள் தைரியம் ஏற் படாதிருப்பார்கள்” என்று கூறினார்கள்.
அதற்கு நபி(ஸல்) அவர்கள் சரி என்று சொன்னார்கள். அப்போது அவர்கள் “”உங் கள் சார்பாக எங்களுக்கு இதை நீங்கள் எழு தித் தாருங்கள்” என்று கூறினார்கள். அப் போது நபி(ஸல்) அவர்கள் எழுதுவதற்காக ஓர் ஏட்டைக் கொண்டு வரும்படி உத்தர விட்டார்கள். பின்னர் அதை எழுதுவதற் காக அலீ(ரழி) அவர்களை அழைத்தார்கள். அப்போது குறித்த நபித்தோழர்கள் ஓர் ஓரத்தில் அமர்ந்து கொண்டார்கள்.
அப்போதுதான் வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து, (நபியே!) காலை யிலும், மாலையிலும் தங்களுடைய இறை வனிடம் அவனது (சங்கையான) முகத்தை நாடியவர்களாக எவர்கள் (அவனை) அழைத்து(ப் பிரார்த்தித்துக்) கொண்டிருக் கின்றார்களோ, அவர்களை நீர் விரட்டி விட வேண்டாம். (6:52, 18:28) எனும் வசனத்தை இறக்கியருளினான். உடனே அல்லாஹ் வின் தூதர்(ஸல்) அவர்கள் தமது கையிலி ருந்த அந்த ஏட்டை வீசி எறிந்துவிட்டு எங் களை அழைத்தார்கள். நாங்கள் அவர்களுக் கருகில் சென்று அமர்ந்து கொண்டோம். (ஸஹ்து இப்னு அபீவக்காஸ்(ரழி) இப்னு மஸ்ஊத் (ரழி), கப்பாப்(ரழி), முஸ்லிம்: 2413, 4792, ரியாளுஸ் ஸாலிஹீன் 260, இப்னு மாஜா, முஸ்னத் அஹ்மத், ஹாக்கிம், தஃப்ஸீர் தபரீ, தஃப்ஸீர் இப்னு அபீஹாத்திம், தஃப்ஸீர் இப்னு கஸீர் பாகம் 3, பக்கம்: 446-454, பாகம் 5, பக்கம் 420-424, பக்கம் 423இல் சிறு குறிப்பு 44ஆவது)
ஆனாலும் குறை´ இணை வைப்பாளர்கள், செல்வமும், செல்வாக்கும் உள்ள ஒருவர் இஸ்லாத்தைத் தழுவினால் அவரி டம் அபூ ஜஹ்ல் நேரே சென்று “உனது செல் வத்தையும், செல்வாக்கையும் ஒன்று மில்லாமலாக்கி விடுவேன்’ என்று மிரட்டு வான். அவர் கொஞ்சம் பலமில்லாதவராக இருந் தால் அடித்துத் துன்புறுத்துவான். (இப்னு ஹிஷாம், அர்ரஹீக் அல்மக்தூம்: 113)
உஸ்மான் (ரழி) அவர்களது தந்தையின் சகோதரர் அப்பாவி முஸ்லிம்களை பேரீத் தங் கீற்றுப் பாயில் சுருட்டி வைத்து அதற் குக் கீழே புகை மூட்டி மூச்சுத் திணறடிப் பார். (ரஹ்மத்துல்லில் ஆலமீன்)
தனது மகன் முஸ்லிமாகி விட்டதை அறிந்த முஸ்அப் இப்னு உமைர்(ரழி) அவர் களின் தாயார் அவருக்கு உணவு, தண்ணீர், கொடுக்காமல் வீட்டிலிருந்து விரட்டி விட் டார். மிக ஆடம்பரமாக வாழ்ந்து வந்த அவர் பெரும் துன்பத்தை அனுபவித்தார். பசி, பட்டினி என்ற வறண்ட வாழ்க்கை யினால் அவர்களது மேனியின் தோல் சுருங்க ஆரம்பித்தது. (அஸதுல் காபா)
ஸுஹைப் இப்னு ஸினான்(ரழி) அவர் கள் நினைவிழக்கும் வரை கடுமையாகத் தாக்கப்படுவார். (அஸதுல் காபா)
பிலால்(ரழி) அவர்கள் உமய்யா இப்னு கலஃபுடைய அடிமையாக இருந்தார்கள். உமையா அவர்களது கழுத்தில் கயிற்றைக் கட்டி சிறுவர்களிடம் கொடுப்பான். சிறுவர் கள் அவரை மக்காவின் கரடுமுரடான மலைப் பாதைகளில் இழுத்துச் செல்வார் கள். கயிற்றின் அடையாளம் அவர்களது கழுத்தில் பதிந்துவிடும். அந்நிலையிலும் அவர்கள் அஹத்! அஹத்! என்று சொல்லிக் கொண்டிருப்பார்கள். சில வேளைகளில் உமைய்யா பிலால்(ரழி) அவர்களை மிக இறுக்கமாகக் கட்டி தடியால் கடுமையாகத் தாக்குவான். பிறகு சூரிய வெப்பத்திலும் போடுவான், உணவளிக்காமல் பசியால் துடிக்க வைப்பான். சுட்டெரிக்கும் சூரிய வெப்பத்தில் பாலைவன சுடு மணலில் கிடத்தி அவர்களது நெஞ்சின் மீது பாராங் கல்லைத் தூக்கி வைப்பான்.
அப்போது உமைய்யா, பிலால்(ரழி) அவர்களை நோக்கி, அல்லாஹ்வின் மீது ஆணையாக நீ சாகவேண்டும் அல்லது முஹம்மதின் மார்க்கத்தை நிராகரித்து “”லாத்” “உஜ்ஜாவை” வணங்க வேண்டும். அதுவரை நீ இப்படியே தான் சித்திரவதைக் குள்ளாகியவனாக இருப்பாய். உன்னை நான் விடவே மாட்டேன் என்பான். அதற்கு பிலால்(ரழி) அவர்கள் அஹத்! அஹத்! என்று சொல்லிக் கொண்டே “இந்த “அஹத்’ என்ற வார்த்தையை விட உனக்கு மேலும் ஆவேசத்தை உண்டுபண்ணும் வேறு ஒரு வார்த்தை எனக்குத் தெரிந்தால் நான் அதையே கூறுவேன் என்பார்கள். அவர்களது சித்திரவதைகளையயல்லாம் பொறுத்துக் கொண்டார்கள். (இப்னு ஹிஷாம்)
இதுபோன்ற, அம்மார் இப்னு யாஸிர் (ரழி) அவர்களது தகப்பனார் யாஸிர்(ரழி) தாயார் ஸுமய்யா(ரழி) ஆகிய மூவரும் மக்ஜூம் கிளையைச் சேர்ந்த அபூ ஹுதைஃபா இப்னு முகீரா என்பவரின் அடிமைகளாக இருந்தார்கள். மூவரும் இஸ் லாத்தைத் தழுவினார்கள். இம்மூவரையும் அபூஜஹ்ல் தலைமையில் ஒரு கூட்டம் “அப்தஹ்’ என்ற இடத்திற்கு அழைத்துச் சென்று மதிய வேளையில் சுடு மணலில் கிடத்திக் கடுமையாக சித்திரவதை செய்த னர். இதனைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் “யாஸிரின் குடும்பத்தாரே! “பொறுமையை’ மேற்கொள்ளுங்கள். உங்களுக்குச் சொர்க் கம் வாக்களிக்கப்பட்டுள்ளது’ என்று ஆறு தல் கூறினார்கள். நிராகரிப்பவர்களின் சித்தி ரவதை வேதனையாலேயே யாஸிர்(ரழி) அவர்கள் இறந்து விட்டார்கள். வயது முதிர்ந்து இயலாதவராக இருந்த அம்மாரின் தாயாரான சுமைய்யா பின்த் கய்யாத்(ரழி) அவர்களை அபூஜஹ்ல் அவர்களது பெண் ணுறுப்பில் ஈட்டியால் குத்திக் கொலை செய்தான். இவரே இஸ்லாத்திற்காக உயிர் தியாகம் செய்த முதல் பெண்மணியாவார்.
அவர்களது மகனாரான அம்மார்(ரழி) அவர்களை தகிக்கும் வெயிலில் பாலை வனச் சுடு மணலில் கிடத்தி நெஞ்சின் மீது பாராங்கல்லை வைத்தும், நினைவிழக்கும் வரை தண்ணீரில் மூழ்கடித்தும் சித்திரவதை செய்தார்கள். “முஹம்மதை திட்ட வேண் டும் அல்லது லாத் உஜ்ஜாவைப் புகழ வேண் டும் அப்போதுதான் உன்னை இத் தண்டனை யிலிருந்து விடுவிப்போம்’ என்றும் கூறி சித்திரவதை செய்தார்கள். (இப்னுஹிஷாம்)
மேலும், அஃப்லஹ் அபூ ஃபுகைஹா (ரழி) அவர்கள் அப்து தார் கிளையைச் சேர்ந்த ஒருவருடைய அடிமையாக இருந் தார். இவரது இரு கால்களையும் சங்கிலி யால் பிணைத்து ஆடைகளைக் கழற்றி விட்டு சுடுமணலில் குப்புறக் கிடத்தி அசை யாமலிருக்க பெரும் பாறையை முதுகின் மீது வைத்து சுய நினைவை இழக்கும் வரை அவரை அதே நிலையில் விட்டுவிடுவார்கள். இவ்வாறான கொடுமைகள் தொடர்ந்தன. ஒருமுறை அவரது கால்களைக் கயிற்றால் பிணைத்து சுடுமணலில் கிடத்தி கழுத்தை நெறித்தார்கள். அவர் சுயநினைவை இழந்த வுடன் இறந்துவிட்டாரென எண்ணி விட்டுவிட்டார்கள். (அஸதுல் காபா)