படியுங்கள்! சிந்தியுங்கள்! வாழ்வியலாக்குங்கள் குர்ஆனை!

in 2022 ஜுன்

படியுங்கள்! சிந்தியுங்கள்! வாழ்வியலாக்குங்கள் குர்ஆனை!

ஷரஹ் அலி

உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தார் மீதும் சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்.

(படைத்த) அந்த ஒரே இறைவன் உங் களுக்கு அருள்புரியட்டும்.

அந்த ஒரே இறைவனின் பெயரால்…

அவதியிலும் அமைதி :

அல்லாஹ்வின் அனுமதியின்றி எந்த சோதனையும் நேராது. யார் அல்லாஹ் வின் மீது (உறுதியாக) நம்பிக்கை கொள் கிறாரோ அவரது உள்ளத்தை அவன் நல் வழிப்படுத்துவான். (இறைநூல் : 64:11)

அவன் எழுதியதுதான் நடக்கும் :

(நன்மையோ, தீமையோ) அல்லாஹ் எங்களுக்கு எழுதியதைத் தவிர வேறு எது வும் எங்களை ஒருபோதும் அணுகாது. அவனே எங்கள் பொறுப்பாளன். எனவே, இறை நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்கட்டும்.  (இறைநூல் : 9:51)

(நபியே) நீர் சொல்வீராக! அதிகாலை யின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன். அவன் படைத்தவற்றின் தீங்கை விட்டும் இருள் பரவும் போதும் ஏற்படும் இரவின் தீங்கை விட்டும், இன் னும் முடிச்சுகளில் ஊதும் பெண்களின் தீங்கை விட்டும், பொறாமைக்காரன் பொறாமை கொள்ளும்போது உண்டா கும் தீங்கை விட்டும் காவல் தேடுகிறேன். (இறைநூல் : 113:1-5)

(நபியே!) நீர் சொல்வீராக! மனிதர் களின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன். (அவனே) மனிதர்களின் அரசன்; (அவனே) மனிதர்களின் நாயன் பதுங்கியிருந்து வீண் சந்தேகங்களை உண்டாக்குபவனின் தீங்கை விட்டும் (இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்).

அவன் மனிதர்களின் இதயங்களில் வீண் சந்தேகங்களை உண்டாக்குகின் றான். (இத்தகையோர்) ஜின்களிலும் மனிதர்களிலும் இருக்கின்றனர்.  (இறை நூல் : 114:1-6)

எங்களுக்கு அல்லாஹ் போதுமான வன். அவனே சிறந்த பாதுகாவலன். (இறைநூல் : 3:173)

அல்லாஹ் உங்கள் பாதுகாவலனாக இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்! அவன் சிறந்த பாதுகாவலனும், சிறந்த முறையில் உதவி புரிபவனும் ஆவான்.(இறைநூல் : 8:40)

அல்லாஹ்தான் மிகச் சிறந்த பாது காவலன், அவன் கருணையாளர்களி லேயே மிகவும் கருணையாளன்.  (இறை நூல் : 12:64)

“அல்லாஹ்வை இறுகப் பற்றிக் கொள்ளுங்கள். அவன்தான் உங்களு டைய பாதுகாவலன். அவன் எத்துணைச் சிறந்த பாதுகாவலன்; மேலும், அவன் எத்துணைச் சிறந்த உதவியாளன்.  (இறைநூல் : 22:78)

Previous post:

Next post: