மனிதனின் உயிர் பிரியும் இறுதி நேரம்!

in 2022 ஜுலை

மனிதனின் உயிர் பிரியும் இறுதி நேரம்!

ஷரஹ் அலி, உடன்குடி

உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தார் மீதும் சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்.

(படைத்த) அந்த ஒரே இறைவன் உங் களுக்கு அருள்புரியட்டும்.

அந்த ஒரே இறைவனின் பெயரால்…

மனிதனின் உயிர் பிரியும் இறுதி நேரம் ஒரு போதுமில்லை! உயிர் தொண்டை வரை எண் ணும்போது, மேலும், மந்திரித்து ஊதுபவர் எவரேனும் உண்டா? என்று கேட்கப்படும்போது, மேலும், இது உலகை விட்டு பிரியும் நேரம் என்று மனிதன் புரிந்து கொள்ளும்போது கெண்டைக்கால், கெண்டைக் காலுடன் பின்னிப் பிணியும்போது, அந்நாளில்தான் உன் அதிபதி உன் பக்கம் திரும்பிச் செல்ல வேண்டியிருக்கும். ஆனால், அவன் உண்மையயன ஏற்கவுமில்லை. தொழவுமில்çலை, மாறாகப் பொய்யயன வாதிட்டான். (இறைநூல்: 75:26-32)

என் இறைவனே! எனக்கு நீ நுண்ணறியும் திறனை வழங்குவாயாக! மேலும், என்னை நல்லவர்களோடு சேர்த்து வைப்பாயாக!  (இறைநூல்: 26:83)

கர்வம் கொள்வோர் திசை திருப்பப்படுவர்:

நியாயமின்றி, பூமியில் பெருமையடிப்பவர்களை, என் வசனங்களை விட்டும் திருப்பி விடுவேன். அவர்கள் ஒவ்வொரு வசனத்தையும் தெளிவாக கண்டாலும் அவற்றை நம்பமாட்டார்கள். அவர்கள் நேர்வழியைக் கண்டால், அதை ஏற்கமாட்டார்கள். தவறான வழிகேட்டைக் கண்டாலே, அதையே (தங்களுக்குரிய நேர்வழியாய்) ஏற்பார்கள். ஏனெனில், நம் வசனங்களை அவர்கள் பொய்ப்பித்து, அவற்றைப் புறக்கணித்தும் வருகின்றனர்.  (இறைநூல் : 7:146)

நிம்மதியோடு இருக்கிறார்களா?

சுற்றி வளைக்கும் அல்லாஹ்வின் வேதனை அவர்களுக்கு வராது என்று அல்லது அவர்களே உணராத வகையில் யுக முடிவு நாள் திடீரென வராது என்று அவர்கள் நிம்மதியாயும் இருக்கி றார்களா? (இறைநூல் 12:107)

இறைத்தூதரின் கட்டளைக்கு மாறு செய்பவர்கள் தங்களுக்கு ஏதேனும் கடும் சோதனை நேர்ந்துவிடுமோ, தம்மீது துன்புறுத்தும் வேதனை வந்துவிடுமோ என்று அஞ்சட்டும்!  (இறைநூல் : 24:63)

நீங்கள் ஒரு வேதனையைப் பற்றி அஞ்சிக் கொள்ளுங்கள். அது உங்களில் யார் அநீதி இழைத்தார்களோ அவர்களை மட்டுமே தாக்காது. மற்றவர்களையும் தாக்கும்.
(இறைநூல் : 8:25)

முஸ்லிம்களே! உங்கள் பொருள்களிலும் உங்கள் உயிர்களிலும் நிச்சயமாக நீங்கள் சோதிக்கப்படுவீர்கள்; உங்களுக்கு முன் நெறி நூல் கொடுக்கப்பட்டோரிடமிருந்து இணை வைத்து வணங்குவோரிடமிருந்தும் நிந்தனைகள் பலவற்றையும் செவிமடுப்பீர்கள்.

ஆனால் நீங்கள் பொறுமையை மேற் கொண்டு (இறைவனிடம்) பயபக்தியோடு இருந்தீர்களானால் நிச்சயமாக அதுவே எல்லாக் காரியங்களிலும் (நல்லதைப் பெற்றுத் தரும்) முடிவான செயலாக இருக்கும்.  (இறைநூல்: 3:186)

ஒவ்வோர் ஆண்டும் ஒரு முறையோ அல்லது இரு முறையோ அவர்கள் சோதனைக்குள் ளாக்கப்படுகிறார்கள் என்பதை அவர்கள் கவனிக்கவில்லையா?

இவ்வாறிருந்தும் அவர்கள் பாவமன்னிப்புக் கேட்பதுமில்லை. நல்லுரை பெறுவதுமில்லை. (இறைநூல் : 9:126)

உங்களில் பெரும்பாலோர் இணை வைப்பவர்களாய் இருக்கிற நிலையில் அல்லாமல் அல் லாஹ்வை நம்புவதில்லை. (இறைநூல்:12:106)

படியுங்கள்! சிந்தியுங்கள்! வாழ்வியலாக்குங்கள்! இறுதி இறைநூலை!

Previous post:

Next post: