இஸ்லாமிய பிரிவினை இயக்கங்களினால் சமுதாயத்திற்கு வரப்போகும் பேராபத்து!

in 2023 மார்ச்

தலையங்கம் :

இஸ்லாமிய பிரிவினை இயக்கங்களினால் சமுதாயத்திற்கு வரப்போகும் பேராபத்து!

இந்தியாவிலுள்ள இந்து மதத்தைச் சார்ந்த ஆயிரக்கணக்கான ஜாதிப் பிரிவுகளை சுதந்திரத்திற்கு முன்பிருந்தே நன்றாக திட்டமிட்டு இன்றுவரை இந்துத்வா சங்பரிவாரக் காவித் தலைவர் கள் தங்களது அயராத உழைப்பால் இந்து என்றும் RSS என்றும் BJP என்றும் ஒரே கூடாரத்திற்குள் கொண்டுவந்து மத்தியில் ஒரு பெரும் மிருக பலத்துடன் ஆட்சியைப் பிடித்து மறுபடியும் இந்துத்வா ஆட்சியை தக்கவைத்துக் கொண்டுள்ளனர். இதே பாணியினை மேலும் கடைபிடித்தால் வருங்காலங்களில் தொடர்ந்து மத்தியில் ஆட்சியில் அமரப்போவதும்  சங்கிகளே!

ஆனால் கைசேதம் எல்லாம் வல்ல அல்லாஹ் தனது நெறிநூல் அல்குர்ஆனில் 3வது அத்தியாயம் 103ம் வசனத்தில் ஒற்றுமையாக ஒரே ஜமாஅத்தாக இருக்கும்படி நமக்கு கடுமையான கட்டளையாகக் கட்டளையிடுகிறான். (மத்ஹபுகளாகவும், தவ்ஹீத் இயக்கங்களாகவும்)  பிரித்து விடாதீர்கள்  எனவும்  உபதேசிக்கின்றான்.

மேலும் அதே அத்தியாயம் 105வது வசனத்தில் அவ்வாறு பிரிந்து விடுவீர்களானால் (இந்த உலகத்தில் இறை மறுப்பாளர்களைக் கொண்டும் மறுமையில் நரக நெருப்பைக் கொண்டும்) மகத்தான வேதனை செய்யப்படும் என எல்லாம் வல்ல அல்லாஹ் எச்சரிக்கின்றான். ஆனால் இந்த எச்சரிக்கையை நமது சமுதாயத்தைச் சார்ந்த பிரிவினை இயக்கத் தலை வர்கள் புறக்கணித்து விட்டு தவ்ஹீது இயக்கங்களாகவும், ஹனஃபி, ஷாஃபி, ´யா என மேலும் மேலும் பல பிரிவுகளாகப் பிரிந்து தாங்கள் உல்லாசமாக வாழ நமது சமுதாய அப்பாவி இளைஞர் களை  நாசமாக்கி  சமுதாயத்தையும்  நாசமாக்கி  வருகின்றனர்.

இதன்  காரணமாக  அல்லாஹ்வின்  வேதனை  நம்மீது  இறங்க  ஆம்பித்து விட்டது.

நீங்கள் வேதனைக்கு பயந்து கொள்ளுங்கள்; அது உங்களில் அநியாயம் செய்தவர்களை மட்டும்தான் குறிப்பாகப் பிடிக் கும் என்பதில்லை. நிச்சயமாக அல்லாஹ் தண்டனை அளிப்பதில் கடுமையான வன் என்பதையும் நன்கு அறிந்து கொள்ளுங்கள்.  (அல்குர்ஆன் 8:25)

எனவே அல்லாஹ்வின் புறத்திலி ருந்து அதற்குண்டான தண்டனை இறை மறுப்பாளர்களைக் கொண்டு குடியுரி மைச் சட்டம் மற்றும் பொது சிவில் சட்டம் மூலம் துவங்கிவிட்டது. இதன் பிறகாவது அனைத்துப் பிரிவு இயக்கங்களும் ஒன்று கலந்து அல்குர்ஆன் 22:78 வசனத்தின் அடிப்படையிலும், புகாரீ: 3606 நபி மொழியின் அடிப்படையிலும் ஜமாஅத் அல்முஸ்லிமீன் என்ற பெயரில் ஒரே முஸ்லிம் ஜமாஅத்தாக இணைவார்களா என்றால் முடியவே முடியாதென்று மறுக்கும் விதத்தில் மார்க்கத்தை பணத்திற்கும் பெயர் புகழுக்கும் பயன்படுத்தும் மவ்லவிகளும் அரசியல் புரோகிதர்களும், இதில் உறுதியாக உள்ளதாகத் தான் தெரிகின்றது. இன்ஷா அல்லாஹ் இறைவன்  நாடினால்  திருந்தலாம்.

எனவே எனது அன்பான இஸ்லாமிய சகோதரர்களே! சகோதரிகளே! இனியும் இந்தப் பிரிவினைவாத இயக்கங்களையும் அதன் தலைவர்களையும் நாம் புறக்கணிக்காவிட்டால் இவர்களோடு சேர்த்து எல்லா முஸ்லிம்களும் சீரழியப் போவது உறுதி. இந்த அவல நிலையிலிருந்து நம் அனைவரையும் எல்லாம் வல்ல அல்லாஹ்  பாதுகாப்பானாக! ஆமீன்.

Previous post:

Next post: