திடுகூறாக வரவிருக்கும் மறுமை நாளின் அடையாளங்கள்…

in 2023 செப்டம்பர்

திடுகூறாக வரவிருக்கும் மறுமை நாளின் அடையாளங்கள்

அபூ இஸ்ஸத்,  இலங்கை

ஆகஸ்ட்  தொடர்ச்சி….

ரோமானியர்கள் :

கிழக்கு ரோமானியர்கள்  பாரசீகர்களால்முதலில் தோற்கடிக்கப்பட்டார்கள். ஆனால் மீண்டும்  வெற்றி  பெற்றார்கள்  என்பதாகும்.

(கிழக்கு) ரோமாபுரி வெற்றி கொள்ளப்பட்டது. அண்மையிலுள்ள பிரதேசத்தில் (வெற்றி கொள்ளப்பட்டது இருப்பினும்) அவர்கள் தாம் தோல்வி கண்ட பின்னர் விரைவில் வெற்றி பெறவுள்ளனர். (அதுவும்) சில ஆண்டுகளுக்குள்ளாகவே (அவர்கள் வெற்றி பெறவுள்ளனர் இதற்கு) முன்னரும் (இதன்) பின்னரும் (ஆட்சி) அதிகாரம் அல்லாஹ்வுக்கே உரியது. (அவர்கள் வெல்லும்) அந்நாளில் இறை நம்பிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைவார்கள். (30:24) மேலதிக விபரங்களுக்கு தஃப்சீர் இப்னு கஸீர்: 7:88-105)

மஸ்ரூக் இப்னு அஜ்தஉ(ரஹ்) அறிவித் தார். அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரழி) (மறுமை நாளின் அடையாளங்களில்) ஐந்து அடையாளங்கள் நடந்து(முடிந்து)விட்டன. ஒன்று புகை, இரண்டாவது ரோமர்கள் (பாரசீகர்களால் தோற்கடிக்கப்பட்டு மீண்டும் வெற்றி கண்டது), மூன்றாவது சந்திரன் பிளந்தது, நான்காவதும், ஐந்தாவதும் இறைவனின் தண்டனைப் பிடியும் அவனுடைய வேதனையும் என்று கூறினார்கள்.   புகாரி:4820

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரழி) அறிவித்தார். (மறுமை நாளின் அடையாளங்களில்) ஐந்து அடையாளங்கள் நடந்து (முடிநது)விட்டன. ஒன்று, (பத்ருப் போரில் எதிரிகளுக்குக் கிடைத்த) தண்டனை இரண்டாவது, ரோமர்கள் (பாரசீகர்களால் தோற்கடிக்கப்பட்டு மீண்டும் வெற்றி கண்டது) மூன்றாவது, இறைவனின் தண்டனைப்பிடி, நான்காவது, சந்திரன் பிளந்தது, ஐந்தாவது புகை. புகாரி: 4825

மஸ்ரூக்(ரஹ்) அறிவித்தார். (இந்த 25:77வது வசனத்தில்லிஸாமன்எனும் சொல்லுக்கு விளக்கமளிக்கும் போது) அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரழி) (மறுமை நாளின் அடையாளங் களில்) ஐந்து அடையாளங்கள் (வந்து) சென்று விட்டன. ஒன்று: புகை, இரண்டாவது: சந்திரன் பிளப்பது, மூன்றாவது, ரோமர்கள் (வெற்றி கொள்ளப்பட்டு மீண்டும் அவர்கள் வெற்றி பெறுவது), நான்காவதும், ஐந்தாவதும் இறைவனின் தண்டனைப் பிடியும் அவனுடைய வேதனையும்  என்று  கூறினார்கள்.   புகாரி : 4767

சந்திரன்  பிளந்தது :

(யுக முடிவு) நேரம் நெருங்கிவிட்டது. (அதன் அறிகுறியாகச்) சந்திரனும் பிளந்து விட்டது. (54:1)

கடுமையான  பிடி :

நாம் (உங்களைப்) பலமாகப் பிடிக்கும் நாளில் நிச்சயமாக உங்களைப் பழிவாங்கியே தீருவோம் (44:16) பலமாகப் பிடிக் கும் நாள் என்பதற்கு பத்ருப் போரின் நாள் என்பதாக இப்னு மஸ்ஊத்(ரழி) அவர்கள் விளக்கம் தந்திருக்கிறார்கள். இப்படி விளக்கம் அளிப்பதற்கும் இடமுண்டு என்று இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் கூறியதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. எனினும், வெளிப்படையான கருத்து என்னவெனில் அது மறுமை நாள் ஆகும்.  பத்ருப் போர் நடைபெற்ற நாள் பலமாகப் பிடித்த நாளாகவும் இருந்தாலும் சரியே! எனும் கருத்தே ஆகும். இப்னு அப்பாஸ்(ரழி) கூறியதாக இக்ரிமா (ரஹ்) அவர்கள் அறிவித்திருப்பதாவது: பலமாகப் பிடித்த நாள் என்பது பத்ருப் போரின் நாளாகும் என்று இப்னு மஸ்ஊத்(ரழி) கூறினார்கள். ஆனால் அது மறுமை நாள்தான் என்பதாகவே (இப்னு அப்பாஸ் எனும்) நான் கூறுகின்றேன். (தஃப்சீர் இப்னு கஸீர் : 8:310-320)

மஸ்ரூக் இப்னு அஜ்தஉ(ரஹ்) அறிவித்தார்: கிந்தா எனும் இடத்தில் ஒருவர் பேசிக் கொண்டிருக்கும்போதுமறுமை நாளில் புகை ஒன்று வந்து நயவஞ்சகர்களின் செவிப் புலன்களையும் பார்வைப் புலன்களையும் பிடித்துக் கொள்ளும். இறை நம்பிக்கையாளருக்கு ஜலதோ­ம் ஏற்படுவது போன்றிருக்கும்என்று கூறினார். (இதைக் கேட்ட) நாங்கள் பீதியடைந்தோம். உடனே நான், இப்னு மஸ்வூத்(ரழி) அவர்களிடம் சென்றேன். அவர்கள் சாய்ந்தபடி அமர்ந்திருந்தார்கள். (இதைக் கேட்டதும்) அவர்கள் கோபமுற்று (எழுந்து நேராக) அமர்ந்து கொண்டு (பின்வருமாறு) கூறினார்கள். அறிந்தவர் சொல்லட்டும்! அறியாதவர், அல்லாஹ்வே நன்கறிந்தவன் என்று சொல்லட்டும்! ஏனெனில், ஒருவர் தாம் அறியாததை, எனக்குத் தெரியாது என்று சொல்வதும் அறிவின் பாற்பட்டதாகும்.

ஏனெனில், அல்லாஹ் தன் தூதர்(ஸல்) அவர்களுக்கு சொல்லுங்கள்: நான் இதற்காக, உங்களிடம் கூலி எதுவும் கேட்கவில்லை. நான் (இல்லாததைச் சொல்லி)பாவனை செய்வோரில் ஒருவனல்லன் என்று (திருக்குர்ஆன் 38:86) கூறியுள்ளான். மேலும், குறைசயர் இஸ்லாத்தை ஏற்பதில் காலம் தாழ்த்தினர். எனவே, நபி(ஸல்) அவர்கள் குறைசயருக்கெதி ராகப் பிரார்த்தித்தார்கள். அப்போது அவர்கள், “இறைவா! யூஸுஃப்(அலை) அவர்களின் (காலத்து) ஏழு (பஞ்சம் நிறைந்த) ஆண்டுகளைப் போல் இவர்களுக்கும் ஏழு (பஞ்சம் நிறைந்த) ஆண்டுகளைக் கொடுத்து, எனக்கு உதவி செய்! என்று வேண்டினார்கள். அவ்வாறே அவர் களைப் பஞ்சம் வாட்டியது. இறுதியில் அதில் அவர்கள் (பலரும்) அழிந்து போனார் கள். மேலும், பலர்  செத்தவற்றையும்  எலும்புகளையும்  உண்ண  வேண்டியதாயிற்று. 

இன்னும் (கடும் பசியினால் கண் பஞ்சடைந்து அவர்களில்) ஒருவர் வானத்திற்கும், பூமிக்கு மிடையே புகை போன்ற ஒன்றையே காண்பார். இந்நிலையில் அபூ சுஃப்யான் வந்துமுஹம்மதே! நீர் எங்களிடம் உறவுகளைப் பேணுமாறு கட்டளையிட்டபடி வந்தீர்! உம் சமுதாயத்தினரோ அழிந்து கொண்டிருக்கிறார்கள். எனவே நீங்கள் (இந்தப் பஞ்சத்தை நீக்கும்படி) அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்என்று கூறினார். அப்போது நபி(ஸல்) அவர்கள் (நபியே) வெளிப்படையானதொரு புகை வானத்திலிருந்து வரும் நாளை நீங்கள் எதிர்பார்த்திருங்கள். மனிதர்களை அது துன்புறுத்தும் வேதனையாகும் என்று தொடங்கி மெய்யாகவே (நீங்கள் உணர்ச்சி பெறக் கூடுமென்று) அவ்வேதனையை இன்னும் சிறிது காலத்திற்கு நீக்கி வைத்தோம். எனினும் நீங்கள் (பாவம் செய்யவே) திரும்பச் செல்கிறீர்கள் என்பது  வரையிலான  (திருக்குர்ஆன் 44:10-15)  வசனங்களை  ஓதிக்காட்டினார்கள்.

நபி(ஸல்) அவர்களின் வேண்டுதலால் அவர்களை விட்டுப் பஞ்சம் அகன்றுவிட்டாலும் மறுமை வேதனை வந்தால் அது அவர்களை விட்டு அகற்றப்படவா போகிறது (இல்லை, பஞ்சம் நீங்கிய) பிறகு மீண்டும் அவர்கள் இறை மறுப்புக்கே திரும்பிவிட்டனர். இதைத்தான் அல்லாஹ் மிக பலமாக அவர்களை நாம் பிடிக்கும் நாளில் நிச்சயமாக அவர்களிடம் பழி வாங்கியே தீருவோம் என்று (குர்ஆன் 44:16வது வசனத்தில் பத்ருப் போரைக் குறிக்கும் வகையிலும் வலிஸாமன் (தண்டனை உங்களை பிடித்தே தீரும்) என்று (குர்ஆன் 25:77வது வசனத்தில் அதே பத்ருப் போரைக் குறிக்கும் வகையிலும் கூறுகிறான். மேலும், “அலிஃப், லாம், மீம். (நபியே!) ரோமர்கள் அண்டை நாட்டில் (இப்போது) தோற்கடிக்கப்பட்டுவிட்டார்கள். (எனினும்) அவர்கள் இத் தோல்விக்குப் பின் சில ஆண்டுக்குள்ளேயே வெற்றி அடைவார்கள் என்றும் அல்லாஹ் கூறுகிறான் (திருகுர்ஆன் 30:1-3). இது முன்பே (நடந்து) முடிந்து விட்டது. புகாரி :4774) மேலும், சில  அடையாளங்கள்.

ஒரே வாதத்தை முன் வைக்கும் இரண்டு பெரும்  குழுவினர் :

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஒரே வாதத்தை முன்வைக்கும் இரண்டு பெரும் குழுவினர் தம்மிடையே ஒருவரோடொருவர் போரிட்டுக் கொள்ளாதவரை உலக முடிவுநாள் வராது என அபூ ஹுரைரா (ரழி) அறிவித்தார். புகாரி: 6935, 3608, 3609, இது கலீஃபா அலீ(ரழி) அவர்களுக்கும், அமீர் முஆவியா(ரழி) அவர்களுக்கும் இடையேஸிஃப்பீன்என்னும் இடத்தில் நடந்த பெரும் சண்டையைக் குறிக்கும் என்பதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. “ஸிஃப்பீன்என்பது சிரியா நாட்டின் எல்லையில் யூப்ரடீஸ் நதியின் வடக்குக் கரையில் அமைந்துள்ள ஓர் இடத்தின் பெயராகும். ஹிஜ்ரி 36இல் நடந்த இந்தச் சண்டையில் கலந்துகொண்ட இரு குழுவினருமேநாங்கள் தாம் சத்தியத்திற்காகப் போராடுகின்றோம்என்னும் ஒரே வாதத்தையே முன் வைத்தார்கள். இருப்பினும்நாங்கள் தாம் உண்மையாளர்கள்என்று சொல்லி போரிட்டுக் கொள்ளும் எந்த இரு குழுவினருக்கும் இது பொருந்தும். ஃபத்ஹுல் பாரீ, உம்தத்துல் காரீ, 3608, (சிறு குறிப்பு : 128ஆவது)

முப்பது  பெரும்  பொய்யர்கள்:

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஏறத்தாழ முப்பது பெரும் பொய்யர்களான தஜ்ஜால்கள் (உலகில்) தோன்றாத வரை மறுமை நாள் வராது. அவர்களில் ஒவ்வொருவனும் தன்னை இறைத்தூதர் என்று வாதிடுவான். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), புகாரி: 3609,7121, அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் கடைசிக் காலத்தில்யமாமாபகுதியில் முஸைலிமா என்பவன் தன்னைஇறைத்தூதர்என்று வாதிட்டு வந்தான். இவன் அபூபக்கர்(ரழி) அவர்களின் ஆட்சிகாலத்தில் கொல்லப்பட்டான். இதேபோல நபியவர்களின் காலத்தில் யமனில் அஸவத் அல் அன்ஸிய்யு என்பவன் தன்னைநபிஎன வாதிட்டான். இவன்  நபி(ஸல்)  அவர்கள்  இறப்பதற்கு  முன்பே  கொல்லப்பட்டுவிட்டான். 

அபூபக்கர் (ரழி) ஆட்சிக் காலத்தில் துலைஹா பின் குவைலித் என்பவன் பனூ அஸத் கூட்டத் திலிருந்தும், ஸஜாஹ் என்ற பெண் பனூ தமீம் கூட்டத்திலிருந்தும் தங்களைநபிஎன்று வாதிட்டு வந்தனர். பின்னர் அப்துல்லாஹ் பின் ஸுபைர்(ரழி) அவர்கள் கூபாவின் ஆட்சியாளராக இருந்தபோது முக்தார் பின் அபீ உபைத் ஸகஃபீ என்பான் இவ்வாறே தன்னைநபிஎன்று வாதிட் டான். பின்னர் அப்துல் மலிக் பின் மர்வான் ஆட்சிக் காலத்தில் ஹாரிஸ் என்பவன் தன்னைநபிஎன்று வாதிட்டு வந்தான். இதுபோன்று அப்பாசியாக்கள் ஆட்சிக் காலத்தில் பலர் தங்களைநபிஎன்றனர். பாகிஸ்தானில் உள்ள பஞ்சாபில்காதியான்என்னும் இடத்தில் பிறந்தமிர்ஸா குலாம் அஹ்மத் காதியானீஎன்பவனும் தன்னைநபிஎன்று வாதிட்டுஅஹ்மதியாஎனும் இயக்கத்தையும் உருவாக்கினான். இவ்வாறாக தன்னை நபி என்று சொல்லிக் கொண்டவர்களின் எண்ணிக்கை ஏராளமிருந்தும் சற்று பலத்தோடு இருந்தவர்களே சுமார் முப்பது பேராவர். கடைசிக் காலத்தில் மகா பொய்யனான தஜ்ஜாலும் தோன்றுவான். (ஃபத் ஹுல் பாரீ, 3609இன் சிறு குறிப்பு 129ஆவது)   

(இன்ஷா அல்லாஹ் தொடரும்)

Previous post:

Next post: