அந்த மாளிகை யாருக்காக?
N. மர்யம், ஒரத்தநாடு
உலகில் பிறந்து இறந்த, இருக்கின்ற எல்லோருக்கும். “அந்த மாளிகை‘யில் நுழைய வேண்டும் என்பது மிக மிக முக்கியமான ஆசையாகும். அந்த ஆசையில் தவறேதுமில்லை. அனைவருக்கும் அவசியம் தேவையான ஒன்று.
எதுவொன்றையும் அடைய வேண்டுமானால் அதற்காக சில தியாகங்களை செய்தே ஆக வேண்டும். ஒன்றை இழந்தால் தான் மற்றொன்றைப் பெறமுடியும். இதுவே நியதியாகும். அந்த தியாகங்கள் உயிரோ, பொருளோ, நேரமோ, உழைப்போ இவைகளில் எதுவொன்றாகவும் இருக்கலாம்.
உலக விசயத்திலே சின்ன சின்ன தேவைகளுக்கு கூட எதுவொன்றையும், இழக்காமல் விரும்பியதை பெறமுடியாது என்று இருக்கும் போது “அந்த மாளிகை‘ கிடைப்பது என்பது அவ்வளவு சுலபமா என்றால் இல்லை. ஆனால் “அந்த மாளிகை‘ சுலபமாக கிடைக்கும் என்று ஆசை வார்த்தையை கூறி முஸ்லிம்களில் பெரும்பாலோரை நம்பவைத்துள்ளனர்.
எப்படி என்றால்…
1. மதரஸாவிற்கு, யாரெல்லாம் உதவி செய்கின்றார்களோ அவர்களுக்கு “அந்த மாளிகை‘ நிச்சயம்.
2. ஹஜரத்மார்களுக்கு ஆதரவு அளித்தால் உங்களுக்கு “அந்த மாளிகை‘ என்றும்
3. இடைத்தரகர்கள் உதவி இல்லாமல் நேரிடையாக “அந்த மாளிகை‘ உங்களுக்கு கிடைக்காது என்றும் இன்னும் பல்வேறான கற்பனை கதைகளை சொல்லி பாமர முஸ்லிம் களுக்கு குறுக்கு பாதையை காண்பிக்கின்றார் கள். முஸ்லிம்களில் பெரும்பாலோர் குர்ஆன் மொழி பெயர்ப்பை படிக்காத காரணத்தினால் இவர்களை நம்புகின்றார்கள்.
ஏனென்றால்; நேரான பாதையில் சென்று “அந்த மாளிகை‘யை அடைய வேண்டுமானால் உயிர், உழைப்பு, நேரம், பொருள் இவைகளை இழந்தாக வேண்டும். அதுவே குறுக்கு பாதை யில் “அந்த மாளிகை‘யை அடைய பொருளை மட்டும் (அதுவும் இவர்களுக்கு) கொடுத்தால் போதும். சுலபமாக “அந்த மாளிகை‘ கிடைத்து விடும் என்ற ஆசை.
இந்த குறுக்கு பாதையில் மட்டும் சென்று “அந்த மாளிகை‘யை அடைந்து விடலாம் என்பது உண்மையாக இருக்குமேயானால் முஸ்லிம்களில் பெரும்பாலோர் “அந்த மாளிகை‘யில் இருப்பார்கள்.
உண்மை என்னவென்றால் :
“மிக மிக சொற்பமானவர்ளே‘ “அந்த மாளிகை‘ யில் இருப்பார்கள் என்று “அந்த மாளிகை‘யின் சொந்தக்காரன் கூறுகிறான்.
இது நன்றாக தெரிந்தும், இப்லீஸின் வாரிசுகள் தங்கள் சுயநலத்திற்காக செய்கின்ற பிரச்சாரத்தில் பலர் மயங்குகின்றார்கள்.
இதை ஏன் இப்லீஸின் வாரிசுகள் செய்கின் றார்கள் தெரியுமா?
வாரிசுகளின் தலைவனின் (இப்லீஸின்) கட்டளை. இதனால் அவனுக்கு என்ன லாபம்?
எனக்கு ஒரு கண்ணு போனாலும் பரவா யில்லை; அல்லாஹ்வின் நல்லடியார்களுக்கு இரண்டு கண்ணும் (அதாவது நரகத்திற்கு பெரும்பாலோர்) போகவேண்டும் என்பதே அவன் (இப்லீஸின்) நோக்கம்.
இதுவே அவனுடைய இலட்சியம். “உன் மகத்துவத்தின் மீது சத்தியமாக! அவர்கள் அனைவரையும் நான் வழிகெடுப்பேன்‘ என்றும், மேலும் “அவர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட உன் அடியார்களைத் தவிர‘ என்றும் இப்லீஸ் கூறினான்.” அல்குர்ஆன் 38:82,83
“அடுத்து அவன் அவகாசத்தையும் அல்லாஹ் விடம் கேட்டு வாங்கிக் கொண்டான். “என் இறைவனே! அவர்கள் உயிர்ப்பித்து எழுப்பப் படும் நாள்வரை எனக்கு அவகாசமளிப் பாயாக” என்று கேட்டான்.” அல்குர்ஆன் 38:79
ஆக “அந்த மாளிகை‘க்கு பெரும்பாலோர் போகமுடியாது என்பது தெளிவாக தெரிகின்றது.
எனவே “அந்த மாளிகை‘க்கு செல்ல என்ன செய்யவேண்டும் என்பதையும், என்ன செய்யாமல் இருந்தால் இப்லீஸின் வாரிசுகளிட மிருந்து தப்பிக்க முடியும் என்பதையும் பார்ப்போம்.
(இன்ஷா அல்லாஹ் தொடரும்)