இறைவனிடமிருந்து இறக்கியருளப்பட்ட இறைநூல்!
S.H. அப்துர் ரஹ்மான்
அந்த ஒரே இறைவனின் பெயரால்…
இந்த இறைநூல், யாவரையும் மிகைத் தோனும் ஞானம் மிக்கோனுமாகிய அந்த இறைவனிடமிருந்தே இறக்கியருளப்பட்டது.
நம்பிக்கை கொண்டவர்களுக்கு நிச்ச யமாக வானங்களிலும், பூமியிலும் அத்தாட் சிகள் இருக்கின்றன. இன்னும் உங்களைப் படைத்திருப்பதிலும், அவன் உயிர்ப் பிராணி களைப் பரப்பியிருப்பதிலும் (நம்பிக்கையில்) உறுதியுள்ள சமூகத்தாருக்கு அத்தாட்சிகள் இருக்கின்றன.
மேலும் இரவு பகல் மாறி மாறி வருவதி லும், வானத்திலிருந்து அருள் மாரியை அந்த இறைவன் இறக்கி வைத்து, இறந்துபோன பூமியை அதைக் கொண்டு உயிர்ப்பிப்பதி லும்; காற்றுகளை மாறி மாறி வீசச் செய்வதி லும் அறிவுடைய சமூகத்தாருக்கு அத்தாட்சி கள் இருக்கின்றன.
இவை அந்த இறைவனுடைய வசனங் கள், இவற்றை (தூதரே!) உம்மீது உண்மை யுடன் படித்து காண்பிக்கிறோம். அந்த இறை வனுக்கும் அவனுடைய வசனங்களுக்கும் பின்னர் இவர்கள் எதனைத் தான் நம்பப் போகிறார்கள்.
(சத்தியத்தை புறக்கணித்துப்) பொய்க் கற்பனை செய்யும் பாவிகள் யாவருக்கும் கேடுதான். தன்னிடம் படித்து காட்டப்படும் அந்த இறைவனுடைய வசனங்களைக் கேட்கிறான். பின் பெருமையடித்துக் கொண்டு அவன் அதைக் கேளாதது போல் (தன் நிராகரிப்பில்) பிடிவாதம் செய்கிறான். அ(த்தகைய)வனுக்கு நோவினை செய்யும் வேதனையைக் கொண்டு நற்செய்தி கூறுவீராக!
நம் வசனங்களிலிருந்து ஏதாவது ஒன்றை அவன் அறிந்து கொண்டால், அதைப் பரிகாச மாக எடுத்துக் கொள்கிறான். அ(த்தகைய)வர் களுக்கு இழிவு தரும் வேதனையுண்டு. அவர்க ளுக்கு முன்னால் நரகம் இருக்கிறது. அவர்கள் சம்பாதித்துக் கொண்டதில் எப்பொருளும் அவர்களுக்குப் பயன் தராது. அந்த இறை வனையன்றி எவற்றை அவர்கள் பாதுகாவலர்களாக எடுத்துக்கொண்டார்களோ அவையும் (அவர்களுக்குப் பயன் தராது). மேலும், அவர்களுக்கு மாபெரும் வேதனையுமுண்டு.
இது(இறைநூல்) தான் நேர்வழிகாட்டியாகும். எவர்கள் தம்முடைய இறைவனின் வசனங்களை நிராகரித்து விட்டார்களோ, அவர்களுக்கு நோவினை மிகுந்த கடினமான வேதனையுண்டு.
கப்பல்கள் அவன் கட்டளையைக் கொண்டு (கடலில்) செல்லும் பொருட்டும், நீங்கள் அவனுடைய அருளைத் தேடிக் கொள்ளும் பொருட்டும். மேலும் அவனுக்கு நன்றி செலுத்தும் பொருட்டும் உங்களுக்குக் கடலை வசப்படுத்திக் கொடுத்தவன் அந்த இறைவனே ஆவான்.
அவனே வானங்களிலுள்ளவை, பூமி யிலுளளவை அனைத்தையும் தன் அருளால் உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறான். அதை சிந்திக்கும் சமூகத்தாருக்கு நிச்சயமாகப் பல அத்தாட்சிகள் உள்ளன.
நம்பிக்கை கொண்டவர்களுக்கு (தூதரே!) நீர் கூறிவிடும். அந்த இறைவனுடைய (தண்டனைக் கான) நாட்களை நம்பாதவர்களை அவர்கள் மன்னித்து (அவர்களைப் பற்றி அந்த இறைவனிடம் பொறுப்பு சாட்டிவிடட்டும்), மனிதர்களுக்கு அவர்கள் தேடிக்கொண்ட வினைக்குத் தக்க பலனை அவன் கொடுப்பான்.
எவர் ஒரு நன்மையான செயலை செய்கிறாரோ அது அவருக்கே நன்மையாகும். அன்றியும், எவர் தீமையைச் செய்கிறாரோ, அது அவருக்கே தீமையாகும். பின்னர் உங்கள் இறைவனிடமே நீங்கள் மீட்டப்படுவீர்கள். (45: 2-15)