இஸ்லாத்திற்காக இரு நாடுகளுக்கு புலம் பெயர்ந்தவர்…!

in 2023 அக்டோபர்

இஸ்லாத்திற்காக இரு நாடுகளுக்கு புலம் பெயர்ந்தவர்…!

கலீல், கோட்டூர்.

நபி(ஸல்) அவர்கள் இறைத்தூதராக இருந்த ஆரம்ப காலப் பிரிவு அப்போது ஏழு நபர்கள் மட்டுமே இஸ்லாத்தை ஏற்றிருந் தனர். எட்டாவதாக அபூபக்கர் அஸ்ஸித்தீக் (ரழி) அவர்களின் கரத்தைப் பற்றி ஏறத்தாழ முப்பது வயதுடைய அப்து அம்ர் என்பவர். இஸ்லாத்தைத்  தழுவினார்.

அபூபக்கர்(ரழி) அவர்களின் கரத்தில் இஸ்லாத்தை ஏற்ற 5 பேரில் இவரும் ஒருவர் ஆவார். அப்து அம்ருக்கு நபி (ஸல்) அவர் களே அப்துர் ரஹ்மான் எனப் பெயர் சூட்டி னார்கள். இவரே அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப்(ரழி) என அறியப்பட்டவர்கள்  ஆவார்கள்.

அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் பின் அப்தில் ஹாரிஸ் பின் ஸுஹ்ரா பின் கிலாப் பின் முர்ரா பின் கஅப்பின் லுஅய் பின் ஃகாலிப் அல்குறU அஸ்ஸுஹ்ரீ. இதுவே அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப்(ரழி) அவர் களின்  வம்சாவளியாகும். 

அபூமுஹம்மது என்பது இவரின் அடையாளப் பெயராகும். அவருடைய தாயார் பெயர் “´ஃபாஎன்பதாகும். அப்துர் ரஹ்மான் (ரழி) அவர்கள் நான்கு மனைவியரை மணந்தார்கள் அவருக்கு இப்ராஹீம், ஹுமைத், அபூசலமா, முஸ்அப் ஆகியோர் அவருடைய புதல்வர்கள் ஆவர்.

இஸ்லாத்திற்காக இரு நாடுகளுக்குப் புலம் பெயர்ந்த சிறப்பு இந்த சஹாபிக்கு  உண்டு.

முதலில் அபிசீனியாவுக்குச் சென்றார்கள். பிறகு அங்கிருந்து மக்காவுக்குத் திரும்பி, அங்கிருந்து மதீனாவுக்குச் சென்றார்கள். பத்ர், உஹத் ஆகிய போர்களிலும் பின்னர் நடைபெற்ற அனைத்து அறப்போர்களிலும் கலந்துகொண்டார்கள். உஹுது போர்க்களத்தில் ஏராளமான துன்பங்களுக்கு  உள்ளானார்கள்.

உடல் முழுவதும் இருபது காயங்கள் முன்பற்கள் இரண்டும் விழுந்தன. காலில் பட்ட காயம் அவருடைய ஒரு காலை  ஊனமாகவே  ஆக்கியது.

சொர்க்கவாசிகள் என நபியவர்களால் முன்னறிவிப்புச் செய்யப்பட்ட பத்து பேரில் ஒருவரான அன்னார் உமர்(ரழி) அவர்களின் இறப்புத் தருவாயை ஒட்டிய காலப் பிரிவில் மிகப் பெரிய அரசியல் ஆலோசகராக விளங்கினார்கள். தமக்குப் பின் யாரை கலீஃபாவாக தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்க ஆறு பேர் கொண்ட ஆலோசனைக் குழுவொன்றை உமர்(ரழி) அவர்கள் நியமித்து விட்டு  இறந்தார்கள்.

அக்குழுவில் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்களே முதன்மை நிலை யில் இருந்தார்கள். அந்த ஆலோசனைக் குழுவினரின் எண்ணிக்கையை ஆறிலிருந்து மூன்றாகக் குறைத்து எஞ்சிய இருவரிடமும் கலந்து பேசி தாமே உஸ்மான்(ரழி) அவர் களை ஆட்சியாளராக முன்மொழிந்தார் கள். பிறகு அனைவருடைய ஒப்புதலையும் பெற்றார்கள்.

வாரி வழங்கும் வள்ளமையிலும் தனித்துவத்துடன் விளங்கினார்கள். ஒரு சந்தர்ப்பத்தில் மொத்தமாக 40,000 தீனார்கள் இறைவழியில் வழங்கினார்கள். நானூறு ஒட்டகங்களை அவற்றிலிருந்த வணிகச் சரக்குகளோடு சேர்த்து மார்க்கத்துக்காக கொடுத்தார்கள். 30 அடிமைகளை விலை கொடுத்து வாங்கி விடுதலை செய்தார்கள். 500 குதிரை வீரர்களையும், 1500 காலாட் படை வீரர்களையும் அவர்களுக்கு வேண்டிய அனைத்துச் செலவுகளுக்கும் பொறுப் பேற்று படையணிக்கு அனுப்பி வைத்தார் கள்.

வெறுங்கையோடு மதீனாவுக்கு புலம் பெயர்ந்து (ஹிஜ்ரத்)) வந்த அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப்(ரழி) அவர்களுக்கு சஅது பின் ரபீ(ரழி) அவர்கள் தம் சொத்தில் பாதி யைக் கொடுக்க முன் வந்த போதும் அதை ஏற்க மறுத்து, மதீனாவின் கடைத்தெருவில் சிறு வியாபாரியாக தம் வாழ்வைத் தொடங்கியே மிகப்பெரும் செல்வராக மாறினார் கள்.

மார்க்கத்துக்காக முகம் சுளிக்காமல் வாரி வழங்கியதோடு பெருஞ் செல்வத்தை விட்டுத்தான் இறந்தார்கள். மனைவியர் நால்வரும் தலா 80,000 தீனார்களை வாரிசுச் சொத்தாக  அடைந்து கொண்டனர்.

இறக்கும்போது பத்ருப் போரில் கலந்து கொண்டோரில் எஞ்சியிருந்தோ ருக்கு தலா 400 தீனார்கள் வழங்கு மாறு இறுதி விருப்பம் தெரிவித்தார்கள். அப் போது பத்ருப் போராளிகளில் நூறு பேர் எஞ்சியிருந்தனர். ஹிஜ்ரி 36ல் மதீனாவில் மரணமடைந்தார்கள். அப்போது அன்னா ருக்கு  வயது  ஏறத்தாழ 75 ஆகும்.

(புகாரி 3700 ஜாமிஉல் மஸானீதி வஸ்ஸுனன், சியரு அஃலாமிந் நுபலா, தஹ்தீபுல் கமால், உஸ்துல் ஃகாபா, அறிஞர் ஷிஐப் அல்அர்னவூத் குழுவினரின் அடியுரை, அஹ்மது ஷாக்கிரின் விரிவுரை, முஸ்னது அஹ்மத் 1:843, 844.)

Previous post:

Next post: