திடுகூறாக வரவிருக்கும் மறுமை நாளின் அடையாளங்கள்…

in 2023 அக்டோபர்

திடுகூறாக வரவிருக்கும் மறுமை நாளின் அடையாளங்கள்

அபூ இஸ்ஸாத், இலங்கை

நபி(ஸல்) அவர்கள்

செப்டம்பர்  மாத தொடர்ச்சி….

கல்வியாளர்கள்   கைப்பற்றப்படுதல் :

(கல்வியாளர்களின் மறைவால்) கல்வி கைப்பற்றப்பட்டு, நிலநடுக்கங்கள் அதிக மாகும். காலம் சுருங்கி, குழப்பங்கள் தோன்றி, கொலை பெருகாதவரை மறுமை நாள் வராது. புகாரி: 7121. மேலும்,

காலம் சுருங்கி, அமல்கள் குறைந்து, கஞ்சத் தனம்  பெருகி,  குழப்பங்கள்  தோன்றுவது:

அபூ ஹுரைரா(ரழி) அறிவித்தார்: நபி (ஸல்) அவர்கள் (மறுமை நாள் நெருங்கும் போது) காலம் சுருங்கிவிடும்; செயல்பாடு (அமல்) குறைந்து போய்விடும். மக்களின் உள்ளங்களில் (பேராசையின் விளைவாக) கஞ்சத்தனம் உருவாக்கப்பட்டு விடும். குழப்பங்கள் தோன்றும். “ஹர்ஜ்பெருகி விடும் என்று கூறினார்கள். மக்கள், “இறைத் தூதர் அவர்களே! அது என்ன(ஹர்ஜ்)? என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், “கொலை கொலைஎன்று பதிலளித்தார்கள். இதே ஹதீதை அபூஹுரைரா(ரழி) அவர்களிட மிருந்து வேறு சில அறிவிப்பாளர்களும் அறி வித்தார்கள். (புகாரி: 7061-7067) மேலும்,

பெரும்  செல்வம்  பெருகுதல் :

உங்களிடையே செல்வம் பெருத்து மிகுதியாகும் வரை மறுமை நாள் வராது. அப்போது செல்வந்தன் தன்னுடைய தர் மத்தை ஏற்பவர் யாரேனும் கிடைக்க மாட் டாரா? என்று கவலைப்படுவான். அவன் அதை எடுத்து ஒருவருக்குக் கொடுக்க முனையும் போது, இது தமக்குத் தேவை யில்லை என்று அவர் சொல்லி விடுவார். புகாரி : 7121, மேலும்,

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார் கள்: உங்களிடையே செல்வம் பெருத்து மிகுதியாகும் வரை மறுமை நாள் ஏற்படாது. எந்தளவுக்கெனில் அந்நாளில் பொருளுடை யவன் தன்னுடைய தர்மத்தை யார்தான் வாங்கப் போகிரார் என்று கவலை கொள் வான். மேலும், யாரிடமாவது அதைக் கொடுக்க முனைந்தால் அவன் எனக்குத் தேவையில்லை என்று கூறுவான். அபூ ஹுரைரா(ரழி) அறிவித்தார். புகாரி: 1412. மக்கள் கட்டடங்களை (போட்டி போட் டுக் கொண்டு) உயரமாகக் கட்டாதவரை மறுமை நாள் வராது. மேலும்,

பெரும் சோதனைகளான காலகட்டங்கள் பெருகுதல் :

ஒரு மனிதன் மற்றொரு மனிதனின் மண்ணறையைக் கடந்து செல்லும்போது, “அந்தோ! நான் இவனுடைய இடத்தில் (மண்ணறைக்குள்) இருக்கக் கூடாதா?’ என்று (ஏக்கத்துடன்) கூறாத வரை மறுமை நாள் வராது என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி), புகாரி: 7115

அதாவது, நாம் ஏன் இந்தக் காலத்தில் வாழ்கிறோம்? முன்பே இறந்திருக்கக் கூடாதா? என்று நல்லவர்கள் எண்ணும் அளவுக்கு அந்தக் காலத்தில் குழப்பங்களும், சோதனைகளும், பெருகிவிடும். அசத்திய வாதிகளின் கை ஓங்கி தீமைகளும் குற்றங்களும், வெளிப்படையாகச் செய்யப்படும் மார்க்கத்தைக் கடைபிடித்து வாழ முடியுமா? என்று நல்லவர்கள் அஞ்சும் நிலை தோன் றும். உலக அழிவுக்கு முன் இத்தகைய காலம் வந்தே தீரும். ஃபத்ஹுல் பாரீ: 7115இன் சிறு குறிப்பு: 45ஆவது) மேலும்,

சூரியன்  மேற்குத்  திசையிலிருந்து  உதித்தல்:

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார் கள்: சூரியன் மேற்குத் திசையிலிருந்து உதயமாகாத வரை மறுமை நாள் வராது. அதை மக்கள் பார்க்கும்போது, பூமியின் மீதிருப்பவர்கள் இறை நம்பிக்கை  கொள்வார்கள். ஆனால், அதற்கு முன்பே இறைநம்பிக்கை கொண்டிருக்காத, அல்லது இறை நம்பிக்கை கொண்டும்(அதை மெய்ப்பிக்கும் வகையில்) நற்செயல் எதுவும் புரியாத எந்த மனிதனுக்கும், அவன் (அப்போது) கொள்ளும் இறைநம்பிக்கை பயனளிக்காதவை யாக அது இருக்கும் என அபூஹுரைரா(ரழி), அறி வித்தார் : புகாரி : 4635, 5606. அத்தியாயம்: 65, திருக்குர்ஆன்  விளக்கவுரை.

உம்முடைய இறைவனின் அத்தாட்சிகளில் சில வரும் அந்நாளில், இதற்கு முன்னால் நம்பிக்கை கொள்ளாமலும், அல்லது நம்பிக்கைக் கொண்டிருந்தும் யாதொரு நன்மையையும் சம்பாதிக்காமலுமிருந்து விட்டு, அந்நாளில் அவர்கள் கொள்ளும் (இறை) நம்பிக்கை எவ்வித பலனையும் அவர் களுக்கு  அளிக்காது.   (அல்குர்ஆன் 6:158)

அபூஹுரைரா(ரழி) அறிவித்தார்: இறைத்தூதர்(ஸல்) அவர்கள், “சூரியன் மேற்குத் திசை யிலிருந்து உதயமாகாத வரை உலக முடிவு நாள் வராது. சூரியன் (மேற்குத் திசையில்) உதயமாகி மக்கள் அதைப் பார்க்கும்போது அவர்கள் அனைவருமே இறை நம்பிக்கை கொள்வார்கள். அது, எந்த மனிதருக்கும் அவரின் (அப்போதைய புதிய) நம்பிக்கை பயனளிக்காத நேரமாகும்என்று கூறிவிட்டு, “உம்முடைய இறைவனின் சான்றுகள் சில வெளிப்படும் (இறுதி) நாளில் முன்னரே நம்பிக்கை கொள்ளாதிருந்த மனிதருக்கும் அல்லது நம்பிக்கை கொண்டிருந்தும் அதற்கேற்ப நன்மை புரியாதிருந்த மனிதருக்கும் அவர் (அப்போது) நம்பிக்கை கொள்வது எவ்விதப் பயனையும் அளிக்காதுஎனும் இந்த (திருக்குர்ஆன் 6:158வது) வசனத்தை ஓதினார்கள்.  புகாரி : 4636, அத்தியாயம் : 65, திருக்குர்ஆன்  விளக்கவுரை.

இறுதி நாளின் அடையாளங்களில் முதலாவது அடையாளம்,  ஒரு  நெருப்பு :

அனஸ்(ரழி) அறிவித்தார் : இறைத் தூதர்(ஸல்) அவர்கள் (மதீனாவுக்கு) வந்திருக்கும் செய்தி (யூத மத அறிஞராயிருந்த) அப்துல்லாஹ் இப்னு சலாம் அவர்களுக்கு, அவர்கள் ஒரு (தோட்ட) நிலத்தில் பழம் பறித்துக் கொண்டிருந்தபோது எட்டியது. உடனே அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, “தங்களிடம் நான் மூன்று விசயங்களைப் பற்றிக் கேட்கப் போகிறேன். அவற்றை ஓர் இறைத்தூதர் மட்டுமே அறிவார்என்று கூறினார்கள். பிறகு, 1. இறுதி நாளின் அடையாளங்களில் முதலாவது அடையாளம் எது? 2. சொர்க்கவாசிகள் உண்ணும் முதல் உணவு எது? 3. குழந்தை தன் தந்தையின் சாயலில் அல்லது தாயின் சாயலில் இருப்பது எதனால்?  என்று  கேட்டார்கள்.

அறிக! இறுதி நாளின் அடையாளங்களில் முதலாவது அடையாளம், ஒரு நெருப்பாகும். அது கிழக்கிலிருந்து மக்களை (த் துரத்திக் கொண்டு வந்து) மேற்குத் திசையில் ஒன்று திரட்டும் அவர்கள் மதிய வேளையில் ஓய்வெடுக்கும் போதும் இரவில் ஓய்வெடுக்கும் போதும் காலை நேரத்தை அடையும் போதும் மாலை நேரத்தை அடையும் போதும் அந்தத் தீ அவர்களுடனேயே இருக்கும் என்று பதில ளித்தார்கள். புகாரி: 3329,3938,4480,4800, 6522) உலக அழிவு நாள் வருவதற்கு முன் பத்து பெரிய அடையாளங்கள் நிகழும் அவற்றில் முதலாவது அடையாளமே கிழக் கிலிருந்து மேற்கு நோக்கி மக்களை ஒன்று திரட்டுகின்ற பயங்கரமான தீ இதுஅதன்பூமியுடைய மையப் பகுதியிலிருந்து கிளம்பி  பூமியயங்கும்  பரவும்.

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் சொன்ன ஆறு அடையாளங்கள்:

அவ்ஃப் இப்னு மாலிக்(ரழி) அறிவித்தார்: தபூக் போரின்போது நபி(ஸல்) அவர்களிடம் நான் சென்றேன். அவர்கள் ஒரு தோல் கூடாரத்தில் இருந்தார்கள். அப்போது அவர்கள்,  இறுதி நாள் வருவதற்கு முன்பு (அதற்குரிய) ஆறு அடையாளங்கள் நிகழும். அவற்றை  எண்ணிக்கொள்.

நபியவர்களின்  மரணம் :

1.  என்னுடைய மரணம் 

பைத்துல் மக்திஸ் வெற்றி கொள்ளப் படுதல்.

2. பைத்துல் மக்திஸ் வெற்றி கொள்ளப் படுதல் :

கொள்ளைநோய்ஏற்பட்டுஏராளமானோர்மரணித்தல்.

3. ஆடுகளுக்கு வருகிற (ஒருவகை) நோயைப் போன்று கொள்ளை நோய் ஒன்று வந்து உங்களைப் பீடிக்கும். (அதனால் ஏராளமானவர்கள் இறந்து போய்  விடுவார்கள்)

மிகமிஞ்சிய  செல்வம்  பெருகுதல்.

4. பிறகு செல்வம் பெருகி வழியும், எந்த அளவிற்கென்றால் ஒருவருக்கு நூறு தீனார்கள் கொடுக்கப்பட்ட பின்பும் (அதனை அற்பமாகக் கருதி) அவர் அதிருப்தியுடனி ருப்பார்.

எல்லோருடைய வீடுகளிலும் நுழைந்து விடும்  வகையில்  தீமை ஒன்று  தோன்றுதல்.

5. பிறகு தீமையயான்று தோன்றும். அரபுகளின் வீடுகளில் அது நுழையாத வீடு எதுவும் இருக்காது.

சமாதான ஒப்பந்தத்தை மீறி மோசடி செய்யும்  ரோமர்கள்.

6. பிறகு (ரோமர்களுக்கும்) உங்களுக்குமிடையே சமாதான ஒப்பந்தம் ஒன்று ஏற்படும் (அதை மதிக்காமல்) அவர்கள் (உங்களை) மோசடி செய்து விடுவார்கள். பிறகு உங்களை எதிர்த்துப் போரிடுவதற்காக எண்பது கொடிகளின் கீழே (அணி வகுத்து) அவர்கள் வருவார்கள். ஒவ்வொரு கொடிக்கும்  கீழே பன்னிரண்டாயிரம் போர் வீரர்கள் இருப்பார்கள். (புகாரி: 3176)

அமானிதம்  பாழ்படுத்தப்படுதல்.

ஓர் அவையில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மக்களுக்கு அறிவுரை வழங்கிக் கொண்டிருந்த போது அவர்களிடம் நாட்டுப்புறத்து அரபி ஒருவர் வந்தார். “மறுமை நாள் எப்போது? எனக் கேட்டார். நபி(ஸல்) அவர் கள் தங்களின் பேச்சைத் தொடர்ந்து கொண்டிருந்தார்கள். அப்போது (அங்கிருந்த) மக்களில் சிலர் நபி(ஸல்) அவர்கள் அம்மனிதர் கூறியதைச் செவியுற்றார்கள். எனினும் அவரின் இந்தக் கேள்வியை அவர்கள் விரும்பவில்லைஎன்றனர். வேறு சிலர், “அவர்கள் அம்மனிதர் கூறியதைச் செவியுறவில்லை என்றனர். முடிவாக நபி(ஸல்) அவர்கள் தங்களின் பேச்சை முடித்துக் கொண்டு மறுமை நாளைப் பற்றி (என்னிடம்) கேட்டவர் எங்கே? என்று கேட் டார்கள். உடனே (கேட்டவர்) இறைத் தூதர் அவர்களே! இதோ நானே என்றார். அப்போது கூறினார்கள் அமானிதம் பாழ்படுத்தப்பட்டால் நீர் மறுமை நாளை எதிர்பார்க்கலாம்  என்றார்கள்‘.

அதற்கவர், “அது எவ்வாறு பாழ்படுத்தப் படும்?’ எனக் கேட்டதற்குஎந்தக் காரியமா யினும் அது. தகுதியற்றவர்களிடம் ஒப்படைக்கப்பட்டால் நீர் மறுமை நாளை எதிர்பாரும்என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா (ரழி) அறிவித்தார். புகாரி : 59

ஓர் அடிமைப் பெண் தனக்கு எஜமானனாகப் போகிறவனை  ஈன்றெடுத்தல் :

நபி(ஸல்) அவர்கள் ஒரு நாள் மக்களுக் கிடையில் இருந்தபோது ஒருவர் அவர்களிடம் வந்துஈமான் என்றால் என்ன? என்று கேட்டதற்குஈமான் என்பது அல்லாஹ்வை யும் அவனுடைய வானவர்களையும் அவனுடைய சந்திப்பையும் அவனுடைய தூதர்களையும் நீர் நம்புவது. மேலும், மரணத்திற்குப் பின் எழுப்பப்படுவதையும் நீர் நம்புவதுஎனக் கூறினார்கள். “இஸ்லாம் என்பது அல்லாஹ்வுக்கு (எதனையும்) நீர் இணையாகக் கருதாத நிலையில் அவனை நீர் வணங்குவதும், தொழுகையை நிலை நிறுத்தி வருவதும், கடமையாக்கப்பட்ட ஜகாத்தை நீர் வழங்கி வருவதும் ரமழான் மாதம் நீர் நோன்பு நோற்பதுமாகும்என்று கூறினார்கள்.

அடுத்துஇஹ்ஸான் என்றால் என்ன?’ என்று அவர் கேட்டதற்கு, நபியவர்கள் கூறி னார்கள். (இஹ்ஸான் என்பது) அல்லாஹ்வை (நேரில்) காண்பதைப் போன்று நீர் வணங்கு வதாகும். நீர் அவனைப் பார்க்காவிட் டாலும் நிச்சயமாக அவன் உம்மைப் பார்த்துக் கொண்டே இருக்கிறான் என்றார் கள். அடுத்துமறுமை நாள் எப்போது?’ என்று அம்மனிதர் கேட்டதற்கு இறைத் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அதைப் பற்றிக் கேட்கப்பட்டவர் (நான்) அதைப் பற்றிக் கேட்கின்ற உம்மை விட மிக்க அறிந்தவரல்லர். (வேண்டுமானால்) அதன் (சில அடையாளங்களைப் பற்றி உமக்குச் சொல்கிறேன். அவை ஓர் அடிமைப் பெண் தனக்கு எஜமானனாகப்  போகிறவனை  ஈன்றெடுத்தல்.  (இன்ஷா அல்லாஹ் தொடரும்)

Previous post:

Next post: