தூதர் வழியும்! முன்னோர்கள் வழியும்!!
அஹமது இப்ராஹீம்
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் வழி ஒன்றே இம்மை மறுமை வெற்றிக்கு ஆதாரமாகும்.
முன்னோர்களின் வழி அது மறுமையில் நிச்சயம் நரகமே:
“அல்லாஹ் இறக்கி அருளிய (நெறி நூலின்)பாலும், இத்தூதரின்பாலும் வாருங்கள்‘ என அவர்களுக்குக் கூறப்பட்டால், “எங்களுடைய தந்தையர் (மூதாதையர்)களை நாங்கள் எ(ந்த மார்க்கத்)தில் கண்டோமோ அதுவே எங்களுக்குப் போதுமானது‘ என்று அவர்கள் கூறுகிறார்கள். என்ன! அவர்களுடைய தந்தையர் (மூதாதையர்கள்) ஒன்றும் அறியாதவர்களா கவும், நேர்வழியில் நடக்காதவர்களாகவும் இருந்தாலுமா? (அவர்களைப் பின்பற்றுவார்கள்) (அல்குர்ஆன் 5:104)
மேலும், “அல்லாஹ் இறக்கி வைத்த இந்த நெறிநூலைப் பின்பற்றுங்கள்‘ என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் “அப்படியல்ல! எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில் (நடக்கக்) கண் டோமோ, அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம்‘ என்று கூறுகிறார்கள். என்ன! அவர்களுடைய மூதாதையர்கள், எதையும் விளங்காதவர்களாகவும், நேர்வழி பெறாதவர் களாகவும் இருந்தால் கூடவா? (அல்குர்ஆன் 2:170)
நெருப்பில் அவர்களுடைய முகங்கள் புரட்டப்படும் அந்நாளில், “ஆ, கை சேதமே! அல்லாஹ்வுக்கு நாங்கள் வழிப்பட்டிருக்க வேண்டுமே; இத்தூதருக்கும் நாங்கள் கட்டுப் பட்டிருக்க வேண்டுமே! என்று கூறுவார்கள். (அல்குர்ஆன் 33:66)
எங்கள் இறைவா! நிச்சயமாக நாங் கள் எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியவர்களுக்கும் கட்டுப்பட்டோம். அவர்கள் எங்களை வழிகெடுத்துவிட்டார்கள்‘ என்றும் அவர்கள் கூறுவார்கள். (அல்குர்ஆன் 33:67)
“எங்கள் இறைவா! அவர்களுக்கு இரு மடங்கு வேதனையைத் தருவாயாக அவர்களைப் பெருஞ் சாபத்தைக் கொண்டு சபிப்பாயாக‘ (என்பர்). (அல்குர்ஆன் 33:68)
எவர் (அல்லாஹ்வின்) தூதருக்குக் கீழ்படிகிறாரோ, அவர் அல்லாஹ்வுக்குக் கீழ்படிகிறார். யாராவது ஒருவர் (இவ்வாறு கீழ்படிவதை) நிராகரித்தால் (நீர் வருந்த வேண்டியதில்லை, ஏனெனில்) நாம் உம்மை அவர்களின் மேல் கண்காணிப்பவராக அனுப்பவில்லை. (அல்குர்ஆன் 4:80)
நபி(ஸல்) அவர்களின் வழிநடந்தால் நரகமில்லை!!
ஒரு கையில் இறை நெறிநூல் (அல்குர்ஆன்) மறு கையில் நபிவழி இருக்கையில் நமக்கென்ன தயக்கம்!!