படியுங்கள்! சிந்தியுங்கள்! வாழ்வியலாக்குங்கள்
இறுதி இறைநெறிநுலை!
ரஹ் அலி, உடன்குடி
கருணையாளன் கிருபையாளன் அந்த இறைவனின் பெயரால்…..
மக்கள் உலக வாழ்வின் புறத்தோற் றத்தை மட்டுமே அறிகின்றனர். மறுமை யைப் பற்றி அவர்கள் அலட்சியமாக இருக் கின்றனர். என்ன அவர்கள் தங்களைப் பற்றி என்றைக்கேனும் சிந்தித்ததில்லையா? (இறைநூல்:30:7,8)
இறை நம்பிக்கை கொண்டவர்களே! மனிதர்களும், கற்களும் எரிபொருளாகக் கூடிய அந்த நரக நெருப்பிலிருந்து உங்களையும் உங்கள் மனைவி மக்களையும் காப்பாற்றிக் கொள்ளுங்கள். (இறைநூல் : 66:6)
உங்கள் செல்வங்களும் உங்கள் பிள்ளைகளும் உங்கள் நம்மிடத்தில் மிகவும் நெருக்கமாகி வைக்கக்கூடியவை அல்ல. ஆயினும் நம்பிக்கைக் கொண்டு நற்செயல் புரிந்தவர்களைத் தவிர. (இறைநூல் : 34:37)
உங்கள் செல்வங்களும், உங்கள் குழந் தைகளும் (உங்களுக்குச்) சோதனையாக இருக்கின்றன என்பதையும், நிச்சயமாக அல்லாஹ் அவனிடத்தில்தான் மகத்தான (நற்)கூலி உண்டு என்பதையும் நீங்கள் அறிந்துகொள்ளுங்கள். (இறைநூல் : 8:28)
இறை நம்பிக்கை கொண்டவர்களே! உங்களுடைய மனைவியரிலும், பிள்ளைகளிலும் சிலர் உங்கள் பகைவர்களாய் இருக்கின்றனர்.
அவர்கள் விசயத்தில் எச்சரிக்கையாக இருங்கள். நீங்கள் அவர்களுடைய செயல்களைச் சகித்துப் புறக்கணித்து விடுவீர்களானால் மேலும், அவர்களை மன்னிப்பீர்களானால், திண்ணமாக அல்லாஹ் பெரும் மன்னிப்பாளனாகவும், கருணை மிக்கவனாகவும் இருக்கின்றான்.
உங்களுடைய செல்வங்களும், பிள்ளைகளும் உங்களுக்கும் ஒரு சோதனையே! மேலும், அல்லாஹ்விடம் தான் மகத்தான கூலி இருக்கிறது.
எனவே, உங்களால் முடிந்தவரை அல்லாஹ்வுக்கு அஞ்சியவண்ணம் வாழுங்கள். மேலும், செவிதாழ்த்திக் கேளுங்கள், கீழ்ப்படியுங்கள்.
மேலும் உங்கள் செல்வத்தைச் செலவு செய்யுங்கள். இதுவே உங்களுக்கு சிறந்ததாகும்.
தம்முடைய உள்ளத்தில் உலோபித் தனத்தை விட்டு எவர்கள் விலகி இருக்கின்றார்களோ அத்தகையவர்கள் தாம் வெற்றி பெறக்கூடியவர்கள். (இறைநூல் 64:14-16)
எவர்கள் நம்முடைய வசனங்களைத் தோல்வியுறச் செய்வதற்காகக் கடும் முயற்சி செய்வார்களோ அவர்கள் வேதனையில் ஆழ்த்தப்படுவார்கள். (இறைநூல் : 34:38)
உங்களில் யார் யாரெல்லாம் குற்றம் புரிகிறார்களோ அவர்களை மட்டுமே இலக்காக்கி தாக்கும் வேதனைக்கு அஞ்சிக் கொள்ளுங்கள். மிகக்கடுமையாக தண்டிக்கக்கூடியவன் அல்லாஹ் என்பதை புரிந்து கொள்ளுங்கள். (இறை நூல் : 8:25)
இறைத்தூதர்(ஸல்) அவர்களின் முன்னறிவிப்புச் செய்தி :
இப்னு உமர்(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
தோழர்களே! ஐந்து விசயங்களை கொண்டு சோதிக்கப்படுவீர்கள். அதிலிருந்து (உங்களை காப்பாற்ற) படைத்தவனி டம் நான் பாதுகாவல் தேடுகிறேன்.
1. எந்த ஒரு சமூகத்திலே மானக் கேடான விசயங்களை மக்கள் வெளிப்படையாக செய்ய ஆரம்பிக்கிறர்களோ, படைத்தவன் அந்த சமூகத்திலே பரவக்கூடிய கொள்ளைநோய்களை ஏற்படுத்துவான். இதற்கு முன் கேள்விப்படாத நோய்களை எல்லாம் அந்த சமூகம் கேள்விப்படும்.
2. எந்த ஒரு சமூகம் அளவு நிறுவையில் மோசடி செய்யுமோ படைத்தவன் அந்த சமுதாயத்தின் மீது பஞ்சத்தை ஏற்படுத்துவான். மேலும் அதிகாரம் கொண்ட ஆட்சி யாளர்களை அவர்கள் மீது அடக்குமுறை செய்ய சாட்டிவிடுவான். இதனால் அவர்கள் கடுமையான பேரழிவுகளை சந்திப் பார்கள்.
3. எந்த ஒரு சமூகம் தர்மம் கொடுப்பதை விட்டு விலகுமோ, படைத்தவன் வானத்திலிருந்து மழையை நிறுத்தி விடுவான். கால்நடைகள் மட்டும் அங்கு இல்லை என்றால் அந்த சமூகத்திற்கு அறவே மழையை நிறுத்திவிடுவான்.
4. எந்த ஒரு சமூகம் படைத்தவனுக் கும் அவனுடைய தூதருக்கும் கொடுத்த வாக்குறுதியை மீறுமோ படைத்தவன் அந்த சமூகத்தின் மீது எதிரிகளை சாட்டிவிடுவான். அவர்கள், அந்த சமூகத்திடம் இருக்கும் கொஞ்ச நஞ்சத்தையும் எடுத்துக் கொள்வார்கள்.
5. எந்த ஒரு சமூகம் படைத்தவனின் வார்த்தையைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ, எந்த சமூகத்தின் தலைவர்கள் படைத்தவனின் வார்த்தையை மாற்றி தீர்ப்பளித்தார்களோ, படைத்தவன் அவர்களுக்குள்ளேயே பகைமையை உண்டாக்கி சண்டையை ஏற்படுத்தி விடுவான். இப்னுமாஜா: 4019
தஜ்ஜாலும் சிறுபான்மை அரேபியர்களும் :
அரபு சமுதாயத்தவர்கள் குறைந்த எண்ணிக்கையில் இருக்கும்போது தஜ்ஜாலின் வருகை நிகழும். மக்கள் தஜ்ஜாலிட மிருந்து வெருண்டோடி மலைகளுக்குச் சென்று விடுவார்கள் என அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
அப்போது நான், அல்லாஹ்வின் தூதரே! அரேபியர் அப்போது எங்கே? இருப்பார்கள் என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் அப்போது அவர்கள் மிகக் குறைவான எண்ணிக்கையிலேயே இருப்பார்கள் என்று சொன்னார்கள். நபி வாழ்வியல் தகவலாளர்: உம்மு ரீக்(ரழி), முஸ்லிம்: 5644
அல்லாஹ்வின் பேரொளியை தங்கள் வாய்களாலேயே ஊதி அனைத்து விட வேண்டும் என ஆசைப்படுகிறார்கள். நிராகரிப்பாளர்கள் என்னதான் வெறுத்தபோதிலும் தன் ஒளியை நிறைவுபடுத்தியே தீருவான். அல்லாஹ்! (இறைநூல்: 9:32)
நம்பிக்கை கொண்டு நற்செயல்களில் ஈடுபட்டார்களோ, எந்த உயிராக இருந்தா லும் அதன் சக்திக்கு மேலாக அதற்கு நாம் சுமக்க கொடுப்பதில்லை. அவர்கள்தான் சொர்க்கவாசிகள். அவர்கள் என்றென்றும் இருப்பார்கள் அங்கே! (இறைநூல்:7:42)
சுப்யான் இப்னு அப்தில்லாஹ் அத்தகபீ என்ற நபித்தோழர் அல்லாஹ்வின் தூதரே! நான் கவனமாக பற்றிப் பிடித்துக் கொள்ள வேண்டிய ஓர் அறிவுரையை எனக் குச் சொல்லுங்கள் எனக் கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் “என் இறைவன் அல்லாஹ் ஒருவனே என உறுதி பட மொழிந்து அதில் நிலைகுலையாமல் நிலைத்திரு என சொன்னார்கள். நூல்: திர்மிதி, நபிமொழி எண். 2334
இந்த பண்பைத்தான் வலியுறுத்தி கூறு கிறான் அல்லாஹ் அல்குர்ஆனில்:
எவர்கள் எங்கள் இறைவன் அல்லாஹ்! என உறுதிபட மொழிந்து அதில் நிலை குலையாமல் நிலைத்திருக்கிறார்களோ, அவர்களுக்கு எந்த பயமும் கிடையாது, கவலையும் படமாட்டார்கள்.
சொர்க்கத்திற்கு உரியோர் இவர்கள்! என்றென்றும் இருப்பர் அங்கே! அவர்கள் செய்துவந்த செயலுக்கான கூலி. (இறைநூல்: 46:13,14)