மனிதனும்! மண்ணும்!

in 2023 அக்டோபர்

மனிதனும்! மண்ணும்!

அபூ அஹமத்

நாம் வாழ்கின்ற இந்த பூமியானது உலகம் படைக்கப்பட்டபோது இருந்ததை விட பல மாற்றங்களை அடைந்துள்ளது. ஆதம்ஹவ்வா என்ற இரண்டு பேர் மட் டுமே இருந்த இந்த பூமியில், பல ஆயிரக் கணக்கான கோடி மனிதர்கள் பெருகி வாழ்ந்து மறைந்துள்ளார்கள். இப்போது இருப்பவர்களும் மறைவார்கள், இன்னும் வருவார்கள், வாழ்வார்கள், மறைவார்கள்.

மனிதனின் தோற்றத்தைப் பற்றியும், வாழ்வைப் பற்றியும் முடிவைப் பற்றியும் அல்லாஹ்  கூறுவது :

அவனே உங்களை ஓர் ஆத்மாவிலி ருந்து படைத்தான், தங்குமிடமும், ஒப்ப டைக்கப்படும் இடமும் உள்ளன. புரிந்துக் கொள்ளக்கூடிய மக்களுக்கு நிச்சயமாக நாம்  சான்றுகளை  விளக்கியுள்ளோம். அல்குர்ஆன் 6:98

மேற்கண்ட வசனத்தில் மனிதனின் ஆரம்பமும், தங்குமிடமும் என்பது நாம் அறிந்ததே! ஒப்படைக்கப்படும் இடம் என்றால்  எது?

மனிதன் பிறந்தபோது சுமார் 2 கிலோ முதல் 3 கிலோ வரை எடை உள்ளவனாகத் தான்  இருக்கிறான்.

அதே மனிதன் சராசரியாக 50 கிலோ முதல் 60 கிலோ வரை வளர்ச்சி அடைகி றான். இத்தகைய வளர்ச்சி அடைய அவன் உண்டது, கழித்தது அனைத்தும் இந்த மண்ணிலிருந்தே எடுக்கப்பட்டது. ஆயி னும் எந்த ஒரு மனிதனும் மண்ணை நேரடி யாகச் சாப்பிடுவது இல்லை. மண்ணிலி ருந்து கிடைத்தப் பொருளை சாப்பிட்டு வளர்ந்த மனிதன் இந்த மண்ணிலேயே அவனை ஒப்படைத்துவிட்டு செல்கின் றான். எனவே தான் ஒப்படைக்கப்படும் இடம் இதுவே என்பதாக அல்லாஹ் கூறுகிறான்.

அதாவது மனிதன் எடுப்பதும், கொடுப் பதும் மண்ணுக்கே போகிறது. நாம் எதை யும் எடுத்து வரவில்லை, எடுத்துச் செல்லப் போவதும்  இல்லை.

இந்த பூமியில் வாழ்ந்த நபிமார்கள் அடக்கம் செய்யப்பட்டதும் இந்த மண் ணில்தான். அல்லாஹ்வின் ஆணைக்கு கட் டுப்பட்டு போரில் மடிந்தவர்களும்ஹி தானவர்கள்) இந்த மண்ணில்தான், அல் லாஹ்வுக்கு கட்டுப்படாமல் இப்லீஸுக்கு கட்டுப்பட்டு வாழ்ந்தவர்களும் இந்த மண் ணில்தான். தன்னை கடவுள் என்று பிரகட னப்படுத்திய ஃபிர்அவ்ன் மடிந்ததும் இந்த  மண்ணில்தான்.

அதுமட்டுமல்ல அல்லாஹ்வே பல சமு தாய மக்களை அழித்து அவர்களை மண் ணோடு மண்ணாக்கியதும் இந்த மண்ணில் மேல்  தான்.

உதாரணமாக : நபி நூஹ்(அலை) சமுதாயத் தினர், ஆது  சமுதாயத்தினர், நபி ஸாலிஹ் (அலை) சமுதாயத்தினர், நபி லூத்(அலை) சமுதாயத்தினர் இன்னும் இதுபோன்று பல சமுதாயத்தினர் மண்ணோடு மண்ணாகி விட்டார்கள்.

அது மட்டுமல்ல, “பூமியாகிய இதன் மீது உள்ள யாவரும் அழிந்து போகக் கூடிய வரேஎன்பதையும் அல்லாஹ் சொல்லிவிட் டான்.    அல்குர்ஆன் 55:26 

இவை எல்லாவற்றுக்கும் மேலாக அல்லாஹ்  என்ன  கூறுகிறான்  என்றால்,

மீண்டும் அனைவரும் எழுப்பப்படுவ தும் இந்த மண்ணிலிருந்துதான்ஆக பிறந் தது, வளர்ந்தது, இறந்தது, மீண்டும் எழுப் பப்படுவது  எல்லாம்  மண்ணிலே.

இவைகள்  எல்லாம்  எதற்காக?

அல்லாஹ்  கூறுகிறான்:

வானத்தையும்,பூமியையும் அவற்றுக்கு இடையே இருப்பவற்றையும் விளையாட் டுக்கான  நிலையில்  நாம் படைக்கவில்லை.   (21:16)

(வீண்) விளையாட்டுக்கென (எதனை யும்) நாம் எடுத்துக்கொள்ள நாடி, (அவ் வாறு) நாம் செய்வதாக இருந்தால் நம்மிடத் தி(ல் உள்ள நமக்குத் தகுதியானவற்றி)லி ருந்தே  அதனை  நாம்  எடுத்தியிருப்போம்.    (21:17)

மேலும்வானங்களையும், பூமியையும் அவற்றுக்கு இடைப்பட்டவற்றையும் விளையாட்டுக் காக நாம் படைக்கவில்லைதக்க காரணத்துடன் தவிர இவ்விரண்டையும் நாம் படைக்கவில்லை. எனினும் அவர் களில் பெரும்பாலோர் அறியமாட்டார் கள்.”   அல்குர்ஆன் 44:38,39

மேற்கண்ட வசனத்தின்படி எதையும் வீணுக்காகவோ, விளையாட்டுக்காகவோ நாம் படைக்கவில்லை என்று கூறிய அல்லாஹ் தக்க காரணமும் இருக்கின்றன என்பதாக  கூறுகிறான். 

அந்த  காரணம்  என்ன?

இந்த பூமியில் நல்லவனாக வாழ்ந்த வனும் இறக்கிறான், கெட்டவனாக வாழ்ந் தவனும் இறக்கிறான், எல்லோரும் பிறந்து இறந்துபோனால் நல்லவனாக வாழ்ந்ததற்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும். எனவே நல்லவனாக வாழ்ந்தவனுக்கு கூலி வேண்டும்.

அந்த  கூலி  என்ன?

உங்களில் ஆணோ, பெண்ணோ எவரது செயலையும் வீணாக்க மாட்டேன்

ஹிஜ்ரத் செய்து தமது நாடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டு என் (அல்லாஹ்வின்) பாதையில் தொல்லைக்குள்ளாக்கப்பட்டும், போரில் கொல்லப்பட்டோரின் பாவங் களை மன்னித்து விடுவேன், அவர்களை சொர்க்கத்தில் இருக்கச் செய்வேன். அவற் றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். இது அல்லாஹ்விடமிருந்துள்ள கூலி. அல்லாஹ் விடமே  அழகிய  கூலி  உள்ளது.  அல்குர்ஆன் 3:195

அல்லாஹ்வின் நல்லடியார்களாக வாழ்ந்தால் மட்டுமே மண்ணுக்கு போனா லும், மண்ணாகி போனாலும் சிறந்த கூலி கிடைக்கும்  விணாகிவிடாது.

Previous post:

Next post: