மார்க்க அறிஞர்களால் பூதாகரமாக்கப்படும் “பிறை”
எம். சையத் முபாரக், நாகை
செப்டம்பர் மாத தொடர்ச்சி…..
“அல்லாஹ்வின் தூதரே! இரவுத் தொழுகை எவ்வாறு?’ என்று ஒருவர் கேட்டபோது “இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழ வேண்டும். ஸுப்ஹை (நேரம் வந்துவிடும் என) நீர் அஞ்சினால் ஒரு ரக்அத் வித்ர் தொழுவீராக!’ என்று நபி(ஸல்) அவர்கள் விடையளித்தார்கள். ( புகாரி : 1137 )
“எவன் என் நேசரைப் பகைத்துக் கொண்டானோ அவனுடன் நான் போர் பிரகடனம் செய்கிறேன். எனக்கு விருப்பமான செயல்களில் நான் கடமையாக்கிய ஒன்றை விட வேறு எதன் மூலமும் என் அடியான் என்னுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதில்லை. என் அடியான் கூடுதலான (நபிலான) வழிபாடுகளால் என் பக்கம் நெருங்கி வந்துகொண்டேயிருப் பான். இறுதியில் நான் அவனை நேசிப்பேன் என்று அல்லாஹ் கூறினான்‘ என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி 6502)
அல்லாஹ்வின் நேசத்தைப் பெறுவதற்காக நாம் தனித்து நபிலான வணக்கங்களை அதிகம் செய்யலாம். அமல்களை அதிகமாக அதுவும் தொடர்ந்து செய்வது சலிப்படையச் செய்துவிடும். அது சம்பந்தமாக அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் சொன்ன ஹதீதுகளைப் பார்ப்போம்.
“என்னிடம் ஒரு பெண் அமர்ந்திருக்கும் போது நபி(ஸல்) அவர்கள் அங்கே வந்தார்கள். “யார் இந்த பெண்மணி?’ என வினவினார்கள். “இவள் இன்னவள்‘ என்று கூறி விட்டு அவள் (அதிகமாக) தொழுவது பற்றி புகழ்ந்து கூறினேன். அப்போது நபி(ஸல்) “போதும் நிறுத்து! நற்செயல்களில் உங்களால் முடிந்தவற்றைச் செய்து வாருங்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக நீங்கள் சலிப்படையும் வரை அல்லாஹ் சலிப்படைவதில்லை. மேலும் மார்க்கத்தின் நல்லறங்களில் அல்லாஹ்விற்கு மிக விருப்பமானது, நிரந்தரமாகச் செய்யும் நற்செயல்கள்தாம்‘ என்று கூறினார்கள். ( புகாரி: 43,1151, முஸ்லிம் : 1438)
நபி(ஸல்) அவர்கள் (ரமழான் மாதத்தில்) இரவு நேரத்தில் ஒரு பாயை அறை போல் ஆக்கிக்கொண்டு (அதில்) தொழுவார்கள். அதை பகல் நேரத்தில் (கீழே) விரித்துக் கொண்டு அதன்மீது அமர்வார்கள். மக்கள் நபி(ஸல்) அவர்களை நோக்கி வந்து அவர்களுடன் சேர்ந்து தொழுவார்கள். இறுதியில் (இவ்வாறு இரவில் வந்து தொழும்) மக்கள் (எண்ணிக்கை) அதிகமாகி விடவே, நபி(ஸல்) அவர்கள் மக்களை நோக்கி, “மக்களே! உங்களால் இயன்ற (நற்) செயல்க ளையே செய்து வாருங்கள். ஏனெனில், நீங்கள் சலிப்படையாதவரை அல்லாஹ்வும் சலிப்படைய மாட்டான். அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான (நற்)செயல் யாதெனில் குறைவாக இருந்தாலும் நிலையாக இருப்பதேயாகும்‘ என்றார்கள். (புகாரி : 5861 )
மேலும் புகாரி 1970, முஸ்லிம் 2132 ஹதீதுகளைப் பாருங்கள். மேற்கண்ட ஹதீது களையயல்லாம் பார்க்கும்போது, இரவில் அதிகமான நபில் தொழுகைகளைத் தொழுவதற்கு வழி இருந்தாலும் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் காட்டித்தந்த 8+3 ரக்அத் தொழுகைகளை தஹஜ்ஜத் நேரத்தில் தொடர்ந்து தொழுவதே சாலச் சிறந்ததாகத் தெரிகிறது. ஒவ்வொரு நாளும் 8+3 ரக்அத்தான தொழுவதற்கு இலகுவானது என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் நமக் குக் காண்பித்துத் தந்துள்ளார்கள்.
“நபி(ஸல்) அவர்கள் ரமழானிலும் ரமழான் அல்லாத நாட்களிலும் பதினொரு ரக்அத்களை விட அதிகமாகத் தொழுததில்லை. நான்கு ரக்அத் தொழுவார்கள். அதன் அழகையும் நீளத்தையும் நீ கேட்காதே. பின் நான்கு ரக்அத் தொழுவார்கள். அதன் அழகையும் நீளத்தையும் நீ கேட்காதே. பின்னர் மூன்று ரக்அத் தொழு வார்கள். ( புகாரி 1147 )
இந்த ஹதீதில் அபூஸலமா கேட்டது ரமழானில் என்று. அதற்கு ஆயிஷா(ரழி) அவர்கள் கூறியது ரமழானிலும், ரமழான் அல்லாத காலத்திலும் என்று. இங்கு ரமழான் அல்லாத காலத்திலும் என்பதைச் சற்று கூர்ந்து கவனிக்க வேண்டும். மவ்லவிகள் ரமழான் அல்லாத காலத்திலும் என்பதை வலியுறுத்திக் கூறமாட்டார்கள். ரமழானில் மட்டும் வலியுறுத்தி வருமானத்தைப் பார்ப்பார்கள். ரமழான் அல்லாத காலத்தையும் வலியுறுத்தினால் அவாம்கள் தஹஜ்ஜத் தொழுவார்கள். அதில் இன்பம் கண்டு (கண் குளிர்ச்சி அடைந்து) ரமழான் இரவுகளின் கடைசி நேரத்தில் (தஹஜ்ஜத் நேரத்தில்) தொழ விரும்புவர். ரமழான் இரவு முன் நேரத்தில் பள்ளிக்கு வந்து சேர்ந்து தொழுவ தில் தயக்கம் காட்டுவர். பள்ளிக்கு வருபவர் கள் கணிசமாக குறைந்து விடுவார்கள். அதனால், வருமானத்திற்குப் பாதிப்பு வந்து விடும் என்பதால் மவ்லவிகள் வலியுறுத்துவதில்லை.
அதுபோல ரமழான் இரவு நேரத்தில் பயான் சொல்லாமல் குர்ஆன் ஓதுவதற்குத் தூண்டுங்கள். பள்ளியில் தினம் 1 பாகம் அரபியில் ஓதட்டும் அல்லது தமிழில் படிக்கட்டும். பிறகு அன்றைய தினத்தில் அல்லது அடுத்த நாளில் பள்ளியில் அரபியில் ஓதியவர்கள் வீட்டில் தமிழில் படிக்கட்டும். பள்ளியில் தமிழில் படித்தவர்கள் வீட்டில் 1 பாகம் அரபியில் ஓதட்டும் என்றும் மேலும் துஆ, திக்ர் போன்ற வணக்க வழிபாடுகளி லும் ஈடுபடட்டும் என்றும் பள்ளிவாசல் நிர் வாகிகளிடம் சொன்னால், மக்கள் பயான் கேட்பதை விரும்புகிறார்கள். அதனால் பயானுக்கு முக்கியத்துவம் கொடுப்போம் என்று பள்ளி நிர்வாகிகள் கூறுகின்றனர்.
முன்னாள் அறிஞர்கள் மாணவர்க ளுக்கு குர்ஆன், ஹதீத் வகுப்புகள் எடுப்பதையயல்லாம் ரமழானில் நிறுத்திவிட்டு குர்ஆன் ஓதியிருக்கிறார்களே, வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டிருக்கிறார்களே, அது போல நாமும் குர்ஆன் ஓதுவதில், துஆ, திக்ர் செய்வதில் ஈடுபடாமல் பயானுக்கு முக்கி யத்துவம் கொடுப்பது சரியா? என்றால், பயானில் எவ்வளவு சிறப்புகள் இருக்கிறது தெரியுமா? வானவர்கள் சூழ்ந்து கொள்கி றார்கள், சொர்க்கத்தின் பூங்கா என்றெல் லாம் இந்த மவ்லவிகள் மடைமாற்றம் செய்கிறார்கள்.
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் ரமழானில் அதுவும் முக்கியமாக இஃதிகாஃ பில் பள்ளியில் தங்கியிருந்தபோது மக்களை ஒருங்கிணைத்து பயான் செய்ததில்லையே என்று கேட்டால் மக்கள் பயானை விரும்பு கிறார்கள். அதனால், வெளிநாட்டிலிருந்து கூட ஆலிம்களை நாங்கள் இறக்குமதி செய் வோம் என்கிறார்கள் பள்ளி நிர்வாகிகள். அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்களின் நிலைக்கு மாற்றமாக மக்களின், நிர்வாகிக ளின், மவ்லவிகளின் இந்த நிலையை என்ன வென்பது? மக்களைத் திருத்தவேண்டிய மவ்லவிகளே இதில் திளைத்து இதுதான் சரி என்ற எண்ணத்தில் இருக்கிறார்கள்.
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் ஹஜ்ஜத்துல் விதா செய்ய வந்தபோது மதீனாவிலிருந்து மக்கா சென்றடைந்ததும், இன்று எத்தனையாவது பிறை என்று மக்கா வாசிகளிடம் கேட்டதாக எந்தச் செய்தியும் இல்லை; அதனைக் கேட்டு ஹஜ்ஜின் கிரி யைகளை ஆரம்பிக்கவும் இல்லை. இதிலி ருந்தும் தத்தமது பிறை என்ற வாதம் அடி பட்டு விடுகிறது. அடுத்ததாக,
ஒரு மாதம் மனைவிகளிடம் செல்ல மாட்டேன் என்று சத்தியம் செய்த அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள். 29ஆம் நாளில் (பிறை 29ல்) (பரணிலிருந்து கீழே இறங்கி) வந்தார்கள். “அல்லாஹ்வின் தூதரே! ஒரு மாதம் என்று சத்தியம் செய்தீர் களே‘ என்று நபித்தோழர்கள் கேட்ட போது, “இந்த மாதம் 29 நாட்கள்தாம்‘ என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) கூறினார் கள். (புகாரி 378)
கத்ருடைய நாட்களைப் பற்றி நபி(ஸல்) அவர்களிடம் நினைவுபடுத்தியபோது மாதத்தின் எத்தனை நாட்கள் முடிந்தன? மீதி எத்தனை நாட்கள் இருக்கின்றன? என்று கேட்டார்கள். 22 நாட்கள் முடிந்து விட்டன. மீதம் 8 நாட்கள் இருக்கின்றன என்று நாம் கூறியபோது, 7 நாட்கள்தாம் மீதியுள்ளன என்று நபி(ஸல்) அவர்கள் கூறி னார்கள். இல்லை 8 நாட்கள் என்று நாங்கள் கூறியபோது, இந்த மாதம் 29 நாட்களைக் கொண்டது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (இப்னு குஸைமா 2024, பைஹகீ 8018)
தலைப்பிறையைக் கண்ணால் மட்டுமே பார்த்து பிறைப் பிறந்துவிட்டது என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று இந்த மவ் லவிகள் கூறுகிறார்களே, மேற்கண்ட ஹதீது கள் அதற்கு மாற்றமாக மாத முடிவை, அடுத்த மாத ஆரம்பத்தை முன்கூட்டியே சொல்கிறதே. இதற்கு என்னச் சப்பைக் கட்டைச் சொல்லப் போகிறார்கள் இந்த மவ்லவிகள்?
உலகில் தோன்றியவர்களில், தோன்று பவர்களில் சுருங்கச் சொல்லி விளங்க வைப் பதில் முதன்மையானவர்கள் முஹம்மத் (ஸல்) அவர்கள். அப்படிப்பட்டவர்கள் கீழ்க்கண்ட ஹதீதில் என்ன சொல்கிறார் கள்.
“நாம் உம்மி சமுதாயம் எழுதுவதை அறியமாட்டோம். விண்கலையை (கணக்கை) அறியமாட்டோம். மாதம் என்பது இப்படி யும் இருக்கும்; அப்படியும் இருக்கும். அதா வது சில வேளை 29 நாட்களாகவும், சில வேளை 30 நாட்களாகவும் இருக்கும்‘ என அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறி னார்கள். (புகாரி 1913, முஸ்லிம் 1970)
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் வணிக (பொருளாதார)க் கணக்கை அறிந்த வர்கள்தாம். அதனை கதீஜா(ரழி) அவர்க ளின் வணிகத்தை முன்னின்று நடத்தியதி லிருந்து அறியலாம். மாதம் 29 அல்லது 30 நாட்கள் என்று சொல்வதுடன் வானியல் கணக்குத் தெரியாது என்று ஏன் கூற வேண் டும்? பிற்காலத்தில் இதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கும் என்பதால்தானே. இது பிறைக் கணக்கீட்டிற்கு, ஹிஜ்ரி காலண்டர் அமைப்பதற்கு மிகப் பெரும் ஆதாரமாக இருக்கும்போது இந்த மவ்லவி கும்பல் இதனை ஏன் மறுத்துக் கொண்டிருக்கிறது? இது மவ்லவிகள் புறத்திலிருந்து வரவில்லை; அவாம்கள் புறத்திலிருந்து வருகிறது என்ற காரணத்தினாலா?
அதிகமான மக்கள் சிந்தித்து ஹிஜ்ரி ஆண்டு கணக்கீடு நமக்குத் தேவையான ஒன்று என்று உணர்ந்து அதற்கான ஏற்பாடு களைச் செய்யும்போதுதான் இந்த மவ்லவி கள் சிந்தித்து ஆராய ஆரம்பிப்பார்கள். தொழுகை நேரத்தை அறிந்துகொள்ள சூரி யன் கருவி என்பதுபோல, ஹஜ்ஜுக்கு வர ஒட்டகம் ஒரு கருவி என்பது போல மாதம் ஆரம்பிக்க பிறை(கள்) ஒரு கருவி என்பதை உணராதவரை இந்த மவ்லவிகள் பிறைக் கணக் கீட்டை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
முதல் பிறையைப் பார்க்கும்போது ஓத அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் துஆ கற்றுத் தந்துள்ளார்கள். (ஸஹீஹ் அத்திர் மிதீ 3:157) அதனால் சந்திரன் (பிறை) பார்ப் பது இபாதத் என்கின்றனர். இந்த மவ்லவி கள், அப்படியானால், சேவல் கூவுவதை நீங்கள் செவியேற்றால், அல்லாஹ்விடம் “அஸ்அலுக மின் ஃபள்லிக‘ உன் பேரருளை நான் கேட்கிறேன் என்று கேளுங்கள். ஏனெ னில், நிச்சயமாக அது மலக்கைக் கண்டுவிட் டது. கழுதையின் சப்தத்தை நீங்கள் கேட் டாலோ ஷைத்தானி(ன் தீமையி)லிருந்து அல்லாஹ்வைக் கொண்டு பாதுகாப்புத் தேடுங்கள். ஏனெனில் அது நிச்சயமாக ஷைத்தானைக் கண்டுவிட்டது. (முஸ்லிம்: 4:2092, புகாரி : 6:350)
நாய்கள் குரைப்பதை மற்றும் கழுதை களின் சப்தங்களை இரவில் நீங்கள் கேட் டால், அவற்றிலிருந்து அல்லாஹ்வைக் கொண்டு பாதுகாவல் தேடுங்கள். ஏனெ னில், நிச்சயமாக அவை நீங்கள் காணாத வற்றைக் கண்டன. (ஸஹீஹ் அபூதாவூத் 3:961, அஹ்மத் 3:306)
பிறையைப் பார்த்தால் துஆ செய்ய அல் லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் சொல்லி இருப்பதால் பிறைப் பார்ப்பது இபாதத்; சூரியனுக்கோ, ஒட்டகத்திற்கோ இவ்வாறு இல்லை என்பதால் இவைகளை கருவியாக ஏற்றுக் கொள்கிறோம் என்று இந்த மவ்லவி கள் கூறுகிறார்கள். மேற்கண்ட ஹதீதுகளில் சேவல் கூவுவதை, கழுதை கத்துவதை, நாய் குறைப்பதைக் காணும்போதும் நபி(ஸல்) அவர்கள் துஆ செய்யும்படிக் கூறியிருப்ப தால் சேவலை, நாயை, கழுதையைப் பார்ப் பது. சப்தத்தைக் கேட்பது இபாதத் என்று இந்த மவ்லவிகள் கூறுவார்களா?
பிறைக் கணக்கீடு தேவை என்பதை, இரயில், பஸ், விமான டிக்கட்டுகளை முன் பதிவு செய்ய வேண்டி இருப்பதை, இஸ்லா மிய மாதத்தில்தான் கணக்கிட வேண்டும் என்று மக்கள் விழிப்புணர்வு அடையும் போதுதான், மக்கள் நம்மை ஒதுக்கிவிடு வார்கள் என்ற பயத்தில் மவ்லவிகள் விழிப் புணர்வு அடைவார்கள். ஆகவே, மக்கள் முதலில் விழிப்புணர்ச்சி அடைய வேண் டும். நாட்களை, மாதத்தை, ஆண்டை அறிவதற்கு இலகுவான கணக்கீட்டு முறை இருக்கும்போது மவ்லவிகள் இதனை புரிந்து கொள்ளாமல், பிறைப் பிரச்ச னையை பூதாகரமாக்குவது ஏன்?
கருத்து வேறுபாடு இஸ்லாத்தில் இருப் பதுதான் இருப்பினும் அதன் சரியான வழியை நாம் அடைய வேண்டும். அதற்கு “நீங்கள் எது குறித்து கருத்து வேறுபாடு கொண்டிருக்கிறீர்களோ அதன் முடிவு அல் லாஹ்விடமே உள்ளது. அவன்தான் என் னைப் படைத்தாலும், அல்லாஹ் அவனி டமே நான் பொறுப்பு சாட்டுகிறேன், அவனிடமே சரணடைகிறன்‘ (அல்குர்ஆன் 42:10) என்று கேட்பதுடன், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த துஆவை யும் நாம் கேட்போம்.
“இறைவா! (வானவர்களாகிய) ஜிப்ரீல், மீகாயில், இஸ்ராஃபீல் ஆகியோரின் அதிபதியே! வானங்கள் மற்றும் பூமியை முன்மாதிரியின்றி படைத்தவனே! மறை வானவற்றையும் வெளிப்படையானவற் றையும் அறிந்தவனே! நீ உன் அடியார்களி டையே அவர்கள் கொண்டிருந்த கருத்து வேறுபாடுகள் குறித்து (மறுமையில் ) தீர்ப்பு வழங்குவாய். (பிற மக்களால்) மாற்றுக் கருத்துக் கொள்ளப்பட்டாலும் சத்திய மார்க்கத்திலேயே உன் தயவால் என்னை நிலைத்திருக்கச் செய்வாயாக! “நீ நாடியவர் களை நேரிய வழியில் நீயே செலுத்துகிறாய்‘ என்று நபி(ஸல்) அவர்கள் இரவுத் தொழு கையைத் துவக்கியதும் கூறுவார்கள் என்று ஆயிஷா(ரழி) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம் : 1418)
நாம் சத்திய வழியில் நிலைத்திருக்க அல்லாஹ் அருள்புரிவானாக!
(கட்டுரை முடிவுற்றது)