சூனியம் (செய்வது பற்றி அல்குர்ஆன் ஒளியில்) ஓர் அலசல்!

in 2023 நவம்பர்

சூனியம் (செய்வது பற்றி அல்குர்ஆன் ஒளியில்) ஓர் அலசல்!

அல்குர்ஆன் 2:102 வசனத்தின் அடிப்படையில் ஷைத்தான்கள் தாம் மனிதர்களுக்கு சூனியத்தை கற்றுக் கொடுத்தனர் என்பதை யுஅல்லி மூனன்னாஸ ஸிஹ்ர என்ற அரபிப் பதத்திலிருந்து நாம் அறிந்துகொள்ளலாம்.

அதேபோன்று தான் ஹாரூத், மாரூத் என்ற இரு மலக்குகளுக்கு இறக்கப்பட்டதைக் கொண்டு எல்லாம் வல்ல அல்லாஹ்வின் புறத்திலிருந்து வந்துள்ள சோதனையின் பிரகாரம் அவ்விரு வானவர்களும் மக்களுக்கு சூனியத்தை கற்றுக்கொடுத்தனர். இங்கேயும் யுஅல்லிமானி என்ற அரபிப் பதம் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. ஒரே ஒரு வித்தியாசம் என்னவென்றால் அவ்விரண்டு வானவர்களும்இன்னமா நஹ்னு ஃபித்நத்துன் அதாவது நிச்சயமாக நாங்கள் சோதனையாக இருக்கின்றோம். எனவே இந்த சூனியத்தை நீங்கள் கற்று அதனால் நிராகரிக்கும் நிராகரிப்பாளர்களாக ஆகிவிட வேண்டாம் என எச்சரிக்காமல் எவர் ஒருவருக்கும் சூனியத்தை கற்றுக்கொடுக்க வில்லை. அப்படி இருந்தும் கணவன் மனைவி இருவருக்கும் இடையே பிரிவினை உண்டாக்கும்படியான ஒரே ஒரு சூனியத்தை மட்டும் கற்றுக்கொண்டனர். அதுவும் அல்லாஹ்வின் நாட்டம் இல்லாமல் யாரும் யாருக்கும் எவ்வித தீங்கும் செய்துவிட முடியாது என மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ் இப்படிக் கூறுகிறான் என்பதே உண்மையாகும்.

இங்கு ஒரு முக்கியமான விசயத்தை நாம் கவனிக்க வேண்டும். அது என்னவென்றால் புரோகிதர் பீ.ஜையும் அவரின் சீடர்களான தற்போதைய  புரோகிதர்களும் இவர்களை நம்பியுள்ள அப்பாவி இளைஞர்களிடம் சூனியம் என்று ஒன்றும் கிடையாது. சூனியம் உண்டு என்று நம்புகின்றவன் நிராகரிப்பாளனாகி விடுகின்றான் என தீர்ப்பளித்து அத்தகைய இளைஞர்களை சூனியம் உண்டு என்று கூறும் அல்குர்ஆன் வசனங்களை யும் ஆதாரப்பூர்வமான நபிமொழிகளையும் மறுக்கக் கூடிய நிராகரிப்பாளர்களாக ஆக்கிவிட்டனர். உதாரணமாக மேற்கண்ட அல்குர்ஆன் 2:102 வசனத்தில் சூனியக்கலை என்ற ஒன்று உண்டு என அல்லாஹ்வே  கூறுகின்றான்.

அடுத்து அல்குர்ஆன் 7:116வது வசனத்தில் மூஸா(அலை) அவர்கள் காலத்து மந்திரவாதிகள் செய்த சூனியத்தைப் பற்றி எல்லாம் வல்ல அல்லாஹ் நேரடியாகக் (ஸிஷ்ஸeஆக) கூறும்போது அது பொதுமக்களின் கண்களை மருட்டி அவர்கள் திடுக்கிடும்படியான ஓர் மகத்தான சூனியம் என  வர்ணிக்கின்றான்.

அதற்கு (மூஸா) “நீங்கள் (முதலில்) எறியுங்கள்என்று கூறினார். அவ்வாறே அவர்கள் (தம் கைத்தடிகளை) எறிந்தார்கள். மக்களின் கண்களை மருட்டி அவர்கள் திடுக்கிடும்படியான மகத்தான சூனியத்தை  செய்தனர். (அல்குர்ஆன் 7:116)

அதோடு மட்டுமல்லாமல் பெரும் பாவங்களை விட்டும் தவிர்த்து கொள்ளுங்கள். அதில் ஒன்று சூனியம் செய்வது என நபி(ஸல்) அவர்கள் கூறிய பிரபலமான நபிமொழி ஒன்று புகாரி: 2766, முஸ்லிம் போன்ற நூற்களில் இடம் பெற்றுள்ளது. இவ்வளவையும் மறைத்து சூனியம் என்பது இல்லை எனக் கூறும் இந்த வீஹிவீமூ மற்றும் பீ.ஜை. போன்ற புரோகிதர்கள் எவ்வளவு வழிகெடுக்கும் நெஞ்சழுத்தம் உள்ளவர்கள் என்பதை சகோதர சகோதரிகள்  சிந்தித்துப்  பார்க்க  வேண்டுகிறோம்.

மேலும் ஒரு முக்கிய விசயம் சூனியத்தினால் நபி(ஸல்) அவர்களும் பாதிக்கப்பட்டது உண்மை. ஆனால் அவர்கள் எல்லாம் வல்ல அல்லாஹ்வினால் குணப்படுத்தப்பட்டனர். இந்தச் செய்தி புகாரீ என்ற நூலில் 3268வது செய்தியாக ஆதாரப்பூர்வமான நபிமொழி யாக இடம் பெற்றுள்ளது. இந்த சம்பவத்திற்குப் பிறகு நபி(ஸல்) அவர்கள் கண் திருஷ்டி சூனியம் போன்ற தீமைகளை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புப் பெற ஸூரத்துல் ஃபலக் ஸூரத்துன்னாஸ் ஆகிய அத்தியாயங்களை ஓதிக்கொள்வார்கள். இந்த நிகழ்ச்சிக்குப் பின் சூனியம் செய்வது கொண்டு வேறெதனையும் சாதித்துவிட முடியாது என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

இதைத் தவிர ஒன்றே ஒன்றை மட் டுமே சூனியத்தைக் கொண்டு செய்ய முடியும்.

அது என்னவென்றால் ஒற்றுமையாக வாழக்கூடிய கணவன் மனைவி இருவருக்கும் இடையில் பிரிவினை மட்டுமே ஏற்படுத்த முடியும். அதுவும் அல்லாஹ் நாடினாலே தவிர. வேறொன்றும் செய்ய முடியாது என அல்குர்ஆன் 2:102வது வசனத்தின் மூலம் எல்லாம் வல்ல அல்லாஹ் நமக்கு உறுதியிட்டுக் கூறுகின்றான்.

எனவே இதிலிருந்து நமக்கு விளங்குவது என்னவென்றால் சூனியம் என்பது உண்டு. ஆனால் அதேசமயம் கை கால்களை முடக்குதல் போன்ற தில்லாலங்கடி வேலை யயல்லாம் சூனியத்தின் மூலம் செய்து விட முடியாது என்பதையும் ஆனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே ஏதாவது கோள் அல்லது ஏதாவது நம்பும்படியான பொய்யைச் சொல்லி அவர்களுக்குள் பிரிவினை ஏற்படுத்த மட்டும்தான் முடியும் என்பதை அல்குர்ஆன் 2:102 வசனத்தின் மூலம் எல்லாம் வல்ல அல்லாஹ் நமக்கு உணர்த்தி விட்டு சூனியத்தினால் இவ்வளவு தான் செய்ய முடியும் வேறு ஒன்றும் செய்ய முடியாது என்ற ஓர் வரைமுறையையும் வைத்து சூனியத்தை ஒரு முடிவுக்கு கொண்டு வந்து விடுகின்றான். நாமும் அந்த முடிவை மனப்பூர்வமாக ஏற்று எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கு முழுமையாகக் கட்டுப்படுகிறோம். கட்டுப்படுவோம். அல்ஹம்துலில்லாஹ்!

இனி இந்த சூனியத்தை வைத்து மத்ஹபு முல்லாக்கள், மந்திரம் மாயம் தாயத்து தட்டு தகடு சூனியத்தை எடுத்துவிடுகின்றேன் பேர்வழி என்று சொல்லி அப்பாவி மக்களின் ஈமானைக் கெடுத்து ஏமாற்ற முடியாது.

அதேபோன்று ஓரிறைக் கொள்கையின் பக்கம் வேகமாக வந்த வாலிபர்களிடம் தங்களின் வருமானத்தைப் பெருக்கும் நோக்கோடு பத்து அல்லது பதினைந்து ரூபாய் பெருமான புத்தகத்தை ஐம்பது அறுபது ரூபாய் அளவுக்கு பல்லாயிரக்கணக்கான பிரதிகள் விற்று அதன்மூலம் கொள்ளை இலாபம் அடைவதற்காக சூனியம் சம்பந்தமான அல்குர்ஆன் வசனங்களையும் ஆதாரப்பூர்வமான நபிமொழிகளையும் திரித்துக்கூறி அதை எழுத்து வடிவில் கொண்டுவந்து அப்பாவி இளைஞர்களை குர்ஆன் வசனங்களை மறுக்கும் நிலைக்கு இந்த தவ்ஹீத் புரோகிதர்கள் கொண்டுவந்து  விட்டார்கள்.

இனி அதுவும் நடக்காது. அதற்காகத்தான் இந்தப் பதிவு. இஸ்லாமிய மார்க்கத்தை மூட மதமாக ஆக்கத் துடிக்கும் மத்ஹபு மற்றும் தவ்ஹீத் புரோகிதர்களின் தீமையை விட்டும் எல்லாம் வல்ல அல்லாஹ் நமது சமுதாயத்தை பாதுகாப்பானாக!

அதேபோன்று அல்குர்ஆன் வசனங்களையும் ஆதாரப்பூர்வமான நபிமொழிகளையும் திரித்து வளைத்துக் கூறி சமுதாய இளைஞர்களை அல்குர்ஆனுக்கெதிராகவும் நபி(ஸல்) அவர்களின் வழிமுறைகளுக்கெதிராகவும் ஜனநாயக வழி ஆர்ப்பாட்டம், போரட்டம், சாலை மறியல் என்ற போர்வையில் வழிகெடுக்கும் தவ்ஹீத் புரோகிதர்களின் புரட்டுதல்களை அல்குர்ஆன் ஒளியில் தோலுரித்துக் காட்டுவது நம் அனைவரின்  கடமையாகும். 

சாலை மறியலுக்கு எதிரான அல்குர்ஆன் வசனம்  இதோ :

நீங்கள் ஆண்களிடம் (மோகம் கொண்டு) வருகிறீர்களா? சாலை மறியலும் செய்கின்றீர்கள், உங்களுடைய சபையிலும் வெறுக்கத்தக்கவற்றைச் செய்கின்றீர்கள் என்று கூறினார். அதற்கு அவருடைய சமூகத்தாரின் பதில் : நீர் உண்மையாளரில் (ஒருவராக) இருப்பின் எங்கள் மீது அல்லாஹ்வின் வேதனையைக் கொண்டு வருவீராக என்பது தவிர வேறு எதுவுமில்லை. (அல்குர்ஆன் 29:29)

மேற்கண்ட அல்குர்ஆன் வசனத்தில் நபி லூத்(அலை) அவர்களின் சமுதாயத்தினர் செய்த மூன்று இழி செயல்களின் காரணமாக (அதில் ஒன்று நடைபாதைகளை மறித்து சாலை மறியல் செய்வது) கொடூரமான முறையில் நரகத்தின் நெருப்புக் கற்களைக் கொண்டு அச்சமுதாயத்தினர் அழிக்கப்பட்டதாக எல்லாம் வல்ல அல்லாஹ் கூறுகின்றான்.

அடுத்து சாலை மறியலுக்கெதிரான ஒரு நபிமொழி :

அபூ ஸயீத் அல்குத்ரீ(ரழி) அறிவித்தார்.

நீங்கள் சாலையில் அமர்வதைத் தவிருங்கள் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், எங்களுக்கு அங்கு அமர்வதைத் தவிர வேறு வழியில்லை. அவைதாம், நாங்கள் பேசிக்கொள்கிற எங்கள் சபைகள் என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், அப்படியயன்றால் நீங்கள் அந்தச் சபைகளுக்கு வ(ந்து அம)ரும்போது, பாதைக்கு அதன் உரிமையைக் கொடுத்து விடுங்கள் என்று கூறினார்கள். மக்கள், “பாதையின் உரிமை என்ன?’ என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், (அந்நியப் பெண்களைப் பார்க்காமல்) பார்வையைத் தாழ்த்திக் கொள்வதும் (பாதையில் செல்வோருக்குச் சொல்லாலோ, செயலாலோ) துன்பம் தராமலிருப்பதும், சலாமுக்கு பதிலுரைப்பதும், நன்மை புரியும்படி கட்டளையிடுவதும், தீமையிலிருந்து தடுப்பதும் (அதன் உரிமைகள்) ஆகும் என்று பதிலளித்தார்கள். (புகாரி:2465)

அத்தியாயம்:46, அநீதிகளும், அபகரித்தலும்.

எனவே பொதுமக்களுக்கு இடைஞ்சலாக இருக்கும் கேடுகெட்ட மற்றும் அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாகக் கூடிய இந்த சாலை மறியல் மற்றும் கடைகளை அடைக்கச் சொல்லி வியாபாரிகளை மிரட்டும் பந்த் ஆகியவற்றை கட்டாயமாக நாம் செய்யவே  கூடாது.

அடுத்து உரிமைகளுக்காக போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்துவதை தடுக்கும் நபிமொழியை பாரீர் :

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரழி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (அன்சாரிகளான) எங்களிடம்எனக்குப் பிறகு (ஆட்சியதிகாரத்தில் உங்களைவிடப் பிறருக்கு) முன்னுரிமை வழங்கப்படுவதையும், நீங்கள் வெறுக்கிற சில விசயங்களையும் பார்ப்பீர்கள்என்றார்கள். மக்கள், “அப்போது நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று தாங்கள் கட்டளையிடுகிறீர்கள், இறைத்தூதர் அவர்களே?’ என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள், “(ஆட்சியாளர்களான) அவர்களுக்கு அவர்களின் உரிமையை வழங்கிவிடுங்கள். உங்கள் உரிமையை அல்லாஹ்விடம் கேளுங்கள்என்றார்கள்.  புகாரி: 7052

அத்தியாயம் : 92, குழப்பங்கள் (சோதனைகள்)

அல்லாஹ்வும் அவனது தூதர்(ஸல்) அவர்களும் தடுத்த மேற்கண்ட போராட்ட முறைகளின் மூலம் அரசாங்கத்தின் சில சலுகைகள்  கிடைக்கலாம்!

ஆனால் அல்லாஹ்வினிடத்தில் அவை யனைத்தும்  சாபத்திற்குரியவைகளே!

ஆனால் தவ்ஹீத் இயக்கங்களான தமுமுக போன்ற வழிகெடுக்கும் இயக்கங்கள் தங்கள் தங்கள் இயக்கங்களை வளர்ப்பதற்கு இந்த ஆர்ப்பாட்டங்களை ஒருபோதும்  விடவே  மாட்டார்கள்.

இதனால் அல்லாஹ்வின் வேதனையானது மனிதகுல எதிரிகளான ஈவிரக்கமில்லாத RSS வெறியர்கள் மூலமாக நம்மை வந்தடையவே செய்யும் என்பதைக் கூறி  எச்சரிக்கை  செய்கின்றேன்.

எனவே சத்தியத்திற்கெதிராகவும் கூலிக்கு மாரடிக்கும் மத்ஹபு மற்றும் தவ்ஹீத் இயக்கங்களுடைய புரோகிதர்களின் தீமைகளை விட்டும் நம் அனைவரையும் எல்லாம் வல்ல அல்லாஹ் பாதுகாத்தருள்வானாக.  ஆமீன்.

Previous post:

Next post: