அறிந்து கொள்வோம்!
மர்யம்பீ, குண்டூர்
1. அநாதைகளின் சொத்துக்களை அநியாயமாக விழுங்குபவரின் நிலை என்ன என அல்லாஹ் கூறுகிறான்?
மறுமையில்கொழுத்துவிட்டுஎரியும்நெருப்பில்புகுவார்கள். (அல்குர்ஆன் 4:10)
2. அல்லாஹ்வின் சாபமும், மிக கெட்ட வீடும் யாருக்கு என்று அல்லாஹ் கூறுகிறான்?
பூமியில்விசமம்செய்பவர்களுக்கு. (அல்குர்ஆன் 13:25)
3. கைத்தடியை பாம்பாக மாறச் செய்த சம்பவம் யாருடைய காலத்தில் என அல்லாஹ் கூறுகிறான்?
மூஸா(அலை) அவர்கள் காலத்தில். (அல்குர்ஆன் 27:10)
4. யாரைப் பின்பற்றுங்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்?
உங்களிடம் ஒரு கூலியும் கேட்காத தூதரை. (அல்குர்ஆன் 36:21)
5. நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வை எவ்வாறு வணங்க அல்லாஹ் கட்டளையிட்டான்?
அந்தரங்க சுத்தியுடையவராக. (அல்குர்ஆன் 39:2)
6. அல்லாஹ்வை நிராகரிப்பவர்களின் குரல் எப்படி இருக்கும் என்று அல்லாஹ் கூறுகிறான்?
கழுதையின்குரல்போல்அருவருப்பானசப்தமுடையது. (அல்குர்ஆன் 67:7)
7. மக்கள் நபி(ஸல்) அவர்களுக்கு எந்த நாட்களில் அன்பளிப்பு செய்ய நாடுவார்கள்?
ஆயிஷா(ரழி) அவர்கள் வீட்டில் தங்கியிருக்கும் நாட்களில். (புகாரி : 2574)
8. படைப்பது அல்லாஹ்விற்கு மிக எளிது என்று அல்லாஹ் கூறும் வசனம் எது?
அல்குர்ஆன் : 30:27, 50:15, 35:35, 71:14
9. சொர்க்கத்தின் மதுவை அருந்தும் பேற்றை இழந்து விடுபவன் யார் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
உலகில்மதுஅருந்திஅதனைகைவிட்டுஅதற்காகபாவமன்னிப்புகோராதவன். (புகாரி: 5575)
10. இறை நம்பிக்கையாளரின் நிலை எவ்வாறு இருக்கும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
இளம்தளிர்பயிருக்குஒப்பானதாகும். (புகாரி: 5643)
11. ஷைத்தானை நண்பனாக எடுத்துக்கொள்பவனை ஷைத்தான் என்ன செய்வான் என அல்லாஹ் கூறுகிறான்?
வழிகெடுத்துஎரிநரகின்வேதனையின்பால்வழிகாட்டுகிறான். (அல்குர்ஆன் 22:14)
12. ஆரம்பத்தில் தொழுகையின் ரக்அத்கள் எவ்வாறு இருந்தன என ஆயிஷா(ரழி) அவர்கள் கூறினார்கள்?
இரண்டு, இரண்டு ரக்அத்களாக இருந்தன. (முஸ்லிம்: 1219)
13. வாதி ஆதாரத்தை நிலை நிறுத்தாத போது பிரதிவாதி என்ன செய்யவேண்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
சத்தியம் செய்யவேண்டும். (முஸ்லிம்:3525)
14. நபி(ஸல்)அவர்கள் காலத்தின் ஆட்சி அதிகாரம் எதுவரை இருக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்?
பன்னிரண்டுஆட்சித்தலைமைவரைவலிமையானதாகஇருக்கும். (முஸ்லிம்:3720)
15. அல்கர்ம் என்றால் என்ன என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
கண்ணியம். (முஸ்லிம்: 4526)
16. நபி(ஸல்) அவர்கள் அனுமதியுடன் நூறு பாடல்களைப் பாடிய சஹாபி யார்?
சரீத்பின்சுவைத்அஸ்ஸகஃபீ. (முஸ்லிம் : 4540)
17. இவ்வுலகம் இறை நம்பிக்கையாளருக்கு எதுவாக இருக்கும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
சிறைச்சாலை. (முஸ்லிம் : 5663)
18. அடியானுடைய செல்வம் எத்தனை என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
உண்டுகழித்தது, உடுத்தி கிழித்தது, கொடுத்துச் சேமிப்பது மட்டுமே. (முஸ்லிம்:5666)
19. எல்லை மீறுபவர்கள் அழிந்தனர் என்று நபி(ஸல்) அவர்கள் எத்தனை முறை கூறினார்கள்?
மூன்றுமுறை. (முஸ்லிம் : 5185)
20. உயிருள்ளவற்றை எதிலிருந்து படைத்ததாக அல்லாஹ் கூறுகிறான்?
தண்ணீரிலிருந்து. (அல்குர்ஆன் 21:30)