புரோகிதர்கள் வழிகேட்டையே மார்க்கமாகும் காரணம் என்ன?

in 2024 செப்டம்பர்

புரோகிதர்கள் வழிகேட்டையே மார்க்கமாகும் காரணம் என்ன?

அபூ கதீஜா

அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களைச் சொற்ப விலைக்கு விற்கின்றனர். இன்னும் அவனுடைய (நேர்) வழியிலிருந்து (மக்களை) தடுக்கிறார்கள். நிச்சயமாக அவர்கள் செய்து கொண்டிருப்பவை  மிகவும்  கெட்டவை.    (அல்குர்ஆன் 9:9)

நம்பிக்கை கொண்டவர்களே! நிச்சயமாக (புரோகிதர்களான) பாதிரிகளிலும், துறவிகளிலும் அநேகர் மக்களின் பொருள்களை தவறான முறையில் சாப்பிடுகிறார்கள்; மேலும் அல்லாஹ்வின் பாதையை விட்டும் (மக்களை) தடுக்கிறார்கள். இன்னும் எவர்கள் பொன்னையும், வெள்ளியையும் சேமித்து வைத்துக் கொண்டு அவற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவிடா திருக்கிறார்களோ அவர்களுக்கு நோவினை தரும் வேதனை உண்டு என்று (நபியே!) நன்மாராயம்  கூறுவீராக!    (அல்குர்ஆன் 9:34)

(மேலும் பார்க்க 2:41,79, 3:78,187,188, 4:44,46, 5:41,62,63, 6:21,25,26, 9:10, 11:18,19, 31:6)

அல்லாஹ் இறக்கியருளிய நேர்வழியை மிகமிக சொற்பமானவர்களே விளங்குவார்கள்; அதாவது அல்குர்ஆனையும், ஹதீத்களையும் மிகமிகக் குறைந்தவர்களே விளங்குவார்கள் என்று அல்குர்ஆனில் ஆணித்தரமாக அல்லாஹ் அறிவிக்கிறான். இதை அல்குர்ஆன் 2:83,88,246,249, 4:46,83,142,155, 5:13,7:3, 10, 17:62, 23:78, 27:62, 32:9, 40:58, 48:15, 67:23, 69:41,42 ஆக 20 இறைவாக்குகள்  உறுதிப்படுத்துகின்றன.

பின்னர், தாலூத் படைகளுடன் புறப்பட்டபோது அவர்: நிச்சயமாக அல்லாஹ் உங்களை (வழியில்) ஓர் ஆற்றைக் கொண்டு சோதிப்பான்; யார் அதிலிருந்து (நீர் அருந்துகின்றாரோ அவர் என்னைச் சேர்ந்தவரல்லர்; தவிர, ஒரு சிறங்கைத் தண்ணீர் தவிர யார் அதில் நின்றும் (அதிகமாக) நீர் அருந்தவில்லையோ நிச்சயமாக அவர் என்னைச் சார்ந்தவர் என்று கூறினார்; அவர்களில் ஒரு சிலரைத் தவிர (பெரும்பாலோர்) அதிலிருந்து (அதிகமான நீர்) அருந்தினர்கள்; பின்னர் தாலூத்தும், அவருடன் ஈமான் கொண் டோரும் ஆற்றலைக் கடந்ததும், (ஒரு சிறங்கைக்கும் அதிகமான நீர் அருந்தியோர்) “ஜாலூத்துடனும், அவன் படைகளுடனும் இன்று போர் செய்வதற்கு எங்களுக்கு வலுவில்லைஎன்று கூறிவிட்டனர்; ஆனால் நாம் நிச்சயமாக அல்லாஹ்வைச் சந்திப்போம் என்று உறுதி கொண்டிருந்தோர், “எத்தனையோ சிறு கூட்டத்தார்கள், பெருங் கூட்டத்தாரை அல்லாஹ்வின் (அருள் மிக்க) அனுமதி கொண்டு வென்றிருக்கின்றார்கள்; மேலும் அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்என்று  கூறினார்கள்.   (அல்குர்ஆன் 2:249)

இந்த மிகமிக சொற்பமான சுவர்க்கம் செல்லும் மக்கள் எந்த மவ்லவியின், ஆலிமின், அல்லாமாவின் மேல் விளக்கம் இல்லாமல் அல்குர்ஆனையும், ஆதாரபூர்வமான ஹதீத்களையும் நேரடியாக விளங்கி அதன்படி நடக்கிறார்கள். இவர்களே அல்லாஹ்வின் நன்மாராயம் பெற்றவர்கள், பாக்கியசாலிகள், அல்லாஹ்வின் பொருத்தம் பெற்று  சுவர்க்கம்  செல்கிறவர்கள்.

இதற்கு மாறாக மக்களில் மிகமிகப் பெருங்கொண்ட கூட்டம் அல்குர்ஆனையும், ஆதாரபூர்வ மான ஹதீத்களையும் விளங்கக் கூடியவர்களாக இல்லை. நரகத்தை நிரப்புவதற்காகவே செயல்படுகிறவர்கள். இதையும் அல்குர்ஆன் அதிகமான இடங்களில் சுட்டிக்காட்டுகிறது. அவை வருமாறு:

2:100,243, 3:110, 5:49,59,103, 6:116, 7:17,102,131, 8:34, 9:8,10:36,55:60, 11:17, 12:21,36,40,68,103,106,13:1, 16:38,75, 83, 101, 17:89, 18:54, 21:24, 23:70, 25:30, 44:50, 26:8,67,103,121,139,158,174,190,223, 27:61,73, 28:13,57, 29:63, 30:6,30,42, 31:25, 34:28,36,41, 36:7, 37:71, 39:29,49, 40:57,59, 61,82, 41:4, 44:39, 45:26, 49:4, 52:47. ஆக சுமார் 60 இறைவாக்குகள் மிகமிக அதிகமான மக்கள் அல்குர்ஆனை, ஆதாரபூர்வமான ஹதீத்களை விளங்கமாட்டார்கள், அல்லாஹ்வின் வெறுப்புக்குரியவர்கள், ஷைத்தானின் தோழர்கள், நரகத்திற்குரிய வழிகெட்டப் பாதையில் செல்லக்கூடியவர்கள் என்பது  உறுதிப்படுத்துகின்றன.

நிச்சயமாக, இந்த குர்ஆனில் மனிதர்களுக்காகச் சகலவிதமான உதாரணங்களையும் (மிகத் தெளிவாக) விவரித்துள்ளோம்; எனினும் மனிதர்களில் அதிகமானோர் (இதை) நிராகரிக்காதிருக்கவில்லை.”  (17:89)

இன்னும், நிச்சயமாக நாம் இந்த குர்ஆனில் ஒவ்வோர் உதாரணத்தையும் மனிதர்களுக்காக விளக்கியுள்ளோம். எனினும் மனிதன் அதிகமாகத் தர்க்கம்  செய்பவனாகவே  இருக்கிறான்.” (18:54)

என்னுடைய இறைவா நிச்சயமாக என் சமூகத்தார் இந்த குர்ஆனை முற்றிலும் புறக்கணித்து ஒதுக்கிவிட்டார்கள்என்று (நம்) தூதர் கூறுவார். (25:30)

அவர்கள் படிப்பினை பெறுவதற்காக அவர்களுக்கு இதனை (குர்ஆனை) நாம் தெளிவு படுத்துகிறோம். மனிதர்களில் பெரும்பாலோர் நிராகரிப்பவராகவே  இருக்கின்றனர்.  (25:50)

குறிப்பாக இந்த இறைவாக்குகளை மீண்டும், மீண்டும் படித்து உள்வாங்கி ஆழ்ந்து சிந்தியுங்கள். அல்குர்ஆன் மனிதர்களில் ஆண், பெண் அனைவரும் விளங்கும் நிலையில் இறக்கப்பட்டிருக் கிறது என்பதையும், அரபி மொழி படித்த ஆலிம்கள் மவ்லவிகள் மட்டுமே விளங்கமுடியும் என வாதிப்போர் அபூ ஜஹீலின் வாரிசுகள், ஷைத்தானின் தோழர்கள் என்பதையும் நீங்கள்  உறுதியாக  அறியமுடியும்.

அல்லாஹ்வின் பொருத்தம் பெற்று சுவர்க்கம் செல்லும் மக்கள் மிகமிகக் குறைவு. அவர்கள் குர்ஆன், ஹதீதை நேரடியாக விளங்கி அதன்படி நடப்பார்கள். ஷைத்தானின் ஏஜண்டுகளான, மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொண்ட இந்தப் புரோகித மவ்லவிகளின் வலையில் சிக்க மாட்டார்கள். அவர்களைக் கொண்டு இந்தப் புரோகித மவ்லவிகளுக்கு சல்லிக்காசு கூட ஆதாயம் இல்லை. எனவே இந்தப் புரோகித மவ்லவிகள் இவர்களை முற்றிலுமாகப் புறக்கணித்து விடுவார்கள். எனவே அல்குர்ஆனிலும், ஆதாரபூர்வமான ஹதீத்களிலும் உள்ளதை உள்ளபடி எடுத்து சொல்ல முன்வரமாட்டார்கள். காரணம் அதில் அவர்கள் எதிர்பார்க்கும் இவ்வுலக ஆதாயம்  கடுகளவும்  இல்லை.

இப்புரோகித மவ்லவிகள் எதிர்பார்க்கும் அற்பமான அழிந்துபடும் இவ்வுலக ஆதாயம் நரகத்தை நிரப்பும் பெருங்கொண்ட மக்களைக் கொண்டே கிடைக்கும்.  இந்த அதிகமான மக்களைத் தம் பக்கம் இழுப்பதாக இருந்தால் குர்ஆன், ஹதீதில் உள்ளதை உள்ளபடி சொன்னால் அது நிறைவேறாது. அவர்களின் மனோ இச்சைக்கு ஏற்றவாறு நரகத்திற்கு இட்டுச் செல்லும் கோணல் வழிகளை நேர்வழியாகச் சொன்னால் மட் டுமே நரகத்திற்குரியவர்களின் அன்பும், பாசமும், அரவணைப்பும் கிடைக்கும். உலக ஆதாயம் அடையலாம். (பார்க்க 17:73-75)

அதனால்தான் மார்க்கத்தைப் பிழைப்பாக்கி தொண்டை தொழிலாக்கி வயிற்றை நிரப்பும் இந்தப் புரோகித மவ்லவிகள், நேர்வழியான குர்ஆன், ஹதீதில் உள்ளதை உள்ளபடி சொல்லாமல், கோணல் வழிகளான தங்களின் மனிதக் கற்பனைகளைப் புகுத்தி அவற்றை மார்க்கமாக மக்களுக்குப் போதிக்கின்றனர். (பார்க்க: 2:41,42,79, 3:78,187,188, 4:44,46, 5:41,62,63, 6:21,25, 26, 9:9,10,34, 11:18,19, 31:6)

அவர்களில் பெரும்பாலோர் பாவத்திலும், அக்கிரமத்திலும் விலக்கப்பட்ட பொருள்களை உண்பதிலும் விரைந்து செயல்படுவதை (நபியே!) நீர் காண்பீர் அவர்கள் செய்வதெல்லாம் தீமையே தாம்.  (அல்குர்ஆன் 5:62)

அல்லாஹ்வின் மீது பொய்யான கற்பனையைச் சொல்பவனை விடப் பெரும் அநியாயக்காரன் யார்? அத்தகையோர் (மறுமையில்) தங்கள இறைவன் முன் நிறுத்தப்படுவார்கள்; இவர்கள் தாம் தங்கள் இறைவன் மீது பொய் கூறியவர்கள் என்று சாட்சி கூறுவோர் சொல்வார்கள். இத்தகைய அநியாயக்காரர்கள் மீது அல்லாஹ்வின்  சாபம்  உண்டாகும்.  (அல்குர்ஆன் 11:18)

எப்பொழுது ஒருவன் மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொள்கிறானோ அவன் ஒருபோதும் நேர்வழியைகுர்ஆனிலும்ஹதீதிலும் உள்ளதை உள்ளபடி சொல்லவே முடியாது கோணல் வழிகளை மட்டுமே நேர்வழியாகப்  போதிக்கவே  முடியும்.

அனைத்து நபிமார்களையும் மக்களிடம் கூலியை எதிர்பார்த்துச் செயல்படாமல், சொந்த உழைப்பைக் கொண்டு வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள அல்லாஹ் கட்டளையிட்டிருப்பதில் இரகசியம் இதுதான். அல்குர்ஆன் யாஸீன் 36:21 இறைவாக்கு இதையே மிக மிக உறுதியாகக் கூறுகிறது. மக்களிடம் கூலியைசம்பளத்தை எதிர்பார்க்காமல், அல்லாஹ்வுக்காக மட்டுமே மார்க்கப்பணி செய்கிறவர்கள் மட்டுமே நேர்வழியில் இருக்க முடியும். அதற்கு மாறாக சம்பளத்திற்காக மார்க்கப் பணி புரிகிறவர்கள் ஒருபோதும் நேர்வழியைப் போதிக்கமாட்டார்கள். காரணம் நேர்வழி செல்லும் சொற்பமான மக்களைக் கொண்டு அவர்களின் நோக்கம் நிறைவேறாது. சம்பளத்திற்காக நரகம் செல்லும் அதிகமான மக்களைக் கவர்வதாக இருந்தால், அவர்கள் விரும்பும் கோணல் வழிகளையே நேர்வழியாகப் போதிக்கும்  கட்டாயம்  ஏற்படுகிறது.

புரோகித மவ்லவிகள் வழிகேடுகளையே நேர்வழியாகமார்க்கமாப் போதிக்கும் காரணம் இப்போது சுய சிந்தனையாளர்களுக்கு, நேர்வழி நடந்து சுவர்க்கம் செல்ல விரும்புகிறவர் களுக்கு நிச்சயமாக புரிந்திருக்கும், வழிகேடுகளில் சென்று நரகத்தை நிரப்பும் பெருங்கொண்ட மக்களுக்கு நேர்வழியை விளக்கும் ஆற்றல் எமக்கு இல்லை என்பதை சொல்லிக் கொள்ள நாம் வெட்கப்படவில்லை. காரணம், படைத்த அல்லாஹ் விளக்குவதையே விளங்க முடியாதவர் கள் நாம் விளக்கியா விளங்கப் போகிறார்கள்? அல்லாஹ்வே நேர்வழி காட்டுகிறவன்.  அவனே  போதுமானவன்.

Previous post:

Next post: