மரணத்தை விட கொடூரமானது?
அபூ அஹமது இப்ராஹீம், ஒரத்தநாடு
இந்த கடிதம் கொண்டுவரும் நபரிடம் கொஞ்சம் பணம் கொடுத்து அனுப் புங்கள்…
என்னிடம் டீ/காபி குடிக்கக் கூட காசு இல்லை. ஒரு டீ வாங்கித்தர முடியுமா?….
எனக்கு உடல்நிலை சரியில்லை, மருத்துவரிடம் போகனும்; உதவி செய்யுங்கள்!…
மேற்கண்ட வார்த்தைகளை நம்மில் பலர், பல நேரங்களில் சாலையிலும், பள்ளிவாசலிலும் அடிக்கடி கேட்கும் வார்த்தைகள்தாம். இந்த வார்த்தைக்கு சொந்தக்காரர்களில் சிலர் இதே வேலையாகவும் பிழைப்பாக்கிக் கொண்ட உள்ளவர்களாக இருக்கலாம்.
அல்லது இது வாழ்ந்து கெட்டவர்களின் சிலருடைய வார்த்தையாக கூட இருக்கலாம்.
இந்த வார்த்தைக்கு சொந்தக்காரர்கள் வாழ்ந்து கெட்டவராக இருந்தால் மரணம் தான் விடுதலை என்று ஏங்க வைத்துவிடும். ஏன் என்றால்; வாழ்ந்து கெட்டவர்களின் வறுமைதான் மரணத்தைவிட கொடூர மானது. ஆம், வாழ்ந்தவனின் நினைவுகள் போதும் அவனை வறுமையில் கொல்ல அவர்களின் வலிகளையோ, வேதனைகளையோ நாம் முழுமையாக உணர முடியாது.
எனவே முடிந்தவரை உதவி செய்யுங்கள். முடியாவிட்டால் அவர்களின் மனம் வருந்தும்படி நடக்காதீர்கள். குறிப்பாக முதியவர்களிடம் மற்றும் வாழ்ந்து கெட்டவர்களிடம் கனிவுடன் நடந்துகொள்ளுங்கள்.
“பூமியில் நடமாடி(த் தம் வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்ற) எதுவும் செய்ய முடியாத அளவுக்கு அல்லாஹ்வின் பாதை யில் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட ஏழைகளுக்குத்தான் (உங்களுடைய தான தர்மங்கள்) உரியவையாகும். (பிறரிடம் யாசிக்காத) அவர்களுடைய பேணுதலைக் கண்டு, அறியாதவன் அவர்களைச் செல்வந் தர்கள் என்று எண்ணிக் கொள்கிறான்; அவர்களுடைய அடையாளங்களால் அவர்களை நீர் அறிந்து கொள்ளலாம். அவர்கள் மனிதர்களிடம் வருந்தி எதையும் கேட்கமாட்டார்கள்; (இத்தகையோருக்காக) நல்லதிலிருந்து நீங்கள் எதைச் செலவு செய்தாலும், அதை நிச்சயமாக அல்லாஹ் நன்கறிகின்றான்.” (2:273)
இன்று அவர்கள்; நாளை நாமாக கூட இருக்கலாம். எப்படி என்றால் காலத்தின் மூலமும், சோதனைகளாகளும் இறைவன் பலரின் வாழ்க்கையில் தன் ஆளுமையை காட்டுகிறான். அவர்களில் பலர் எத்தனையோ பேர்களின் குடும்பங்களின் உயர்வுக்கு வழிகாட்டியாக கூட இருந்திருக்கலாம். அல்லது நம்மை ஒரு காலத்தில் அவமானப் படுத்தியவராக கூட இருந்திருக்கலாம்.
இறைவன் தன் அடியார்களை செல்வத்தை கொடுத்தும் சோதிப்பேன் என்கிறான்.
வாழ்ந்து கெட்டவர் இறந்த பின்பு புகழ் பாடுவதோ, அல்லது மையத்திடம் சென்று மன்னிப்பு கேட்பதோ மனித நேயம் அல்ல, மார்க்கம் கற்று தந்ததும் இதுவல்ல.
ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே இருக்கிறது. பரீட்சைக்காக கெடுதியையும், நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம்; பின்னர், நம்மிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள். (21:35)
எனவே இறைவனும், இறைதூதரும் கற்றுத்தந்த சதாகா, ஜகாத், ஃபித்ரா போன்ற தான தர்மங்களை முறையாக பேணுவோம்.
இறைவன் தன் வழிகாட்டும் நூலில் (குர்ஆனில்) அத்தியாயம் 103ல் மிக சுருக்கமான வார்த்தைகளைக் கொண்டு அதன் கருத்துக்கள் மனதில் ஆழமாகப் பதிந்து விடுகின்ற வகையில் எடுத்துரைக்கிறான்.
“”காலத்தின் மீது சத்தியமாக! மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான்.’ ஆனால் எவர்கள் இறை நம்பிக்கை கொண்டும், நற்செயல் களை சீர்திருத்திக் கொண்டும், மேலும் ஒரு வருக்கொருவர் சத்தியத்தை (உண்மையை) எடுத்துரைத்தும், பொறுமையைக் கடைப் பிடிக்குமாறு அறிவுரை கூறிக்கொண்டும் இருந்தார்களோ அவர்களை தவிர!” (அல்குர்ஆன் 103:1-3)
காலத்தின் மீது இறைவன் சத்திய மிட காரணம், அது கடந்துவிட்டதையும் குறிக்கும், நடந்து கொண்டிருப்பதையும் குறிக்கும். அதாவது மனிதன் நஷ்டம் அடை யாமல் இருக்க வேண்டுமானால் இறை நம்பிக்கையுடன் இருப்பது மட்டும் போதாது. நற்செயல்கள் புரிய வேண்டும், உண்மையை எடுத்துரைக்க வேண்டும்; பொறுமையாகவும் இருக்க வேண்டும் என்பதாகும்.
“(இறையச்சமுடையோர் எத்தகை யோர் என்றால்) அவர்கள் இன்பமான (செல்வ) நிலையிலும், துன்பமான (ஏழ்மை) நிலையிலும் (இறைவனின் பாதையில) செலவிடுவார்கள். தவிர, கோபத்தை அடக் கிக் கொள்ளக்கூடியவர்கள்; மனிதர்(கள் செய்யும் பிழை)களை மன்னிக்கக் கூடியவர் கள்; (இவ்வாறு அழகாக) நன்மை செய்வோ ரையே அல்லாஹ் நேசிக்கின்றான்.” (அல்குர்ஆன் 3:134)