பெரும் துரோகத்திற்குப் பெயர் போன யூதர்கள்!

in 2024 டிசம்பர்

அன்றும்! இன்றும்!! என்றும்!!! ஓரிறைக்கு மாறு செய்தும், இறை

வரம்புகளை உடைத்தும், பெரும் துரோகத்திற்குப் பெயர் போன யூதர்கள்!

எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை.

2024  நவம்பர்  மாத  தொடர்ச்சி

ஒன்பது சான்றுகளையும் நிதர்சனமாகக் கண்ணால் கண்டும் மறுத்தார்கள்:

கீழே போட்டவுடன் பாம்பாக மாறிய! (7:107,117, 20:20, 26:32,45, 27:10, 28:31)

கீழே போட்டபோது பெரியதொரு பாம்பாக மாறி சூனியக்காரர்கள் போட்ட பாம்புகள் அனைத்தையும் விழுங்கிய! (7:117, 26:45)

பாறையில் அடித்தால் பனிரெண்டு நீரூற்றுக்கள் பீறிட்டு வரக் காரணமான! (2:60, 7:160)

கடலில் அடித்தால் கடல் பிளவுண்டு திடமான பனிரெண்டு பாதைகள் உண்டாகக் காரணமான! மூஸா(அலை) அவர்களின்கைத்தடி‘ (1) (20:77,26:63, தஃப்சீர் இப்னு கஸீர் : 2:783-786, 5:355-361)

வெளிப்படுத்தினால் வெண்மையாகப் பிரகாசிக்கும் மூஸா(அலை) அவர்களின்கை‘ (2) (7:108, 20:22, 26:33, 27:12, 28:32)

அவர்கள் பிடிபட்டு படிப்பினை பெறுவதற்காக ஒரு போகத்திற்கு ஒரு பேரீச்ச மரத்தில் ஒரேயயாரு பேரீச்சம் பழம் மட்டுமே விளைந்திருக்கும் வகையில் கனி வர்க்கங்களின் பற்றாக் குறையாலும் பல ஆண்டுகள் பசி பட்டினி கிடைக்கும் வகையிலான குறைந்தளவு விளைச்சலை ஏற்படுத்திய பெரும்பஞ்சம்‘ (3) (7:130, ரஜாஉபின் ஹைவா (ரஹ்) தஃப்ஸீர் இப்னு கஸீர்: 3:867, 868)

மனிதர்களையும், கால்நடைகளையும் மூழ்கடித்து விளை பயிர்களையும் பழங்களையும், நாசப்படுத்தியதுடன் கொள்ளை நோயையும் பரவச் செய்தஅத்தூஃபான்என்று சொல்லக்கூடியபெருவெள்ளம்‘(4) (7:133, இப்னு அப்பாஸ்(ரழி), ளஹ்ஹாக் பின் முஸாஹிம்(ரஹ்), முஜாஹித் (ரஹ்), தஃப்ஸீர் தபரீ, இப்னு கஸீர் : 3:869,870, விவிலியம் பழைய ஏற்பாடு யாத்திராகமம் : 9:15)

வலிமை மிக்க குதிரையின் தலையைப் போன்ற, காளையின் கழுத்தைப் போன்ற, சிங்கத்தின் மார்பைப் போன்ற, கழுகின் இறக்கையைப் போன்ற, ஒட்டகத்தின் கால்களைப் போன்ற, பாம்பின் வாலைப் போன்ற, தேளின் வயிற்றைப் போன்ற, ஏழு வகைப் பிராணியின் உருவ அமைப்பைக் கொண்ட, பயிர் வகைகள், பழ வகைகள், பச்சிலைகள் அனைத்தையும் தின்று தீர்ப்பதுடன் வீட்டுக் கதவுகளில் அடிக்கப்பட்டுள்ள ஆணிகள் முழுவதையும் அரித்துச் சாப்பிட்டுவிட்டுப் பலகைகளை மட்டும் விட்டுவிடக்கூடிய, என்றும் இல்லாதவாறு எகிப்தின் பூமி முழுவதையும் மூடி மறைத்து விட்ட கொடியவெட்டுக்கிளிகள்‘(5) (7:133, ஜாபிர் பின் அப்தில்லாஹ்(ரழி), அனஸ் பின் மாலிக்(ரழி), தஹ்தீபுல் கமால் (ரஹ்), ஹா´ம் பின் அல் காசிம்(ரஹ்), ஸியாத் பின் அப்தில்லாஹ்(ரஹ்), முஜாஹித்(ரஹ்), ­அபீ (ரஹ்), ஷிரைஹ் பின் அல்ஹாரிஸ்(ரஹ்), திர்மிதி, இப்னு மாஜா, தஃப்ஸீர் தபரீ, இப்னு கஸீர்: 3:870,871, விவிலியம் பழையே ஏற்பாடு: யாத்திராகமம்: 10:14,15)

வெட்டுக்கிளிகள் நாசமாக்கி விட்டுச் சென்ற பயிர் பச்சைகளின் மிச்ச சொச்சங்களைத் தின்று அழித்த, இறக்கைகள் முளைக்காத சிறிய ரக வெட்டுக்கிளி போன்றதும் ஓர் ஒட்டகத்தைக் கூடச் சிறிது சிறிதா கத் தின்று தீர்த்துவிடக் கூடிய கோதுமையிலிருந்து வெளியே வரும் அந்துப் பூச்சி போன்ற; கருநிறமான அளவில் மிகச் சிறிய தெள்ளுப் பூச்சிகள் போன்ற; வீடுகளிலும் உணவுப் பொருட்களிலும் மனிதர்களின் மேலும் மிருகங்களின் மேலும் நிறைந்து வழிந்து அவர்களுக்குத் தூங்கவும் முடியாமல் வசிக்கவும் முடியாமல் சிரமத்தை ஏற்படுத்தி பூமியின் புழுதியயல்லாமே பரவிய, “செடிப்பேன்கள்‘ (6) (7:133, இப்னு அப்பாஸ் (ரழி), ஹஸன் அஸ்பஸ்ரி(ரஹ்), இப்னு ஜரீர்(ரஹ்), சயீத் பின் ஜுபைர்(ரஹ்) ஸைத் பின் அஸ்லம்(ரஹ்), தஃப்ஸீர்  தபரீ, தாரீ குத்தபரீ, இப்னு கஸீர்: 3:872-878, விவிலியம் பழைய ஏற்பாடு யாத்திராகமம்: 8:17)

ஒரே நாளில் பொழுது சாய்வதற்குள் படை எடுத்து அவர்களின் இல்லங்களிலும், உணவுப் பொருட்களிலும், பாத்திரங்களிலும் நிரம்பி வழிந்து அவர்களது ஆடைகளையோ உணவுப் பொருட்களையோ திறந்து பார்த்தால் நிரம்பிக் காட்சி தருகிற அவர்களில் ஒருவர் மீது அவரது தொண் டைக் குழிவரை அமர்ந்திருக்கையில் அவர் பேசலாம் என்று நினைத்து வாயைத் திறந் தால் உடனே அவரது வாய்க்குள் துள்ளிக் குதித்துத் தொல்லைத் தண்டனை கொடுத்த; “தவளைகள்‘(7) (7:3, இப்னு அப்பாஸ்(ரழி), சுத்தீ (ரஹ்), கத்தாதா(ரஹ்), சயீத்பின் ஜுபைர்(ரஹ்), முஹம்மத் பின் இஸ்ஹாக் பின் யசார்(ரஹ்), தஃப்ஸீர் தபரீ, இப்னு கஸீர்: 3:875-878, விவிலி யம் பழைய ஏற்பாடு. யாத்திராகமம்: 8:3)

அவர்களது நீர் நிலைகளான ஆறுகள், குட்டைகள், கிணறுகள், தோல்பைகள், பாத்திரங்கள் என எங்கு அவர்கள் பார்த்தா லும் அருந்துவதற்குத் தண்ணீர் இன்றி நீரா தாரங்கள் யாவற்றிலும் காணப்பட்ட  இரத்தம்‘ (8) (7:133, தஃப்ஸீர் தபரீ, தாரீகுத் தபரீ, இப்னு கஸீர்: 3:876-878)

கடலைப் பிளந்து ஒவ்வொரு பிரிவின ருக்கும் ஒரு வழி என்ற வகையில் திடமான பன்னிரெண்டு பாதைகள் அமைக்கப்பட்டு ஒருவரையயாருவர்  பார்த்துக் கொள்ளும் வகையில் ஒவ்வொரு பிளவுக்கும் இடையே கண்ணாடி ஜன்னல்கள் போன்று அமைத் துக் கொடுத்துக் கடலைக் கடக்கச் செய்து கொடியவன் ஃபிர்அவ்னிடமிருந்து பாது காக்கப்பட்டு! அதே கடலில் ஃபிர்அவ்னும் அவனது படைபட்டாளங்களும் மூழ்கடிக் கப்பட்டதைத் தமது கண்களால் பார்த்த! “கடல் பிளவு‘ (9) (2:50,92, 7:138,141, 20:77,80, 26:63, இப்னு அப்பாஸ்(ரழி), ளஹ்ஹாக், கத்தாதா, அல்குராசானி, சுத்தீ, தஃப்ஸீர் இப்னு கஸீர் : 1:179,300, 3:879, 6:559-563, விவிலியம் பழைய ஏற்பாடு யாத்திராகமம்: 14:14, 21-23,27) ஆகிய அல்லாஹ்வின் மிகப் பெரிய (79:20) ஒன்பது அத்தாட்சிகளையும் அவனது மகத்தான சான்றுகளைக் கொண்ட அதிகாரத்தையும் ஆளுமையையும் (7:133, 17:101, 27:10-12) தெள்ளத் தெளிவான அல் லாஹ்வின் ஆதாரங்களையும் பணிய வைக் கும் அத்தாட்சிகளையும் கொண்டுவந்த இறைத்தூதரின் அற்புதங்களைக் கண்கூடா கக் கண்ணெதிரே கண்டும் அல்லாஹ்வை மறந்தவர்களாக!

இவர்களுக்குக் கடவுள் இருப்பதைப் போன்று எங்களுக்கும் ஒரு கடவுளை ஏற்படுத்தித் தருவீராக  என்றார்கள்:

இஸ்ரவேலர்கள் கொடியவன் ஃபிர் அவ்னிடமிருந்து பாதுகாக்கப்பட்டுக் கடலைக் கடந்து கரையேறிச் சென்று கொண்டிருந்தபோது ஓரிடத்தில்கன்ஆன்எனும் குலத்தைச் சேர்ந்தவர்கள் பசுமாட் டின் சிலைகளை வழிபட்டுக் கொண்டிருந் ததைப் பார்த்துவிட்டு ஏற்பட்ட சலனத்தில் இறைத் தூதரைப் பார்த்துமூஸாவே! இவர் களுக்குக் கடவுள் இருப்பதைப் போன்று எங்களுக்கும் ஒரு கடவுளை ஏற்படுத்தித் தருவீராக! என்று கேட்டார்கள். (7:138) அபூவாஹித் அல்லைஸீ(ரழி), இப்னு ஜரீர் (ரஹ்), திர்மிதி, முஸ்னத் அஹ்மத், தஃப்ஸீர் இப்னு அபீ ஹாத்திம், தஃப்ஸீர் தபரீ, இப்னு கஸீர்: 3:881,882, 2:784) அதன் எதிரொலியாகவே;

காளைக்கன்றைக் கடவுளாக எண்ணி வழிபட ஆரம்பித்தார்கள்:

இறைவனின் கட்டளைப்படி மூஸா (அலை) அவர்கள் இறைவனைச் சந்தித்து தவ்ராத் வேதத்தைப் பெறுவதற்காகதூர்  சினாய் மலைக்குச் சென்றிருந்தபோது, பாஜர்மா, கர்மான், சாமிரா எனும் ஊரைச் சேர்ந்த பசுவை வழிபட்டுவந்த ஒரு சமூகத் தைச் சேர்ந்தவனாக இருந்தசாமிரிஎன்ப வன் பொன்னினால் சிலையாக வடித்து உரு வாக்கிய காளைக் கன்றைக் கடவுளாக எண்ணி வழிபட ஆரம்பித்தார்கள். (7:148, 2:51,54,92, 20:85,88,89,96, இப்னு அப்பாஸ் (ரழி), சுத்தீ(ரஹ்), முஜாஹித்(ரஹ்), கத்தாதா (ரஹ்), இக்ரிமா(ரஹ்), ஹஸன் அல்பஸ்ரி(ரஹ்), தஃப்ஸீர் இப்னு அபீஹாத்திம், தஃப்ஸீர் தபரீ, இப்னு கஸீர்: 5:767-772, 776-780, 2:784, விவிலி யம் பழைய ஏற்பாடு யாத்திராகமம் 32:31) அந்தப் பாவத்திற்குத் தண்டனையாக!

வார வழிபாட்டு நாளான சனிக்கிழமையைப் பேணி பாதுகாத்து கண்ணியப்படுத்த வேண்டும், (அன்றைக்கு முழுவதும் மீன் பிடிக்கும் தொழில் செய்யக் கூடாது) வரம்பு மீறக்கூடாது.’ (7:163) என்று அல்லாஹ் உத்தரவிட்டான்) ஸஃப்வான் பின் அஸ்ஸால் (ரழி), திர்மிதி, இப்னு மாஜா, நஸயீ, முஸ்னத் அஹ்மத், தஃப்ஸீர், இப்னு கஸீர் 2:783-786, 5:355-361) ஆனாலும் அந்தத் தடையையும் மீறினார்கள்.

நாங்கள் அல்லாஹ்வின் உரையாடலைக் கேட்க வேண்டும் என்றார்கள்:

இறைத்தூதர் மூஸா(அலை) அவர்கள் அல்லாஹ்விடம் உரையாடிவிட்டுத் தமது சமூகத்தாரிடம் திரும்பினார்கள். அப்போது அந்த மக்கள் காளைக் கன்றை வழிபட்டுக் கொண்டிருப்பதைக் கண்டார்கள். உடனே கோபம் கொண்டவராக (20:92-98) தம்முடைய சமுதாயத்தாரில் மிகவும் சிறந்த எழுபது பேரைத் தேர்ந்தெடுத்துநீங்கள் எழுபது பேரும் அல்லாஹ்விடம் செல்லுங்கள் நீங்கள் செய்த குற்றத்திற்காக அவனிடம் பாவமன்னிப்புக் கோருங்கள். அத்துடன் நீங்கள் உங்களுடைய சகோதரர்களுக்காகவும் பாவமன்னிப்புக் கோருங்கள்.  அதற்கு முன்னர் நீங்கள் நோன்பு நோற்றுக் கொள்வதுடன் நன்கு குளித்துத் தூய்மையடைந்து கொள்ளுங்கள். உங்கள் ஆடைகளையும் தூய்மையாக்கிக் கொள்ளுங்கள்.’ என்று கூறினார்கள். பின்னர்,

அந்த எழுபது பேரையும் அழைத்துக் கொண்டு இறைவன் குறிப்பிட்ட நேரத்திற்கெல்லாம் தூர்சீனா மலையை நோக்கி மூஸா(அலை) அவர்கள் புறப்பட்டுச் சென்றார்கள். பொதுவாக அல்லாஹ்வின் அனுமதியின்றி அந்த இடத்திற்கு அவர்கள் செல்வதில்லை. அந்த எழுபது பேரும் தமக்கிடப்பட்ட உத்தரவுப்படி நோன்பு நோற்று உடலையும், உடையையும் தூய்மைப்படுத்திக் கொண்டு அல்லாஹ்வைச் சந்திப்பதற்காகப் புறப்பட்டார்கள். அப்போது அவர்கள் மூஸா(அலை) அவர்களிடம், “மூஸா! எங்களுக்காக நீர் உம்முடைய இறைவனிடம் கோரும் நாங்கள் எங்கள் இறைவனின் உரையாடலைக் கேட்க விரும்புகிறோம்என்றார்கள். அவ்வாறே செய்கிறேன் என மூஸா(அலை) அவர்கள் பதிலளித்தார்கள்.

பின்னர் தூர்சீனா மலையை மூஸா (அலை) அவர்கள் நெருங்கியபோது, அவர்கள் மீது மேகங்கள் சூழ்ந்தன மலை முழுவதையும் மேகம் மூடிக்கொண்டது மூஸா (அலை) அவர்கள் மேலும் நெருங்கி மேகத்தின் நிழலில் நுழைந்து கொண்டார்கள். “நெருங்கி வாருங்கள்  என்று அந்த மக்களிடம் கூறினார்கள். மூஸா(அலை) அவர்களிடம் அல்லாஹ் உரையாடத் துவங்கினால் வழக்கமாக அவர்களது நெற்றியின் மீது பிர காசமான ஒளியயான்று தோன்றும். அதை மனிதர்கள் யாருமே பார்க்க இயலாதவாறு கண்ணைப் பறிக்கும். அதையடுத்து அவர் களுக்கப்பால் ஒரு திரை போடப்பட்டு விடும். ஆக அந்த மக்களும் மேகத்தின் நிழலுக்குள் நுழைந்தார்கள். உடனே சிரம் பணிந்தவர்களாகக் கீழே வீழ்ந்தார்கள். அப்போது அல்லாஹ் மூஸா(அலை) அவர்களுடன் உரையாடுவதை அவர்கள் அனை வரும் செவிமடுத்தார்கள். எனினும், மறு படியும்;….

Previous post:

Next post: