பன்றியின் மாமிசம் மட்டும்தான் ஹராமா?

in 2025 மார்ச்

பன்றியின் மாமிசம் மட்டும்தான் ஹராமா?

N. அஹமது இப்ராஹிம், ஒரத்தநாடு.

பொதுவாக உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் தெரிந்த ஒன்று பன்றியின் மாமிசம் ஹராம் என்பது. அது ஏன் ஹராம்? என்று கேட்டால் குர்ஆனில் இறைவன் அதை ஹராம் என்று சொல்லி உள்ளான் என்று தெரிந்து வைத்திருப்பவர்களே அதிகம். ஆனால் ஏன் ஹராம்? என்று கேட்டால் அதைப்பற்றி விரிவாக தெரியாதவர்களே அதிகம்.

எனவே பன்றியின் மாமிசத்தை இறைவன் ஏன் ஹராம்? என்று கூறியுள்ளான் என்று பார்ப்போம். இவ்வுலகில் படைக்கப்பட்டு இருக்கின்ற எதையயான்றையும் நாம் வீணுக்காகப் படைக்கவில்லை என்பதாக கீழ்கண்ட வசனத்தில் இறைவன் கூறியுள் ளான்.

வானத்தையும், பூமியையும், அவற்றுக்கு இடைப்பட்டதையும் வீணுக்காக நாம் படைக்கவில்லைஅல்குர்ஆன்: 38:27

மேற்படி வசனப்படி பன்றியும் வீணுக்காகப் படைக்கவில்லை என்று தெரியவருகிறது.

அதாவது இவ்வுலகில் படைக்கப்பட்டுள்ளவைகள் அனைத்தும் மனிதர்களுக்காக படைக்கப்படடவையாகும். ஆனால் அவ்வாறு படைக்கப்பட்டவற்றில் சிலவற்றை 

ஹலால்  (ஆகுமானது)  என்றும்,

ஹராம் (தடை செய்யப்பட்டது) என்றும் இறைவன்  கூறுகிறான். அவ்வாறு தடை செய்யப்பட்ட உயிரினங் களில்பன்றியின் மாமிசம்தலையானது ஆகும். இறைவன் படைத்துவிட்டு ஏன் தடைச் செய்யவேண்டும்? என்ற கேள்வி எழலாம். கேள்வி  நியாயமானதும்  கூட. 

நாம் மேலே குறிப்பிட்ட (38:27) வசனத்தில்  எதுவொன்றையும் வீணுக்காக படைக்க வில்லை என்று கூறியிருக்கும்போது பன்றியை ஏன் படைத்தான்?

ஆம், நிச்சயமாக பன்றியும் மனிதனின் தேவைக்காகவே, ஆனால் உண்பதற்காக அல்ல. மாறாக மனிதன் வெளியாக்கும் மலத்தை (கழிவை) அகற்றவே. அது மனிதனின் மலத்தை உண்டு வாழும் உயிரினம் பன்றியாகும். ஆதிகாலத்திலும் சரி, இன்றும் சரி நாகரீக வளர்ச்சி அடையாத பல ஊர்களில் மறைவாகவுள்ள பொது இடங்களில் மனிதர்களில் பலர் மலம் கழிப்பதை இன்றும் காணலாம். அவ்வாறு கழிக்கப்படும் மலம் ஒன்று காய்ந்து மண்ணோடு மண்ணாகிவிடும். அல்லது அது பன்றிக்கு உணவாக வேண்டும். அவ்வாறு உண்ணப்பட்ட மலம் சுமார் 30 நிமிடத்தில் பன்றியின் உடல் அமைப்புப்படி செரிமான மாகிவிடும். ஏனைய உயிரினங்கறுக்கும், மனி தர்களுக்கு செரிமானமாக சுமார் 4 மணி நேரமாகும். அவ்வாறு உண்ட மலம் பன்றியின் வயிற்றில் குடல் புழுக்கலாக மாறி தங்கிவிடும். சுமார் 100நு டிகிரி. சுடுமண்ணிலும் அழியாது, அந்த மாமிசத்தை உண்டால் கெடுதல் உண்டாகும். எனவேதான் பன்றியின் மாமிசத்தை இறைவன் தடை செய்துள்ளான். அது மட்டுமல்ல ஏனைய எந்த உயிரின மும் செய்யாத சிலவற்றை பன்றி செய்யும்.

அவை  என்னவென்றால்,

1. தன்னுடைய மலக்கழிவை தானே சாப்பிடும்.

இத்தகைய செயலை செய்யும் பன்றியின் மாமிசத்தை மனிதர்கள் உண்பதால் வெட்கம் குறைந்து ஹலால், ஹராம் பேணப்படாமல்  போய்விடும். (இன்றும் பன்றியின் மாமிசத்தை  வெகுவாக உண்ணும் பெரும்பாலான சீனர்களிடமும், சில ஐரோப்பியர்களிடம் இந்த வெட்க உணர்வு  இல்லாததை  காணலாம்)

இதை அல்லாது வேறு என்னென்ன உணவு இறைவன் தடை செய்துள்ளான் என்றால் சில விலங்குகளை.

அவைகளை எவ்வாறு அறிவது (5:1)

நான்கு கால் விலங்குகளில் எவை எல்லாம் பின்னங்காலால் உட்காருமோ அவை அனைத்துமாகும். அதாவது நாய், யானை, சிங்கம், புலி, சிறுத்தை வேட்டையாடி இன்னும் சில, ஏனைய உயிரினங்களை கோர  பற்களால்  கிழித்து  உண்பவை. 

(நபியே!) அவர்கள் (உண்பதற்குத்) தங்களுக்கு அனுமதிக்கப்பட்டவை எவை? என்று உம்மிடம் கேட்கிறார்கள்: நீர் கூறும்: நல்லவைகள் அல்லாஹ் உங்களுக்குக் கற்றுக் கொடுத்துப் பயிற்றுவித்தவர்களாக இருக்கும் நிலையில், வேட்டைப்பிராணிகளில் நீங்கள் பழக்கப்படுத்தி யவை (வேட்டையாடியவை)யும் உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன; அவை (தாம் தின்னாமல்) தடுத்துக்கொண்டவற்றிலிருந்து நீங்கள் உண்ணுங்கள்; 

எனினும், நீங்கள் (வேட்டைக்கு விடும்போது) அதன் மீது அல்லாஹ்வின் பெயரைக் கூறிவிடுங்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள், நிச்சயமாக அல்லாஹ் கணக்கெடுப்பதில் மிகவும் விரைவானவன். (5:4)

நம்பிக்கை கொண்டவர்களே! (நீங்கள் இஹ்ராம் உடை அணிந்திருக்கும் நிலையில்) உங்கள் கைகளும், உங்கள் ஈட்டிகளும் சுலபமாக  வேட்டையில் அடையக் கூடிய தைக் கொண்டு நிச்சயமாக உங்களை அல்லாஹ் சோதிப்பான்: ஏனென்றால், மறைவில் தன்னை யார் அஞ்சுகிறார்கள் என்பதை அல்லாஹ் அறிவித்து விடு)வதற்காகத்தான். இதன் பின்னரும் எவர் வரம்பு மீறுகிறாரோ அவருக்கு நோவினை தரும் வேதனையுண்டு.   (5:94)

ஆனால் முன்னங்காலால் உட்காரும் விலங்குகளான ஒட்டகம், ஆடு, மாடு போன்றவை தடை செய்யப்படாததாகும்.

பறவை இனங்களிலும் பொதுவாக தடை செய்யப்பட்டவைகள் உண்டு :

பறவை இனங்களில் எவை எல்லாம் தன் அழகால் கொத்தி மட்டும் உண்ணுமோ அவைகள் தடையில்லை.

உதாரணமாக : கோழி, காடை .

அதுவே எதுவெல்லாம் தன் கால்களால் பிடித்துக் கொண்டு கீரி கிழித்து உண்ணுமோ அவைகள் தடை செய்யப்பட்டவை.

உதாரணமாக : கழுகு, காகம்.

மேற்கண்டவைகள் அல்லாமல் பொதுவாக தடைச் செய்யப்பட்டவைகள் என்னவென் றால்,

1. தாமாகச் செத்தவை

2. பன்றியின் மாமிசம்

3. அல்லாஹ்வின் பெயர் சொல்லாமல் அறுக்கப்பட்டவைகள்.

4. அல்லாஹ் அல்லாதோருக்கு நேர்ச்சை செய்து அறுக்கப்பட்டவைகள். 

அல்லாஹ்வும், அவனது தூதரும் தடுத்ததை விட்டுவிட்டு அனுமதித்ததை  உண்போம்.

Previous post:

Next post: