வருமுன் காப்போம் வளம் பெறுவோம்! (அ) நிம்மதியாக (சந்தோ­மாக) வாழ வழி!

in 2025 பிப்ரவரி

வருமுன் காப்போம் வளம் பெறுவோம்! () நிம்மதியாக (சந்தோ­மாக) வாழ வழி!

அய்யம்பேட்டை A. நஜ்முதீன்

ஜனவரி மாத தொடர்ச்சி….

நோயே!  என்னை  நெருங்காதே (உடல்நலம்)

சித்த  வைத்தியம் :

ஒரு காலத்தில் மருத்துவம் யூத மதவாதிகளின் கையில் ஏகபோகமாக இருந்தது. அவ்வாறு இருந்தபோது நோய்களை ஆவி எனவும், பேய் பிசாசு என்றும், பில்லி சூனியம் என்றும் கூறி மந்திரித்தல் என்ற பெயரில் பல பித்தலாட்டங்கள் செய்து மக்களை ஏமாற்றி வந்தனர்.

அத்தகைய நம்பிக்கையை முதன்முதலில் தகர்த்தது நபி ஈஸா(அலை) அவர்கள் வருகைக்கு பிறகே. அதாவது நபி ஈஸா(அலை) அவர்களுக்கு இறைவன் ஒரு தனி சிறப்பை தனது வல்லமையால் வழங்கி அவர் கைகள் தொட்டவுடன் பல நோய்கள் குணமாக்கி வைத்தான்.

(எனவேதான் அன்றும் இன்றும் கிறிஸ்தவர்கள் மருத்துவத்தில் மிகைத்து இருக்கின்றார்கள்)

நபி ஈஸா(அலை) அவர்கள் காலத்திற்கு பிறகு பல்வேறு மருத்துவமுறைகள் தோன்றின. அவைகளில் மிகவும் பழமையானது சித்த வைத்தியமே! 

சித்த வைத்தியம் என்பது சித்தர்கள் மட்டும் அறிந்த மர்மம் அல்ல. எவ்வாறு என்றால்சித்துஎன்றால் அறிவு என்று பொருள். யாரெல்லாம் அறிவைக் கொண்டு மூலிகைகளை ஆராய்ந்தார்களோ அவர்கள்சித்தர்கள்என அழைக்கப்பட்டனர். சித்தர்கள் உலகிற்கு சொல்லிய உண்மைகளேசித்தாத்தம்சித்த வைத்தியம்  என  சொல்லப்பட்டது.

நமது உடல் நீர், நிலம், ஆகாயம், காற்று, நெருப்பு ஆகிய பஞ்சபூதங்களால் இறைவனால் கட்டமைக்கப்பட்டது என்பதை அறிந்த சித்தர்கள்  மூலிகைகளை  ஆராய்ந்தார்கள்.

மூலிகைகள் இறைவன் நமக்கு அருளிய அருட்கொடைகளில் ஒன்றாகும். அதுவே நமது வாழ்வாதாரம் ஆகும். அதுமட்டுமல்ல மருத்துவ உலகமே மூலிகைகளை நம்பித்தான் இருக்கிறது.

இறைநூலில் (குர்ஆனில்) இறைவன் கூறுகிறான்; “”வானம், பூமி மற்றும் அவ்விரண் டுக்கும் இடைப்பட்டவற்றை எதையயான் றையும் நாம் வீணுக்காக படைக்கவில்லை  என்பதாக.     (.கு.38:27)

அதுபோல் பழங்களும், தாவர  வகைகளை சார்ந்ததே. பழங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் நன்மை பயக்கக்கூடியது. ஆப்பிள் மட்டும்தான் சிறந்தது என்று நினைப்பது தவறு. எந்தெந்தப் பருவ காலங்களில் எந்தெந்த பழங்கள் கிடைக்கின்றதோ அவைகள் அனைத்தையும்  உண்ணவேண்டும்.

பழங்கள் சாப்பிட காலநேரம் என்பது கிடையாது. நொறுக்குச் தீனிக்கு பதில் பழங்கள் மற்றும் ம்rதீ ய்rற்ஷ்மிவி(பேரீச்சை, உலர்ந்த திராட்சை, முந்திரி, பாதாம் பருப்பு , வால்நட், அத்திபழம் இன்னும் சில உண்பதை வழக்கமாக்கிக் கொள்வதே ஆரோக்கியத்திற்கு  நல்லது.

அலோபதி மருத்துவர்கள் பழங்கள் மற்றும் மேற்கூறிய ம்rதீ ய்rற்ஷ்மிவிகள் சாப்பிட்டால் சுகர்  நோய் அதிகமாகிவிடும் என்பதும் மற்றும் உடல் எடையை கூட்டிவிடும் என மக்களை காலம் காலமாத பயமுறுத்தி நோயாளிகளாகவே வைக்கும் கார்ப்பரேட் கம்பெனிகளின் கைக்கூலிகளாக செயல்படும்  திட்டம்  இது.

இறைவன் தன் வழிகாட்டி நூலில் (அல்குர்ஆனில்) பழங்கள், தானியங்களை உண்ணுங்கள்  எனக்  கூறியுள்ளான். பார்க்க வசனம் : 6:141

பொதுவாக உணவுகளும், உணவுமுறை களும், வயதுக்கு தக்கவாறும், உடல் உழைப்புக்கு  தக்கவாறும்  மாறுபடும்.

நாம் உண்ணும் உணவுகள்தான் ஒவ்வொரு வகையில் சத்தாக மாறி நம் உடலைக் காக்கிறது, மருந்து  மாத்திரைகள்  அல்ல.

மருத்துவத்தில் சித்தா, ஆயுர்வேதா, யுனானி என பல பிரிவுகள் இருந்தாலும் அடிப்படையில் பயன்படுத்தப்படும் மூலப் பொருட்கள்  ஒன்றேயாகும்.

சித்த வைத்தியம் அல்லது மேலே குறிப்பிட்ட வைத்தியமுறைகளை பின்பற்றினால்பத்தியம்கடைபிடிக்க வேண்டும் என பலரும் நினைக்கின்றார்கள், அது உண்மைதான். பெரும்பாலோர் நினைப்பது போல் பத்தியம் என்பது சித்த வைத்தியத்தில் மட்டும் அல்ல. எல்லா மருத்துவ முறைகளிலும் பத்தியம் என்பது உண்டு. குறிப்பாக அலோபதியிலும் உண்டு.

பத்தியம்என்பது நோயாளிகளின் நலன் கருதி உணவு மற்றும் பழக்கவழக்கங்களில் விதிக்கப்படும்  கட்டுப்பாடேயாகும்.

மஞ்சள்  காமாலை  நோய் :

மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப் பட்டவர்கள் கொழுப்பு பொருட்கள் அதிகமாக உள்ள உணவுகளை நோய் தீரும் வரை உண்ணக்கூடாது என்பது பத்தியம் ஆகும். இன்னும் தெளிவாகச் சொல்லப் போனால் மஞ்சள் காமாலை நோய்க்கு அலோபதி மருத்துவத்தில் இதுவரை மருந்து மாத்திரைகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதே  உண்மை. 

ஆதிமனிதன் இயற்கைச் சீற்றம், தொற்று நோய், மற்றும் கொடிய விலங்குகளிடமிருந்து தன்னைத் தற்காத்துக் கொண்டு வாழ்வதற்கு என்ன தேவையோ அதை மட்டும் அறிந்து வைத்திருந்தான்.

அதுவே மனித கூட்டம் பெருகப் பெருக பல நோய்களும் பெருகியது. அத்தகைய நோய்களிலிருந்து தன்னை தற்காத்துக் கொள்ள அவன் வாழ்ந்த சூழ்நிலை, தட்ப வெப்ப நிலை, உணவு வகை, செடி, கொடிகள் மூலம் உண்டு நோயை எதிர்த்து வாழ்ந்தான்.

நாகரீகம் வளர்ச்சி அடைய அடைய நோய்கள் பெருகியது. எனவே பல்வேறு விதமான மருத்துவ முறைகள் கண்டுபிடிக்கப் பட்டன.

அவைகளில் முக்கியமானவை வருமாறு:

இயற்கை வைத்தியம், ஹோமியோபதி, சித்த வைத்தியம் (மூலிகை வைத்தியம்) ஆயுர்வேதம், யுனானி, சைனிஸ் வைத்தியம், அக்பஞ்சர்,  வர்மகலை, அலோபதி  மருத்துவம்.

ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் இருப்பது போல நோய்களிலும் இரண்டு வகை உண்டு, சில தற்காலிகமான நோய்கள் (சளி, காய்ச்சல், வயிற்று வலி, இருமல் இன்னும் சில) மற்றொரு வகை நாள்பட்ட நோய்கள் (காசநோய்), தொற்று நோய், புற்று நோய் பக்கவாத நோய் இன்னும் சில, மேற்கண்ட வகைகளில் சில குணமாகிறது, சில உயிர்களையே அழிக்கிறது. வைத்தியத்திற்கும், மருத்துவத்திற்கும் வித்தியாசம் உண்டு. எவ்வாறு என்றால் வைத்தியம் குணப்படுத்தும் மருத்துவம் கட்டுப்படுத்தும் (குணப்படுத்தாது) இனி ஒவ்வொரு வைத்திய முறைகளைப் பற்றி அறிவோம்.

ஹோமியோபதி :

ஹோமியோபதி வைத்தியமுறையை ஆரம்பத்தில் பலரும் எதிர்த்தனர். ஏன்? ஹோமியோபதி நல்லதில்லை என்பதாலா? இல்லவே இல்லை. ஹோமியோபதி வைத்திய முறையைப் பற்றி ஆராயாமல் பொறாமை யாலும் சிலர் அன்று எதிர்த்தனர், இன்றும் எதிர்க்கின்றனர். ஆனால் சில ஆண்டுகளுக்கு  பிறகு வைத்தியமுறையில் சில நோய்களுக்கு இதுவே சிறந்தது.  என்று அறிந்தனர்.

ஹோமியோபதி வைத்தியத்தின் சிறப்பு என்னவென்றால் ஒரு வியாதிக்கு கொடுக்கப் படும் மருந்து அந்த நோய்க்கு ஏற்புடையதாக இருந்தால் உட்கொள்ளப்பட்ட உடனேயே அது (மருந்து) வேலை செய்ய ஆரம்பித்து, அந்த நோயை முற்றிலுமாக அழிக்கும். அதுவே அந்த நோய்க்கு ஏற்புடையதாக இல்லாமல் இருந்தால் அந்த நோய் குணமாகாதே தவிர எந்தவித கெடுதல்களும் செய்யாது. ஆனால் அலோபதி மருத்துவம் அப்படி  அல்ல.

ஒவ்வொரு நோய்க்கும் ஒரு மாத்திரை உண்டு, ஆனால் நாளடைவில் ஒவ்வொரு மாத்திரைக்கும் பின்னாலும் நிச்சயமாக ஒரு நோய் உண்டு. (பக்கவிளைவு)

இன்ஷா அல்லாஹ் அடுத்த இதழில் அக்குபஞ்சர் வைத்தியம்நலமுடன் மீண்டும் சந்திப்போம்

Previous post:

Next post: