2018 ஆகஸ்ட்

ஐயமும்! தெளிவும்!! ஐயம் : இயக்கங்கள் கூடாது, தனிப்பள்ளிகள் கூடாது அது சமுதாயத்தை பிளவுபடுத்தும் செயல் என்றால் தனிப் பெருநாளும் கூடாதல்லவா? அதில் கலந்து கொள்வதும் தவறல்லவா? அதுவும் சமுதாயத்தை பிளவுபடுத்தும் செயலல்லவா? அதை எப்படி சரி காண்கிறீர்கள்? அபூ நபீல், தேங்காய்பட்டணம். தெளிவு : பெருநாள், பெருநாள் அல்லாத நாளில் கொண்டாடுவதை நாம் சரிகாணவில்லையே! பிரிவினர்களின் பெருநாள் தொழுகையில் கலந்து கொள்வதைப் பற்றி தங்களுக்கு ஐயம் இருப்பது போல் அடுத்த கேள்வியின் வாயிலாகத் தெரிகிறது. எனவே […]

அல்லாஹ்வின் அழகிய சொல்லே என்றென்றும் உண்மையானது! நம்பிப் பின்பற்றத் தகுந்தது! சத்தியமானது! எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை. அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களில் ஒன்று “மெய்யானவன்” எனும் பொருள் கொண்ட “ஹக்” என்பதாகும். 6:62, 10:30, 32, 18:44, 20:114, 22:6,62, 23:116, 24:25, 31:30 அவன் என்றென்றும் உண்மை மாத்திரமே பேசுபவன். நிச்சயமாக(க் குர்ஆனாகிய) இது உம்முடைய இறைவனால் அருளப்பெற்ற உண்மை அடங்கிய நெறிநூலாகும். 6:114 நிச்சயமாக (இந்த) உண்மை உம்முடைய இறைவனிடமிருந்தே வந்திருக்கிறது. எனவே நீர் (இதில்) […]

குர்ஆனை விளங்கிக் கொள்பவர் யார்? அபூ அப்தில்லாஹ் ஜூலை தொடர்ச்சி….. உதாரணமாக, “அலக்’ என்ற அரபிப் பதத்திற்கு இரத்தக்கட்டி என்ற பொருளும், ஒட்டி தொங்கிக் கொண்டு உறிஞ்சும் ஒன்று என்ற பொருளும் இருக்கத்தான் செய்தது. அன்றைய அரபி அறிஞர்களுக்கு இரத்தக் கட்டி’ என்று பொருள் கொள்வதே மிகச் சரியாகத் தெரிந்தது. ஆனால், இன்று அரபி இலக்கண, இலக்கிய பாண்டித்யமும், மனித உடற்கூற்று துறையில் பாண்டித்யமும் உள்ளவர்கட்கே இரத்தக்கட்டி என்ற பொருள் தவறானது. ஒட்டித் தொங்கிக் கொண்டு உறிஞ்சும் […]

அறிந்து கொள்வோம்! மர்யம்பீ, குண்டூர், 1. பிர்அவ்னின் கூட்டத்தார் நல்லுபதேசம் பெற அல்லாஹ் எவ்வாறு சோதித்ததாக கூறுகிறான்? பஞ்சத்தினாலும், விளைச்சலில் குறைவை ஏற்படுத்தி சோதிப்போம் என கூறுகிறான். 7:130 2. அல்லாஹ் சந்திரனை ஒளியிழக்கச் செய்து சூரியனை வெளிச்சமாக்குவது ஏன் என அல்லாஹ் கூறுகிறான்? பகலை வாழ்(வாதாரத்தைத் தேடு)வதற்காக. அல்குர்ஆன் : 78:11 3. ஏக இறைவனை மறுத்த இஸ்ராயிலின் மக்கள் யார் யாரால் சபிக்கப்பட்டார்கள் என அல்லாஹ் கூறுகிறான்? தாவூத்(அலை) மற்றும் ஈஸா(அலை) அவர்களால் சபிக்கப்பட்டார்கள். […]

கணிப்பீடு! கணிப்பீடு!!! கணிப்பீடு!!! எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை. “சந்தேகம்’ என்பதற்குத் தூய இஸ்லாத்தில் துளிகூட இடமில்லை 49:12 அது போன்றே சந்தேகங்களின் பிறப்பிடமாகக் கருதப்படும் அனுமானம், அன்னளவு, யூகம் தோராயமானது. குத்துமதிப்பு போன்றவற்றுக்கும் தூய இஸ்லாத்தில் துளிகூட இடமில்லை என்பதனை பரிசுத்த அல்குர்ஆன் இவ்வாறு பேசுகின்றது. உமக்குத் திட்டவட்டமான அறிவு இல்லாத வி­யங்களை நீர் பின்பற்ற வேண்டாம். 17:36 பாவி ஒருவன் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால் அதைத் தீர்க்கமாக விசாரித்து அறிந்துகொள்ளுங்கள். 49:06 இன்னும் […]

பிறை பற்றி! ஆலிம்களிடம் (மார்க்க அறிஞர்களிடம்) ஒரு அவாமின் (பாமரனின்) கேள்வி? M. சையித் முபாரக் நாகை. பால் கொடுக்கும் தாய்மார்கள் நோன்பு பிடிப்பது பற்றிய சட்டத்தில் ஐந்துவித கருத்துகள் ஆலிம்கள் மத்தியில் இருக்கின்றனவாம். பிறைப் பற்றியும் இரு கருத்துகள் இருக்கின்றன. 1. தத்தமது பகுதி பிறை, 2.பிறை பார்த்த தகவல் முன்பே கணக்கிடப்பட்ட  நேரத்தில், அதே நேரத்தில் சூரிய, சந்திர கிரகணங்கள் நிகழ்கின்றன. அப்படியிருக்கும்போது பிறைக் கணக்கீடு முறையும் சரியாகத்தானே இருக்கும். அதனை ஏற்று ஒரே […]

அமல்களின் சிறப்புகள்… M. அப்துல் ஹமீத் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பகுதி இடம் பெற்றுள்ள விவரம் : புத்தகம் : அமல்களின் சிறப்புகள் முதலாம் பாகம் தலைப்பு : திக்ரின் சிறப்புகள் தொடர்ச்சி… குறுந்தலைப்பு : திக்ரைப் பற்றி ஹதீஃத்கள் தமிழாக்கமும் வெளியிட்டோரும், பேகம்பூர் மெஹ்மான்கானா ட்ரஸ்ட், திண்டுக்கல் பதிப்பு : மூல நூலாசிரியர் முன்னுரையிலி ருந்து, 12 ­வ்வால் பிறை ஹிஜ்ரி 1357ல் எழுதப்பட்ட முடிவுரை முடிய எங்குமே குறிப்பிடப்படவில்லை. திக்ரின் சிறப்புகள் தொடர்ச்சி… பக்கம் 380ல் […]

காரணம் நீங்கினால் சட்டம் நீங்கிவிடுமா? S. முஹம்மது சலீம், ஈரோடு கடந்த ஜுன் மாத (2018) அந்நஜாத் இதழில் “கண்ணால் காண்பது பொய் கணக்கீட்டில் அறிவதே மெய்” என்ற தலைப்பில் கட்டுரை ஒன்று வெளியாகியிருந்தது. பிறையை கண்ணால் பார்க்க வேண்டும் என்ற கட்டளையானது ஒருகாரணத்தோடு சொல்லப்பட்டதாகும். எப்போது சமுதாயத்திற்கு வானியல் தொடர்பான அறிவு விசாலமாகி விட்டதோ அப்போது காரணம் நீங்கி விடுகிறது. இதனால் பிறையை கண்ணால் மட்டும்தான் பாக்க வேண்டும் என்ற சட்டம் நீங்கி விட்டது என்ற […]

“லிபாசுத் தக்வா” (இறையச்சம் எனும் ஆடை) N. அலி, கல்லிடைக்குறிச்சி ஜூலை மாத தொடர்ச்சி… சென்ற இதழில் லிபாசுத் தக்வாவின் சில விஷயங்களைப் பார்த்தோம். அதில் லிபாசுத் தக்வாவின் சிறப்புகளை எழுதவில்லை அது ஒரு குறையாக இருந்தது. ஏனெனில் அல்லாஹ் தக்வாவிற்கு ஆடையை உவமையாக கூறி இருக்கிறான். இதன்மூலம் நாம் பயன்படுத்தும் ஆடையையும், லிபாசுத் தக்வாவையும் ஒப்பிட்டு சிறப்புகளை அறிவது நமக்கு பயன்தரும். அந்த ஒப்பீட்டை கீழே தருகிறோம். 1. நாம் பயன்படுத்தும் ஆடை நம் மானத்தையும், […]

ஆகஸ்ட் 2018 துல்கஃதா – துல்ஹஜ்-1439 எய்ம்ஸ் மருத்துவமனை Vs. பசுமைச் சாலை எய்ம்ஸ் மருத்துவமனை நிறுவ இருப்பதாக மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. இம்மருத்துவமனையின் பணி மக்களுக்கு சேவை என்பதை மக்கள் உணர்ந்தவுடன் மக்கள் அதீதமாய் அதனை எதிர்பார்க்கின்றனர். இம்மருத்துவமனை மதுரையில் அமைய இருப்பதாக அறிவிக்கப்பட்டதும், இத்திட்டம் தமது மாவட்டங்களில் அமைக் கப்படவில்லையே என்று ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள விவரமறிந்தவர்கள் தமது ஏக்கத்தைத் வெளியிட்டனர். பெரும்பான்மையினர் இதனை ஆதரித்து வருகின்றனர். இது மக்களுக்கான திட்டம் என்று […]