2022 நவம்பர்

புகை பிடிப்பதை இஸ்லாம் தடை செய்கிறதா? ஜி. ஜலாலுதீன் புகை பிடிப்பதை இஸ்லாம் தடை செய்கிறதா? புகை பிடிப்பது வெறுப்பிற்கு உரியது என்று ஒப்புக்கொண்டாலும், அதை இஸ்லாம் தடை செய்யவில்லை என்று முஸ்லிம்கள் பலர் கருதுகின்றனர். ஆனால், எல்லா வற்றுக்கும் இறைவனாகிய அல்லாஹ், மனிதனுக்கு அளித்த இறுதி வழிகாட்டுதலாகிய குர்ஆன் கூறும் கட்டளைகளின் அடிப்படையில் பார்க்கும்போது புகை பிடிப்பது ஹராம் (தடை செய்யப்பட்டது) என்று இஸ்லாம் கட்டளையிடுவது தெளிவாக விளங்கும். புகையிலை எனும் விஷம் : புகையிலையில் […]

சோதனைகளின்போது பொறுமை கொள்ள வேண்டும் அபூ அஸீம்,  இலங்கை ஃபிர்அவ்னின் மனைவி ஆஸியா பின்த் முஸாஹிம்(ரழி) அவர்களுடைய இரண்டு கைகளையும், கால்களையும் கயிற்றால் இறுகக் கட்டி அவனின் முன்னிலையிலேயே முளைகளில் பிணைக்கப்பட்டு வெயிலில் கிடத்தப்பட்டுக் கொடுமையான வேதனைக்கு உள்ளாக்கப்படுபவராக இருந்தார். அப்போதும் அவர் “பொறுமையாகவே’ இருந்தார். இவ்வாறாகக் கொடுமைப்படுத்தப்பட்ட நிலையிலேயே அவனது கண் முன்னாலேயே அவருடைய உயிர் கைப்பற்றப்பட்டு அவர் மரணத்தைத் தழுவினார். (ஸல் மான் ஃபார்ஸி(ரழி), இப்னு ஜரீர் தபரீ(ரஹ்), தஃப்ஸீர் இப்னு கஸீர், பாகம் […]

இறுதி இறைத்தூதர்(ஸல்) அவர்களின் அரஃபா தினம் வெள்ளிக்கிழமையே! எம்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை துல்கஃதா மாதத்தில் ஐந்து நாட்கள் எஞ்சியிருந்தபோது மக்காவை நோக்கிப் புறப்பட்டார்கள் : ஆயிஷா(ரழி) அறிவித்தார்: நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் துல்கஃதா மாதத்தில் ஐந்து நாட்கள் எஞ்சியிருந் தபோது (துல்கஃதா பிறை 25ல்) புறப்பட்டோம். அப்போது நாங்கள் ஹஜ்ஜை மட்டுமே நிறைவேற்ற எண்ணியிருந்தோம். மக்காவை நாங்கள் நெருங்கியபோது இறைத் தூதர் (ஸல்) அவர்கள், குர்பானிப் பிராணியைத் தம்முடன் கொண்டு வராதவர்கள் கஃபாவை வலம் வந்து ஸஃபா, […]

எது பெண்ணுரிமை? ப.அ. இம்தியாஸ் அஹ்மத் ஆணுக்குப் பெண் எந்த விதத்திலும் சளைத்தவள் இல்லை! ஆணும் பெண்ணும் சமம்! என்று கோ­ங்களை எழுப்பும் இந்த நூற்றாண்டில் பெண்ணுரிமை என்னவென்றால்:      ஆண் உடம்பை மறைக்கும் ஆடை அணிவதும், பெண்; தன் உடம்பை எள்ளளவு; மறைக்காத உடையை!! மிகச் சிறியதாக அணிவதும்!      அழகிப் போட்டி என்னும் பெயரில் பெண்களை, அரை நிர்வாணம் ஆக்கி, அவளை ஒரு கவர்ச்சிப் பொருளாக்கி தம் காமப் பசியை, கலையயன்ற போர்வையில் பெண்களை […]

திருக்குர்ஆனை விளங்கி படிக்க வேண்டாமா? ஷாஹுல் ஹமீது நபி(ஸல்) அவர்கள் இறுதி (ஹஜ்) யாத்திரையின் போது பேசிய குத்பா உரையின் முக்கிய குறிப்பு : நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்: “நான் இரண்டு விஷயங்களை விட்டுச் செல்கிறேன்; அதை என் உம்மத்தாகிய நீங்கள் பற்றிப் பிடித்துக் கொண்டீர்களேயானால் நீங்கள் எப்போதும் வழிதவறி செல்லமாட்டீர்கள்; அது குர்ஆன் மற்றும் என் சுன்னத் தான வழிமுறைகள்’. அல்முஅத்தா, பாகம் 46, எண்3. இந்த ஹதீதில் நபி(ஸல்) அவர்கள் முதலில் திருக்குர்ஆனை கெட்டியாகப் பிடித்துக் […]

நபிவழி நடந்தால் நரகமில்லை! அஹமது இப்ராஹிம் எழுதப் படிக்கத் தெரியாத உம்மி சமுதாயம் என்பது உலக மாந்தரை நேர்வழிக்கு இட்டுச் சென்ற சத்திய ஸஹாபாக்களேயாவர். அவன்தான், எழுத்தறிவில்லாத மக்களிடம் அவனுடைய வசனங்களை ஓதிக் காட்டி, அவர்களைப் பரிசுத்தமாக்கி, அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்பிக்கும்படியான தூதரை அவர்களிலிருந்தே அனுப்பி வைத்தான். அவர்களோ, அதற்கு முன்னர் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருந்தனர்.  (அல்குர்ஆன் : 62:2) தற்போதைய முஸ்லிம்கள் முகல்லிதுகள் எனப்படும் (ஆலிம்களையும், மூதாதையர்களையும் கண்மூடிப் பின்பற்றும்) அப்பாவிகளாவர். என்னதான் அப்பாவிகள் […]

நாளை உச்சியில் கணக்கிடும் ஹிஜிரி கமிட்டி காலண்டர்! S.H. அப்துர் ரஹ்மான் அன்புள்ள சகோதர சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) கி.பி. 1998ல் நாகர்கோவில் நாஸர் அவர்களால் அனுப்பப்பட்ட அறிவியல் அறிஞர் அலி மணிக்பான் அவர்களின் தொடர் முயற்சியால் அந்நஜாத்தில் ஹிஜிரி கமிட்டி காலண்டர் அறிமுகப்படுத்தியதில் இருந்து ஜமாத்தில் முஸ்லிமீனை சேர்ந்த நாம் அனைவரும் 20 வருடங்களுக்கு மேலாக ஹிஜிரி கமீட்டியின் காலண்டரை பின்பற்றி வருகின்றோம். அதன்படிஇஸ்லாமிய மாதங்களை கடைப்பிடித்து நோன்புகளும் வைத்து வருகின்றோம். அது தொடர்பான கமீட்டி […]

ஜும்ஆ குத்பா! K.M.H. அபூ அப்தில்லாஹ் மறு பதிப்பு : முஸ்லிம்கள் வாரத்தின் ஒரு நாள் ஒன்று கூடி மார்க்க உபதேசம் (குத்பா) பெறும் நாளாக வெள்ளிக்கிழமையை அல்லாஹ் அளித்து அருள்புரிந்திருக்கிறான். இதேபோல் வாரத்தில் ஒருநாள் ஒன்று கூடும் நாளாக யூதர்களுக்கு சனிக்கிழமையையும், கிறிஸ்தவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமையை யும் அல்லாஹ் அளித்திருந்தான். யூதர்களும், கிறிஸ்தவர்களும் எப்படி அந்த நாட்களை அல்லாஹ்வின் கட்டளைப்படி செலவிடாமல், தங்களின் மனோ இச்சைப்படி ஆக்கிக் கொண்டார்களோ அதேபோல் முஸ்லிம்களும் வெள்ளிக்கிழமை ஜும் ஆவை-ஜும்ஆ குத்பாவை அல்லாஹ்வின் […]

மனம் திறந்த மடல்! S.M. அமீர், நிந்தாவூர், இலங்கை ஹிஜ்ரிக் கமிட்டியில் உள்ளவர்களில் தெளிவான நாவன்மை, பதட்டம் இல்லாத நிதானம், தூரநோக்குச் சிந்தனை, தெளிவான பேச்சு, பொலிவான முகம், புரிய வைக்கும் திறமை என மிகவும் சிறந்த ஒருவராக இதுவரை சகோதரர் “அஹ்மது ஸாஹிபை’ நான் கருதினேன். மார்க்கத்திற்காக, அல்லாஹ்விற்காக உண்மையான நேசம் கொண்டேன், கொண்டிருந்தேன், கொண்டிருக்கிறேன். ஆனாலும் சமீபத்திய அவரது அலட்சியம் நிறைந்த குரல் பதிவை நான் கேட்டு அதிர்ந்து போனேன் உண்மையில் இந்த பிறை விவகாரம் […]

ஒற்றுமையின் பலமும்! வேற்றுமையின் பலவீனமும்!! அகில இந்திய அளவில் இயங்கிவரும் அனைத்து இந்துத்வா அமைப்புகளும் நாக்பூர் RSS தலைமைக்கு கட்டுப்பட்டவைகளே! அதன் காரணமாக அந்த அமைப்புகளுக்குள் எவ்வித பதவிச் சண்டைகளின்றி போட்டி பொறாமையின்றி ஒரே தலைமைக்குக் கட்டுப்பட்டு ஒற்றுமையாக இந்தியாவை வலுவான நிலையில் ஆளுகின்றனர். ஆனால் இஸ்லாமிய பெயர் தாங்கிய அமைப்புக்களோ ஒரே தலைமையின்றி தங்களுக்குள் நாயும், பூனையும் போன்று அடித்துக் கொண்டு கடித்துக் குதறும் வேற்றுமை தன்மையுடையவர்களாக இருக்கின்றனர். பிறகெப்படி அல்லாஹ்வின் உதவி நமக்கு வரும்? […]

இணைய வழி இல்லம் நுழையும் குழப்பவாதிகள்  அபூ ஹனிபா, புளியங்குடி யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தினர் 1000 பேரில் 1000 பேர் நரகவாதியா? சமூக வளைதளங்களில் ஃபஸாது : கடந்த சில ஆண்டுகளாக யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தார்கள் பற்றி பலரும் பலவிதமான கருத்துக்களை விளக்கம் என்ற பெயரில் சமூக வலைதளங்களில் வீடியோவாக பதிவிட்டு வருகிறார்கள். தனது முடிவை நோக்கி உலகம் பயணித்துக் கொண்டிருப்பதையும், அதன் நெருக்கத்தில் நாம் இப்போது இருப்பதையும் நம்மில் பெரும்பாலானோர் அறிந்தவையே. அதன் ஓர் அடையாளமாக […]

விமர்சனம்! விளக்கம்!! எம். சையத் முபாரக் விமர்சனம் : அன்புள்ள அந்நஜாத் ஆசிரியர் அவர்களுக்கு முஹம்மது இக்பாலின் அஸ்ஸலாமு அலைக்கும். இம்மாத (செப்டம்பர்) அந்நஜாத் இதழ் கண்டேன். அதில் தலையங்கம் “வழிகேடாய் மாறும் இயக்கங்களும், போலி சமுதாயத் தலைவர்களும்” என்ற தலைப்பில் எழுதப்பட்டிருந்தது. “திருவை நியூஸ்’ என்ற பெயரில் ஒரு இதழில் எழுதப்பட்டிருந்த செய்தியை வெளியிட்டிருந்தீர்கள். அந்த கட்டுரை உண்மையிலேயே இன்றைய இயக்கங்களின் அதன் தலைவர்களாய் இருப்பவர்களின் நிலையை படம் பிடித்துக் காட்டியிருந்தது. மகிழ்ச்சி! ஆனால் அக்கட்டுரையின் சில […]

NOVEMBER NAJATH 2022