தலையங்கம் : பாலியல் குற்றம் குறைய என்ன செய்யவேண்டும்? “உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் சாந்தியும் சமாதானம் உண்டாகட்டும்” “படைத்தவன் உங்களுக்கு அருள் புரியட்டும்” அந்த ஒரே இறைவன் பெயரால்…. இன்றைக்கு நாட்டில் சமூக ஒழுங்கு சீர் குலைந்துள்ளது என்ற கசப்பான உண்மையை நாம் ஏற்றுக் கொண்டாக வேண்டும். சமூக ஒழுங்கு சீர்குலைந்ததன் காரணமாக நாட்டில் சட்டம் ஒழுங்கும் சீர்குலைந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக நாட்டில் கொலைச் சம்பவங்கள் மிகவும் அதிகரித்துக் காணப்படுகின்றன. இந்தக் […]
பின்பற்றக்கூடாத இமாமும் இருக்கிறார்களா? மறு பதிப்பு : – அபூ அப்தில்லாஹ் ஜூன் மாத தொடர்ச்சி….. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரழி) அவர்கள் ஒரு பள்ளியில் பாங்கின்போது தற்போது சில பள்ளிகளில் நடைபெறுவது போல் பித்அத்தாக சில வாசகங்களை இணைத்துச் சொன்னதைக் கேட்டதால் அந்தப் பள்ளியில் தொழாமல் சென்றதாக தப்லீக் தஃலீம் தொகுப்பில் ஒரு கதை காணப்படுகிறது. இதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. ஆனால் அப்துல்லாஹ் இப்னு உமர்(ரழி) அவர்கள் ஹஜ்ஜாஜ் இப்னு யூசுப் போன்ற கொடிய அக்கிரமம், […]
இறை அத்தாட்சி சூனியத்தை வென்றது மறு பதிப்பு : முஹிப்புல் இஸ்லாம் சிந்திக்கத் தூண்டுவதே இறை அத்தாட்சி? இறைநெறிநூல் காட்டும் அற்புதங்கள் தான் இறை அத்தாட்சிகளாகும்! இறை அத்தாட்சி எதுவாக இருந்தாலும் மனிதர்களைச் சிந்திக்க தூண்டி படிப்பினை பெற வைக்கும் அவ்வித அத்தாட்சிகள் ஒருக்காலும் மூட நம்பிக்கைகளுக்கு வித்திடாது. மாறாக, மூட நம்பிக்கைகளையும், அவைகளின் அடியயாட்டி உருவாகும் மூட சடங்கு சம்பிரதாயங் களையும் கூண்டோடு ஒழிக்கும். இறை அத்தாட்சிகளுக்குத் தெள்ளத் தெளிவான எடுத்துக்காட்டுகளாய் நபிமார்கள் வழியாக இறைவன் […]
வருடாந்தர அனர்த்தங்களினால் படிப்பினை பெறுவதில்லையா? அபூ இஸ்ஸத், இலங்கை ஜூன் 2026 தொடர்ச்சி… அதீத செல்வச் செழிப்பின் செருக்கினாலும், மிதமிஞ்சிய, பெருமையும், அகம்பாவமும், ஆணவமும், அகந்தையும் கொண்டு மண்ணில் பவனி வரும்போது மூஸா(அலை) அவர் களும், அவர்களின் சமூகத்தைச் சேர்ந்த இஸ்ரவேலர்களும் காரூனை அழைத்து “உம்மை இவ்வாறு செய்யத் தூண்டியது எது? உனக்கு அல்லாஹ் கொடுத்துள்ளவற்றில் மறுமை இல்லத்தைத் தேடிக்கொள். இவ்வுலகில் உனக்குள்ள பங்கையும் நீ மறந்து விடாதே. உனக்கு அல்லாஹ் நன்மை செய்ததைப் போன்று நீயும் […]
குர்ஆனும் குவாஸர் நட்சத்திரமும்! – எஸ். ஹலரத் அலி அறிவியலின் வளர்ச்சி மனிதனின் பார்வையை பிரபஞ்சத்தின் ஆழத்திற்கு கொண்டு சென்றுள்ளது. நவீன வானியல் ஆய்வுகளில் விண்வெளியில் மிகவும் பிரகாசமான மற்றும் மர்மமான பொருட்களில் ஒன்றாக ”குவாஸர்கள் கருதப்படுகின்றன. இந்த நவீன கண்டுபிடிப்புகளுக்கும், 1400 ஆண்டுகளுக்கு முன்பு அருளப்பட்ட திருக்குர் ஆனின் சில வசனங்களுக்கும் இடையே உள்ள வியக்கத்தக்க ஒற்றுமைகள் குறித்து பல ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். “குவாஸர்கள் என்றால் என்ன? குவார் என்பது “குவாசி–ஸ்டெல்லர் என்பதன் சுருக்கம். இவை […]
இஸ்லாத்தின் பார்வையில் மத நல்லிணக்கம்! – எஸ். ஹலரத் அலி 1. மதநல்லிணக்கம் என்றால் என்ன? இஸ்லாமிய வரையறை! நல்லிணக்கம் = எல்லா மதமும் ஒன்று. நல்லிணக்கம் = எல்லா மனிதனும் கண்ணியமானவன். இஸ்லாம் சொல்லும் நல்லிணக்கம்…. “தஆயுஷ் சில்மி” – சமாதான சகவாழ்வு! கொள்கையில் சமரசம் இல்லை. மனிதனாக வாழ்வதில் சகோதரத்துவம். குர்ஆன் 49:13 “மனிதர்களே! உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்து படைத்தோம். நீங்கள் ஒரு வரையயாருவர் அறிந்துகொள்ள உங்களை கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கி […]
ஆழ்ந்த அறிவில்லையேல் கண்ணும் சில வேளை பொய் சொல்லும்… எஸ்.எம்.அமீர், இலங்கை ஜூன் 2026 தொடர்ச்சி… கலீஃபா உமர்(ரழி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் “பஸரா‘வின் ஆளுநராக முஃகீரா பின் ஷிஅபா(ரழி) அவர்கள் பதவி வகித்தார்கள். அப்போது; அவர்களின் தாய் வழிச் சகோதரர் களான, அபூபக்ரா(ரழி), சப்ல்பின் மஅபத்(ரழி), நாஃபிஉ பின் ஹாரிஸ்(ரழி) ஆகியோர், அன்னாரின் மீது விபச்சாரக் குற்றச்சாட்டு சுமத்தினார்கள். உடனே “முகீராபின் ஷிஅபா (ரழி) அவர்களைப் பதவி நீக்கம் செய்துவிட்டு, அபூ மூஸா அல் அஷ்அரீ(ரழி) […]
திரைப்படமும் இஸ்லாமும் குர்ஆன், ஹதீத் பார்வையில்… எஸ். ஹலரத் அலி முன்னுரை : 1. ஊடகம் ஒரு கத்தி போன்றது…. கத்தி காய்கறி நறுக்கவும் பயன்படும், கொலை செய்யவும் பயன்படும். கத்தி ஹராம் இல்லை. பயன்பாடுதான் ஹலால்–ஹராமை தீர்மானிக்கும். சினிமாவும் அப்படித்தான். குர்ஆன் சினிமாவை நேரடியாக பேசவில்லை. ஏனெனில் நபி(ஸல்) காலத்தில் சினிமா இல்லை. ஆனால் சித்திரம், கதை, பொழுது போக்கு, பெண், ஆண் கலப்பு, இசை பொய் இவை பற்றி குர்ஆன்–ஹதீத் தெளிவான கொள்கைகளை வைத்துள்ளது. […]
இறைவன் ஒருவனே என்பது குறித்து இறைநூல்கள் கூறுவது என்ன? S.H. அப்துர் ரஹ்மான் “உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் சாந்தியும் சமாதானம் உண்டாகட்டும்” “படைத்தவன் உங்களுக்கு அருள் புரியட்டும்” அந்த ஒரே இறைவன் பெயரால்…. இறைவன் ஒருவனே! அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை என்பது இறைநூலின் முக்கியமானக் கருத்தாகும். இதைப் பற்றி கூறும் சில முக்கிய வசனங்கள். 1. இறைநூல் வசனம் (112:1-4) கூறுவீராக: அவன் அந்த இறைவன் ஒருவனே. அந்த இறைவன் (எவரிடமும் […]
மோஸஸ் எனும் மூஸா (அலை) வரலாறு… S.H. அப்துர் ரஹ்மான் மே மாத தொடர்ச்சி…… “உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் சாந்தியும் சமாதானம் உண்டாகட்டும்” “படைத்தவன் உங்களுக்கு அருள்புரியட்டும்” அந்த (ஒரே) இறைவன் பெயரால்…. இறை நூலில் அதிகமாக குறிப்பிடப்பட்ட இறைத்தூதர்களில் ஒருவர்தான் மோசஸ் என்னும் மூஸா(அவரை இறைவன் பொருந்தி கொள்வானாக) அவர்களின் வாழ்க்கை சம்பவங்கள் இறைநூலில் பல இடங்களில் விரிவாக வருகிறது. (மக்களை நரக) நெருப்பிற்கு அழைத்துச் செல்லும் தலைவர்களாகவே நாம் அவர்களை ஆக்கியிருந்தோம். […]
தலையங்கம் : தேர்தல் முடிவுகளும்…கூட்டணி அரசின் சவால்களும்…. “உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் சாந்தியும் சமாதானம் உண்டாகட்டும்” “படைத்தவன் உங்களுக்கு அருள் புரியட்டும்” அந்த ஒரே இறைவன் பெயரால்…. சமீபத்தில் (மே மாதம் 2026ல்) நடந்த ஐந்து மாநில தேர்தல் முடிவுகளில் மிகப் பெரிய திருப்பமாக பார்க்கப்படுவது தமிழக தேர்தல் முடிவுகள். கருத்து கணிப்புகள் அனைத்தும் தி.மு.க.வே அதிக பெரும்பான்மைப் பெற்று ஆட்சி அமைக்கும் என்பதாகவே இருந்தது. ஆனால் முற்றிலும் மாறிவிட்டது. (இனி கருத்துக் கணிப்புகளை […]
பின்பற்றக்கூடாத இமாமும் இருக்கிறார்களா? – அபூ அப்தில்லாஹ் மறு பதிப்பு : இந்திய திருநாட்டில் முஸ்லிம்கள் பரவலாக வாழ்ந்து வருகிறார்கள். பெரும்பாலும் முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் தங்களுக்கென்று பள்ளிவாசல்களைக் கட்டிக் கொண்டு ஒரு சிலராவது ஐங்கால தொழுகைகளைத் தொழுது வருகிறார்கள். அப்பள்ளிகளில் தொழ வைப்பதற்காக இமாம்கள் அமர்த்தப்பட்டு தொழ வைக்கிறார்கள். அப்படிப்பட்ட இமாம்களில் பெரும்பாலோர் தர்ஹா சடங்கு சம்பிரதாயங்களையும், கத்தம், ஃபாத்திஹா, மவ்லூது போன்ற அனாச்சார சடங்குகளையும் முன் நின்று செய்யக்கூடியவர்களாக இருக்கிறார்கள். அவுலியாக்களின் பெயர்களால் கட்டப்பட்டுள்ள […]
வருடாந்தர அனர்த்தங்களினால் படிப்பினை பெறுவதில்லையா? அபூ இஸ்ஸத், இலங்கை மே 2026 தொடர்ச்சி… நிச்சயமாக நாம் தோட்டத்தையுடைய வர்களைச் சோதித்தது போலவே, நாம் அவர்களைச் சோதித்தோம். அ(த் தோட்டத்திற்கு டைய)வர்கள் அதிலுள்ள கனிகளை அதி காலையில் சென்று பறித்து விடுவோமென்று சத்தியம் செய்தார்கள். “அல்லாஹ் நாடினால்” என்று அவர்கள் கூறவில்லை. எனவே அவர்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது உம்முடைய இறைவனிடமிருந்து சுற்றக்கூடிய (நெருப்பின் ஆபத்)து சுற்றி(த் தோட்டத்தை) அழித்து விட்டது (நெருப்புக் கரித்து விட்டபடியால் அத்தோட்டம்) காலையில் கறுத்த […]
முஸ்லிம்களாக மரணமடைய செய் அல்லாஹ்! எஸ். அப்துல் நாஸர் மறு பதிப்பு : அல்லாஹ்வின் ஏவல், விலக்குகள் வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் பின்பற்ற வேண்டும் என்று முதலில் எனக்கும் பின்பு உங்களுக்கும் உபதேசம் செய்கிறேன். முஸ்லிம்களாகவே மரணமடைய நம்முடைய முயற்சி இருக்கிறது. அல்லாஹ் முஸ்லிம் களாகவே நம்மை மரணம் அடையச் செய்வானாக. ஒவ்வொரு நாட்களும், ஒவ்வொரு மணித்துளிகளும் செல்லச் செல்ல காலங்களும் நாட்களும் மட்டுமல்ல நம்முடைய ஆயுள் நாட்களும் எண்ணப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. நாட்கள் தான் எத்தனை […]
உபதேசம் பலனளிக்குமா? அய்யம்பேட்டை A. நஜ்முதீன் “நபியே! இவற்றைக் (இறைநூலைக்) கொண்டு உபதேசம் செய்வீராக. நிச்சயமாக நீர் உபதேசம் செய்பவர்தாம்”. (88:21) பொதுவாக உபதேசம் தான் மனித சமூகத்தை சீர் செய்கிறது. மற்றும் உபதேசத்தை கவனமுடன் கவனிக்கும்போது மனித மனம் தவறிலிருந்து திருந்துகிறது. மேலும் மனித மனம் பக்குவப்படுகிறது. எனவேதான் இறைவன் இறைத்தூதர்கள் அனைவரையும் “உபதேசம்‘ செய்யுங்கள் என அறிவுறித்துள்ளான். இது ஆதம்(அலை) அவர்கள் முதல் இறுதி தூதராக வந்த நபி(ஸல்) அவர்கள் வரை அனைவருக்கும் அவரவர்களுக்கு […]
பிள்ளைகளின் வெற்றியில் பெற்றோர் பங்கு…! M. சையத் முபாரக், நாகை நமது வெற்றியின் இலக்கு என்பது சொர்க் கம்தான். அதற்கான வழியைக் காட்டும் நண்பர்கள் ஓரிருவர் மட்டுமே இருப்பர். பெரும்பாலான நண்பர்கள் ஆடம்பரத்திற்கும், வீணானச் செயலுக்கும்தான் வழிகாட்டுவர். பெண் தோழிகளை எடுத்துக்கொண்டால் புடவைகளைப் பற்றி, நகைகளைப் பற்றி, மெகா சீரியலில் அவள் இப்படி இருக்கிறாள், இவள் இப்படி இருக்கிறாள் என்பது பற்றி; மற்றவர்களை புறம், அவதூறு சொல்வது பற்றி இப்படி பலவற்றை பேசி, தீய குணங்களை நம்மிடம் […]
கலிஃபா உமர்(ரழி) செய்தது மக்களாட்சியா? இறையாட்சியா? S.H. அப்துர் ரஹ்மான் “உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் சாந்தியும் சமாதானம் உண்டாகட்டும்” “படைத்தவன் உங்களுக்கு அருள் புரியட்டும்” அந்த ஒரே இறைவன் பெயரால்…. உமர்(ரழி) அவர்கள் உலக வரலாற்றில் மிகச் சிறந்த கலீபாக்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். அவர்களின் ஆட்சியின் முக்கிய சிறப்புகள் பின்வருமாறு: நீதியான ஆட்சி : உமர்(ரழி) அவர்கள் மிக வும் நீதியுடன் ஆட்சி செய்தார். ஏழை, பணக்காரர், முஸ்லிம், முஸ்லிம் அல்லாத வர் என்ற […]
பிரபஞ்ச இயக்கவியலும்! வாழ்வியலின் புதிய செயல் இலக்கணமும்!! S.M. அப்துல் ஹமீது 1. இறைவனின் நற்செய்தியும் விவசாயத் தொடர்புடை சொல்லாடலும்: “உர்ஹூனில் கதீம்” (காய்ந்த பேரீத்தம் மட்டையின் வளைந்த பாலை, காம்பு) என்பது அரேபியர்களின் விவசாயப் பழக்க வழக்கங்களில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு அற்புதமான சொல். இதன் வழியாக, ஏக இறைவனான அல்லாஹ் உலக மக்கள் அனைவருக்கும் காலத்தின் கணக்கீட்டைப் பற்றிய ஒரு மாபெரும் நற்செய்தியை வழங்குகிறான். 2. சந்திரனின் துவக்கமும் ஹிலால் முதல் பிறையின் தோற்றமும் […]
ஒளி என்னும் ஒருமைக்கும் இருள்கள் என்னும் பன்மைக்கும் பின்னால் உள்ள அறிவியல் மற்றும் ஆன்மீக உண்மைகள்! எஸ். ஹலரத் அலி திருக்குர்ஆனில் ஒளி என்பது “நூர்‘ (ஒருமை) என்றும், இருள்கள் என்பது “ளுலுமாத்‘ (பன்மை) என்றும் கையாளப்பட்டுள்ளது. இது ஏதோ தற்சயலான சொல் பயன்பாடு அல்ல; மாறாக இதற்குப் பின்னால் பிரபஞ்சத்தின் ஆழமான அறிவியல் உண்மைகளும், உன்னதமான ஆன்மீகத் தத்துவங்களும் ஒளிந்துள்ளன. நவீன அறிவியலின்அடிப்படையில இதைப் பார்க்கும்போது சில சுவாரசியமான உண்மைகள் புலப்படுகின்றன. அறிவியல் ரீதியாக ஒளி […]
அறிந்து கொள்வோம்! ரஹிமுத்தீன், குண்டூர் 1. அல்குர்ஆனில் கூறப்பட்டுள்ள உலகை ஆண்ட நல்ல மன்னர்கள் யார்? 1. ஸுலைமான்(அலை) 2:102, 2. துல்கர்னைன். 18:83 2. அல்குர்ஆனில் கூறப்பட்டுள்ள இரண்டு கெட்ட மன்னர்கள் யார்? யார்? 1. ஃபிர்அவ்ன். 7:103, 2. நம்ரூத் 3. நபி(ஸல்) அவர்கள் காலத்தின் ரோமாபுரிச் அரசனின் பெயர் என்ன? யஹர்குலிஸ். புகாரி 7 4. இறைச்செய்தி எவ்வாறு வருகிறது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்? மணிஓசைப்போன்று. புகாரி: 2 […]