மும்பை படு பயங்கரத்தின் சூத்திரதாரி யார்?

in 2009 ஜனவரி

மும்பை படு பயங்கரத்தின் சூத்திரதாரி யார்? அபூ அப்தில்லாஹ்

2008.11.26 புதன்கிழமை இரவு சுமார் 8 மணி அளவில் உலக நாடுகளிடையே நம் தாய் நாட்டிற்குப் பெரும் தலைகுனிவும் அவமானமும் ஏற்பட்டுவிட்டது. ஆம்! கடற்படை, கரையோர காவல்படை, ஆகாயப்படை, தரைப்படை, புலனாய்வுப்படை, காவல்படை என அனைத்துப் படைகளின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு, கேவலம் ஒரு பத்தே பத்து தீவிரவாதிகள் வெடிகுண்டுகள், AK47 துப்பாக்கிகள், இன்னும் பயங்கர ஆயுதங்களுடன் குஜராத் வழியாக மும்பை நகருக்குள் நுழைந்து 11 இடங்களில் மூன்று நாட்களாக கண்ணில் விரல்விட்டு ஆட்டிப்படைத்தார்கள். 200க்கும் அதிகமானோரை சுட்டுத் தள்ளினார்கள். ATS தலைவர் ஹேமத் கர்கரே முதல் மூன்று முக்கிய அதிகாரிகளை (மாலகான் குண்டு வெடிப்புகளில் சம்பத் தப்பட்ட R.S.S. பா.ஜ.க. முக்கியப் புள்ளிகளை அடையாளம் காட்டியவர்கள்)சுட்டுத் தள்ளினார்கள்; 400க்கும் அதிகமானவர்களை காயப்படுத்தினார்கள் என்றால் அது உலக நாடுகளுக்கிடையே இந்தியாவுக்குப் பெருத்த தலைகுனிவு தானே?

அதாவது பத்தே பத்து தீவிரவாதிகள் இந்தியாவின் அனைத்துப் படை வீரர்களையும் 3 நாட்கள் ஆட்டிப்படைத்தார்கள்; திணறடித்தார்கள் என்றால் அது இந்தியாவுக்குப் பெருத்த தலைகுனி இல்லையா?

அப்படியானால் பல்லாயிரம் கோடி ரூபாய்களை சம்பளகமாகக் கொடுத்து இப்படைகளை இந்தியாவின் பாதுகாப்பிற்காக வைத்திருப்பது வீண்தானே? அந்த பல்லாயிரம் கோடி ரூபாய்களும் விழலுக்கு இறைத்த நீர்தானே?

ஒன்று நமது பாதுகாப்புப் படைகள் அனைத்தும் கையாலாகாதவர்கள் என்று நாம் ஒப்புக் கொள்ள வேண்டும். அல்லது அவர்களில் முக்கியமான சிலரின் ஒத்துழைப்போடுதான் இந்தப் படு பயங்கரவாதச் செயல் நடைபெற்றிருக்க வேண்டும் என ஒப்புக் கொள்ளவேண்டும். இல்லை என்றால் வெறும் பத்தே பத்து தீவிரவாதிகள் பல நூறு தீவிரவாதிகள் இருந்தாலும் சாதிக்க முடியாத படுபயங்கர செயலைச் செய்திருக்க முடியுமா? மேலும் அந்த 10 தீவிரவாதிகளில் 9 பேரை நமது படைகள் கொன்றுதான் பிடித்திருக்கிறார்கள். உயிரோடு அவர்களைப் பிடித்து அத்தீவிரவாதிகள் பாகிஸ்தானிலிருந்து வந்த தீவிரவாதிகள்தான் என உரிய புள்ளி விபரங்களுடன் நிரூபித்து பாகிஸ்தானின் முகத்தில் கரியைப் பூசும் ஆற்றல் நமது பாதுகாப்புப் படைகளுக்கு இல்லையா? எவ்வித உள்ளநோக்கமும் இல்லாமல், எப்படிப்பட்ட சக்திகளுக்கும் அஞ்சாமல், ஓட்டு வங்கியைப் பிரதான குறிக்கோளாகக் கொள்ளாமல், நடுவண் அரசு திறமை மிக்க புலன் ஆய்வாளர்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்து, யாருடைய குறுக்கீடும் இல்லாத நிலையில், நடுநிலையோடு புலன் விசாரணை நடத்தினால், இப்படு பயங்கரவாத செயல்களை பின்னால் இருந்து முடுக்கிவிட்ட சூத்திரதாரிகள் யார் என்பதை வெளிக் கொணர முடியும்.

தாக்குதல் ஆரம்பித்தவுடன் டெக்கான் முஜாஹிதீன் என இல்லாத ஒரு அமைப்பைச் செய்தி ஊடகங்கள் பரப்ப யார் காரணம்? பின்னர் பல்டி அடித்து ‘லஷ்கரே தொய்பா’ என ஊடகங்கள் செய்தி பரப்பச் செய்தது யார்? அதிலும் பல்டி அடித்து தாவூத் இப்றாஹீம் என்றும் இறுதியில் பாகிஸ்தானின் சதி என்றும் மாற்றி மாற்றி செய்திகள் பரவ யார் காரணம்? முறைப்படி புலனாய்வு செய்து அறிவிப்பதாக இருந்தால் இந்தக குளறுபடிகள் ஏற்பட முடியுமா? முடியாதே.

மாலகான் குண்டு வெடிப்புகளின் முக்கிய குற்றவாளிகளை அம்பலப்படுத்தி R.S.S. பா.ஜ.க. இந்துத்துவா தீவிரவாதிகளின், பயங்கரவாதிகளின் முகத்திரையைக் கிழித்த ATS தலைவர் ஹேமந் கர்கரே. அவருக்கு உறுதுணையாக இருந்த விஜய் சலாஸ்கர், அசோக் காம்பு ஆகிய மூன்று முக்கிய தலைவர்களை சி.எஸ்டி. நிலையத்திலிருந்து அவசியமில்லாத நிலையில் காமா மருத்துவமனைக்கு போலீஸ் வேன் அல்லாத ஒரு குவாலிஸ் காரில் அனுப்பி வைத்த உயர் அதிகாரி, அல்லது அரசியல்வாதி யார்? அல்லது அவர்கள் மூவரையும் ஒரே வண்டியில் திடுதிப்பென்று அனுப்பி வைக்க வேண்டிய அத்தியாவசியம் என்ன நேர்ந்தது என்பதையாவது அறிவிப்பார்களா? அந்த மூன்று அதிகாரிகள் சென்ற காரை ஐந்து நிமிடத்தில் முந்திச் சென்று வழி மறித்த சிவப்பு நிற ஸ்கோடா காரை அனுப்பியது யார்? உடனே அதிலிருந்து இறங்கிய இருவர் மூன்று அதிகாரிகளையும் சுட்டுக் கொன்றிருக்கிறார்களே அந்த இருவர் யார்? அவர்களை பின்தொடர்ந்து  சென்று சுட்டுக் கொல்ல கட்டளையிட்டது யார்? இந்த முக்கியமான தகவலை ஒளிபரப்பிய சேனலை அடுத்தடுத்து ஒளிபரப்பவிடாமல் தடுத்த சக்தி எது? மற்ற சேனல்களோ நாளிதழ்களோ இந்த முக்கிய தடயமிக்க செய்தியை இடம்பெறச் செய்யாமல் தடுத்த சக்தி எது?

தாக்குதல் நடந்ததோ இல்லையோ அமெரிக்க வெளிவுறவுத் துறை அமைச்சர் இந்தியாவுக்கு பறந்து வந்த அவசியம் என்ன? அடுத்து இங்கிலாந்து பிரதமரும், மேலும் அமெரிக்க முக்கிய அதிகாரிகளும் அடுத்தடுத்து பறந்து வந்த நோக்கம் என்ன? அமெரிக்காவுக்கு இந்திய நலனில் அந்த அளவு அக்கறையா? ஏன்? முஸ்லிம் தீவிரவாதிகள் என தொலைக் காட்சிகளில் காட்டப்பட்டவர்களின் மணிக்கட்டில் காவி நிற R.S.S. வகையறாக்கள் கட்டியிருக்கும் காவிக் கயிறுகள் கட்டப்பட்டிருந்தனவே? உண்மையில் அவர்கள் யார்? சுட்டுக் கொல்லப்பட்ட ஒன்பது தீவிரவாதிகளின் முகங்கள் ஏன் சிதைக்கப்பட்டிருந்தன?

முஸ்லிம் தீவிரவாதிகளிடம் தாடியும், தலைப்பாகையும் காணப்படும். மும்பை தீவிரவாதிகள் முகத்தை மழுங்க சிரைத்தவர்களாக காணப்பட்டனரே? முஸ்லிம் தீவிரவாதிகள் மது அருந்த மாட்டார்கள். மும்பை தீவிரவாதிகள் பீர் அருந்துவதாகக் காட்டப்படுகிறதே?

முஸ்லிம் தீவிரவாதிகள் எந்தவித கோரிக்கையும் வைக்காமல், நிபந்தனை இடாமல் விருதாவாக இந்தத் தாக்குதலை நடத்தினார்களா?

மும்பை தாக்குதலைக் கொண்டு ஆதாயம் அடைகிறவர்கள் யார்? R.S.S. வகையறாக்களும், பா.ஜ.க.வும் என்பதை மறுக்க முடியுமா? தாக்குதலுக்கு முன்ர் ஊடகங்களில் மாலகான் வெடிகுண்டு சம்பவத்தில் R.S.S.பா.ஜ.க. வகையறாக்கள் தொடர்ந்து அடையாளம் காட்டப்பட்டு வந்தது அப்படியே இப்போது அமுக்கப்பட்டுவிட்டதே. மும்பை தாக்குதலின் மூலம் லாபம் அடைவது யார்? இப்படி அடுக்கடுக்கான கேள்விகள் சாந்தி, சமாதானத்தை விரும்பும் இந்து சகோதரர்களிடமும், இன்னும் பல நடுநிலையாளர்களிடம் எழுகின்றனவே! இவற்றிற்கு என்ன பதில்?

நடுநிலையாளரான அமரேஷ் மிஸ்ரா மும்பை தாக்குதலின் பின்னணியில் செயல்பட்டவர்கள் மொஸாதும், இந்துத்துவமுமே என்று கூறி அதற்கு ஏற்கத்தக்க பல ஆதாரங்களைத் தருகிறாரே! இவற்றிற்கு என்ன பதில்?

நடுநிலையாளரான அமரேஷ் மிஸ்ரா மும்பை தாக்குதலின் பின்னணிணில் செயல்பட்டவர்கள் மொஸாதும், இந்துத்துவமுமே என்று கூறி அதற்கு ஏற்கத்தக்க பல ஆதாரங்களைத் தருகிறாரே! மறுக்க முடியுமா?

சீனா கம்யூனிஸ்ட் மத்தியக் குழுவின் அதிகாரப்பூர்வ பத்திரிகை “பீப்பிள்ஸ் டெய்லி” மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் இந்துத்துவ தீவிரவாதத்தின் பங்கு இருக்கும் என செய்தி வெளியிட்டுள்ளதே? என்ன பதில்?

கூடுதல் பாதுகாப்புக் கொடுக்கப்பட வேண்டியவர்களின் பட்டியலில் உள்ள மோடி எவ்வித முன்னறிவிப்புமின்றி மும்பை வந்து பயங்கரவாதிகளுடன் சண்டை நடந்து கொண்டிருக்கும் நிலையில் எவ்வித அச்சமுமின்றி ஒபராய் ஹோட்டலுக்குள் சென்று பார்வையிட்டிருக்கிறார் என்றால் அதன் பொருள் என்ன? உண்மையிலேயே அத்தீவிரவாதிகள் முஸ்லிம்களாக இருந்தால் அந்தத் துணிச்சல் அவருக்கு ஏற்பட்டிருக்குமா? உண்மையில் அவர்கள் முஸ்லிம் தீவிரவாதிகளாக இருந்தால் மோடியை சுட்டுப் பொசுக்கி இருக்க மாட்டார்களா? ஆம்! அவர்கள் முஸ்லிம் வேடத்திலிருந்த ஹிந்துத்துவா தீவிரவாதிகளாக இருக்கப் போய்தான் மோடி எவ்வித பாதுகாப்பும் இன்றி, அச்சமுமின்றி சண்டை நடைபெறும் போது ஓபராய் ஓட்டலுக்குள் சென்றுள்ளார்.

அதேபோல் அவர்கள் முஸ்லிம் தீவிரவாதிகளாக இருந்தால், முஸ்லிம்கள் மீது சுமத்தப்பட்ட மாலகோன் முதல் பல குண்டு வெடிப்புகள் முஸ்லிம்களால் நிகழ்த்தப்பட்டதல்ல; இநத்துத்துவா தீவிரவாதிகளால் நடத்தப்பட்டவை. அவற்றிற்கு R.S.S. பா.ஜ.க. வகையறாக்களின் முக்கிய புள்ளிகளுக்கு சம்பந்தம் உண்டு. தொகாடியாவுக்கு சம்பந்தம் உண்டு என்றெல்லாம் அம்பலப் படுத்தி, முஸ்லிம்களைச் சுற்றி பின்னப்பட்டிருந்த சதி வலையை கிழித்தெறியும் தீவிர முயற்சியில் ஈடுபட்டிருந்த ATS தலைவர் ஹேமந் கர்கரேபையும் அவருக்கு உறுதுணையாக இருந்த இரண்டு மூத்த அதிகாரிகளையும் சுட்டுக் கொன்றிருக்க முடியுமா?

அதுவும் அத்வானி, பால்தாக்ரே போன்ற அதி முக்கிய இந்துத்துவாவினர் அவர்களை தேச துரோகிகள் என கடுமையாக விமர்சித்தும், கொலை மிரட்டல்கள் செய்தும், அச்சுறுத்தியும் கூட அவற்றை எல்லாம் பொருட்படுத்தாமல் நடுநிலையோடு உண்மையை – முஸ்லிம்களுக்கு பெரும்பாலான குண்டு வெடிப்புகளில் சம்பந்தமில்லை; இந்துத்துவா தீவிரவாதிகள்தான் அவற்றை நிகழ்த்திவிட்டு பழியை முஸ்லிம்கள் மீது சுமத்துகிறார்கள் என்ற உண்மையை வெளிக்கொண்டு வரும் கடும் முயற்சியில் ஈடுபட்டிருந்தவர்களை அவர்கள் முஸ்லிம் தீவிரவாதிகளாக இருந்தால் சுட்டுக் கொன்றிருக்க முடியுமா? ஒருபோதும் செய்திருக்கமாட்டார்கள்.

அவர்கள் இந்துத்துவா தீவிரவாதிகளாக இருந்தால் மட்டுமே திட்டமிட்டு சதி செய்து அம்மூவரையும் கொன்றிருக்க முடியும். அதனால் இந்துத்துவாவினருக்கு பெரும் பலன்கள் ஏற்பட்டுவிட்டன. மாலகோன் விவகாரத்தை மீண்டும் எந்த அதிகாரியும் துணிந்து தோண்டி எடுக்கப் போவதில்லை. உயிரை இழக்க வேண்டி வரும் என அஞ்சுவார்கள். ஆம்! தோண்டி எடுக்கப்பட்ட அனைத்து உண்மைகளும் மீண்டும் போட்டு மூடப்படும். அவை இனி வெளிவரா. இந்துத்துவாவினருக்கு இது மிகப் பெருத்த ஆதாயம் இல்லையா?

இந்த மகிழ்ச்சியில்தான் மோடி ஹேமந்கர்கரே வீட்டுக்குச்சென்று அவர் மனைவியிடம் ஒரு கோடி ரூபாய் கொடுக்க முன் வந்திருக்கிறார். அந்த அம்மையாரும் கர்கரேயைப் போன்ற நடுநிலையாளர்; உண்மை விரும்பி அதனால் மோடி கொடுக்க முன்வந்த இரத்தக் கறை படிந்த அந்த ஒரு கோடி ரூபாயை வாங்க மறுத்துவிட்டார். நடுவண் அரசு நடுநிலையோடு தங்களிடையேயுள்ள இந்துத்துவா எண்ணம் கொண்டவர்களின் தவறான ஆலோசனைகளையும், வாக்கு வங்கி சரிந்துவிடும் என்ற பொய்யான அறிவுரையையும் ஏற்காமல் தைரியத்துடன் உண்மையான சதிகாரர்களை பயங்கரவாதிகளை வெளிக்கொண்டு வர பாடுபட்டால் மட்டுமே நாட்டை அழிவிலிருந்து காப்பாற்ற முடியும். வரும் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற முடியும். இந்துத்துவாவினர் அவர்களை வளர்த்துக் கொள்ள எவ்வளவு பெரிய பயங்கரவாதத்தையும் செய்ய முற்படுவர். கடும் ராமபக்தரான காந்தியாரை முஸ்லிம் வேடமணிந்து சுட்டுக் கொன்றவர்கள் அல்லவா?

பழியை முஸ்லிம்கள் மீது சுமத்துவதில் அவ்வளவு ஆர்வம் காட்டுகிறவர்கள். தங்களின் ஆதரவாளர்களான கரசேவகர்களையே எரித்துக் கொன்றுவிட்டு அந்தப் பழியை முஸ்லிம்கள் மீது சுமத்தி, பல ஆயிரம் முஸ்லிம்களைக் கொன்றொழித்தவர்கள் அல்லவா? நாட்டில் தொடர்ந்து நடைபெற்றுவரும் தொடர் வெடி குண்டுகள் அவர்களின் கைங்கர்யமே. அவர்களுக்குத்தான் ராணுவத்தினரின், புலனாய்வுத் துறையினரின் ஆதரவு உண்டு. அவர்களின் உதவியோடுதான், ஆசியோடுதான் இந்த தொடர் வெடிகுண்டு நிகழ்வுகளை நடத்தி வருகிறார்கள். அப்பழிகளை முஸ்லிம்கள் மீது போட்டு மீடியாக்கள் அனைத்தும் அவர்களது கட்டுப்பாட்டில் இருப்பதால் உலகெங்கும் செய்தி பரப்புகிறார்கள்.

சிறிது நடுநிலையோடு யோசித்துப் பாருங்கள். மும்பையைத் தாக்கியவர்கள் உண்மையிலேயே முஸ்லிம் தீவிரவாதிகளாக இருந்தால் வெறும் பத்தே பத்து நபர்களால் 3 நாட்கள் மும்பையை மட்டுமல்ல முழு இந்தியாவை மட்டுமல்ல. முழு உலகத்தையும் ஸ்தம்பிக்க வைத்திருக்க முடியுமா? நிலைகுலையச் செய்திருக்க முடியுமா? ஒருபோதும் முடியாது.

இந்துத்துவா தீவிரவாதிகளாக இருக்கப் போய்தான் அனைத்துத் துறையினரின் முழு பாதுகாப்போடு, ஆசியோடு படுபயங்கரவாதத்தை நிகழ்த்தி இருக்கிறார்கள். மக்களவையில் மந்திரி அந்துலே மும்பை பயங்கத வாதத்தில், கர்கரே மற்றும் இரு அதிகாரிள் சுட்டுக் கொல்லப் பட்டதில் சதி நடந்துள்ளதோ என சந்தேகம் எழுகிறது என்றுதான் கூறியுள்ளார். உண்மையில் பா.ஜ.க.வினருக்கும் சிவசேனாவுக்கும் அச்சதியில் சம்பந்தமில்லை என்றால் அவர்கள் ஏன் துடிக்க வேண்டும்? எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பதுபோல், கூக்குரலிடனும் சபையை குழப்ப வேண்டும். பாக்கிஸ்தானுக்கு ஆதரவாகப் பேசுகிறார் என திசை திருப்ப வேண்டும்? இதிலிருந்தே அவர்களுக்கு மும்பை பயங்கரவாதத்தில் சம்பந்தம் இருக்கிறது என சந்தேகம் எழுகிறதே. இந்த சந்தேகங்கள் முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல; திறிஸ்தவர்களுக்கு மட்டுமல்ல; இந்துக்கள் அல்லாதவர்களுக்கு மட்டுமல்ல; இந்துக்களிலும் நடுநிலையாளர்களான, அமைதி விரும்பிகளான பெரும்பான்மையினருக்கும் இந்த சந்தேகங்கள் ஏற்படவே செய்கின்றன. இவை அனைத்தும் மிகமிக நியாயமான சந்தேகங்களே.

மும்பை பயங்கரவாதத்தில் இந்துத்துவாவினருக்குச் சம்பந்தமில்லை என்றால் அவர்கள் மக்களவையில் எப்படி நடந்திருப்பார்கள்? மந்திரி அந்துலே எழுப்பும் சந்தேகம் நாட்டில் பெரும்பாலோருக்கு இருக்கிறது. எனவே நடுநிலையான அச்சத்திற்கோ, பரிந்துரைக்கோ, பணத்திற்கோ, விலைபோகாத நேர்மையான அதிகாரிகளை நியமித்து புலன்விசாரணை செய்து உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடித்து, தண்டித்து இனி நாட்டில் இது போன்ற பயங்கரவாதச் செயல்கள் நடைபெறாவண்ணம் தடுக்க வேண்டும். இதற்கு எதிர்க் கட்சியினராகிய நாங்கள் பூரண ஒத்துழைப்புத் தரத்தயாராகவே இருக்கிறோம் என்றல்லவா உறுதிமொழி கொடுத்திருக்க வேண்டும்.

அதற்கு மாறாக, உண்மை குற்றவாளிகளை புலன் விசாரணை செய்து கண்டுபிடிக்கும் முயற்சிக்கு முட்டுக்கட்டை போட்டால் அதன் பொருள் என்ன? நாங்கள்தான் அந்த மும்பை பயங்கரவாதத்தை அரங்கேற்றினோம் என்று சொல்லாமல் சொல்கிறார்கள் என்பது தானே அதன் பொருளாக இருக்க முடியும்.

ஒரு நாளைக்கே கோடிக் கணக்கில் செலவிட்டு நடத்தப்படும் மக்களவை, மேலவை இரு அவைகளிலும் கூச்சல் குழப்பம் விளைவித்து, அமளியில் ஈடுபட்டு அவைகளின் முக்கிய பணிகளை முடக்குகிறவர்களை விட தீவிரவாதிகள், பயங்கரவாதிகள், கொடுமையாளர்கள் வேறு யாரும் இருக்க முடியுமா? நாட்டையே சுடுகாடாக்கி சுய ஆதாயம் அடைய முற்படுகிறவர்கள் என்று யாரும் குற்றம் சொன்னால் அதை மறுக்க முடியுமா?

ஜார்ஜ் புஷ் உலகளவில் நம்! படு பயங்கரவாதி என்றால் இந்துத்துவாவினர் இந்தியா அளவில் நம்1 படுபயங்கரவாதிகள்.

அமெரிக்கா, இங்கிலாந்து வெள்ளையர்கள் இந்தியாவுக்கு நல்லது செய்வார்கள் என நம்பினால் அதைவிட மடமை இருக்க முடியாது. வெள்ளையர்கள் இந்தியாவைக் கைப்பற்ற முன்னர் இந்தியாவில் இந்து, முஸ்லிம் மற்றும் அனைத்துக் கொள்கையுடையவர்களும் ஒரு தாய் மக்கள் போல் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தனர். முஸ்லிம்கள் இந்தியாவை சுமார் 800 ஆண்டுகள் ஆண்டும் இந்திய மக்களிடையே எவ்வித பேதமும் இருக்கவில்லை. ஒற்றுமையாக இருந்தனர். இந்திய மக்களின் ஒற்றுமை கண்டு வெள்ளையன் பொறாமை கொண்டான். இந்தியர்கள் ஒற்றுமையாக இருந்தால் தொடர்ந்து இந்தியாவை அவனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியாது என அஞ்சினான்.

இந்தியாவைக் கைப்பற்றும்போதே இந்தியர்களில் சிலரை சிலரோடு மோதவிட்டு, பிரித்தாளும் சூழ்ச்சி செய்து சில இந்துத்துவாவினரின் துணை கொண்டே பல இந்திய ஆட்சியாளர்களை வீழ்த்தி முழு இந்தியாவையும் தங்கள் ஆட்சிக்குள் கொண்டு வந்தனர்.

இந்தியாவில் தங்களுடைய ஆட்சி நீடிக்க வேண்டும் என்றால் இந்து, முஸ்லிம் ஒற்றுமை நீடிக்கக் கூடாது என்பதில் குறியாக இருந்தனர். இந்துத்துவாவினரின் கொள்கையும் அதுவே. ஒரு தாய் மக்களை ஜாதியின் பெயரால் பிரித்து பெருங்கொண்ட மக்களை கீழ் ஜாதிகளாக்கி, இன இழிவை ஏற்படுத்தி அவர்களை கொடுமைப்படுத்தும் இந்துத்துவா கொள்கைக்கு இஸ்லாம் நேர் முரணாக இருப்பதால், மக்கள் அனைவரையும் சமமாகக் கருதுவதால், முஸ்லிம்களால் தங்கள் இன இழிவு கொள்கைக்கு சாவு மணி அடிக்கப்படுவிடும். தங்களின் ஆதிக்கம் அறுபட்டுவிடும் என இந்துத்துவாவினர் அஞ்சுகின்றனர்.

எனவே இந்தியாவில் முஸ்லிம்களை வளரவிடாமல் தடுக்க சூழ்ச்சிகள் பல செய்தனர். வெள்ளையனதும். இந்துத்துவாவினரதும் கொள்கை ஒன்றாக இருந்தால் அதாவது மனிதர்களையே அடிமைப்படுத்தி ஆதிக்கம் செலுத்துவதாக இருந்ததால், இரு சாராரும் இணைந்து இந்திய உண்மை வரலாற்றையே திரித்து எழுதினர். அதில் முஸ்லிம் மன்னர்கள் இந்துக்களுக்கு கொடுமைகள் இழைத்ததாக, இந்துக்களுக்கு அநீதி இடைக்கப்பட்டதாக, அவர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டதா புனைந்து வரலாற்றை தலைகீழாக்கினர்.

அதனால் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே கசப்புணர்வு படிப்படியாக வளர ஆரம்பித்தது. இந்துத்துவாவினர் வெள்ளையர்களுக்கு குற்றேவல் செய்து அவர்களின் அன்பைப் பெற்றனர். ஒரு சிந்தனையாளன் இந்துத்துவாவினரைப் பற்றி சொல்லும் போது “ஆகச் சிறந்த குற்றவேல் செய்கிறவர்கள். அடிமை போல் செயல்படுகிறவர்கள். எழுத்தில் வடிக்க பேனா கூசும் செயல்களில் ஈடுபட்டும் தங்களுக்கு மேலுள்ளவர்களைத் திருப்திப்படுத்தி விடுவார்கள். அவர்களின் அன்பையும் ஆதரவையும் பெற்று விடுவார்கள். அதே சமயம் அதிகாரம் கிடைத்துவிட்டால் தங்களுக்கு கீழுள்ளவர்களை அடிமைகளை விட மோசமாகக் கொடுமைப்படுத்துவார்கள்.” இதுவே அவர்களின் உண்மை நிலை.

இந்த அடிப்படையில் வெள்ளையனின் ஆதரவைப் பெற்று இந்திய நீதி மன்றங்களில் மட்டுமல்ல. இங்கிலாந்தின் பிரிவில் கவுன்சிலிலும் தங்களின் மேல்ஜாதிக்குச் சாதகமான மனுவின் சட்டங்களை அரசு சட்டங்களாக அங்கீகரிக்க வைத்தார்கள். வெள்ளையர்களுக்கு இந்திய ஆட்சியாளர்களைக் காட்டிக் கொடுத்து, சதிகள் மூலம் கைது செய்து, கொலை செய்து, வெள்ளையர்களுக்கு பூரண விசுவாசிகளாக இருந்த தேச துரோகிகள் இந்துத்துவாவினர்; நாக் கூசாமல் மற்றவர்களை தேச துரோகிகள் என அவதூறு பலமும், ஊடக பலமும் இருப்பதால், உண்மையான தேசப் பற்றுடையவர்களையும் தேசத்துரோகிகள் என குற்றம் சாட்டி, பழி சுமத்திக் கொன்றுவிட்டு அந்தப் பழியை எளிதாக முஸ்லிம்கள் மீது சுமத்தி விடுவார்கள்.

பரிபூரண இந்து நம்பிக்கையாளராகவும் பெரும் ராமபக்தராகவும், இந்தியமக்கள் மஹாத்மா என்ற சிறப்பித்துக் கூறிய காந்தியாரைச் சுட்டுக் கொன்றுவிட்டு அப்பழியை முஸ்லிம்கள்மீது சுமத்த முற்பட்டனர். அன்றைய பிரதமர் நேரு உறுதியாகச் செயல்பட்டதால் அவர்களது முயற்சி பெருத்தத் தோல்வியில் முடிந்தது.

சமீபத்தில் கோத்ராவில் இவர்களே ரயிலை எரித்து ராமபக்தர்களான கரசேவகர்களை உயிரோடு கொளுத்தி கரிக்கட்டைகளாக ஆக்கிவிட்டு அப்பழியை முஸ்லிம்கள் மீது சுமத்தி, குஜராத்தில் பல ஆயிரம் முஸ்லிம்களை கொன்றும், கோடிக்கணக்கான பொருள் நட்டத்தையும் ஏற்படுத்தி குஜராத்தை சுடுகாடாக ஆக்கியது சமீபத்தில், அவர்களது கையாட்களாக இருந்து அக்கொடூர செயல்களை செய்தவர்களின் சொந்த வாக்கு மூலத்தின் மூலமே அம்பலத்திற்கு வந்தது.

நடுவண் அரசு அப்போதே துணிந்து சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்து  தைரியமாக சட்டத்தின் முன் நிறுத்தி இருந்தால் இந்துத்துவாவினர் இருக்கின்றனர். அவர்கள் நயவஞ்சகமாக ஓட்டு வாங்கி சரிந்துவிடும் என அச்சுறுத்தினர். அதை ஏற்று காங்கிரஸ் கட்சியினரும் இந்துத்துவாவினருக்குத் துணை போகும் நிலையிலேயே இருக்கின்றனர்.

மந்திரி அந்துலே என்ன தவறு செய்தார்? பதவி ஏற்கும்போது செய்து கொடுத்த உறுதிப் பிரமாணப்படி உண்மையையே எடுத்துரைத்தார். கர்கரேயின் மரணத்தில் சந்தேகம் இருக்கிறது. சதியால் இருக்கலாம். விசாரணை தேவை என்று தானே மக்கள் அவையில் சொன்னார். அதற்கு இந்துத்துவாவினர் ஏன் குதிக்க வேண்டும்? இரு சபைகளையும் அமளிக் காடாக்க வேண்டும். அவைகளின் முக்கிய அலுவல்களை முடக்க வேண்டும். கர்கயை கொன்ற பாவிகள் இவர்களே என்று மக்கள் நம்ப போதிய ஆதாரம் கிடைக்கிறதே. இவர்களுக்கு கர்கரேயின் மரணத்தில் சம்பந்தமில்லை என்றால் முறையான விசாரணைக்கு ஏன் அஞ்ச வேண்டும்? இவர்களின் இந்த அட்டூழியச் செயல்களை இரும்புக் கரம் கொண்டு அரசு அடக்க முற்படாமல் வளைந்து கொடுப்பானேன்?

திருடனிடமே திருட்டைக் கண்டு பிடிக்க ஆலோசனை கேட்டால் அவன் எப்படிப்பட்ட ஆலோசனைகளைத் தருவான்? திருட்டைக் கண்டுபிடிக்க விடாமல் திசை திருப்புவானா? இல்லையா? மாலகான் குண்டு வெடிப்புகளில் ஈடுபட்டவர்கள் இந்துத்துவாவினர்தான் என்று கர்கரேயால் வெளிச்சத்திற்கு கொண்டு வரப்பட்டவுடன் அத்வானி, பால்தாக்கரே இந்துத்துவாவினர் குதிக்க ஆரம்பித்தனர். கர்கரேயை தேச துரோகி என்றனர். மிக இழிவாகப் பேசினர். கொலை மிரட்டல் விட்டனர். அவருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் கடுமையான நெருக்கடிகளைக் கொடுத்தனர். சாமியார்களைத் துன்புறுத்துவதாக அவதூறு பரப்பினர். வழக்கும் தொடர்ந்தனர்.

இந்த நிலையில் இந்தியப் பிரதமரும் அவர்களுக்குச் சாதகமாக நடந்தால் அதன் பொருள் என்ன? தனது ஆலோசகரை அத்வானியிடம் போய் பேசச் செய்தால் அதன் பொருள் என்ன? முஸ்லிம்களில் எண்ணற்றோர், மத குருமார்கள் உட்பட காவல்துறையினரால் கடுமையான துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டனர். சித்திரவதை செய்யப்பட்டனர். பலர் அநியாயமாக எண்கவுண்டர் என்ற பெயரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். பல அப்பாவி முஸ்லிம்கள் பல்லாண்டுகளாக சிறையில் வாடுகின்றனர். அவர்களது குடும்பங்கள் வறுமையில் சீரழிகின்றன. பல முஸ்லிம் தலைவர்கள் பல முறை மத்திய மாநில அரசுகளிடமும் முறையிட்டனர். இதைப் பற்றி எல்லாம் மத்திய, மாநில அரசுகள் கவலைப்பட்டனவா? அப்பாவி முஸ்லிம்களை விடுவிக்க முயற்சி எடுத்தனவா? இல்லையா! ஒரு குற்றம் இழைத்த சாமியாரின் துன்புறுத்தப் பட்டதாக இந்துத்துவா தலைவர், பாபர் மஸ்ஜிதை இடித்த முதல் குற்றவாளி அத்வானி குரல் கொடுத்தவுடன் பிரதமர் ஓடி வருகிறார் என்றால் அதன் பொருள் என்ன?

ஆம்! காங்கிரஸுக்குள்ளே இருக்கும் இந்துத்துவாவினர் ஓட்டு வங்கி சரிந்து விடும் என அச்சுறுத்துகின்றனர். பிரதமரும் அதற்கு அஞ்சி விடுகிறார். உண்மை என்ன?

எந்த மதமும் வன்முறையையோ, தீவிரவாதத்தையோ, பயங்கரவாதத்தையோ தூண்டவில்லை. மதத்தைப் பிழைப்பாகக் கொண்ட மதகுருமார்களில் சிலரே தங்களின் சுயநலனுக்காக அற்ப உலக ஆதாயத்திற்காக, அறிவு குறைந்த மக்களைத் தூண்டி இப்படிப்பட்ட படுபயங்கரவாதச் செயல்களை செய்யவைக்கின்றனர். வறுமையில் வாடும் வாலிபர்கள் அவர்கள் கை நிறைய கொடுக்கும் பணத்திற்கு அடிமைப்பட்டு அவர்களின் வலையில் சிக்குகின்றனர்.

அப்படிப்பட்ட பெயர் தாங்கி முஸ்லிம்களும் இருக்கிறார்கள். பெயர் தாங்கி இந்துக்களும் இருக்கிறார்கள். பெயர் தாங்கி கிறிஸ்தவர்களும் இருக்கிறார்கள். அனைத்து மதவாகளிலும் இருக்கிறார்கள். நாத்திகர்களிலும் இருக்கிறார்கள். அமெரிக்காவின் சி.ஐ.ஏ. யூதர்களில் மொஸாத், இந்துக்களில் இந்துத்துவா, முஸ்லிம்களில் சில முஜாஹிதீன் அமைப்புகள் இப்படிப்பட்ட வாலிபர்களை பயன்படுத்துகின்றனர். சி.ஐ.ஏ.யிடமும், மொஸாத்திடமும் சில முஜாஹிதீன் அமைப்புகள் இருக்கின்றன.

இந்த பெயர் தாங்கி முஸ்லிம் முஜாஹிதீன் அமைப்புகளை இப்படிப்பட்ட படுபயங்கரச் செயல்களில் ஈடுபடுத்துவதன் மூலம் அமெரிக்காவுக்கு இரண்டு வகை லாபம். ஒன்று ஆயுதங்களின் அமோக விற்பனை. இரண்டாவது இஸ்லாமிய தீவிரவாதம், முஸ்லிம் தீவிரவாதி என செய்திகளை ஊடகங்களில் பரப்பி முஸ்லிம்களின் எழுச்சியை வீழ்த்தலாம். முஸ்லிம்கள் சிதறி சின்னாபின்னப்பட்டுக் கிடப்பதால்தான் அமெரிக்காவின் சூழ்ச்சி பலிக்கிறது. இன்றும் அரபுநாடுகள் அமெரிக்காவுக்கு அடிமைப்பட்டுத்தான் கிடக்கின்றன.

அரபு நாட்டினர் முதல் அனைத்து முஸ்லிம்களிலும் மிகப் பெரும்பான்மையினர் உலக ஆசாபாசங்களில் சிக்கி மறுமையை விட இவ்வுலகை மிக அதிகமாக நேசிக்க ஆரம்பித்துவிட்டார்கள். மனோ இச்சைகளுக்கும், அதனால் ஷைத்தானுக்கும் அதிக இடம் கொடுத்து விட்டார்கள். அதன் தீய பலனையே இவ்வுலகில் அனுபவிக்கிறார்கள். மறுமையிலோ இதைவிட மிகக் கடுமையான வேதனைகள் அவர்களுக்காகக் காத்திருக்கின்றன.

அல்லாஹ்வின் கட்டளைப்படி உலக முஸ்லிம்கள் அவர்கள் நம்பிக்கை வைத்துள்ள மதப் புரோகிதர்களைக் கை கழுவி புறக்கணித்துவிட்டு, அல்குர்ஆனைப் பற்றிப் பிடித்து ஒன்றுபட்டுவிட்டால் பேட்டை ரவுடி அமெரிக்கா, இஸ்ரேல் ஆதிக்கம் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய்விடும். இது ஏகன் இறைவனின் உறுதியான வாக்கு. பாருங்கள் அல்குர்ஆன் ஆல இம்ரான் 3:139, அந்நூர் 24:55.

முஸ்லிம்கள் புரோகிதர்கள் பின்னால் போய் பிரிந்து சீரழித்து கிடப்பதால்தான் இன்றைய இந்த அவப்பெயர்களைத் தாங்கி சாகாமல் செத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இப்போது இந்திய சுதந்திரத்துக்கு முன்னால் என்ன நடந்தது எனப் பார்ப்போம். வெள்ளையர்கள், இந்துத்துவாவினரின் துணைகொண்டு சூழ்ச்சிகள் செய்து, இந்தியாவைக் கைப்பற்றினர். சுமார் 150 ஆண்டுகள் இந்தியாவை ஆண்டனர். இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் விரோத குரோதத்தை வளர்த்தனர். அதனால் தான் அவர்களால் 150 ஆண்டுகளாக இந்திய வளங்களைச் சுரண்டி வளர முடிந்தது. ஆயினும் வெள்ளையனின் அடிவருடி இந்துத்துவாவினரை சரிகாணாமல் செயல்பட்ட இந்து மதத்தில் விசுவாசமுள்ள பெரும்பான்மை இந்துக்களும், முஸ்லிம்களும் இணைந்து சுதந்திரத்திற்காகப் போராடி வந்தனர்.

அந்த சமயத்திலெல்லாம் இந்துத்துவாவினர் இந்தியாவின் சுதந்திர முயற்சியை பாழடிக்க முற்பட்டார்களே அல்லாமல் சுதந்திர முயற்சிக்கு ஒத்துழைக்கவில்லை என்பதை வரலாற்றை முறையாக ஆராய்பவர்கள் அறிய முடியும். அவர்களின் முட்டுக்கட்டைகளை எல்லாம் முறியடித்து நம் தாய் நாடான இந்தியா சுதந்திரத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தது, இதற்கு மேலும் இந்தியாவை அடிமைப்படுத்தி வைக்க முடியாது என்பதை வெள்ளையர்கள் உணர்ந்தனர். இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுப்பதைத் தவிர வேறு வழி இல்லை என்பதை வெள்ளையர்கள் கண்டுகொண்டனர். அப்போது அவர்களது மூளை சுறுசுறுப்பாக இயங்க ஆரம்பித்தது.

150 வருட அனுபவத்தில் இந்தியாவிலுள்ள கனி வளங்கள், மக்களின் மூளை பலம் இதை எல்லாம் எடைபோட்டவர்கள் சுதந்திரத்திற்குப் பின்னர் சொந்த உழைப்பில் இந்தியா தங்களை எல்லாம் மிகைத்திடும் அளவில் பெரிய வல்லரசாக மாறிவிடும். நாம் அதனிடம் கைகட்டி நிற்க நேரிடும் என அஞ்சினார்கள். இந்தியாவின் முன்னேற்றத்தைத் தடுக்க என்ன வழி என சிந்தித்தார்கள்.

ஏற்கனவே சரித்திரத்தைப் புரட்டி இந்து முஸ்லிம் ஒற்றுமையை ஓரளவு குலைத்திருக்கிறோம். அதையே பெரிதாக்கி சுதந்திரத்தின்போது இந்தியாவை துண்டாடி அதன் மூலம் காலமெல்லாம் அவர்களுக்கிடையே சண்டையைத் தொடரவைப்போம் என்ற கெட்ட எண்ணத்துடன் தான் பிரிவினைக்கு வித்திட்டார்கள். அதற்காகப் பெரும் முயற்சிகள் செய்தனர். மவுன்பேட்டன் அதற்காக பெரிதும் பாடுபட்டார். இரு சாராரையும் தூண்டிவிட்டனர். பிரிவினை முழக்கம் இரு சாராரிடமும் வலுத்தது. இறுதியில் வெள்ளையன் திட்டமிட்டப்படி 1947-ல் இந்தியா பாகிஸ்தான் என நாடு இரண்டாகப் பிரிந்தது.

இந்தியா பாகிஸ்தானுக்கு இடையே தீராபகை நீடிக்க வேண்டும்.  அதிலேயே இரண்டு நாட்களும் அழிய வேண்டும் என்ற வஞ்சகத் திட்டத்தோடு, காஷ்மீர் இந்தியாவுக்கா, பாகிஸ்தானுக்கா என்று முடிவு செய்யாமல், இந்தியா பாகிஸ்தானுக்கிடையே சண்டையை மூட்டி விட்டு இந்துத்துவாவினருக்கு பிரித்தாளும் சூழ்ச்சியை முழுமையாகக் கற்றுக் கொடுத்துவிட்டு வெள்ளையன் சென்றுவிட்டான்.

அவன், திட்டமிட்டபடியே கடந்த 62 ஆண்டுகளாக காஷ்மீர் பற்றி இரு நாடுகளும் ஓயாது சண்டை இட்டு வருகின்றன. காஷ்மீரிலும் அமைதியற்ற நிலை. வெறும் 87 தொகுதிகளில் ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்திருக்கிறதென்றால் காஷ்மீரின் நிலையை அறிந்து கொள்ளுங்கள். அன்றிலிருந்து இன்று வரை இந்தியா பல்லாயிரம் கோடி கோடி ரூபாய்களை காஷ்மீர் விவகாரத்தல் செலவழித்துக் கொண்டிருக்கிறது. அன்று மேற்கு பாகிஸ்தான் கிழக்கு பாகிஸ்தான் என இந்தியாவின், இரு பகுதிகளை விட்டுக் கொடுத்த இந்தியா இந்தக் குட்டித் துண்டு காஷ்மீரையும் கைகழுவி இருந்தால், இதுவரை அதற்காக செலவிட்ட பல்லாயிம் கோடிகள் மூல் கல்வி, பொருளாதாரம், விஞ்ஞான வளர்ச்சி என பேட்டை ரவுடி அமெரிக்காவை விட பல மடங்கு வலுவான வல்லரசாக மாறியிருக்கும். ரஷ்யா, அமெரிக்காவுக்கு முன்னரே இன்று சந்திரனுக்கு அனுப்பிய சந்திராயனை அன்றே அனுப்பி பெரும் சாதனை நிகழ்த்தி இருக்க முடியும். ஆனால் இந்தியாவின் பெருங்கொண்ட பொருளாதாரம் காஷ்மீர் விவகாரத்தால் கரியாகி இந்தியாவை பெரிதும் பின்தங்க வைத்து விட்டது.

தன் திட்டம் பலித்து இந்தியா பெரிதும் பின்தங்கி இருக்கிறது என்று பெரிதும் மகிழ்ந்திருந்த வெள்ளையனுக்கு சமீபத்தில் இந்தியா ஏவுகணைகள் மூலம் சாதித்தது; சந்திராயனை சந்திரனுக்கு அனுப்பியது பெருங்கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் ரஷ்யா, அமெரிக்கா பல முயற்சிகளுக்குப் பின்னர் சந்திரனை அடைந்ததற்கு மாறாக ஒரே முயற்சியில் இந்தியா சந்திராயனின் சந்திரனில் நிலை கொள்ளச் செய்தது அமெரிக்காவுக்கும், இங்கிலாந்திற்குப் பெரும் பயத்தை ஏற்படுத்தியுள்ளது. தங்களை மிஞ்சிய பெரும் வல்லரசாக இந்தியா வளர்ந்து விடுமோ என்ற நடுக்கம் வெள்ளையனை கவ்விக் கொண்டுள்ளது.

எனவே இந்தியாவை பாகிஸ்தானுக்கு எதிராகத் தூண்டிவிட்டு போரை ஏற்படுத்திவிட்டால் பொருளாதாரத்தில் பெரும் சரிவை சந்தித்துள்ளஅமெரிக்காவுக்கு மூன்று வகை ஆதாயங்கள் கிடைக்கும். இந்தியா, பாகிஸ்தான் இருதரப்பிற்கும் ஆயுத விற்பனை மூலம் பெருத்த ஆதாயம். அடுத்து இரண்டாவது இந்தியாவின் அதீத வளர்ச்சியை போரின் மூலம் தரைமட்டமாக்குவது. ஆனானப்பட்ட அமெரிக்காவே ஆஃப்கானிஸ்தான், ஈராக் நாடுகளில் வலியப்போய் மாட்டி போரிட்டு, இப்போது பெரும் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்திருப்பது உலகம் அறிந்ததுதானே. இத்தனைக்கும் யுத்த தளவாடங்களை அமெரிக்காவே தயாரித்துள்ளது.

மூன்றாவது பெருத்த லாபம், இந்தியாவை பாகிஸ்தானுடன் மோதச் செய்வது, இஸ்லாமிய தீவிரவாதம், முஸ்லிம் தீவிரவாதி என ஊடகங்கள் மூலம் செய்தி பரப்பி இஸ்லாத்தை இழிவுபடுத்தலாம்.

இந்த நிலையில் இந்தியா அமெரிக்காவிடம் யுத்த தளவாடங்களை விலைக்கு வாங்கி பாகிஸ்தானுடன் போரிட்டால் முடிவு என்னவாகும். இந்தியா, பாகிஸ்தான் இரண்டும் தரைமட்டமாகிவிடும். அதுவும் இன்றைய அணு ஆயுத யுகத்தில் பெருத்த சீரழிவைச் சந்திக்க நேரிடும்.

இத்தீய திட்டத்தோடு அமெரிக்காவின் சி.ஐ.ஏ. இஸ்ரேலின் மொசாத், இந்தியாவின் இந்துத்துவா இந்த மூன்று சதிகார கும்பலின் சதிகாரச் செயலாக மும்பை பயங்கரம் ஏன் இருக்கக் கூடூது? மும்பை பயங்கரம் ஏன் இருக்கக் கூடாது? மும்பை தாக்குதலுக்குப் பின்னர் அமெரிக்க வெளியுறவு மந்திரி, பல முக்கிய பிரமுகர்கள் இராணுவத்தளபதி, இப்படி பலர், இங்கிலாந்து பிரதமர் என வரிசையாக இந்தியாவுக்கும் பாக்கிஸ்தானுக்கும் பறந்து வருவதின் நோக்கம் என்ன? அமெரிக்காவின் அறிவிப்புகளை, எச்சரிக்கைகளை உற்று கவனியுங்கள். இரு நாடுகளையும் தூண்டிவிட்டு போரிட வைத்து ஆதாயம் அடையும் குரூர எண்ணம் வெளிப்படுகிறதா? இல்லையா?

இந்திய நலனில் அக்கறையுடன் ஏற்படும் கரிசனமா இது? இந்தியா மீது அந்த அளவு பாசமா? குஜராத் பற்றி எரிந்தபோது இந்தப் பாசம் எங்கே போய்விட்டது. தலைகாட்டினார்களா? அப்போது இந்தியா வந்து முயன்றால் இந்தியாவில் அமைதி நிலவ வழி பிறந்து விடுமே!

அமெரிக்காவின் இப்போதைய முதல் எதிரி முஸ்லிம் உலகம் தானே! முஸ்லிம்களை அழித்தொழிப்பது தானே யூத, கிறிஸ்தவர்களின் இலட்சியம் அமெரிக்காவில் வேகமாக இஸ்லாம் பரவி வருவதை அவர்களால் ஜீரணிக்க முடியுமா? அதற்காக இஸ்லாத்தின் அடிப்படையே தெரியாத பெயர் தாங்கி முஸ்லிம்களை பெரும் விலை கொடுத்து வாங்கி முஜாஹிதீன் என்ற பெயரால் பல இடங்களுக்கு அனுப்பி அழிவு வேலைகளை-பயங்கரவாதச் செயல்களை அரங்கேற்றி வருகிறார்கள். பின்லேடனை வளர்த்துவிட்டது அமெரிக்காதானே! தாலிபான்களை வளர்த்து விட்டது அமெரிக்காதானே! அமெரிக்காவின் கொடூர உள்ளத்தை, கோர முகத்தை அவர்கள் கண்டு கொண்டதால், வளர்த்த கிடா மார்பில் பாய்வதுபோல் இன்று அமெரிக்காவுக்கு எதிராக அவர்கள் திரும்பி விட்டார்கள்.

இன்று பாகிஸ்தானில் சில தீவிரவாதி அமைப்புகள் செயல்படுகின்றன என்றால் சி.ஐ.ஏ. மொசாத் போன்றாரால் வளர்த்து விட்டவர்களாகவே இருப்பார்கள். இரண்டொரு முஜாஹித் அமைப்புகள் அமெரிக்காவின் சுயநல பிடியில் சிக்காமல் சுயமாகச் செயல்பட்டாலும், அவர்கள் “எவனொருவன் அப்பாவி ஒருவனை கொலை செய்வானோ அவன்(உலக) மனிதர்கள் அனைவரையுமே கொலை செய்தான் போலாவான்” (அல்குர்ஆன் அல்மாயிதா 5:32) என்ற அல்லாஹ்வின் நேரடிக் கட்டளையைப் புறக்கணித்துவிட்டு பொதுமக்களை குண்டு வைத்து கொல்லவோ, துப்பாக்கியால் சுட்டுக் கொல்லவோ முற்படமாட்டார்கள்.

சிஐஏ, மொராத், இந்துத்துவா போன்ற மதவெறியர்களால் விலை கொடுத்து வாங்கப்பட்ட இஸ்லாத்தின் வாடையே இல்லாத பெயர் தாங்கி முஸ்லிம்கள் இப்படிப்பட்ட இழி செயல்களில் ஈடுபடுவார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. ஆயினும் மும்பை பயங்கர தாக்குதல்களில் இந்துத்துவாவினரைப் போல் காவிக் கயிறைக் கட்டி இருந்ததாலும், அவர்கள் மது அருந்தியதாலும் அவர்கள் முஸ்லிம்களாக இருக்க முடியுமா? என்ற சந்தேகத்தையே அதிகப்படுத்துகிறது. காவிக் கயிறும், போதையும் இந்துத்துவாவினரின் அடையாளம் என்பதை யாரே மறுப்பார்.

அப்படியே அவர்கள் முஸ்லிம்களாக இருந்தாலும் அவர்கள் பெயர் தாங்கி முஸ்லிம்களாக சிஐஏ, மொசாத், இந்துத்துவா அமைப்பினரால் பயிற்றுவிக்கப்பட்டவர்களாக இருப்பார்களே அல்லாமல் இஸ்லாத்தை விளங்கிய பொறுப்புள்ள ஒரு முஸ்லிம் அமைப்பில் இடம் பெற்றவர்களாகவோ, பாகிஸ்தான் அரசால் ஏவி விடப்பட்டவர்களாகவோ ஒரு போதும் இருக்க முடியாது. எனவே தூய இஸ்லாத்தையோ, உண்மை முஸ்லிம்களையோ குற்றப்படுத்துவதில் எவ்வித நியாயமும் இல்லை.

முஸ்லிம் மூட முல்லாக்களில் சிலர் தற்கொலை படை, மனித வெடிகுண்டு, மறைமுகத் தாக்குதல் இவற்றை தங்களின் சுய விளக்கத்தால் நியாயப்படுத்தினாலும், அவர்களின் அந்த மூட விளக்கங்களுக்கும் இஸ்லாத்திற்கும் அணுவளவும் சம்பந்தமே இல்லை. அவர்கள் இஸ்லாத்தை விட்டு தடம் புரண்டு வழிகேட்டில் செல்பவர்களே. அவர்களைப் பார்த்து இஸ்லாத்தை எடை போடுவது பெரும் தவறாகும்.

பாகிஸ்தானிலுள்ள தீவிரவாத அமைப்புகளுக்கும் பாகிஸ்தான் அரசுக்கும் சம்பந்தமே இல்லை என்கிறீர்கள்; அப்படியானர் அவர்களை தடை செய்து அழித்து விட வேண்டியதுதானே? என்று கேள்வி எழும்பலாம். இங்குதான் முக்கியமாக ஆராய வேண்டியுள்ளது. அதே போல் இந்தியாவிலும் பல தீவிரவாத அமைப்புகள் இருக்கின்றனவே. இந்து பெரும்பான்மையினரிலுள்ள அந்த தீவிரவாத அமைப்புகளைத் தடை செய்து அழித்துவிட இந்தியா தயாராக இருக்கிறதா? இல்லையே!

முன்னைய மும்பை கலவரத்தின் சூத்திரதாரி பால்தாக்ரேயும், அவரது ஆட்களும் தான் என்று கிருஷ்ணா கமிஷன் திட்டமாக அறிவித்ததே! மத்திய மாநில அரசுகள் சிவசேனாவை தடை செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுத்ததா?

பாபரி மஸ்ஜித்தை அத்வானி, முரளி மனோகர் ஜோசி, இன்னும் பல பா.ஜ.க. R.S.S. வகையறாக்களின் முன்னணித் தலைவர்கள் நின்றுதானே தரைமட்டமாக்கினார்கள். அவர்கள் மீது இந்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? கோத்ரா ரயில் எரிப்பு மோடியின் திட்டமிட்ட சதி; குஜராத் கலவரம் மோடியால் திட்டமிட்டு நடத்தப்பட்டது என்பதை அக்கலவரத்தில் ஈடுபட்டவர்களின் நேரடி வாய் வாக்குமூலம் நிலைநாட்டப்பட்டதே. இந்திய அரசு உடனடியாக அவர்களைக் கைது செய்து நீதி மன்றத்தின் முன் நிறுத்தி விசாரணைக்குப் பின் உரிய தண்டனை பெற்றுத் தந்திருக்கலாம். இந்திய அரசு இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி நடவடிக்கை எடுத்ததா? இவற்றிலெல்லாம் இந்திய அரசின் தயக்கத்திற்கு காரணம் என்ன?

இவர்கள் அனைவரும் இந்தியாவின் பெரும்பான்மை இந்து சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள்மீது நடவடிக்கை எடுத்தால் பெரும்பான்மை இந்து மக்களின் எதிர்ப்புக்கு ஆளாக நேரிடும். வாக்கு வங்கி சரிந்து விடும் என்ற அச்சம்தானே! இதை மறுக்க முடியுமா?

இதே அச்சம்தான் பாக்கிஸ்தான் அரசுக்கும் இருக்கிறது. ஜனாநாயக ஆட்சி முறையில் இது ஒரு பெரும் சாபக் கேடு, பெரும்பான்மையினர் எத்தனை பெரிய அட்டூழியங்கள், அநியாயங்கள் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டாலும் அவர்களைக் கண்டு கொள்ளாமல் விட்டுவிடுவது அதற்கு மாறாக சிறுபான்மையினர் தப்பு செய்யாவிட்டாலும் பெரும்பான்மையினரிலுள்ள மத வெறியர்கள் அவர்கள் தவறு செய்ததாக பொய்யாகக் கூறினாலும் அதை ஏற்று நடவடிக்கை எடுத்து, கடும் தண்டனைகள் விதித்து அது கொண்டு பெரும்பான்மையினரை திருப்தி படுத்துவது. இது ஜனநாயக சாபக்கேடா? இல்லையா?

மக்கள் மன்ற தாக்குதலில் எவ்வித சம்பந்தமும் இல்லாத ஒரு முஸ்லிமுக்கு மரண தண்டனை விதித்திருப்பதும், இஸ்லாமிய ஆட்சியை அமைக்க வேண்டும். அதற்காகப் பாடுபட வேண்டும் என்ற தீவிரமான பேச்சைத் தவிர வேது எவ்விதமான தீவிர, பயங்க செயல்பாடுகளில் ஈடுபடாத SIMI அமைப்பை தடை செய்தது. அதன் உறுப்பினர்களைக் கைது செய்து சிறையில் அடைத்து சித்திரவதை செய்வது. இதன் மூலம் பெரும்பான்மையினரின் ஆதரவைப் பெற முற்படுவது இவை எல்லாம் ஜனநாயக ஆட்சி முறை பெற்றெடுக்கும் குழந்தைகளே!

உலகை நேசிக்கும் அரசியல்வாதிகள் யாராக இருந்தாலும் ஜனநாயக ஆட்சி முறையில் இப்படி நடந்து கொள்வதில் ஆச்சரியமே இல்லை. இதே முறையைத்தான் பாகிஸ்தான் ஆட்சியாளர்களும் கடைபிடிக்கிறார்கள்.

எப்படி பால்தாக்கரே, ராஜ்தாக்கரே, அத்வானி, மொடி போன்றவர்கள் அநியாயச் செயல்களில் ஈடுபட்டார்கள், ஈடுபடுகிறார்கள் என்று தெரிந்திருந்தும் இந்திய அரசு நடவடிக்கை எடுக்க, தடை செய்ய தயங்குகிறதோ அதேபோல் தான் பாகிஸ்தான் அரசும் நடவடிக்கை எடுக்க, தடை செய்ய தயங்குகிறதோ அதேபோல் தான் பாகிஸ்தான் அரசும் சில முஜாஹித் அமைப்புகள் அநியாய, அக்கிரமச் செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்பதை அறிந்திருந்தும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறது. காரணம் அங்கு பெரும்பான்மையினர் முஸ்லிம்கள். பொதுவாக மனித சுபாவம் என்னவென்றால் தான் செய்யும் அதே தவறு தனக்கு பெரிதாக தெரியாது. அதே தவறை பிரிதொருவன் செய்தால் அது அவனுக்கு இமாலயத் தவறாகத் தெரியும். இந்தக் கண்ணோட்டத்தில் தான் இந்தியா பாக்கிஸ்தான்மீது போர் தொடுக்க முனைகிறது. போர் ஏற்பட்டால் அது இரு நாட்டிற்கும் பேரிழப்பை ஏற்படுத்தி விடும். இந்தியா மீண்டும் 50 வருடங்கள் பின்னோக்கிச் செல்லும் பரிதாப நிலை ஏற்படலாம்.

அது மட்டுமல்ல. சீனா பாகிஸ்தானுக்கு ஆதரவாக இறங்க நேரிடலாம். அப்போது அமெரிக்கா இந்தியாவுக்கு ஆதரவாக இறங்க முற்படும். இறுதியில் அது மூன்றாவது உலகப் போராக வெடிக்கும் அபாயமும் இருக்கிறது. மூன்றாவது உலகப் போர் மூண்டால் அது உலகின் அழிவாகவே இருக்கும். உலகின் அழிவுக்கு இந்தியா காரணமாக இருக்கலாமா? என்பதை இந்திய அரசும், மக்களும் முடிவு செய்யும் கட்டாயத்தில் இருக்கிறோம்.

ஜனநாயக ஆட்சி முறையில் பெரும்பான்மைக்கு அரசியல்வாதிகள் அஞ்சுவது அவர்களின் அறிவுக் குறைவே.

தோற்றத்தில் அப்படித் தெரியுமே அல்லாது உண்மை அதுவல்ல. மக்களின் மனோ நிலையை சரியாக அளவிட அரசியல்வாதிகள் தவறி விடுகிறார்கள்.

உதாரணமாக மதுப்பழக்கத்தை எடுத்துக் கொள்வோம். சுமார் 15லிருந்து 20 சதவிகித மக்கள் மது தங்கள் வீட்டருதே ஆறாகப் பெருகி ஓடினாலும். அரசியல் சட்டப்டி தடை ஒன்றும் இல்லாதிருந்தாலும் ஒருபோதும் குடிக்கமாட்டார்கள். அதற்கு நேர்மாறாக குடிப்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என அரசு கடுமையான சட்டம் இயற்றி குடிப்பவர்களை தூக்கில் தொங்காவிட்டாலும் 15லிருந்து 20 சதவிகிதத்தினர் குடிக்கத்தான் செய்வார்கள். எஞ்சியுள்ள 60லிருந்து 70 சதவிகிதத்தினர் தடையிருந்தால் குடிக்க மாட்டார்கள். தடையில்லை என்றால் குடிப்பார்கள். நாம் இந்த 60லிருந்து 70 சதவிகித மக்கள் பற்றித்தான் கவலைப்படவேண்டும். சிந்தித்துச் செயல்பட வேண்டும்.

தமிழக அரசோ கள்ளச் சாராயம் குடிக்க முற்படும் 15லிருந்து 20 சதவிகித மக்களுக்காகக் கவலைப்பட்டு 60லிருந்து 70 சதவிகித மக்களை 10வயது சிறு பிள்ளைகள் முதல் குடிகாரர்களாக ஆக்கி வருகிறது. ஆக தமிழகத்தில் குடிகாரர்களின் எண்ணிக்கை 80லிருந்து 85 சதவிகிதமாகப் பெருகியுள்ளது.

இது அரசியல் நடத்துவோரின் அறியாமை.

இதுபோன்றதொரு அறியாமைதான் பெரும்பான்மை என்ற மயக்கம். எந்த ஒரு மதமும் அநியாயத்திற்கும், பயங்கரவாதச் செயல்களுக்கும் துணை போவதாக இல்லை. மதங்கள் அனைத்தும் ஓரிறைவனை மட்டும் வழிபடுவதில் மாறுபட்ட கருத்துக்களில் இருந்தாலும். நீதி, நேர்மை, தானதர்மம், நல்லொழுக்கம் இவற்றையே போதிக்கின்றன. அப்பாவிகளை குண்டு வைத்துக் கொல்வதையும், சுட்டுத் தள்ளுவதையும், அநீதி இழைப்பதையும் எந்த மதமும் போதிக்கவில்லை. மதப் பற்றுள்ளவர்கள் ஒருபோதும் இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபட மாட்டார்கள்.

மதத்தைச் சொல்லி, கடவுளின் பெயரால் மக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்தும் கூட்டத்திலுள்ள சிலரே மதவெறியைத் தூண்டி இப்படிப்பட்ட அராஜகச் செயல்களைச் செய்யத் தூண்டுவார்கள். இப்படிப்பட்ட பயங்கரவாதிகள் ஒவ்வொரு மதத்திலும் முன்னர் சொன்னது போல் 15லிருந்து 20 சதவிகிதத்தினரே இருப்பார்கள். இன்னொரு 15 லிருந்து 20 சதவிகிதத்தினர் இந்தப் பயங்கரவாதிகளின் வசீகர வலையில் சிக்காமல் அவர்களை விட்டு ஒதுங்கியே இருப்பார்கள். எஞ்சியுள்ள 60லிருந்து 70 சதவிகிதத்தினர் யாருடைய ஆதிக்கம் மிகைத்திருக்கிறதோ அந்தப் பக்கம் சாய்வார்கள். எந்தக் கட்சி வெற்றியடைகிறதோ அந்தக் கட்சிக்கே தங்களின் வாக்குகளை அளிக்க வேண்டும்; தோற்கிற கட்சிக்கு வாக்களிக்கக் கூடாது என்று எண்ணுகிற மக்களும் அதிகமாகவே இருக்கிறார்கள்.

ஆட்சியிலிருப்பவர்கள் இப்படிப்பட்ட மத வெறியர்கள், பயங்கரவாதிகள் மீது தயவு தாட்சண்யம் காட்டாமல் நடுநிலையோடு உறுதியான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே அவர்களது அராஜக செயல்களிலிருந்து பெரும்பான்மை மக்களைக் காப்பாற்ற முடியும். பெரும்பான்மையினர் நம்மை வெறுத்து விடுவார்களோ, ஓட்டு வங்கி சரிந்து விடுமோ என அஞ்சி, இந்த மத வெறியர்களான பயங்கரவாதிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் அரசு விட்டுவிடுமானால், அவர்களது மத வெறியும் பயங்கரவாதமும் பெருகுமேயல்லாது குறையாது.

அந்த மதவெறியர்களின் ஆதிக்கம் பெருகும்போது மக்கள் அவர்கள் பக்கம் சாயத்தான் செய்வார்கள். அது மட்டுமல்ல. பெரும்பான்மையினரிலுள்ள மதவெறியர்கள் சிறுபான்மையினருக்கு எதிராக கொடுமைகள், அநீதிகள், உரிமைகள் பறிப்பு, கொலை, கொள்ளை, கற்பழிப்பு என பயங்கரவாதத்தை அவிழ்த்துவிடும்போது, சிறுபான்மையினரைப் பாதுகாக்கக் கடமைப்பட்ட அரசும், பெரும்பான்மையினருக்கு அஞ்சி உரிய நடவடிக்கை எடுக்கத் தவறுமானால், சிறுபான்மையினரிலுள்ள சிலர் நம் சமுதாயத்தை நாம்தான் காப்பாற்ற வேண்டும். பாதுகாப்புக் கொடுக்க கடமைப்பட்ட அரசு பாதுகாப்பு கொடுக்காது என நம்பிக்கை இழந்து அவர்களும் இன்னொரு கோணத்தில் தீவிரவாதத்தாலும், பயங்கரவாதத்திலும் ஈடுபடத் தணிகிறார்கள். அல்குர்ஆன் ஆல இம்ரான் 3:186, ஹாமீம் சஜ்தா 41:34 கடுமையாக இச்செயல்களைத் தடுத்திருந்தும் பெரும்பான்மையிலுள்ள மத வெறியர்களின், பயங்கரவாதிகளின் கொடுமைகள் அதிகரிக்க அதிகரிக்க பொறுமை இழந்து சிறுபான்மையினரிலுள்ள சிலர் இப்படி இன உணர்வுக்கு ஆளாகிச் செயல்பட முற்பட்டு விடுகின்றனர்.

இதனால் தொடர் வெடிகுண்டுகள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வருகின்றன. இந்த நிலை நீடிக்குமானால் நமது தாய்த் திருநாடு சுடுகாடாக மாறிவிடும். ஆட்சியில் உள்ளோர் பொறுப்புடனும் கடமை உணர்வுடனும் பதவி ஏற்கும் போது செய்துகொண்டு உறுதி மொழிப்படியும் நடக்க முன் வரவேண்டும்.

பா.ஜ.க. பாபர் மஸ்ஜித் சர்ச்சையை தொடங்க முன்னர் மக்களவையில் அதன் உறுப்பினர்களின் எண்ணிக்கை வெறும் இரண்டு(2) மட்டுமே. எந்த மாநிலத்திலும் அதன் ஆட்சி நடைபெறவில்லை. மஸ்ஜித் சர்ச்சையை ஆரம்பித்து அத்வானி நாடு முழுவதும் இர(த்)த யாத்திரையை தொடங்கி  வன்முறைகளையும், அராஜகங்களையும் அரங்கேற்றினார். நாட்டை இரத்தக் கலரி ஆக்கினார். அப்போது நடுநிலையாளர் மறைந்த முன்னாள் பிரதமர் V.P.சிங் அவர்கள் மட்டுமே அவர் ஆண்டு கொண்டிருந்த மாநிலத்திற்கு உள்ளே அத்வானியை வரவிடாமல் தடுத்தார்; நடுவண் அரசை ஆண்ட காங்கிரஸ் வேடிக்கை பார்த்தது.

அதேபோல் முன்னைய மும்பை கலவரம். பாபர் மஸ்ஜித் இடிப்பு, அதைத் தொடர்ந்து கலவரங்கள், குஜராத் கலவரம், கோவை கலவரம் இவை அனைத்திலும் உரிய நடவடிக்கைகள் எடுக்காமல் இந்துத்துவாவினரை வளரவிட்டது காங்கிரஸ்.

அதன் விளைவு இந்துத்துவாவினர் நடுவண் அரசையும், சில மாநில அரசுகளையும் கைப்பற்றி, முக்கியத் துறைகளில் இந்துத்துவா அதிகாரிகளை நுழைக்க முடிந்தது. அவர்களே இன்றைய காங்கிரஸ் அரசை ஆட்டிப் படைக்கிறார்கள்.

இந்த நிலை காரணமாக அரசு தங்களுக்கு உரிய பாதுகாப்புத் தராது என நம்பிக்கை இழந்து, தங்கள் சமூகத்தைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்ற உந்துதலில் எதிர் தாக்குதலில் ஈடுபட்ட முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த சில தீவிரவாதிகளும் பல அப்பாவிகளும் கைது செய்யப்பட்டு பல்லாண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டு விசாரணை என்ற பெயரால் அநீதி இழைக்கப்பட்டுள்ளனர். ஆக சிறுபான்மையினரிலும் தீவிரவாதிகள் உருவாக ஆட்சியாளர்களே காரணமாயினர்.

ஆக ஓட்டு வங்கிக்கு அஞ்சி சமுதாயத்தில் 10 முதல் 15 சதவிகித தீவிரவாதிகளின் பயங்கரச் செயல்களை முறைப்படி ஒடுக்காமலும், சிறுபான்மையினருக்கு அநீதி இழைத்தும் செயல்படும் காங்கிரஸ் ஆட்சி படிப்படியாக மக்களின் நம்பிக்கையை இழந்து விடுகிறது. பெரும்பான்மையிலுள்ள தீவிரவாதிகளான இந்துத்துவாவினர் அதிகரித்து வருகிறார்கள். முடிவு ஒரு நூற்றாண்டுக்கும் அதிகமான வரலாற்றைப் பெற்ற காங்கிரஸ் கரைந்து, இந்துத்துவாவினர் கையில் ஆட்சி சிக்கும் வகையிலேயே காங்கிரஸ் ஆட்சி செயல்படுகிறது. காங்கிரசுக்குள் இருக்கும் இந்துத்துவாவினரின் துர்போதனையை ஏற்று ஓட்டு வங்கி சரிந்து விடும் என்று பயந்து இந்துத்துவாவினர் மீது உரிய நடவடிக்கைகளை எடுத்து அடக்கி ஒடுக்க முற்படாமல் செயல்படுவது உண்மையிலேயே அவர்களின் ஓட்டு வங்கியை அதிரடியாக சரியச் செய்யத்தான் செய்யும். காங்கிரஸ் காணாமல் போய்விடும். எனவே இப்போதாவது, இந்த மும்பை பயங்கர தாக்குதலுக்குப் பின்னராவது இந்துத்துவாவினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும். அதற்கு முன் வராமல், பாகிஸ்தானையும், முஸ்லிம்களையும் குற்றம் சுமத்தி உண்மையை திசை திருப்பினால், அது ஆட்சி இந்துத்துவாவினர் கையில் சிக்கவே வழி வகுக்கும்.

இந்திய வரலாற்றை உற்றுநோக்கினால் இந்துத்துவாவினர் ஆட்சியாளர்களைக்  கைக்குள் போட்டுக் கொண்டு, அல்லது சூழ்ச்சிகள் செய்து ஆட்சியைக் கைப்பற்றி தங்களின் மனுச் சட்டத்தை அரசு சட்டமாக்கி மிக இந்திய பெரும்பான்மை மண்ணின் மைந்தர்களை கீழ் ஜாதிகளாக, தீண்டத்தகாதவர்களாக, கொத்தடிமைகளை அடிமைப்படுத்தி ஆதிக்கம் செலுத்தி வருவது எளிதாகப் புரியும். மீண்டும் பெரும்பான்மை மண்ணின் மைந்தர்கள் இழிவுபடுத்தப்பட்டு அடிமைகளாக்கப்படுவதற்கே காங்கிரஸ் அரசு வழி கோலுகிறது.

மும்பை பயங்கர தாக்குதல்களில் ஈடுபட்ட 10 பேரும் முஸ்லிம்கள் என்பதில் ஐயம் ஏற்படும் அடையாளம் காணப்படுகிறது. அப்படியே அவர்கள் முஸ்லிம்களாக இருந்தாலும், பாகிஸ்தானிலிருந்து வந்திருந்தாலும் அவர்களை இயக்கிய சூத்திரதாரிகள் சிஐஏ, மொசாத், இந்துத்துவா மதவெறியர்களாக இருப்பார்கள் என்று சந்தேகிக்க போதிய தடங்கள் கிடைக்கின்றன. அவர்கள் குஜராத் வழியாகத்தான் மும்பையினுள் நுழைந்துள்ளார்கள். மோடியின் கழுகுக் கண்களிலிருந்தும், குஜராத் பலரக பாதுகாப்புப் படைகளின் கண்களிலிருந்து, அவர்கள் எதிர் தரப்பு முஸ்லிம்களாக இருந்தால் தப்பிப் பிழைத்து அதுவும் பயங்கர ஆயுதங்களுடன் மும்பைக்குள் நுழைந்திருக்க முடியுமா? இந்த சம்பவம் நடக்கப் போவது தனக்கு முன்னரே தெரியும் என மோடி உளறி இருக்கிறார். ஒபராய் ஓட்டலில் கமாண்டோக்கள் தீவிரவாதிகளுடன் கடுமையாகச் சண்டையிட்டுக் கொண்டிருக்கும்போது மோடி எவ்விதப் பாதுகாப்புமின்றி துணிச்சலாக உள்ளே சென்றுள்ளார். தீவிரவாதிகள் அவருடைய ஆட்களாக இருந்தால் மட்டுமே மோடிக்கு இந்த அசாத்திய துணிச்சல் ஏற்பட்டிருக்க முடியும். அவர் இட்ட கட்டளைப்படி சரியாகச் செயல்படுகிறார்களா என கண்காணிக்கச் சென்றிருக்கலாம்.

மோடி வகையறாக்களால் அனுப்பப்பட்ட பெயர் தாங்கி முஸ்லிம்களாக இல்லாமல் உண்மை முஸ்லிம் தீவிரவாதிகளாக இருந்தால், மாலகான் வெடிகுண்டு பயங்கரத்தில் ஈடுபட்ட R.S.S. பா.ஜ.க. குற்றவாளிகளை தைரியமாக வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து முஸ்லிம்கள் மீது படிந்துள்ள பாவக்கறையை நீக்க, தேசத்துரோகி, மோசக்காரன் போன்ற இந்துத்துவாவினரின் அவமான பேச்சுக்களையும், கொலை மிரட்டல்களையும், குடும்பத்திற்குக் கொடுத்த நெருக்கடிகளையும் பார்த்து அஞ்சி நடுங்கி தனது பணியிலிருந்து ஒதுங்காமல் துணிச்சலுடன், உறுதியுடன் செயல்பட ATS தலைவர் ஹேமந் கர்கரேயையும், அவரது உதவியாளர்கள் இருவரையும் ஒருபோதும் சுட்டுக் கொன்றிருக்க முடியாது. அதற்கு மாறாக அங்கு வந்த மோடியையே சுட்டுக் கொன்றிருப்பார்கள்.

அந்த தீவிரவாதிகள் மோடி வகையறாக்களால் ஏவி விடப்பட்டவர்களாக இருந்தால் மட்டுமே அந்த உண்மையாளர்களை, வீரப் புருஷர்களை, தேச விசுவாசிகளை ஈவு இரக்கமின்றி தேசபிதா மஹாத்மா என மக்களால் அழைக்கப்பட்ட ராமபக்தரான காந்தியை சுட்டுக் கொன்றது போல், ராமபக்தரான கரசேவகர்களை எரித்துக் கொன்றதுபோல் சுட்டுக் கொன்றிருக்க முடியும் என்பதே நடுநிலையான இந்திய இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ, பார்சி, நாத்திக மக்களின் சந்தேகமாகும். அரசு சரியான, நேர்மையான திசையில் புலன் விசாரணையை நடத்தினால் இந்த உண்மை வெளிச்சத்திற்கு வரும். பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படவே செய்வான்.

Previous post:

Next post: