தனிஈழம் சாத்தியமா?

in 2008 டிசம்பர்,பொதுவானவை

 

 தனிஈழம் சாத்தியமா? இப்னு ஹத்தாது.

இலங்கைத் தமிழர்களை சிங்கள அரசு கொன்று குவிப்பதாக தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளும் ஆரம்பிக்கின்றன. போரை தடுத்து நிறுத்த வேண்டும். என மத்திய அரசை பல வழிகளில் நெருக்குகின்றன. மத்திய அரசோ தமிழக மக்களின் போரை நிறுத்தச் சொல்லும் கோரிக்கைக்குச் செவி சாய்ப்பதாக இல்லை. இந்தியப் பிரதமர் இராணுவ நடவடிக்கைகள் மூலம் ஒருபோதும் இப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது என்று திட்டவட்டமாக அறிவித்து விட்டார். தமிழக மக்கள் குறிப்பிக அனைத்து அரசியல் கட்சிகளும் அரசியல் ஆதாயம் தேடமுற்படாமல் நடுநிலையோடு இப்பிரச்சினையை அணுக வேண்டும்.

வரலாற்று ஆய்வுகளின் மூலம் ஆதி மனிதன் தோன்றியது. அன்று லமூரியா கண்டம் என்று அழைக்கப்பட்ட இப்பகுதிதான் என்பதற்குப் பல சான்றுகள் கிடைக்கின்றன. உலகின் மூத்மொழி தமிழ் மொழி எனபதற்கும் சான்றுகள் கிடைக்கின்றன. இன்று நடைமுறையிலிருக்கும் பேச்சுத் தமிழை உற்றுநோக்கும் போது யாழ்ப்பாணம், நெல்லை, இராமநாதபுரம், மதுரை, திருச்சி, விழுப்புரம், சென்னை என தமிழின் உச்சரிப்பு மாற்றம் தமிழ் அப்பகுதியிலிருந்துதான் முதன்முதலில் பேச்சு வழக்கிற்கு வந்துள்ளதை அறிய முடிகிறது. மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளும் ஆரம்ப தமிழின் திரிபுகளே என்பதையும் அறியமுடிகிறது.

ஆக, கடல் பெருக்கத்தால் லமூரியாக் கண்டத்திலிருந்து பிரிந்து தனித்தீவாக அமைந்துள்ள இலங்கையின் மண்ணின் மைந்தர்கள் தமிழர்களே என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. பெளத்தம் சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவின் வடக்குப் பகுதியில் உருவானது என்பதற்கும் அன் பின்னரே அது இலங்கையில் வேரூன்றியது என்பதற்கும் போதிய வரலாற்று சான்றுகள் உள்ளன.

இன்று இலங்கையின் பெரும்பாலான மக்கள் பெளத்தர்களாகவும், சிங்கள மொழி பேசுகிறவர்களாகவும் இருக்கிறார்கள். இலங்கை 1948 சுதந்திரம் அடைவதற்கு முன்னர் வெள்ளையர்களின் ஆட்சியில் யாழ்ப்பாண தமிழர்களே முக்கிய பொறுப்புகளில் இருந்தனர். இந்தியாவிலிருந்து இலங்கை சென்று வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த தமிழர்கள். முஸ்லிம்களின் கையிலேயே இலங்கையின் பெரும்பகுதி பொருளாதாரம் வியாபார அடிப்படையில் இருந்தது. எனவே இந்தியாவிலிருந்து இலங்கை வந்து தொழில், வர்த்தகம் என ஈடுபட்டிருக்கும் இந்திய தமிழர், முஸ்லிம்களை இலங்கையில் இருக்க விடாமல் அவர்களது நாட்டிற்குத் துரத்திவிட்டால், இலங்கையின் முழு ஆதிக்கமும் யாழ்ப்பாணத் தமிழர்களின் கையில் வந்துவிடும். ‘சிங்களயா மோடையா, (G) கெவுண் கண்ட யோதையா? அதாவது ‘சிங்களவர்கள் மூடர்கள் பணியாரம் சாப்பிடும் பிசாசுகள்’ என்ற நினைப்பில் யாழ்ப்பாண தமிழர்கள் கனவு கண்டனர்.

அந்தக் கனவில் 1950களில் இலங்கையிலிருந்த இந்திய தமிழர்கள், முஸ்லிம்களை அங்கிருந்து இந்தியாவுக்கு விரட்டியடிக்க திட்டம் தீட்டி அமுல்படுத்தினர். அதில் அவர்கள் வெற்றியும் கண்டனர். ஆனால் யாழ்ப்பாண தமிழர்கள் கண்ட கனவு பகல் கனவாக ஆகிவிட்டது.

இராமன் ஆண்டால் என்ன? இராவணன் ஆண்டால் என்ன? என்ற மிதப்பில் இருந்த சிங்களவர்கள் சுதாரித்து ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற முற்பட்டனர். இலங்கை ஜனநாயக ஆட்சி முறையில் இருந்தாலும், சிங்களவர் பெரும்பான்மையினராக இருப்பதாலும் தமிழர்களைப் புறந்தள்ளி, சிங்களவர் ஆட்சியில் அமர்ந்தனர்.

இலங்கையின் ஆட்சியையோ கைப்பற்ற கனவு கண்ட தமிழர்கள், தங்களின் கனவு பகல் கனவு ஆனதன் பின்னர், தாங்கள் இருக்கும் பகுதியையே தனி ஈழமாக்கி அங்கு தங்களின் ஆட்சியை நிலைநிறுத்த 1975 லிருந்து பாடுபட்டு வருகின்றனர். அந்த எண்ணத்தில் தமிழின தலைவர்களையே, இவர்களின் தவறான கொள்கையை அவர்கள் ஆதரிக்காததால் ஈவு இரக்கமின்றி கொன்று குவித்ததையும், யாழ்ப்பாணத்தில் இருந்த தமிழ் பேசும் முஸ்லிம்களின் சொத்து சுகங்களைப் பறித்துக் கொண்டு அவர்களில் சிலரை கொன்று குவித்ததையும்,முஸ்லிம்கள் அனைவரையும் அங்கிருந்து விரட்டி அடித்ததையும்,முஸ்லிம்களின் பொருளாதாரத்தைக் கொள்ளை அடித்ததையும்,பள்ளியினுள்ளே சென்று அவர்களைச் சுட்டுப் பொசுக்கியதையும் இந்திய, இலங்கை மக்கள் அறிவார்கள் அவர்களின் ‘தனி ஈழம்’ என்ற கனவாவது நனவாகுமா? அதற்கு இந்திய தமிழர்கள் துணைபோக முடியுமா? நடுவண் அரசு அதை ஆதரிக்குமா? என்துதான் மில்லியன் பாலர் கேள்வி.

இலங்கையின் மண்ணின் மைந்தர்கள் தமிழர்கள் என்பதில் ஐயமில்லை. அந்த அடிப்படையில் தனி ஈழம் சாத்தியமா? இன்று அமெரிக்கா போன்ற சில நாடுகள்  அந்த நாடுகளின் மண்ணின் மைந்தர்களிடம் இல்லை; அந்நாடுகளின் மண்ணின் மைந்தர்களை அடக்கி, ஒடுக்கி அல்லது கொன்றொழித்து அங்கு குடியேறியவர்களே அந்த நாடுகளை இன்று சர்வ சுதந்திரத்துடன் ஆண்டு வருகிறார்கள். எனவே மண்ணின் மைந்தர்கள் என்பதை ஆதாரமாக வைத்து ‘தனி  ஈழம்’ கோரிக்கையை முன்வைப்பது நிறைவேறக் கூடிய ஒன்றல்ல.

இலங்கையை விட பன்மடங்கு பெரிதான நாடு இந்தியா, இந்தியாவிலுள்ள பல மாநிலங்களில் தமிழ் நாடும் ஒன்று தமிழ்நாட்டின் ஒரு சிறு பகுதி போன்றது தான் இலங்கை, அகன்ற தமிழ்நாடே இந்தியாவிலிருந்து பிரிந்து தனித் தமிழ் நாடாக முடியுமா? அப்படிப்பட்ட சிந்தனையை வெளியிட்ட பலர், சில கட்சிகள் இன்று அந்த எண்ணத்தையே கைவிட்டது நாடறிந்த உண்மை.

நடுவண் அரசு அப்படிப்பட்ட சிந்தனையை அடக்கி ஒடுக்கி வைக்காவிட்டால் அது இந்தியா பல குட்டி நாடுகளாக சிதறவே வழி வகுக்கும். எனவே நடுவண் அரசு ஒன்றுபட்ட இந்தியாவை கட்டிக்காக்க முனைப்பாகச் செயல்படுவதை இந்தியாவை நேசிக்கும் யாராவும் குறை காண முடியாது.

இப்போது இலங்கையில் என்ன  நடக்கிறது? விடுதலைப்புலிகள் இயக்கம் தனி ஈழம் கேட்டு இலங்கை அரசை எதிர்த்துப் போரிட்டு வருகிறது. தற்கொலைப்படை தாக்குதல் நடத்தி இலங்கை அரசின் முக்கிய தலைவர்களைக் கொன்று வருகிறது. எனவே புலிகளை எதிர்த்து இலங்கை அரசும் போர் புரிந்து வருகிறது. தமிழக அரசியல் கட்சிகளின் கோரிக்கை என்ன? விடுதலைப் புலிகளை எதிர்த்து இலங்கை அரசு நடத்தும் போரை நிறுத்த வேணடும். நடுவண் அரசு இவர்களின் கோரிக்கையை ஏற்று இலங்கை அரசுக்கு எதிரான கடும் நடவடிக்கைகளில் இறங்க வேண்டும் என்பதே!

தமிழக அரசியல் கட்சிகளின் இக்கோரிக்கையை நடுவண் அரசு ஏற்குமா? ஒருபோதும் ஏற்காது. அதற்கு மாறாக இலங்கை அரசின் கரத்தை வலுப்படுத்த நடுவண் அரசு தனது மறைமுக உதவிகளைச் செய்யத்தான் செய்யும், ஏன்? சின்னஞ்சிறிய நாடான இலங்கையிலிருந்து கடுகு அளவான தனி ஈழத்தைப் பிரித்தெடுக்க உதவுமாறு நடுவண் அரசை தமிழக அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்து நெருக்கிறார்கள்.

நடுவண் அரசும் அதற்குத் துணை போய் தனி ஈழம் இலங்கையிலிருந்து பிரியுமானால், பின்னர் என்ன நடக்கும்? அதையே காரணம் காட்டி, நடுவண் அரசும் அதற்குத் துணை போனதைச் சுட்டிக் காட்டி இந்தியாவிலுள்ள ஒவ்வொரு மாநிலமும் தனித்தனி நாடாக ஆக கோரிக்கை வைக்கும்; முற்படும். நடுவண் அரசு இலங்கை அரசுக்கு எதிராக, தனி ஈழத்திற்கு துணைபோன நிலையில், இந்திய மாநிலங்களின் அதே முறையிலான கோரிக்கையை நிராகரிக்க தக்க முகாந்திரம் உண்டா?

அப்படியானால் தமிழக அரசியல் கட்சிகள் என்ன நினைப்போடு, இலங்கையில் விடுதலைப் புலிகளை எதிர்த்து இலங்கை அரசு நடத்தும் போரை தடுத்து நிறுத்தும்படி நடுவண் அரசிடம் கோரிக்கை வைக்கின்றன. அரசியல் ஆதாயத்தைப் குறியாகக் கொண்டு செயல்படுகிறார் களே அல்லாமல், மக்கள் நலனில் அக்கறையுடன் செயல்படவில்லை என்பதுதானே வெளிச்சத்திற்கு வருகிறது.

இப்படி அரசியல் ஆதாயத்தை நோக்கமாகக் கொண்டு மாநில அரசியல் கட்சிகள் செயல்படுமானால், அதனால் இலங்கைத் தமிழர்களுக்கு மட்டுமல்ல; தமிழக மக்களுக்கும், குறிப்பாக இராமேஸ்வரப் பகுதியிலுள்ள பெரும் கேடுகள்தான் விளையும். இந்தியாவிற்குச் சொந்தமான கச்சைத் தீவு நடுவண் அரசால் இலங்கைக்கு ஏன் தரை வார்த்துக்காடுக்கொப்பட்டது? அதனால் அப்பகுதியில் மீன்பிடிக்கச் செல்லும்  மீனவர்கள் படும் கஷ்டங்களைச் சொல்லித் தீர்க்க முடியுமா? இதுவரை எத்தனை தமிழக் மீனவர்கள் இலங்கை இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியாகி இருக்கிறார்கள்? சிறைப்ட்டிருக்கிறார்கள்? தனி ஈழப் பிரச்சினையில் தமிழக அரசியல் கட்சிகளின், அரசியல் ஆதாய அணுகு முறையே இதற்கெல்லாம் மூல காரணம் என்பதை நடுநிலையாளர்கள் மறுக்க முடியுமா? இந்தத் தவறான அணுகுமுறைத் தொடரும் வரை இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகளும் தீரப்போவதில்லை. தமிழக  மீனவர்களின் கஷ்ட நஷ்டங்களும் பலிகளும் தீரப் போவதில்லை. மேலும் மேலும் அதிகரிக்கவே செய்யும்.

நடுவண் அரசு தமிழக அரசியல் கட்சிகளின் இந்த கோரிக்கையை ஒருபோதும் ஏற்கப் போவதில்லை. காரணம் அதனால் இந்திய நாட்டின் இறையாண்மைக்குப் பெரும் அச்சுருத்தல் ஏற்படும் என்பதை நடுவண் அரசு நன்கு விளங்கி வைத்திருக்கிறது. அதனால் இலங்கை அரசுக்கு, அதன் கையை வலுப்படுத்த பல வகைகளிலும் மறைமுகமாக நடுவண் அரசு உதவி செய்யத்தான் செய்யும். தமிழக அரசியல் கட்சிகளின் கூக்குரலை அது மதிப்பதாக இல்லை.

நடுவண் அரசின் இந்த அணுகுமுறையில் நியாயம் இருப்பதாகவே நடுநிலை அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

இலங்கைத் தமிழர்களின் துன்பங்கள், துயரங்கள், அமைதி இழந்த நிலை மாறி அவர்களும் நியாயமான உரிமைகளுடன் வாழ வேண்டும் என்று உண்மையிலேயே ஆர்வப்படும் தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து, விடுதலைப் புலிகளின் ‘தனி ஈழம்’ கோரிக்கையை கைவிடச் சொல்ல வேண்டும். தமிழகத்தில் சில தலைவர்கள், கட்சிகள் தனித்தமிழ் நாட்டுக் கோரிக்கையை முன் வைத்துவிட்டு, பின்னர் அந்தக் கோரிக்கையை கைவிட்டது போல்.

இந்தியாவில் பல  மொழி, இன அடிப்படையிலான மாநிலங்கள் நடுவண் அரசின் கீழ் நடுவண் அரசிலும் பங்குபெற்று மாநில அரசுகளாகச் செயல்படுவது போல், இலங்கையிலும் தமிழ் பேசும் மக்கள் ஒரு மாநில அரசாகச் செயல்படலாம். எப்படி சில முக்கியத்துறைகள் நடுவண் அரசின் கட்டுப்பாட்டிலும், இதர அனைத்துத் துறைகளும் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டிலும் இருப்பதுபோல், இலங்கையிலும் முக்கியத்துறைகள் மைய அரசின்  கட்டுப்பாட்டிலும் இருக்கும் வகையில் அரசியல் சாசனம் அமைத்து அதன் மூலம் அமைதி ஏற்படுத்தலாம்.

இந்தியாவின் நடுவண் அரசும், தமிழக அரசும், தமிழக அரசியல் கட்சிகளும் ஒன்றுபட்டு இலங்கை சிங்கள அரசையும், தனி ஈழத்திற்காகப் போராடும் விடுதலைப் புலிகளையும் சம்மதிக்க வைத்தால் மட்டுமே இலங்கை தமிழர் பிரச்சினைக்கு நல்ல முடிவு ஏற்படும்.

தமிழக மக்களுக்கும், தமிழக அரசியல் கட்சிகளுக்கும் இலங்கைத் தமிழர்கள் மீது உண்மையிலேயே அக்கறை இருக்குமானால் இப்படியொரு முடிவுக்கு, இலங்கையின் இரு சாராரையும் வற்புறுத்தி ஏற்கச் செய்ய வேண்டும். அதன் மூலம்  மட்டுமே கடந்த 50 ஆண்டுகளாக அல்லல்பட்டு வரும் இலங்கைத் தமிழர்களின் வாழ்வு சிறக்க வழிபிறக்கும். இந்த நிலை நீடிக்குமானால் அது இலங்கைத் தமிழர்களுக்கும், இந்திய மீனவர்களுக்கும் மேலும் ஆபத்தையே உண்டாக்கும்.

உலக அளவில் விடுதலைப் புலிகளுக்கு இருந்து வரும் மதிப்புக் குறைந்து வருகிறது. பல நாடுகள் அந்த இயக்கத்தை தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவித்துள்ளன. அந்த  இயக்கத்திற்கு அளித்து வந்த உதவிகளை பல நாடுகள் நிறுத்திக் கொண்டுள்ளன. இந்திய நடுவண் அரசும் புலிகள் இயக்கத்தை நசுக்கவே ஆர்வம் காட்டுகிறது. எனவே புலிகள் இயக்கம் எதிர்த்துப் போராடும் வலுவைச் சிறிது சிறிதாக இழந்து வருகிறது. அதற்கு மாறாக விடுதலைப் புலிகளின் கோரிக்கையிலுள்ள அதாவது சின்னஞ்சிறு இலங்கைத் தீவைத் துண்டாக்கும் கோரிக்கையிலுள்ள ஆபத்தைப் பல நாடுகளும் உணர்ந்து வருவதால் சில நாடுகள் பகிரங்கமாகவும், சில நாடுகள் மறைமுகமாகவும் சிங்கள அரசுக்கு உதவி வருகின்றன. சிங்கள அரசின் கை ஓங்கியுள்ளது. அதனால் தான் அது போர் நிறுத்தத்தை ஒப்புக் கொள்ள மறுக்கிறது.

எனவே மேலும் காலதாமதம் செய்யாமல், தமிழக மக்களும், தமிழக அரசியல் கட்சிகளும், நடுவண் அரசின் கரத்தை வலுப்படுத்தி, அதன் மூலம் இந்தியாவில் நடுவண் அரசின் கட்டுப்பாட்டில் மாநில அரசுகள் இருப்பதுபோல் இலங்கையிலும் மைய அரசின் கட்டுப்பாட்டில், தமிழ் மாநில அரசு செயல்படும் விதமாக விடுதலை புலிகளையும், சிங்கள அரசையும் ஒப்புக் கொள்ள வைக்கும் முயற்சியில் ஈடுபட்டால் மட்டுமே இலங்கைக்கு தமிழருக்கு விடிவுகாலம் பிறக்கும்.

இலங்கை அரசு சிங்கள மக்களின் விருப்பத்திற்கேற்றவாறு செயல்படுவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. ஜனநாயக ஆட்சி முறையில் இதைத் தவிர்க்க முடியாது. ஆட்சியாளர்களும் அரசியல் கட்சிகளும் நீதமோ, அநீதமோ, தர்மமோ, அதர்மமோ பெரும்பான்மை மக்களைத் திருப்திபடுத்தும் செயல்பாடுகளையே தேர்ந்தெப்பார்கள். காரணம் ஆட்சியில் அமர அந்த பெரும்பான்மை மக்களின் ஆதரவு தேவை.

இந்தியா,பாகிஸ்தான் இரு நாடுகளினதும் காஷ்மீர் பற்றிய அணுகுமுறையை நோட்டமிட்டுப் பாருங்கள். இந்தியா நம் இந்திய மக்களுக்குச் சாதகமாக இருக்கிறது. பாகிஸ்தான் அந்த மக்களுக்குச் சாதகமாக இருக்கிறது. இதற்கிடையில் காஷ்மீரில், காஷ்மீர் பெரும்பான்மை மக்களை திருப்திபடுத்தும் நோக்கில் அங்குள்ள அரசியல் கட்சிகள் தனிநாடு கோரிக்கையை வைக்கின்றன. காஷ்மீர் விவகாரத்தைத் தீர்ப்பது பற்றி அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாரூக் ஹுஸைன் ஒபாமா தெரிவித்த கருத்தை இந்தியா கடுமையாக கண்டித்து காஷ்மீர் பிரச்சினையில் அந்நிய நாடுகளின் தலையீடு தேவையே இல்லை என்று அறிவிக்கை விட்டதை அனைவரும் அறிவோம். இந்த நிலையில் இந்தியா, இவங்கையின் உளநாட்டுப் பிரச்சினையில் தலையிடுவதை அமெரிக்கா போன்ற வல்லரசுகள் அனுமதிக்குமா? என்பதையும் தமிழக அரசியல் கட்சிகளும், மக்களும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

புலிகள் அப்போது இந்திய பிரதமராக இருந்த ராஜீவ்காந்தியை தற்கொலைப் பெண் மூலம் கொன்ற சம்பவம் இடம்பெறாமல் இருந்தாலும் இந்தியா, இலங்கையின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடாது என்பதை அறியாதவர்கள் அறிவாளிகளா?

நம் இந்திய நாட்டையே எடுத்துக் கொள்ளுங்கள். தென்னகத்திலுள்ள தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா நான்கு மாநிலங்களை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த நான்கு மாநிலங்களுக்குள்ள நதிநீர்ப் பிரச்சினை. குடிநீர்த் திட்டம் இவற்றில் நீதி, நியாயம் தர்மம் அதர்மம் கவனிக்கப்படுகிறதா? உச்சநீதி மன்றத்தின் தீர்ப்புகளை மதித்து நடக்கும் உயர் பண்பு காணப்படுகிறதா? அல்லது அதற்கு மாறாக தங்கள், தங்கள் மாநிலங்களிலுள்ள பெரும்பான்மை மக்களின் ஆதரவை நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறார்களா? சொல்லுங்கள். இதுதான் ஜனாநாயகம். இந்த நிலையில் இலங்கை அரசு அந்த நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கு விரோதமாக தமிழக மக்களின் கோரிக்கையை ஏற்க வேண்டும் என்று எண்ணுவது யாருடைய அறிவீனம் என்பதை தமிழக அரசியல் கட்சிகள். நடிகர், நடிகைகள், மக்கள் சிந்தித்து உணரக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.

அதுவும் இன்றைய சூழலில் ஜனநாயகம் பணநாயகமாக மாறிவிட்ட நிலையில், ஊழலற்ற ஆட்சிளையோ, மதம், ஜாதி, இனம், மொழி, இவற்றைக் கடந்து, நீதி, நியாயம், தர்மம், மனித நேயம் இவற்றை மதித்து நடக்கும் ஆட்சியாளர்களைக் காண்பது அரிதாகும். மன்னராட்சியாக இருந்தாலும், சரிவாதிகார ஆட்சியாக இருந்தாலும். கம்யூசிக ஆட்சியாக இருந்தாலும், ஜனநாயக ஆட்சியாக இருந்தாலும், மக்களில் ஒரு சிலருக்கோ, பலருக்கோ, பெரும்பான்மையினருக்கோ சாதகமாக அமையுமே அல்லாது அனைத்து மக்களுக்கும் சாதகமாக ஒருபோதும் அமையாது. மனிதன் வகுக்கும் அரசியல் சட்டம். அதாவது மனிதச் சட்டமாக, மனு சட்டமாக அநீதமாகவே அமையும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியுமா? ஆம்! மனிதச் சட்டம் மனு சட்டமே!

மனதனைப் படைத்த இறைவன் மனிதனுக்கென்று கொடுத்துள்ள இறையாட்சியை என்று இந்த மனித வர்க்கம் ஏற்று நடக்க முன்வருகிறதோ அப்போதுதான் நீதியான ஆட்சியையும், அனைத்து மக்களுக்கும் சமநிலையிலான உரிமைகள், கடமைகள் முதுல் வளமான, சுபீட்சமான, அமைதியான வாழ்வு கிடைக்க வழி பிறக்கும்.

ஹிந்துக்களிடம் இருக்கும் வேதங்களும், யூதர்களிடம் இருக்கும் தோராவும், சிறிஸ்தவர்களிடம் இருக்கும் பைபிளும் முன்னர் இறைவனால் அளிக்கப்பட்டிருந்தாலும் அவை செல்லாத நோட்டுக்கள் போல் வழக்கொழிந்து விட்டன. மேலும் புரோகிதர்கள் அவற்றில் கலப்படங்கள் செய்து அவற்றின் அசல் நிலையை மாற்றிவிட்டனர். உலக மக்கள் அனைவருக்குமாக(முஸ்லிம்களுக்கு மட்டும் சொந்தம் அல்ல) ஏகன் இறைவனால் இறுதியாக அருளப்பட்ட நெறிநூல் அல்குர்ஆன் அது இறக்கப்பட்ட அரபி மொழியிலேயே பதிந்து பாதுகாக்கப்பட்டுள்ள நிலையில், முஸ்லிம் மதப் புரோகிதர்கள் அல்குர்ஆன் போதனை என்ற பெயராலேயே அல்குர்ஆன் போதனை என்ற பெயராலேயே கலப்படங்கள் செய்து முஸ்லிம்களை மூட நம்பிக்கைகளிலும், அநாச்சாரங்களிலும் இறைவனுக்கு இணை வைக்கும் கொடிய செயல்களிலும் சிக்க வைத்திருக்கும்போது, மூல நெறி நூல்கள் பதிந்து பாதுகாக்கப்படாத ஹிந்துக்கள், யூதர்கள், கிறிஸ்தவர்கள் புரோகிதர்களால்-மத குருமார்களால் எந்த அளவு ஏமாற்றப்பட்டு வருகிறார்கள் என்பதை எளிதாக உணர முடியும். எனவே மனிதன் அமைத்த மனு சட்டங்களை புறந்தள்ளி இறைச் சட்டம் அமுலுக்கு மனு சட்டங்களை புறந்தள்ளி இறைச் சட்டம் அமுலுக்கு வந்தால் மட்டுமே இன்றைய உலகின் அதிமுக்கிய தேவையான அமைதி கிட்டும். அறிஞர் பெர்னாட்ஷாவின் கூற்றும் இதுவே.

****************

Previous post:

Next post: