ஐயமும்! தெளிவும்!!

in 2009 மே,ஐயமும்! தெளிவும்!!

ஐயமும்! தெளிவும்!!

ஐயம் : குர்ஆன், ஹதீஸை மட்டும் பின்பற்ற வேண்டும் என்ற கொள்கை எனக்கிருக்கிறது. நான் வெளியூர் சென்ற இடத்தில் சில நாட்கள் தங்கும்படியாகி விட்டது. முதல் நாள் அன்று ஜும்ஆ தினம். பக்கத்திலுள்ள பள்ளிக்குச் சென்றேன்;: அந்த பள்ளி இமாம் ஒரு மௌலவி, ஜும்ஆ பயானில் கெட்டவார்த்தைகளை பயன் படுத்தாத குறைதான். மற்றபடி குர்ஆன், ஹதீஸ் கொள்கையுடையவர்;களை கடுமை யாகத் திட்டி பயான் செய்தார். பொறுமை யாயிருக்கும் எனக்கே கோபம் வந்தது. விசாரித் ததில், அவரது ஜும்ஆ பயான்கள் அப்படித் தான் இருக்குமாம். அடுத்த நாள் சனிக்கிழமை கடை வீதியில் அந்த இமாம் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக் கொண்டார்.

முஸ்லிம்கள் பலரிருந்தும் எவரும் அவரு க்கு உதவ முன் வரவில்லை. அவர் பக்கம் நியாயம் இருப்பதாக எனக்குப் பட்டது. எனவே அவருக்கு உதவி செய்தேன். பண உதவி அல்ல. ஆனால் மிகப்பெரிய உதவி. நான் உதவி செய்திருக்காவிட்டால், அவர் பலர் முன்னிலையில் மிகவும் கேவலமாக அசிங்கப் பட்டிருப்பார். இதன் பிறகு நான் அந்த ஊரில் இருந்தவரை, தொழுவதற்கு அப்பள்ளிக்குத் தான் சென்று கொண்டிருந்தேன். இதனால் எனக்கும் அவருக்கும் நட்பு ஏற்பட்டது. ஒரு நாள் அந்த மௌலவி என்னிடம் “கூட்டு துஆவில் நீங்கள் கலந்து கொள்வதில்லை. 7:55 வசனத்தில் அந்தரங்கமாக துஆ கேட்கும் படி சொல்லப்பட்டிருப்பதால், உங்கள் ஆட்கள் அனைவருமே கூட்டு துஆவில் கலந்து கொள் வதில்லை என்று கூறுகிறார்கள். அல்ஹம்து சூராவும் ஒரு துஆதானே. நபி(ஸல்) அவர்கள் அதைக் கூட்டாக சத்தமாகத்தானே கேட்டிருக் கிறரார்கள்? சத்தமாக ஆமீன் சொல்லும் படியும் கூறியிருக்கிறார்களே. அது மட்டும் இல்லை. மழைத் தொழுகையில் 2 கைகளையும் ஏந்தி கூட்டு துஆ செய்திருக்கிறார்கள். அதிலும் சத்தமாகத்தானே துஆ கேட்டுள்ளார்;கள்? இப்படி இருக்கும்போது ஃபர்ளு தொழுகைக் குப்பின் கூட்டு துஆ கேட்பதில் தவறில்லை என்று உங்கள் ஆட்களிடம் சொன்னால் பதிலே இல்லையே – ஏன்?” என்று என்னைக் கேட்டார். என்னாலும் பதில் எதுவும் சொல்ல முடிய வில்லை. விளக்கம் தரவும். (இதே கருத்து டைய கேள்விகள் பலவற்றை வாசகர்கள் அனுப்பியிருக்கிறார்கள்) சு. இஷ்மத் பாஷா, மதுரை.

தெளிவு : எந்தக் கொள்கையிலிருந்தாலும், தன்னை முஸ்லிம் எனக்கூறிக் கொள்ளும் ஒருவருக்கு, அதுவும் உங்களைத் திட்டியதை யும் பொருட்படுத்தாமல், நியாயத்திற்காக மட்டுமே உதவி செய்த உங்களின் செயலைக் கண்டு பெருமிதம் அடைகிறோம். ஒரு முஸ்லி மிடம் இருக்கவேண்டிய உயரிய பண்;பல்லவா இது? ஆனால் பெரும்பான்மை மௌலவிகள் குர்ஆன், ஹதீஸை போதிப்பவர்களை எதிரி களாய் நினைக்கின்றனர். குர்ஆன், ஹதீஸைக் கொண்டு நம்மை வென்றிட முடியாது என்ற ஒரே காரணத்தினால்தான் திட்டித் தீர்க் கிறார்கள்.

அந்த மௌலவி உங்களிடம் எழுப்பிய கேள்விகளை, பல மௌலவிகள் மக்களிடம் கூறிப் பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள். மௌலவிகள் சிந்தித்துப் பார்த்திருந்தால், நபி(ஸல்) அவர்கள் தன்னை முழுக்க முழுக்க குர்ஆனுக்கு அர்ப்பணித்துக் கொண்ட உண் மையை விளங்கியிருப்பார்கள். சிந்திக்கத் தவறிய மௌலவிகள், தங்களை அறிஞர்கள் (உலமாக்கள்) என்றெல்லாம் கூறி, தங்களுக் குத் தாங்களே புகழ்ந்து கொள்கிறார்கள். “உங்களுக்குத் தெரியாததை இறை நெறியை (திக்ர்) உடையவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்”(16:43, 21:7) என்ற குர்ஆன் வசனத்தையும் இவர்கள் பொருட் படுத்தவில்லை. தங்களை அறிஞர்கள் என்று கூறிக் கொள்வதால், மற்ற அனைவரையும் பாமரர்களாக எண்ணிக் கொண்டனர் போலும். அதனால் தங்களுக்;குள்ள மார்க்க சந்தேகங் களை இறை நெறியை (அல்குர்ஆன்) உடைய வர்களை அணுகித் தெரிந்து கொள்வதில்லை. இவர்கள் குர்ஆனையும், ஹதீஸையும் படித்திராத காரணத்தால், அரைகுறையாகத் தெரிந்து கொண்டதை வைத்துக் கொண்டு, தாங்களும் குழம்பிப் போய் மக்களையும் குழப்பி வருகிறார்கள். தாங்கள் குழப்பவாதிகள் என்பது மக்களுக்குத் தெரிந்து விடக்கூடாது என்பதற் காக, இவர்கள் படித்திராத குர்ஆன், ஹதீஸை போதிப்பவர்களை குழப்பவாதிகள் எனக்கூறி மகிழ்ச்சி அடைந்து கொள்கின்றனர்.

பேசப்படுவது ஃபர்ளு தொழுகைக்குப் பிறகு கேட்கப்படும் கூட்டு துஆ பற்றி. ஆனால் பதிலளிக் கப்படுவதோ, மொட்டைத் தலைக்கும் முழங் காலுக்கும் முடிச்சு போட்டு சம்பந்தமே இல்லாத மழைத்தொழுகை துஆ. அல்ஹம்து சூரா துஆ பற்றி. ஃபர்ளு தொழுகைக்குப் பின் நபி(ஸல்) அவர்கள் கூட்டு துஆ செய்ததாக ஹதீஸ் ஆதார மிருந்தால், எப்போதோ அந்த ஆதாரத்தைக் காட்டி யிருப்பார்கள். மழைத்தொழுகை துஆவையும், அல்ஹம்து சூரா துஆவையும் ஆதாரம் காட்டுவ திலிருந்தே, ஃபர்ளு தொழுகைக்குப் பின் கூட்டு துஆ இல்லவே இல்லை என்பதை சொல்லாமல் சொல்லி வருகிறார்கள் என்பது தெரிகிறதல்லவா?

அப்படியானால் நபி(ஸல்) அவர்கள் தமது வாழ்நாளில் ஒரு முறை கூட ஓதிக் காட்டித் தராத, ஃபர்ளு தொழுகைக்குப் பின் உள்ள கூட்டு துஆவை இவர்கள் புதிதாக-பித்அத்தாக உண்டாக்கி இருக் கிறார்கள் என்பதையும் ஒப்புக் கொள்கிறார்கள்.

1. 7:55 வசனம்: “உங்களுடைய இறைவ னிடம் பணிவாகவும், அந்தரங்கமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள்; வரம்பு மீறியவர்களை அவன் நேசிப்பதில்லை”. அல்குர்ஆன் 7:55

2. அல்ஹம்து சூராவிலுள்ள துஆ: “……..நீ எங்களை நேர் வழியில் நடத்துவாயாக! நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி(யில்)! உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல் வழி தவறியவர்களின் வழியும் அல்ல”. அல்குர்ஆன்1:5,6,7

7:55 வசனத்தில் அந்தரங்கமாக துஆ செய்யும்படிக் கட்டளையிட்ட அதே இறைவன் தான், அல்ஹம்து சூராவில் என்ன துஆ கேட்க வேண்டும் என்பதை வெளிப்படையாக்;கி விட்டான். இதைத் தவிர வேறெந்த துஆவை யும் அல்ஹம்து சூராவில் நாம் கேட்க முடியாது. எனவே அல்ஹம்து சூராவிலுள்ள துஆக்கள் அந்தரங்கமானவையல்ல் வெளிப் படையானவை, பொதுவானவை. இதனால் தான் ஃபர்ளு தொழுகைக்குப் பின் கூட்டு துஆ ஓதிக் காண்பித்துத் தராத நபி(ஸல்) அவர்கள், சப்தமாக ஓத வேண்டிய தொழுகைகளின் ரகா அத்துகளில் அல்ஹம்து சூராவையும் அதிலுள்ள துஆவையும் சப்தமாகவும், வெளிப் படையாகவும் ஓதி ஒரு அழகிய முன் மாதிரியை ஏற்படுத்தித் தந்துள்ளார்கள். அது மட்டுமில்லாமல், இந்த துஆக்களுக்கு தாங்களும் ஆமீன் கூறி, பின் தொடர்ந்து தொழுபவர்களையும் ஆமீன் கூறும்படி கட்டளையிட்டிருக்கிறார்கள். அதற்கான ஹதீஸ் ஆதாரங்களாவன:

1. “இமாம் ஆமீன் என்று கூறும்போது, நீங்களும் ஆமீன் கூறுங்கள். ஏனெனில் நிச்சயமாக எவருடைய ஆமீன் மலக்கு களின்; ஆமீனுக்கு ஒத்ததாக அமைந்து விடுகிறதோ, அவரது முன் செய்த பாவங் கள் மன்னிக்கப்பட்டு விடுகின்றன” என்று நபி(ஸல்) அவர்கள் அருளினார்கள்.
அறிவிப்பவர்:அபூஹ_ரைரா(ரழி), நூல்:புகாரி, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதி, நஸயி, முஅத்தா.

2. “நபி(ஸல்) அவர்கள் தொழுகையில் வழழ்ழால்லீன் என்று கூறியதும் ஆமீன் என்று முதல் ஸஃப்புக்குக் கேட்கும்படி யாகக் கூறுவார்கள்”.

அறிவிப்பவர்:அபூஹ{ரா(ரழி), நூல்:அபூதாவூது, இப்னு மாஜ்ஜா, தாரகுத்னீ, ஹாகிம், பைஹகீ.

3. “நபி(ஸல்) அவர்கள் கைரில் மஃழுபி அலைஹிம் வழழழால்லீன் என்று தாம் ஓதிய பின், ஆமீன் என்று அவர்கள் நீட்டி சப்தத்தை உயர்த்துவதை நான் கேட்டிருக்கிறேன்”;.

அறிவிப்பவர்: வாயில் இப்னு ஹ{ஜ்ரு(ரழி), நூல் : அபூதாவூது, திர்மிதி, அஹமது, தாரகுத்;னீ.

4. “நபி(ஸல்) அவர்கள், கைரில் மஃழூபி அலைஹிம் வழழ்ழால்லீன் என்று தாம் ஓதி முடித்தவுடன், முதல் ஸஃப்பில் இருப் போருக்கு கேட்கும்படியாக ‘ ஆமீன்’ என்று கூறுவார்கள். பின்னர் அங்குள்ளவர்களின் ‘ ஆமீன்’ சப்பதத்தால், பள்ளிவாசல் எதிரொ லிக்கும்”. அறிவிப்பவர்: அபூஹ{ரா(ரழி), நூல்: இப்னு மாஜ்ஜா, தாரகுத்னீ, பைஹகீ.

5. ‘ ஆமீன்’ என்று கூறுவது துஆவாகும். இப்னு ஜூபைர்(ரழி) அவர்களும், அவர் களுக்குப் பின்னால் நின்று தொழுதவர் களும் பள்ளிவாயில் எதிரொலிக்கும்படி யாக ஆமீன் கூறுவார்கள். அறிவிப்பவர்: அதஃஉ, நூல்: புகாரி

அல்ஹம்து சூராவிலுள்ள துஆக்கள் அந்தரங் கமானவையல்ல் வெளிப்படையானவை; துஆ வின் இறுதியில் இமாமும், முக்ததிகளும் ஆக அனைவரும் ஆமீன் கூற வேண்டும் என்பதும் வெளிப்படை. அப்படி ஆமீன் கூறும் போது, மலக்குகளும் ஆமீன் கூறுகிறார்கள் என்பதும் வெளிப்படை. மலக்குகளின் ஆமீனுக்கு எவரது ஆமீன் ஒத்ததாக அமைந்து விடுகிறதோ, அவரது முன்பாவங்கள் மன்னிக் கப்பட்டு விடுகின்றன என்பதும் வெளிப்படை.

இந்த நபி தமது இச்சைப்படி (சுயமாக எதையும்) பேசுவதில்லை என்று அல்லாஹ் (53:3) கூறியிருப்பதால், நபி(ஸல்) அவர்கள் அல்ஹம்து சூராவை சப்தமாக ஓதியதற்கும், ஆமீன் சப்தமாகக் கூறியதற்கும், மற்றவர் களையும் சப்தமாகக் கூறும்படி கட்டளை யிட்டதற்கும் அல்லாஹ்வின் அங்கீகாரம் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

எனவே 7:55 வசனம் தெரிவிக்கும் அந்தரங்க பிரார்த்தனை, அல்ஹம்து சூரா விலுள்ள வெளிப்படையான துஆவைக் குறிக்கவில்லை. மாறாக, மக்களின் அந்தரங்கமான துஆக்களையே குறிக் கின்றது என்பது தெளிவு.

முஸ்லிம்களிலிருந்து பிரிவினையை உண்டாக்கிய ஹனஃபிகள் மிகவும் பரிதாபத் திற்குரியவர்கள்! தொழுகையில் ஆமீன் சொல் வதனால், முன் பாவங்கள் மன்னிக்கப்படும் உயரிய நிலையை அடையும் பாக்கியத்தை இழந்து விட்டார்கள். குர்ஆனையும், ஹதீஸை யும் விட்டு விட்டு, மத்ஹபுகளுக்கு வக்காலத்து வாங்கும் மௌலவிகளைப் பின் பற்றினால் நஷ்டம் அடைய வேண்டியதுதான். இது உறுதி.

.“அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளில் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லித் துதிப்பதைத் தடுத்து, அவற்றைப் பாழாக்க முயல்பவனை விட பெரிய கொடுமைக் காரன் யார் இருக்க முடியும்?…”;. என்று 2:114வது வசனத்திலும், 72:18 வசனத்திலும் அல்லாஹ், மஸ்ஜிதுகள் அல்லாஹ்வுடையவை என்று அறிவித்ததை தூர எறிந்து விட்டு, இது ஹனஃபி பள்ளி; இங்கு ஆமீன் சப்தமாகச் சொல்லக் கூடாது என அறிவிப்புப் பலகை களை பள்ளியிலே தொங்கவிடும் இந்த அறிஞர்களுக்கு (உலமாக்களுக்கு) அல்லாஹ் வின் அச்சம் எள்ளளவும் கிடையாதா?

அவர்கள் ஆமீன் சப்தமாகச் சொல்லாதது மட்டுமல்ல, நபிவழியில் சப்தமாக ஆமீன் சொல்பவர்களையும் தடுக்கும் இக்கொடூரச் செயலை செய்யும் மவ்லவிகளை அல்லாஹ் வுக்கு அஞ்சுபவர்களாக – ஆலிம்களாக ஏற்றுக் கொள்ள முடியுமா?

அடுத்து மழைக்கான பிரார்த்தனை பற்றி கீழ்க்காணும் ஹதீஸில் அறியலாம்.

ஜும்ஆ நாளில் நபி(ஸல்) அவர்கள் நின்று கொண்டு உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது, ‘ தாருல்களா’ என்ற வாசல் வழியாக ஒருவர் பள்ளியினுள்; வந்தார். நின்;றவாறே நபி (ஸல்) அவர்களை நோக்கி, ‘அல்லாஹ்வின் தூதரே! செல்வங்கள் அழிந்து விட்டன. எனவே எங்களுக்கு மழை பொழியச் செய்யுமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் தமது கைகளை உயர்த்தி, ‘ இறைவா எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக! இறைவா! எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக! இறைவா! எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக!’ என்று பிரார்த்தித்தார்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! வானத்தில் திரண்ட மேகத்தையோ, பிரிந்து கிடக்கும் மேகங்களையோ நாங்கள் காணவில்லை. எங்களுக்கும் (அதாவது மதீனாவுக்கும்) ஸல்ஃ எனும் மலைக்குமிடையே எந்த வீடும் கட்டிடமும் இருக்கவில்லை. (வெட்ட வெளியாக இருந்தது). அப்போது அம்மலைக் குப் பின்புற மிருந்து கேடயம் போன்று ஒரு மேகம் தோன்றி வானத்தின் மையப் பகுதிக்கு வந்து சிதறி மழை பொழிந்தது. அல்லாஹ்வின் மீது ஆணையாக 6 நாட்கள் சூரியனையே நாங்கள் பார்க்க வில்லை. அடுத்த ஜும்ஆவில் நபி(ஸல்) அவர்கள் நின்று கொண்டு உரை நிகழ்த்தும் போது, ஒரு மனிதர் அதே வாசல் வழியாக வந்தார். நின்றவாறே நபி(ஸல்) அவர்களை நோக்கி, அல்லாஹ்வின் தூதரே! செல்வங்கள் அழிந்துவிட்டன, பாதைகள் துண்டிக்கப்பட்டு விட்டன. எனவே, மழையை நிறுத்துமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள் என்றார். உடன் நபி(ஸல்) அவர்கள் தம் கைகளை உயர்த்தி, இறைவா! எங்கள் சுற்றுப் புறங் களில் (இம் மழையைப் பொழியச் செய்வா யாக!), எங்களுக்குப் பாதகமாக இதை நீ ஆக்கிவிடாதே. இறைவா! மணற் குன்றுகள், மலைகள், ஓடைகள், விளை நிலங்கள் ஆகிய வற்றின் மீது (இம் மழையைப் பொழியச் செய்வாயாக!) என்று பிரார்த்தித்தார்கள். உடனே மழை நின்றது. நாங்கள் வெயிலில் நடந்து சென்றோம்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக்(ரழி), நூல்:புகாரி ர.அ.த. பாகம்1, ஹதீஸ் எண் 1014

‘மழை பொழியச் செய்யுமாறு அல் லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்;’ என்று அந்த மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் கூறியவுடன், அப்பிரார்த்தனையில் மழை வேண்டித்தான் துஆ செய்ய வேண்டும் என்பது வெளிப்படை யாகிவிட்டது. நபி(ஸல்) அவர்களும் ‘இறைவா! எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக!’ என்று 3 தடவை பிரார்த்திக்கிறார்கள். எனவே 7:55 வசனம் தெரிவிக்கும் அந்தரங்க பிரார்த் தனை மழைக்கான துஆவை குறிக்கவில்லை என்பது தெளிவாகிறது. மேலும் மழை துஆவில் நபிதோழர்கள் ஆமீன் சொன் னதாக ஆதாரங் கள் இந்த ஹதீஸிலோ வேறு ஹதீஸ்களிலோ இல்லை. ஆயினும் அவர்களும் கைகளை உயர்த்தியதாக ஹதீஸ் களில் இருக்கிறது.

எனவே மழைக்கான பிரார்த்தனையும், அல்ஹம்து சூராவிலுள்ள பிரார்த்தனையும் வெளிப்படையாகவும் பொதுவாகவும் இருப்ப தால், 7:55 வசனம் கூறும் அந்தரங்கம் இவை களில் இடம் பெறவில்லை என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

5 வேளை ஃபர்ளு தொழுகைகளுக்குப் பிறகும் பிரார்த்திக்க வேண்டிய துஆக்களை வெளிப்படையாக முன்பே தீர்மானித்து கூட்டு துஆ செய்யலாமே என்ற வினா இப்போது உங்களுக்குள் எழ வாய்ப்புண்டு. அந்த எண்ணம் தவறு. ஏனெனில் அப்படி ஒரு வழக்கத்தை நபி(ஸல்) அவர்கள் காட்டித் தந்ததில்லை. எனவே அப்படிச் செய்தால் அது பித்அத் ஆகிவிடும். பித்அத்துகள் வழிகேடு கள், அவை நரகத்திற்கு இட்டுச் செல்லும் என நபி(ஸல்) அவர்கள் எச்சரித்திருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும், பொதுவாக சில துஆக்களைத் தேர்ந்தெடுத்து கூட்டு துஆ செய்தால், ஒவ்வொருவரின் அந்தரங்கமான துஆக்கள் விடுபட்டு விடும்.

துஆக்களில் இறைவனிடம் அங்கீகரிக் கப்பட முதல் தகுதியானது எது? என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்ட போது, கடமையான ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் கேட்கப்படும் துஆவாகும் என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். அறிவிப்பவர் : அபூ உமாமா(ரழி), நூல்:திர்மிதி

இந்த ஹதீஸின்படி ஒவ்வொருவரும் அவரவருக்குள்ள எண்ணற்ற தேவைகளை அவரவருக்குத் தெரிந்த மொழியில் இறைவ னிடம் கேட்டுப் பெறக்கூடிய சந்தர்ப்பமாக இது இருப்பதால், அவரவர் அவரவரின் தேவை களை இறைவனிடம் பிரார்த்திப்பதே சிறந்தது. இடையில் ஒரு மனிதர் தேவை இல்லை என்பதை 2:186 வசனம் தெளிவுபடுத்துகிறது.

(நபியே!) என் அடியார்கள் என்னைப் பற்றி உம்மிடம் கேட்டால், நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன்; பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவரே பிரார்த் தித்தால் விடையளிக்கின்றேன். அவர்கள் என்னிடமே கேட்கட்டும். என்னையே நம்பட் டும். அப்பொழுது அவர்கள் நேர் வழியை அடைவார்கள் என்று கூறுவீராக. அல்குர்ஆன் 2:186

எனவே கூட்டு துஆ என்பது அறிஞர்கள் என தங்களைக் கூறிக் கொள்ளும் மௌலவி கள் தங்களுக்கு ஒரு இமேஜ்! மற்றும் வருமானம் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஏற்படுத்திய ஒரு செட் அப்! அவ்வளவுதான்! இதற்கும் இஸ்லாத்திற்கும் சம்பந்தமில்லை.

கூட்டு துஆவை அறிமுகப்படுத்தி செயல் படுத்திக் கொண்டிருக்கும் மௌலவிகளை குழப்பவாதிகள் என்று அல்லாஹ் கூறுவதைக் கவனியுங்கள்.

உங்களுடைய இறைவனிடம் பணிவாக வும், அந்தரங்கமாகவும் பிரார்த்தனை செய் யுங்கள். வரம்பு மீறியவர்களை நிச்சயமாக அவன் நேசிப்பதில்லை. அல்குர்ஆன் 7:55

பூமியில் சீர்திருத்தம் ஏற்பட்ட பின்னர், அதில் குழப்பம் உண்டாக்காதீர்கள். அச் சத்தோடும் ஆசையோடும் அவனைப் பிரார்த்தியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் வின் அருள் நன்மை செய்வோருக்கு மிக சமீபத்தில் இருக்கிறது. அல்குர்ஆன் 7:56

அந்தரங்கமாக துஆ கேட்க வேண்டும் என்பது அல்லாஹ் ஏற்படுத்திய வரம்பு. இந்த வரம்பை மீறி சப்தமாக துஆ செய்கிறார்கள். சப்தமாக ஆமீன் சொல்கிறார்கள். அதுவும் காலர் மைக்கில் இன்னும் அதிக சத்தமாக துஆ செய்யும் பழக்கமும் ஏற்பட்டு விட்டது. எனவே வரம்பு மீறிய இவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை என்று கூறுகிறான்.

நபி(ஸல்) அவர்கள் எந்த ஒரு ஃபர்ளு தொழுகைக்குப் பின்னும் கூட்டு துஆ கேட்காத அழகிய முன்மாதிரியை ஏற்படுத்தி, எல்லா விஷயங்களிலும் 1430 ஆண்டுகளுக்கு முன்பே பூமியில் சீர்திருத்தம் செய்துவிட்டு சென்று விட்டார்கள். பிற்காலத்தில் இந்த மௌலவிகள், 2,3,4 ரகாஅத்துகளில் வந்து சேர்ந்து, இமா மின் ஸலாத்துக்குப் பிறகு எழும்பி தங்கள் விடுபட்ட தொழுகைகளை நிறைவு செய்யும் தொழுகையாளிகளின் தொழுகையில் குழப் பத்;தை ஏற்படுத்தி கெடுக்கும் விதமாக அவர் களுக்கு இடைஞ்சலாக அதில் குழப்பம் உண்டாக்கி கூட்டு துஆ மற்றும் இது போன்ற புதியவைகளை அறிமுகப்படுத்தி விட்டனர். குழப்பம் உண்டாக்காதீர்கள் என்ற அல்லாஹ் வின் எச்சரிக்கையைப் புறக்கணித்து விட்ட மௌலவிகள், நபி வழியை போதிப்பவர்களை ஏதோ புது வழியைப் போதிப்பதாகக் கூறி குழப்பவாதிகள் என அவர்கள் மீது பழியை சுமத்தி, மக்களை குழப்பத்தில் ஆழ்த்து கின்றனர். இவர்கள் மறுமையில் தப்பமுடியுமா?

 

Previous post:

Next post: