விவாதம் – ஓர் அலசல்

in 2009 மே

விவாதம் – ஓர் அலசல்

கேப்டன் அமீருத்தீன்

முன்னுரை : 29.03.2009-ல் தொண்டியில் பி.ஜை.க்கும் முஜீபுர்ரஹ்மான் உமரிக்கும் இடையே ஒரு விவாதம் நடைபெற்றதாக அறிகிறோம். பி,ஜை. சரிந்துவரும் தமது சாம்ராஜ் யத்தை சரிக்கட்டிக் கொள்வதற்கும், தம்மை விட்டு விலகிச் சென்று கொண்டிருக்கும் தக்லீது கூட்டத்தினரை முடிந்த வரையில் தம் பக்கம் தக்க வைத்துக் கொள்வதற்கும் அப்படியொரு விவாதத்திற்கு அழைப்பு விட்;டிருக்கலாம். ஆனால் அவர் விரிக்கும் விவாதம் என்ற வலையில் வீழ்ந்து நேரத்தையும், காலத்தையும் நம் சகோதரர்கள் வீணடிக்க வேண்டாம் என்று நான் விண்ணப்பித்துக் கொள்கிறேன். அப்படிப் பட்ட செயல்கள் எதுவும் நன்மையை தராது. ஆகவே அவைகள் முற்றிலுமாய் தவிர்க்கப்பட வேண்டும் என்பது எனது கருத்து.

அந்த நோக்கத்தில், 2004-ம் ஆண்டு நான் எழுதி சில காரணங்களால் அப்போது வெளியி டாமல் வைத்திருந்த இக்கட்டுரையை இத்தருண த்தில் வெளியிடுகிறேன். ஒரு குறிப்பிட்ட சந்தர்ப் பத்தில் இது எழுதப்பட்டிருந்தாலும், இதில் சொல்லப்பட்டுள்ள செய்திகளும், விவாத ஒழுங் குகளும் பொதுவானவை. அனைத்து சந்தர்ப்பங்களுக்கும் ஏற்புடையவை.-கட்டுரையாளர்.

‘விவாதம்’ என்பதற்கு பி.ஜையும் அவரது தக்லீது கூட்டமும் என்ன பொருள் கொண்டிருக்கிறார்கள் என்பது பலருக்கு தெரிவதில்லை. அதனாலேயே அவரின் அந்த மலிவு விளம்பரத் துக்கு அவர்கள் பலியாகி போகிறார்கள். விவாதத்தில் தம்மை வித்தகர் என்று காட்டிக் கொள்ளும் அவரின் தந்திரத்தில் கவரப்பட்டு விடுகிறார்கள். அவரின் வார்த்தை ஜாலத்தில் மயங்கி தம்மை இழந்து விடுகிறார்கள். அத்தகைய சூதுவாது அறியாத எளிய மக்களின் தெளிவுக்காகவும், விளக்கத்துக்காக வும் இந்த கட்டுரை எழுதப்பட்டுள்ளது. எத்தரின் ஏமாற்று வித்தையில் இதுவும் ஒருவகை மோசடி என்பதை எடுத்துக்காட்டுவதும் இதன் நோக்கம் ஆகும்.

விவாதம் என்பது நேரடியாகவும் இருக் கலாம். அல்லது அது ஒரு எழுத்துப் போராகவும் இருக்கலாம். எழுத்துரு விவாதத்தில் தோற்று பின் வாங்கியவர்களே பொதுமக்களை ஏமாற்றும் வித்தையாக நேரடி விவாதத்திற்கு எதிர் தரப்பினரை அழைப்பதை நாம் பார்த்திருக்கிறோம்.

அப்படித்தான் பி.ஜை.யும் முன்னொரு சமயம் ஜெபமணி என்ற கிருத்துவ மிஷனரி ஒருவரால் நேரடி விவாதத்திற்கு அழைக்கப் பட்டார்.’கஃபா நிலைக்குமா?’ என்று ஜெபமணி எழுதிய நூலுக்கு ‘கப்சா நிலைக்குமா?’ என்று பி.ஜை. ஒரு மறுப்பு நூல் எழுதி வெளியிட்டார். அந்த நூல் ஜெபமணி, அவர் நூலில் எழுப்பியிருந்த வாதங்களை வரிக்கு வரி உடைத்தது. அதன் பிறகே அதை ஜீரணிக்க முடியாது, ஜெபமணி பி.ஜை.யை நேரடி விவாதத்திற்கு அழைத்தார்.

சர்வதேச அரங்குகளிலும் இப்படிப்பட்ட நிலமையே நிலவுவதை நாம் பார்க்கிறோம். ஆப்ரிக்க, ஆசிய நாடுகளில் ஐரோப்பியர்;களின் காலனி ஆதிக்கம் ஆட்சி புரிந்த போது கிருஸ்த்துவ மிஷனரிகள் அங்கெல்லாம் தடையின்றி நுழைந்தனர். அங்குள்ள மக்களின் சமய நம்பிக்கை, சமூக கலாச்சாரம் இவற் றிற்கு எதிராய் எழுத்துப்போரை துவக்கினர். அப்படி தூண்டப்பட்டவர்களில் ஒருவர்தான் பிற்காலத் தில் வந்த ஜெபமணியும் ஆவார். முஸ்லிம் நாடுகளில் இஸ்லாத்திற்கு எதிராய் கிருஸ்த்துவ மிஷனரிகள் பல்லாயிரக் கணக்கில் நூல்களையும், பிரசுரங்களையும் எழுதி வெளியிட்டனர். அரசியல் வீழ்ச்சியும், பொருளாதார பின்னடைவும் கொண்ட முஸ்லிம்கள் ஒன்றுபட்டு ஓர் அமைப்பாய் நின்று அந்த எழுத்துப்போரை சந்திக்க முடியாது போயிற்று. ஆனால் சில முஸ்லிம் அறிஞர்கள் தனித்து நின்று
மிஷனரிகளின் விஷமப் பிரச்சார வெளியீடுகளை எதிர் கொண்டனர்.

அவர்களில் 20-ம் நூற்றாண்டின் பிற் பகுதியில் உலகப் புகழ் பெற்றவர் தென் ஆப்ரிக்காவில் வாழ்ந்த குஜராத் முஸ்லிம் ஷேகு அகமது தீதாத் ஆவார்கள். அவர் எழுதிய சிறுநூல்களும் பிரசுரங்களும் மிஷனரி பிரசுரங்களின் வாதங்களை அடியோடு தகர்த்தன. அத்துடன் கிருஸ்த்துவ நம்பிக்கையை கேள்விக் குறியாக்கியது. அவர்களின் கொள்கை கோட்பாட்டை சந்தேகத்தில் ஆழ்த்தியது.

ஷேகு அகமது தீதாத் அவர்கள்தான் முதன் முறையாக தமது பிரசங்க மேடைகளில் பொது மக்களை, கேள்வி கேட்க அனுமதித்தார். அப்படி கேள்வி கேட்பவர்களில் எதிர் தரப்பினரே அதிகமிருந்தனர். அவரின் இந்த அசாத்திய துணிவும் விவேகமும் மக்கள் முன் அவர் எடுத்து வைத்த வாதங்களை உண்மைப் படுத்தியது. கொள்கை கோட்பாட்டை உறுதிப் படுத்தியது. அறிவு ஜீவிகளும், நடுநிலையாளர் களும் அவர்பால் ஈர்க்கப்பட்டனர். அது கண்டு மிஷனரிகள் கலக்கமடைந்தன. புத்தகங்கள், பிரசுரங்கள் மூலம் தங்கள் நிலையை காத்துக் கொள்ள முடியாது திணறினர். அவர்களின் கோட்டை கலகலத்தது. அடிப்படை ஆட்டம் கண்டது. தீதாத்தின் வாதத்தை உடைப்பதற்கு வழி தேடினர். அதன் காரணமாகவே ஷேக் தீதாத்தை நேரடி வாதத்திற்கு அழைத்தனர்.

இந்த தந்திரத்தை ஆங்கிலத்தில் MAAS PSYCHOLOGY அதாவது ‘மக்கள்திரள் மனோ பாவம்’ என்று கூறுவார்கள். இந்த தந்திரத் தைத்தான் கிருஸ்த்துவ மிஷனரிகள் ஷேக் அகமது தீதாத்துடன் மோதுவதற்கு பயன்படுத் தினார்கள். ஆனால் உண்மையின் பக்கம் இஸ் லாமிய கொள்கையும் கோட்பாடும் இருக்கின்ற காரணத்தால் ஒவ்வொரு விவாத மேடைகளிலும் ஷேக் அகமது தீதாத் முத்திரை பதித்தார். வெற்றி வாகைச் சூடி வெளி வந்தார். மிஷனரி களின் முதுகெலும்பு நொறுக்கப்பட்டது. முஸ்லிம்களின் ஈமான் பலப்பட்டது. ஷேக் அகமது தீதாத் அவர்கள்தான் நவீன காலத்தில் இப்படிப்பட்ட விவாதங்களுக்கு முன்னோடியாகவும் திகழ்ந்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்!

இந்த தந்திரத்தை தான் பி.ஜை. இங்கு தவறாகப் பயன்படுத்தப் பார்க்கிறார். இஸ் லாமிய கொள்கை கோட்பாட்டை நிலை நிறுத்த விவாதம் செய்து வந்தவர், இப்போது தமது சொந்த நலனும், கவுரவமும் பாதிக்கப்படும்போது பொது விவாதத்திற்கு அழைப்பு விடுக்கிறார். அதன் மூலம் தமது பொய்யை பாமர மக்கள் முன் மெய்யாக்கப் பார்க்கிறார். ‘கத்திரிக்காய் சொத்தை என்று சொல்கிறாயா? வா விவாதத்திற்கு’ என்று அவர் எதற்கெடுத் தாலும் விவாதம் என்று சொல்லி தப்பிக்கப்பார்க் கிறார். காரண காரியங்களை விட்டு நழுவி ஓடப்பார்க்கிறார். அவரை இப்படியே விட்டால் ஒரு வேளை நான்கு சுவர்களுக்கிடையே நடக்கும் தம்பதிகளின் தாம்பத்திய பிணக்கு களையும் கூட விவாத அரங்குகளில் ஏற்றினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. (அப்படியும் ஒரு சொற்பொழிவு கூட்டம் சென்னை மண்ணடி யில் சமீபத்தில் நடந்ததாகவும் கேள்வி)

அப்படி நாம் கருதக்கூடிய அளவுக்கு அவர் தம் தரத்தை தாழ்த்திக் கொண்டு விட்டார். தம் சுயநலனுக்காக சகோதர முஸ்லிம்களை முபாஹலாவுக்கு அழைப்பதும், அவர்கள் மீது ஜிஹாத் பிரகடனம் செய்வதும் மார்க்கத்தை எந்த அளவுக்கு அவர் கேலிப் பொருளாக்கி விட்டார் என்பதையே காட்டுகிறது.

விவாதம் என்பது சில அடிப்படை கொள்கை கோட்பாட்டு நெறிகளை பற்றிய தாகவே இருக்க முடியும். அப்போதுதான் இரு தரப்பும் அங்கு வைக்கும் கருத்துக்களுக்கு ஆதார நூற்களிலிருந்து மேற்கோள்கள் காட்ட முடியும். எடுத்துக்காட்டுகள் சொல்ல முடியும். உண்மையில் அந்த அடிப்படை நூற்களின் தத்துவார்த்தமே வாதங்களாக வெடிக்கின்றன.

இப்படித்தான் அகமது தீதாத் ஓ மிஷனரிகள் விவாதங்கள் நடந்தன. பீ.ஜே. ஓ ஜெபமணி விவாதமும் நடந்தது. முற்காலத்தில் நம் நாட்டு கிராமப்புறங்களில் எரிந்த கட்சி ஓ எரியா கட்சி என்று இரு தரப்பினரிடையே விவாதங்கள் நடப்பதுண்டு. அங்கு கூட இருதரப்பினரிடையே தங்களின் கட்சிக்கு ஆதாரமாய் பழங்கால இதிகாசங்கள் இலக்கியங்களிலிருந்து எடுத்துக் காட்டுகளை எடுத்து வைப்பார்கள்.

நீதிமன்றங்களில் இரு தரப்பு வக்கீல்களிடையேயும் விவாதங்கள் நடக்கவே செய்கின்றன. நன்றாய் பேசும் வக்கீலின் கட்சியே நியாயமென்றும், உண்மையென்றும் யாரும் தீர்மானிப் பதில்லை. அவர் கட்சியே வெற்றி பெறுமென்றும் யாரும் உறுதி கூறுவதில்லை. நீதி மன்றங்களில் சம்பந்தப்பட்ட தரப்பினர் தாக்கல் செய்யும் வழக்கு மற்றும் சத்திய பிரமாண வாக்கு மூலங்களின் விளக்கமாகவே வக்கீல்களின் வாதங்கள் அமைகின்றன. எழுத்துப் பூர்வமான சத்திய பிரமாணங்கள் இல்லாமல் நீதிமன்றங்களில் வாதங்கள் இல்லை. மேலும் அந்த விவாதங் களும். நாட்டில் நடைமுறையில் உள்ள சட்ட திட்டங்களையும், விதிமுறைகளையும் ஆதாரமாய் வைத்தே செய்யப்படுகிறது.

ஆகவே, விவாதம் என்பது நாகரீக உலகம் கண்டெடுத்த முதிர்ச்சியான ஒரு கருத்துப் பரிமாற்றம். அங்கு இரு தரப்பும் தத்தமது கருத்துக்களை அச்சமின்றி மக்கள் முன் வைப் பதற்கு சந்தர்ப்பம் அளிக்கப்படுகிறது. அது படித்தவர்கள், அறிவாளிகள், நீதியாளர்கள் பங்குபெறும் நிகழ்ச்சியாக நடத்தப்படுகிறது. அவர்களே அங்கு வரும் நடுநிலையாளர்கள் பாமரர்கள் அல்ல. விவாத அரங்கை ஒழுங்கு டன் நடத்துவதற்கு ஒரு நடுவரும் நியமிக்கப் படுகிறார். இரு தரப்பும் பேசும் நேரங்களும், விவாதிக்கபட வேண்டிய விஷயங்களும், தலைப்புகளும் முன்னதாக நிர்ணயிக்கப்படுகின்றன. அங்கு கூச்சல் இல்லை. குழப்பம் இல்லை. யாரும் யாரையும் கிண்டலடிப்பதும் இல்லை.

இப்படிப்பட்ட விவாதங்களையே திருகுர்ஆன் ‘அழகான விவாதம்’ என்;று அடைமொழியிட்டு அழைக்கிறது.

அமெரிக்க அதிபர் தேர்தலின்போது இப்படிப்பட்ட நேர்மையான நாகரீகமான நேரடி விவாதங்கள் நடைபெறுவதை நாம் பார்க்கிறோம். நமது நாட்டிலும் தேர்தலின் போது பல்வேறு கட்சிகளின் தலைவர்களை அழைத்து தொலைகாட்சி நிறுவனங்கள் விவாதங்கள் ஏற்பாடு செய்வதை காண்கிறோம். அவையெல் லாம் மக்களுக்கு பயன்தரும் கருத்துப் பரிமாற் றங்கள். ஆரோக்கியமான அந்த விவாதங்க ளினால் மக்கள் தெளிவு பெறுகிறார்கள். வாக்கு சீட்டை யாருக்கு அளிக்க வேண்டும் என்பதை முடிவு செய்கிறார்கள். அதற்கு அந்த விவாதங் கள் பெரிதும் உதவுகின்றன. இங்கு கூட கட்சிகளின் அரசியல், பொருளாதார, சமூக கொள் கைகளே அலசி ஆராயப்படுகின்றன. தனிப்பட்ட மனிதர்களின் விமர்சனங்கள் முற்றிலுமாய் தவிர்க்கப்படுகிறது.

இங்கு யாரும் தனி மனிதர் செய்யும் குற்றம் பற்றியோ அல்லது குற்றச்சாட்டுகள் பற்றியோ விவாதிப்பதில்லை. மக்கள் நல திட்டங்கள் மட்டுமே விவாதிக்கப்படுகின்றன. மக்கள் அறிந்திருக்கும் கிரிமினல் குற்றம் புரிந்தவர்கள் பற்றி யாரும் விவாத மேடைகளில் பேசுவ தில்லை. நமது நாட்டு சட்ட மன்றங்களும், பாராளுமன்றமும் அதற்கு விதிவிலக்காக இருக்கலாம். தேர்தலில் தோல்வி கண்ட கட்சிகள் அவற்றை நடக்கவிடாது முடக்கி வைத்து தேர்தலில் வெற்றிபெற்று அரசு அமைத்த கட்சியை வஞ்சம் தீர்த்துக் கொள்ளும் தந்திரமாகவும் அது இருக்கலாம். ஆனால் யாரும் வெளியில் விவாத மேடைகள் அமைத்து குற்றப் பின்னணியில் உள்ளவர்கள் பற்றி விவாதிப்பதில்லை.

மேலும், விவாதங்கள் என்பது திருடர்களோடும், போக்கிரிகளோடும் நடத்தப்படுவதல்ல. சமூகத் திருடர்கள், அமானித மோசடி பேர்வழிகள், அரசியல் போக்கிரிகள் இவர்களிடத்தில் நாம் விவாதம் செய்வதற்கு என்ன இருக்கிறது? சட்டமும், நீதிமன்றங்களும் தீர்மானிக்க வேண் டிய காரியங்களில் பொது விவாதம் நடத்துவது எந்த பலனையும் தராது. ஆனால் அந்த சமூக துரோகிகள் பற்றி மக்கள் அறிந்திருக்க வேண்டும். மக்களுக்கு அவர்கள் அடையாளம் காட்டப்பட வேண்டும். அதற்காக அந்த பணியை செய்பவர்கள் அவர்களோடு நேரடி விவாதம் செய்ய வேண்டும் என்பதில்லை. அது நடைமுறை சாத்தியமாக இருந்தால் குற்றப் பின்னணி அரசியல் வாதிகள் அவர்கள் மீது குற்றம் சுமத்தியவர்களை பொது விவாதத்திற்கு அழைத்திருக்க வேண்டும். அப்படி யாரும் யாரையும் அழைத்ததாக நமக்குத் தெரிய வில்லை. அதற்கு முன் உதாரணம் ஏதுமில்லை. அப்படி ஒரு வழக்கம் உலகில் வேறு எங்கும் இருப்பதாகவும் நாம் அறியவில்லை.

உலகில் எங்கும் நடைமுறையில் இல்லாத ஒன்றைத் தான் பி.ஜை. தன் விஷயத்தில் நடைமுறைப்படுத்த பார்க்கிறார். அதன் மூலம் மலிவு விளம்பரம் தேடிக் கொள்கிறார். இந்த தந்திரத்தால் தன்னை சுத்தப்படுத்திக் கொள்ள முனைகிறார்.

மேலே நாம் எடுத்துக் காட்டிய நாகரீக முதிர்ச்சியும், பயிற்சியும் அவருக்கும், அவரது தக்லீத் கும்பலுக்கும் உண்டா? என்று நாம் வினவுகிறோம். நேரடி விவாதத்திற்கு அவர்கள் வைத்திருக்கும் இலக்கணம் என்னவென்று கேட்கிறோம். தெருக்களில் சுற்றித்திரியும், வெறி நாய்களும், சொறிநாய்களும் முச்சந்தியில் சந்திக்கும்போது ஒன்றையொன்று வெறித்துப் பார்த்து உறுமிக் கொண்டும். செறுமிக் கொண்டும் கடித்துக் குதறி சீறிப்பாயுமே அதைத்தான் நேரடி விவாதத்திற்கு அவர்கள் இலக்கணமாய் வைத்திருக்கிறார்கள். சில வருடங்களுக்கு முன் முத்துப்பேட்டையில் சகோ. அபூ அப்தில்லாஹ்வுக்கு நேர்ந்ததை நாம் மறப்பதற்கில்லை. நேரடி விவாதம் என்ற பெயரில் அவரை அங்கு அழைத்து தந்திரமாக அவரை தனிமைப்படுத்தி ஒரு ரவுடிக்கும்பல் வம்பிழுத்து மரியாதைக்குறைவு படுத்தியதை நாம் இங்கு நினைவு கொள்ள வேண்டும்.

இதைத்தான் பி.ஜை. வாதத்திற்கு அழைக்கும் எதிர் தரப்பினரிடம் நடைமுறைப்படுத்தப் பார்க்கிறார். அதனால்தான் அவர் அழைத்த வுடன் அவர் கூப்பிட்ட இடத்துக்கு அவர்கள் ஓடி வர வேண்டுமென்று கூறுகிறார். அப்படி அழைத்து வருபவர்களுக்கு ரூ.2,00,000/= சன்மானம் கொடுப்பதாக உதார் விடுகிறார். (அந்த உதார் 2004-ம் ஆண்டு என்னை நோக்கி வீசப்பட்டது) அதை நம்பி செயல்படும் நம் சகோதரர்கள் ஏமாற வேண்டும்; இல்லையெனில் தாம் வெற்றி பெற்றதாக எக்காளமிட வேண்டும். இதுதான் அவர் கடை பிடிக்கும் தந்திரம்.

எதிர் தரப்பினர் வசதிவாய்ப்பு பற்றி அவருக்கு கவலை இல்லை. அவர்களுக்கு நியாயமான கால அவகாசம் கொடுக்க வேண்டும் என்பதும் அவரது சட்டத்தில் இல்லை. இப்படித்தான் ஜெபமணி கூப்பிட்டதும் அவர் ஓடினாரா? என்று கேட்கத் தோன்றுகிறது.

இன்று அழைத்தால் நாளை போ என்பது நாம் கற்ற நாகரீகம், பண்பாடு. ஆனால் அவர் கற்ற மதரசா நாகரீகம், (பாத்திஹா ஓத) இன்று அழைத்தால் இன்றே போ என்பதுதான். எவ்வளவுதான் பாத்திஹா ஓதுவதை அவர் கண்டித்து பேசினாலும் சிறுவயதில் மதரசாவில் அவர் கற்ற பண்பாடும், நாகரீகமும் இன்னும் அவரை விட்டு விலகவில்லை. அவர் நிலையே அப்படி என்றால் மற்ற தக்லீத் ஆலிம்களின் நிலையைப் பற்றி நாம் ஒன்றும் சொல்ல வேண்டியதில்லை. அக்காலங்களில் வீட்டிற்கு உதவாத உதவாக்கரைகளும், ஊருக்கு அடங்காத தறுதலைகளும்தான் மதரசாக்களில் சேர்ந்து படிப்பார்கள் என்று பி.ஜை. பல மேடைகளில் முழங்கி இருக்கிறார். நமக்கு அவரது கருத்தில் உடன்பாடில்லை யென்றாலும் ஒன்றை நாம் ஒப்புக் கொள்ள வேண்டியிருக்கிறது. அதாவது அவரின் செயல்பாடுகள் அவரின் கருத்துக்கு ஏற்றதாகவே இருக்கின்றன என்பது தான்.

தனக்கு ஜால்ரா தட்டாதவர்களை தூற்றுவதும், அவதூறு பேசுவதும் அவர் இயல்பு. சிறு விஷயங்களையும் ஊதி பெரிதாக்கி தமது நலனை பெருக்கிக் கொள்வதில் எத்தர். மடுவிலிருந்து மலை செய்ய முயல்பவர். மலையை கிள்ளி எலி பிடிக்க முனைபவர். அவரின் தவறான வழி காட்டுதலால் களம் கண்டு சிறை சென்ற இளைஞர்கள் பலர். வாழ்வின் வசந்தம் இழந்து வாசம் போய் வாடுகின்றனர் இன்று.

என் அருமை சகோதரர்களே, தக்லீத் கும்பலின் தந்திரத்துக்கு பலியாகி விடாதீர்கள். நம்மை திசைத் திருப்பிவிட்டு நம் இலட்சியத்தை விட்டு நம்மை விலக்குவதற்கு அவர்கள் செய்யும் முயற்சிக்கு இடம் கொடுக்காதீர்கள். சமுதாயத்திற்கு நாம் ஆற்ற வேண்டிய பணி நிறைய இருக்கிறது. வீணர் கூட்டத்தின் விதண்டா வாதங்களில் சிக்கி உங்கள் பொன்னான நேரத்தை வீணடிக்கா தீர்கள். அல்லாஹ் நம் பிழை பொறுப்பான். செயலுக்கு கூலி கொடுப்பான். ஆமீன்.

Previous post:

Next post: