”பீ.ஜை. குர்ஆன் மொழியாக்கத்தில் தவறுகளில் ஒன்று!”

in 2009 ஜூலை,ததஜ

”பீ.ஜை. குர்ஆன் மொழியாக்கத்தில் தவறுகளில் ஒன்று!”
N.அலீ, கல்லிடைகுறிச்சி.
பின்னர் இருவரும் நடந்தனர்: வழியில் ஒரு சிறுவனை அவ்விருவரும் சந்திக்கவே அவர் அச்சிறுவனைக் கொன்றுவிட்டார். கொலைக் குற்றமின்றி ஒரு பரிசுத்தமான ஆன்மாவை நீர் கொலை செய்து விட்டீரே? நிச்சயமாக நீர் மறுக்கப்பட வேண்டிய ஒரு காரியத்தை செய்துவிட்டீர் அன்று அவர் (மூஸா) கூறினார். குர்ஆன் 18:74.

தமிழகத்தில் வெளிவந்துள்ள இன்னும் சவுதி வெளியிட்டுள்ள எல்லா தர்ஜுமாக்களிலும் மேலுள்ளவாறே மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. ஆனால் நாம் குறிப்பிட்ட மொழி பெயர்ப்பாளர் (P.Z) இவ்வசனத்திற்கு வினோதமான மொழி பெயர்ப்பை வழங்கி விளக்கமும் கொடுத்துள்ளார்.

இருவரும் நடந்தனர்; ஓர் இளைஞனைக் கண்டபோது அந்த அடியார் அவனைக் கொன்றார். எந்த உயிரையும் கொலை செய்யாத ஒரு தூய உயிரைக் கொன்று விட்டீரே? தகாத காரியத்தை செய்து விட்டீரே என்று மூஸா கூறினார்.(குர்ஆன் 18:74)

அடிக்கோடிட்ட இடத்தை, கவனித்தால் வினோதம் விளங்கும். சிறுவன் என்று மற்றவர் கள் மொழிப் பெயர்த்த இடத்தில் P.Z அவர்கள் இளைஞன் என்று மொழிப் பெயர்த்து விட்டு அதற்கு விளக்க எண் 273ல் ஹில்று(அலை) அவர்களுக்கு மறைவான ஞானம் இல்லை என்று விளக்கிவிட்டு இளைஞன் என்று மொழிப் பெயர்த்ததைப் பற்றி விளக்குகிறார்.

இப்படி சில விரிவுரையாளர்களும் மொழி பெயர்ப்பாளர்களும் ஹில்று அவர்களால் கொல்லப்பட்டவன் பாலகன் என்று குறிப்பிட் டுள்ளனர். இதனால் பல சந்தேகங்கள் எழுகின் றன. அவன் வளர்ந்து பெரியவனானால் தனது பெற்றோரை வழிகெடுத்து விடுவான் என்பதால் ஹில்று(அலை) அவர்கள் கொன்றதாகக் கூறுகின்றனர். எதிர்காலத்தில் ஒரு பெரிய குற்றம் செய்வான் என்பதற்கு அக்குற்றத்தைச் செய்யும் முன் அவனைக் கொல்வது இறை நியதிக்கு ஏற்றதுதானா? பச்சிளம் பாலகனைக் கொல்வது என்ன நியாயம்? என்ற கேள்வி இதனால் ஏற்படுகிறது. இக்கேள்விக்கு ஏற்கத் தக்க எந்த விடையையும் அவர்களால் கூற முடியவில்லை எனவே சிறுவன் என்று மொழிப் பெயர்க்காமல் இளைஞன் என்று மொழிப் பெயர்த்தால் இந்தக் கேள்வி எழாது. இளைஞனாக அவன் இருந்து அன்றாடம் தனது பெற்றோரைத் துன்புறுத்தி வந்தான் எனக் கூறினால் அதற்காக அவனைத் தண்டிப்பது இறை நியதிக்கு ஏற்றதாக அமையும். சிறுவன் என்று மற்றவர்;களும் இளைஞன் என்று நாமும் தமிழாக்கம் செய்த இடத்தில் (18:74) குலாம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இது பல அர்த்தங்களைக் கொண்ட சொல்லாகும். அடிமை, சேவகன், சிறுவன், இளைஞன் என இதற்குப் பல பொருள் உண்டு. சிறுவன் என்று பொருள் கொண்டு செய்யாத குற்றத்துக்காக ஒருவன் தண்டிக்கப்பட்டான் எனக் கூறுவதை விட இளைஞன் எனப் பொருள் கொண்டு செய்த குற்றத்திற்காக தண்டிக்கப் பட்டான் என்று கூறுவது இறை நியதிக்கு ஏற்றதாகும். இவ்வாறு பொருள் கொள்வதற்கு ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளது.

புகாரி 7031,37,39, 6122, 5807, 3472, 3982, 6550, 1356, 5657, இங்கெல்லாம் சிறுவன் என்று மொழிப் பெயர்த்தால் அறவே பொருந்தாது.

இந்த ஹதீஸ்களில் குலாம் என்ற சொல்லுக்கு இளைஞன் என்று பொருள் கொள்வது போல் மேற்கண்ட வசனத்தில் இடம் பெற்ற சொல்லுக்கும் பொருள் கொண்டால் குழப்பம் ஏதும் இல்லை. (பக்கம் 1237ல் பார்க்கவும்)

(P.Z) அண்ணன் கொடுத்தது விளக்கமா? விபரீதமா? பார்ப்போம்!
அவருடைய விளக்கத்தின்படி ஹில்று (அலை) அவர்கள் ஒரு இளைஞனைக் கொலை செய்தார்கள் என்றே வைத்துக் கொள்வோம். அதன் பிறகு மூஸா நபியுடைய கேள்வியை கவனித்தால் ஹில்று(அலை) அவர்கள் கொலை செய்தது இளைஞனை அல்ல – சிறுவனையே என்பதை விளங்குவோம் வாருங்கள். மூஸா நபியுடைய கேள்வி – எந்த உயிரையும் கொலை செய்யாத பரிசுத்தமான உயிரைக் கொன்று விட்டீரே? என்று கேட்கிறார்கள்.

அதாவது எந்த உயிரையும் கொலை செய்யாத என்று கூறி தன்னுடைய கேள்வியை நியாயப்படுத்துகிறார்கள் என்றால் மூஸா நபியவர்கள் அந்த இளைஞனைப் பற்றி நன்கு அறிந்திருக்க வேண்டும். இளைஞனுடைய பிறப்பு, வளர்ப்பு, வாழ்க்கையை மிக அருகா மையில் இருந்து கவனித்து இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் எந்த உயிரையும் கொலை செய்யாத என்று கூறி தன்னுடைய கேள்வியை நியாயப்படுத்த முடியும். உண்மை இவ்வாறு இருந்ததா என்றால்? இல்லை என்பதை குர்ஆனில் வரும் இந்நிகழ்ச்சியின் ஆரம்ப வசனங்களைப் படித்தால் (பார்;க்க 18:60 – 70 வரை) புரிந்து கொள்ளலாம்.

அதாவது மூஸா(அலை) நபியவர்கள் நெடுந்தூர பயணத்தை ஹில்று அவர்களை சந்திப்ப தற்காக மேற்கொள்கிறார்கள். இதன் அடிப் படையில் மூஸா நபி அவர்கள் ஒரு பயணி. ஊரும் புதியது: அங்குள்ளவர்களும் புதியவர்கள் என்பது தெளிவு. இப்படியிருக்கை யில் பயணத்தின் போது வழியில் இருவரும் ஒரு இளைஞனைச் சந்திக்க (ஹில்று) அந்த இளைஞனை கொலை செய்த உடனே மூஸா நபியவர்கள் ஷஷஎந்த உயிரையும் கொலை செய்யாத|| என்று சான்றளித்து தன்னுடைய கேள்வியை நியாயப்படுத்த முடியுமா? என்றால் முடியாது. அது மட்டுமல்ல மூஸா(அலை) நபி யுடைய இளமைக் காலத்தை இங்கே நினைவு கூர்ந்தால் சிறப்பாக இருக்கும். அதாவது மூஸா(அலை) நபியவர்கள் அவர்களுடைய இளமைக் காலத்தில் ஒருவரை கொலை செய்திருக்கிறார்கள் என்பதை குர்ஆனில் 28-ம் அத்தியாயம் 14லிருந்து 19 வரை உள்ள வசனங்களில் காணலாம்.

தன்னுடைய இளமைக் காலத்தில் ஒரு கொலை குற்றவாளியாய் இருந்த ஒருவர் ஒரு இளைஞனைப் பார்த்து அவனைப் பற்றி எந்த அறிவும் இல்லாமல் எந்த உயிரையும் கொலை செய்யாத|| என்று சான்;றளித்து தன்னுடைய கேள்வியை நியாயப்படுத்துவது சாத்தியமா? இப்பொழுது ஒரு முரண்பாடு தோன்றும். அதாவது ஹில்று(அலை) அவர்களின் செயலுக்கும், மூஸா நபியுடைய கேள்விக்கும்; முரண்பாடு தெரியும். குர்ஆனில் முரண்பாடா? மொழிப் பெயர்ப்பினால் ஏற்பட்ட முரண்பாடா? என்றால் குர்ஆனில் எத்தகைய முரண்பாடும் இல்லை. குர்ஆன் அல்லாஹ்வின் அழகிய நெறிநூல் என்பதை முறையே 10:37- 39:23ல் காணலாம். இப்பொழுது மொழிப் பெயர்ப்பில் தான் முரண்பாடு என்பது தெளிவாகும்.

எப்படியெனில் ஹில்று(அலை) அவர்கள் பாலகனைத்தான் கொலை செய்தார்கள் என்பதைதான் மூஸா நபியுடைய கேள்வி உறுதிப்படுத்துகிறது. ஒரு பாலகனை எந்த உயிரையும் கொலை செய்யாத பரிசுத்த ஆன்மா என்பதற்கு அவனுடைய பாலகப் பருவமே போதுமான சான்றாகும். P.Zயின் கேள்வியும் இதைத்தானே உறுதிப்படுத்துகிறது பாருங்கள்.

ஒரு பச்சிளம் பாலகனைக் கொல்வது என்ன நியாயம்?|| நாடு, மொழி, காலம், எல்லாம் கடந்து எல்லோரிடமும் ஏற்படக் கூடிய கேள்வி தானே இது. இதைத் தானே மூஸா(அலை) நபியவர்களும் கேட்கிறார்கள். அதை ஏன்? இவர் விளங்கவில்லை. அதுதான் போகட்டும் விடுங் கள். ஹில்று(அலை) அவர்களின் விளக்கத்தை யாவது ஏற்றிருக்க வேண்டும். என்ன விளக்கம் என்பதை குர்ஆன் கூறுகிறது. அச்சிறுவனின் பெற்றோர் நம்பிக்கைக் கொண்டிருந்தனர். இச் சிறுவன் (பெரியவனாகி) அவர்களை வழி கெடுத்து விடுவானோ என்று நாம் அஞ்சினோம். ஆகையால் அவர்களுடைய இறைவன் அச்சிறு வனுக்குப் பதிலாக அவனைவிடச் சிறந்த ஒழுக்கமுள்ள குடும்ப உறவுகளைப் பெரிதும் பேணக் கூடிய பிள்ளைகளை அவர்களுக்கு வழங்கிட வேண்டுமென நாம் விரும்பினோம். (குர்ஆன் 18:80,81)

இதுதான் அந்த விளக்கம். இதில் அறிஞ ருக்கு ஏற்பட்ட கேள்வி என்னவென்றால் எதிர் காலத்தில் ஒரு பெரிய குற்றம் செய்வான் என்பதற்காக அக்குற்றத்தை செய்யும் முன் அவனைக் கொல்வது இறை நியதிக்கு ஏற்றதுதானா? என்று கேட்டு, அதனால்தான் இளைஞன் என்று கூறி அவன் தனது பெற்றோரைத் துன்புறுத்தி வந்தான்: அதனால் தான் கொலை செய்யப்பட்டான் என்று கூறினால் எந்தக் குழப்பமும் இல்லை என்கிறார். ஆனால் அவருடைய மொழிப் பெயர்ப்பின்படி வாசித்தாலும்… அந்த இளைஞனின் பெற்றோர் நம்பிக்கைக் கொண்டிருந்தனர்: அவன் அவர் களை வழிகெடுத்து விடுவானோ என்று நாம் அஞ்சினோம். (குர்ஆன் 18:80)

இப்பொழுதும் அந்த கேள்வி எழவே செய்யும். அதாவது அவனைக் கொலை செய்வதற்கான காரணம் சொல்லப்படும்போது அவர்களை வழிகெடுத்து விடுவானோ என்று நாம் அஞ்சினோம்ளூ அதாவது அந்த இளைஞன் தன் பெற்றோரைத் துன்புறுத்தி வந்தான் என்றால் மேற்கண்ட வாசகம் முரண் ஆகிவிடும். ஏனென்றால் மேற்கண்ட வாசகம் எதிர்காலச் சொல்லாகும். இனி அந்த இளைஞன் செய்யப் போகும் செயலை அஞ்சியே கொலை செய்தோம் என்றால் இப்பொழுதும் அந்த கேள்வியை முன் வைக்கலாம்.

ஒரு இளைஞன் குற்றம் செய்வான் என்பதற்காக அக்குற்றத்தைச் செய்யும் முன் அவனைத் தண்டிப்பது இறை நியதிக்கு ஏற்றது தானா? பீ.ஜை. எந்த கேள்வியைக் காட்டி இளைஞன் என்று மொழிப் பெயர்ப்பதுதான் சரி என்று கூறினாரோ அவ்வாறு மொழிப் பெயர்த்தாலும் அந்தக் கேள்வி எழும் என்றால் இளைஞன் என்று மொழிப்பெயர்ப்பது அவசியமற்றதாகிவிடும்.

அதே சமயம் சிறுவன் என்று மொழிப் பெயர்க்கும்போது மூஸா(அலை) நபியுடைய – எந்த உயிரையும் கொலை செய்யாத பரிசுத்தமான ஆன்மாவைக் கொன்றுவிட்டீரே என்ற கேள்வியும், சகோ. P.Zயின் பச்சிளம் பாலகனைக் கொல்வது என்ன நியாயம்? எதிர்காலத்தில் ஒரு பெரிய குற்றம் செய்வான் என்பதற்காக அக்குற்றத்தை செய்யும்முன் அவனைத் தண்டிப்பது இறை நியதிக்கு ஏற்றதுதானா? என்ற கேள்விகள் முன்பை விட இன்னும் வலுப்பெறும். இத்தகைய வலுவான கேள்விகளுக்கு அல்குர்ஆனின் வலுவான பதில்தான் இதுதான், இவையெல்லாம் உம் இறைவனின் கருணையினால் நிகழ்ந்ததாகும். இவற்றில் எதையுமே நான் என் விருப்பப்படி செய்யவில்லை உம்மால் பொறுமை கொள்ள முடியாத விஷயங்களில் உண்மை நிலை இதுதான் என்பது குர்ஆன் 18:82 வசனத்தை வாசிக்கும்போதே நமக்கு விளங்கிவிடும். இவையெல்லாம் மனித அறிவுக்கும், விருப்பத் திற்கும் உட்பட்டதல்ல. மாறாக ஹில்று (அலை) அவர்களின் செயல்களும், விளக்கங் களும் நிகரில்லா பேரறிவாளனாகிய அல்லாஹ் வின் விருப்பப்படி நடந்தாகும்.

அதாவது அல்லாஹ் அந்த சிறுவன் எதிர் காலத்தில் வழிகெடுவான் என்றும் அவனின் பெற்றோர் கொண்டிருக்கும் நம்பிக்கைக்கு இடையூறும், சிரமமும் அளிப்பான் என்று அறிந்திருந்தான். எவை போல் என்றால் நபி யூஸுஃப் அவர்களுக்கு அவர்களுடைய பாலகப் பருவத்தில் ஒரு கனவைக் காட்டி அந்த கனவை மெய்ப்பித்துக் காட்டினானே அது போலாகும். (பார்;க்க 12அத்தியாயம்;) அல்லாஹ்வுடைய தூதராகிய முஹம்மது நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டல் இதோ:
இணைவைப்போரின் குழந்தைகள் இறந்து விட்டால் அவர்களின் நிலை யாது? என்பது குறித்து அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர்கள் அவர்கள் உயிருடன் வாழ்ந்தால் எவ்வாறு செயல்பட்டிருப்பார்கள் என்பதை அல்லாஹ் அறிவான் என்று விடையளித்தார்கள். (அறிவிப்பவர் : அபூஹுரைரா நூல்:புகாரி 6598)

மக்கள் அல்லாஹ்வின் தூதரே சிறிய வயதில் ஒருவர் இறந்து விட்டால் அவரது நிலை? என்பது பற்றி என்ன கூறுகிறீர்கள் என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் அவர்கள் உயிருடன் வாழ்ந்தால் எவ்வாறு செயல்பட்டிருப்பார்கள் என்பதை அல்லாஹ் நன்கறிவான் என்று கூறினார்கள். (புகாரி 6600) (மேலும் பார்க்க. 6596, 6595, 6597, 6599)

இவையெல்லாம் விதியின் விஷயமாகும்-விதியின் விஷயத்தில் கேள்வி கேட்டால் விடை கிடைக்காதுளூ ஏனென்;றால் அது பற்றிய அறிவு நமக்கு இல்லை என்பதை தான் மூஸா – ஹில்று – அவர்களின் வரலாறு மூலமாக அல்லாஹ் நமக்கு உணர்த்துகிறான். அதிலிருந்து படிப்பினைப் பெறாமல் தன்னுடை விபரீதமான(?) அறிவைக் கொண்டு குர்ஆனின் ஒரு வரிக்கும் இன்னொரு வரிக்கும் முரண்பாடு எனும் விபரீதத்தை ஏற்படுத்தி இருக்கிறார். பீ.ஜை. படிப்பினைப் பெறுவதற்கு பதிலாக பாடம் நடத்தியிருக்கிறார். இதுதான் வேதனைக்குரிய விஷயமாகும்.

நடைமுறையில் உள்ள ஒரு விஷயத்தைப் பற்றி… அதாவது ஒரு கூலிப்படை ஒருவரை கொலை செய்வதற்காக திட்டம் தீட்டுகிறது. இன்ன நேரம், இன்ன தேதியில் என்று அதற் கான ஆயத்த நடவடிக்கையில் இறங்குகிறது. இப்பொழுது இந்த விஷயம் நமக்கு ஆதாரப்பூர்வமாக தெரிய வருகிறது என்றால் இப்பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்?

போலீஸுக்கு தகவல் கொடுத்து உடனே கைது பண்ண சொல்ல வேண்டுமா? அல்லது அத்திட்டத்தை இன்னும் அவர்கள் நிறைவேற்ற வில்லை ஆதலால் செய்யாத குற்றத்திற்காக கைது செய்வது பாவம் என்று வேடிக்கை பார்க்க வேண்டுமா? உடனே போலீஸுக்கு தகவல் கொடுத்து கைது பண்ண சொல்ல வேண்டும் என்பதுதான் நியதி என்று சாதாரண நம்மறிவு கட்டளையிடுகிறது என்றால்;, நம்மை படைத்து, ஆறறிவும் கொடுத்து, நீதியையும் கற்றுக் கொடுத்த நிகரில்லா பேரிறிவாளனும் நுண்ணறிவாளனும், தீர்க்கமான அறிவுடை யோனுமாகிய அல்லாஹ் அவன் அறிந்துள்ள படி (அச்சிறுவன் வழிகெடுவான் அவனது பெற்றோரையும் வழிகெடுக்க முயல்வான் என்று அல்லாஹ் அறிவான்: அல்லாஹ் அறிந்ததே நடக்கும் பார்க்க – 18:82, 31:34, 18:39, 82:19)

ஒரு உயிருக்கு தண்டனையளிப்பது எவ்விதத்திலும் அநீதியாகாது என்பதை உணர்ந்து கொள்வோம். இதோ வாக்குறுதி மாறாத என் இரட்சகனாகி அல்லாஹ்வின் வாக்கும், வழிகாட்டுதலும்:
உண்மையில் அல்லாஹ் மனிதர் களுக்கு சிறிதும் அநீதி இழைப்பதில்லை: எனினும் மனிதர்கள் தமக்குத் தாமே அநீதி இழைத்துக் கொள்கின்றார்கள். குர்ஆன் 10:44

மேலும் நேர்வழிகாட்டும் அறிவுரையை நாங்கள் கேள்விப்பட்ட போது அதன் மீது நாங்கள் நம்பிக்கைக் கொண்டோம்: இனி எவரேனும் தம் இறைவன் மீது நம்பிக்கை கொள்வாராயின் அவருக்கு இழப்பு அல்லது அநீதி பற்றி எந்த அச்சமும் இருக்காது. குர்ஆன் 72:13

அகிலத்தார்க்கு அல்லாஹ் அநீதியை நாடமாட்டான். குர்ஆன் 3:107.

அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள். அல்லாஹ் உங்களுக்கு கற்றுத் தருவான். அவன் ஒவ்வொரு பொருளைப் பற்றியும் நன்கறிந்தவன். குர்ஆன் 2:282

நம்பிக்கைக் கொண்ட உள்ளங்களுக்கு அல்லாஹ் வழிகாட்டுவான்ளூ அவன் ஒவ்வொரு பொருளைப் பற்றியும் நன்கறிந்தவன். குர்ஆன் 64:11

அல்லாஹ்வும் அவனது தூதரும் ஒரு காரியத்தைப் பற்றி முடிவு செய்து விட்டால் அதில் சுய விருப்பம் கொள்ள நம்பிக்கைக் கொண்ட ஆணுக்கும் பெண்ணுக்கும் எந்த உரிமையும் இல்லை. அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்க மான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள். குர்ஆன் 33:36

Previous post:

Next post: