முஸ்லிம்களிலுள்ள அனைத்து தரப்பினருக்கும் ஒரு அன்பான அதிமுக்கிய வேண்டுகோள்!

in 2009 ஆகஸ்ட்,பொதுவானவை,பொதுவானவை

இடம் : J.K. மஹால், துறைமங்களம், பெரம்பலூர்-621 220. நிகழ்வு நாள்: 15, 16 ஆகஸ்ட் 2009 சனி காலை 10 மணி முதல் ஞாயிறு இரவு 8மணி வரை (அல்லாஹ் நாடினால்)
அன்புள்ள சகோதரர்………………………….. அவர்களுக்கு ஜமாஅத் அல் முஸ்லிமீன் ஒருங்கிணைப்புக் குழுவினரின் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

எங்களுக்கும், உங்களுக்கும், உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் அல்லாஹ் அங்கீகரிக்கும் இஸ்லாத்தில் முழுமையாக நுழையும் பாக்கியத்தை அவன் அளித்தருள்வானாக.
இன்றைய உலகின் நிலை நீங்கள் மிக, மிக அறிந்ததே. இதற்கு மேலும் சீர்கேடடையவே முடியாது என்ற அளவிற்கு சீர்கேட்டின் அதலபாதாளத்தை உலக மக்கள் அடைந்துள்ளனர் என்பதை நீங்;கள் மறுக்கமாட்டீர்கள். ஆட்சியாளர்களிலிருந்து, அதிகாரிகளிலிருந்து, அனைத்துத் துறையினரும் லஞ்சத்தில் குளித்து, குடி, விபச்சாரம், சூதாட்டம் என அனைத்து ஒழுக்கக் கேடுகளிலும் மூழ்கி இருப்பது நீங்கள் அறிந்ததே! ஒழுக்கக் கேடுகளே சாதனைகளாக கின்னஸில் இடம் பெறுபவைகளாக ஆகிவிட்டன. ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்ற பெயரில் மக்கள் இரண்டு கால் மிருகங்களாக மாறிக் கொண்டிருக்கிறார்கள். ஆம்! புலன்களுக்கு மட்டும் இன்பம் அளிக்கும் மிருக நிலைக்குத் தாழ்ந்து விட்டார்கள்.

புகைத்தல், குடித்தல், விபச்சாரம், கற்பழிப்பு, கொலை, கொள்ளை, வன்முறை, தீவிரவாதம் என்ற அனைத்து ஒழுக்கக் கேடுகளையும், சீர்கேடுகளையும் வளர்த்து வரும் சினிமா, சின்னத்திரை துறைகளுக்கு மானியம், பரிசுகள் எனக் கொடுத்து வருபவர்கள் ஆட்சியாளர்கள். உலக இயக்கத்தின் அடிப்படையான ஆண், பெண் இணைவதைத் தவிர்த்து, ஓரினச் சேர்க்கையை சட்டமாக்க நீதிமன்றங்களும், சட்டமன்றங்களும் துடிதுடிக்கின்றன. விபச்சாரம் சினிமா நடிக, நடிகைகளிலிருந்து நாடு முழுவதும் பரவலாகிவிட்டது. அது தவறே இல்லை என்ற பிரசாரமும் சூடு பிடிக்கிறது.

சுருங்கச் சொல்லின் குடிப்பதிலும், சூதாடுவதிலும், கொலை கொள்ளையிலும், கற்பழிப்பிலும், விபச்சாரத்திலும் பெருமை பேசும் அய்யாமுல் ஜாஹிலியா காலத்து மக்;களாக உலக மக்கள் கீழ் நிலைக்கு இறங்கி விட்டார்கள். அதற்கு மேலும் அல்லாஹ்வின் கடும்; கோபத்திற்கு ஆளாகி அழிக்கப்பட்ட லூத்;; (அலை) நபியின் காலத்து மக்களாக மாற முற்படுகிறார்கள். (பார்க்க 11:69-83, 15:61-77, 26-160-174, 54:33,34)

இன்றைய உலகின் இவ் இழி நிலைக்கு யார் காரணம்? ஆம்! இன்றைய முஸ்லிம்களே காரணம்! முஸ்லிம்கள், அல்லாஹ் தங்கள் மீது சுமத்தியுள்ள பெரும் பணியை மறந்து, 2:143, 3:110, 22:78, 103-1-3, இறைக் கட்டளைகள்படி உலக மக்களிடையே நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நேர் வழியில் நடத்திச் செல்வதோடு, அல்லாஹ்வின்மீது உறுதியான நம்பிக்கையுடன் நற்செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்த்து, மாற்றாரின் பின்னால் மதி மயங்கிச் செல்லும் இழி நிலைக்கு முஸ்லிம்கள் ஆளாகி விட்டார்கள். அதனால் முஸ்லிம்களும் வழிகெட்டு, உலகின் வழிகேட்டிற்கும் ஆளாகி, பொறுப்பாகி நிற்கிறார்கள். நாளை மறுமையில் அல்லாஹ்வின் தர்பாரில் தங்கள் மீது சுமத்தப்பட்ட பொறுப்பை நிறைவேற்றாத குற்றத்திற்கு ஆளாகி நிற்கும் பரிதாப நிலையில் முஸ்லிம்கள் இருக்கிறார்கள். இந்தப் பரிதாப, ஆபத்தான நிலையை விட்டும் முஸ்லிம்கள் ஈடேற வேண்டும்ளூ வெற்றிபெற வேண்டும் என்பதில் உங்களுக்கு மாற்றுக் கருத்து இருக்காது என நம்புகிறோம்.
இந்த இழி நிலை மாற முஸ்லிம்கள் ஒன்றுபட வேண்டும் என்;பதிலும், அப்படி ஒன்றுபட அல்லாஹ்வின் 3:103 கட்டளைப்படி அல்குர்ஆனைப் பற்றிப் பிடித்து அதன் போதனைகள்படி நடக்க வேண்டும, பிரியவே கூடாது என்பதிலும் உங்களுக்கு மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அல்லாஹ்வின் நேரடிக் கட்டளைகளுக்கு எவ்வித சுய நல விளக்கமும் கொடுக்காமல் உள்ளது உள்ளபடி எடுத்து நடக்க அனைவரும் முன்வந்து விட்டால் முஸ்லிம்கள் ஓரணியில் ஒன்றுபட்டு விடுவார்கள் என்பதிலும் உங்களுக்கு மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

கருத்து வேறுபாடுகள் வரும்போது, சொந்தக் கருத்துக்களை விட்டு குர்ஆன், ஹதீஸிலுள்ளவற்றை மட்டுமே எடுத்து நடக்க வேண்டும் என்று அல்லாஹ் 4:59-ல் கட்டளையிட்டுள்ளதை நீங்களும் அறிவீர்கள். 33:36,66,67,68 இறைக் கட்டளைகளை நிராகரித்து சுய கருத்துக்களை நிலைநாட்ட முற்பட்டதாலேயே பல பிரிவுகள், 3:103,105, 6:153,159, 30:32, 42:13,14 மற்றும் 12:108 போன்ற எண்ணற்ற இறைக் கட்டளைகளை நிராகரித்து ஏற்பட்டதுடன், அப்பிரிவுகளைக் கொண்டு மகிழ்ச்சியடையும் நிலையும் ஏற்படுகிறது என்பதையும் நீங்கள் மறுக்கமாட்டீர்கள்.

முஸ்லிம் சமுதாயம் இப்படிப்பட்ட பிளவுகளிலும் பிரிவுகளிலும் நிலைத்திருக்கும் வரை சமுதாய ஒற்றுமை ஒருபோதும் சாத்தியமில்லை என்பதையும் நீங்கள் மறுக்க மாடடீர்கள். அதன் விளைவு முஸ்லிம் சமுதாயம் இப்படிப்பட்ட கருத்து வேறுபாடுகளினால் கோழைகளாகி பலம் குன்றி இழிவுபட்டு வருகிறது என்பதை 8:46 இறைவாக்கு எச்சரிப்பதையும் நீங்கள் மறுக்க மாட்டீர்கள்.
இன்று உலகம் முழுவதும் முஸ்லிம்கள் இழிவு படுத்தப்படுவதற்கும், எள்ளி நகையாடப் படுவதற்கும், வீண் பழிகள் சுமத்தப்படுவதற்கும், மாற்றார்கள் முஸ்லிம் சமுதாயத்தைச் சந்தேகக் கண் கொண்டு பார்ப்பதற்கும், இஸ்லாமிய தீவிரவாதம், முஸ்லிம் தீவிரவாதி என்று தினசரி ஊடகங்கள் செய்திகளைப் பரப்புவதற்கும், ஆட்சியிலும், அதிகாரத்திலும் புறக்கணிக்கப் படுகிறதற்கும் முஸ்லிம்கள் பல பிரிவுகளில் சிக்கி சீரழிந்து கிடப்பதே காரணம் என்பதையும் மறுக்க மாட்டீர்கள். இதற்கு மேலும் ஓர் இழி நிலை முஸ்லிம் சமுதாயத்திற்கு ஏற்படுவதற்கு இல்லைளூ அந்த அளவு முஸ்லிம் சமுதாயம் அழிவின், இழிவின் அதலபாதாளத்தில் வீழ்ந்து கிடக்குகிறது என்பதையும் நீங்கள் மறுக்க மாட்டீர்கள். இப்படி முஸ்லிம் சமுதாயத்தின்; கேடுகெட்ட நிலையை அடுக்கிக் கொண்டே போகலாம்.
முஸ்லிம் சமுதாயத்தின் இந்த பரிதாப நிலையைப் போக்க என்ன வழி என்பதை சமுதாய நலனில் அக்கறையுள்ள ஒவ்வொரு ஆணும் பெண்ணும் சிந்திக்கக் கடமைப்பட்டிருக்கிறார்கள். அப்படி சிந்தித்தால் 6:153-ல் அல்லாஹ் சொல்வது போல் இறைவன் கொடுத்த ஒரே நேர் வழியை விட்டு முஸ்லிம்கள் iஷத்தானின் தூண்டுதலால் பல தலைவர்களின் சுயநல வசீகர சூன்யப் பேச்சில் மயங்கி பல கோணல் வழிகளில் செல்வதே முஸ்லிம் சமுதாயத்தின் அதலபாதாள வீழ்ச்சிக்குக் காரணம் என்பதை விளங்கலாம்.

எனவே முஸ்லிம் சமுதாயம் ஒன்றுபட ஒரே வழி, இப்படிப்பட்ட சுயநல தலைவர்களின் பேச்சில் மயங்காமல் அவர்களைப் புறக்கணித்து, அல்லாஹ்வின் கட்டளைப்படி அல்குர்ஆனைப் பற்றிப் பிடிப்பதே. 3:102,103,104,105 இறைவாக்குகள் கூறுவதை அப்படியே ஏற்க வேண்டும். தவறினால் 3:106 எச்சரிக்கைப்படி முஸ்லிம்கள் என நம்பிக்கை கொண்டு பின்னர் மேற்படி வசனங்களை நிராகரிப்பதால் முகங்கள் துக்கத்தால் கருத்திருக்கும்ளூ நிராகரிப்பின் காரணமாக நரக வேதனையை சுவைத்துக் கொண்டு இருங்கள் என்று கூறப்படும் நிலைக்கு நாளை ஆளாக நேரிடும் என்பதையும் மறுக்க மாட்டீர்கள்.

ஒரு பரிபூரண நம்பிக்கையுள்ள முஸ்லிம், இவ்வுலக வாழ்க்கையை விட மறு உலக வாழ்க்கைக்கே அதிமுக்கியத்துவம் கொடுப்பான் என்பதையும் நீங்கள் மறுக்கமாட்டீர்கள். அப்படிப் பட்ட ஒரு முஸ்லிம் இவ்வுலக வாழ்க்கைக்காக மறு உலக வாழ்க்கையை இழக்க ஒரு போதும் முன்வர மாட்டான். மறுமையைப் பற்றி உறுதியற்ற நிலையிலுள்ள முஸ்லிம்தான் இவ்வுலக வாழ்க்கையை மறு உலக வாழ்க்கையை விட பெரிதாக எண்ணி நடப்பான் என்பதையும் மறுக்க மாட்டீர்கள்.
இவ்வுலகை மறுமையைவிட அதிகமாக நேசித்து அதற்காகவே உழைப்பவர்களுக்கு அது நிறைவாகவே கிடைக்கும். ஆனால் மறுமையில் மாபெரும் நட்டவாளிளூ நரகத்திற்குரியவன் என்பதையும் அல்லாஹ் 2:200, 4:115, 23:52-56, 43:33-35, 45:23,24, 47:25,26 போன்ற எண்ணற்ற இறைவாக்குகளில் எச்சரித்திருப்பதையும் நீங்கள் மறுக்கமாட்டீர்கள்.

முஸ்லிம் அறிஞர்களில் பெரும்பாலோர் நேர்வழி இஸ்லாம் தான் என நன்கு அறிந்த நிலையிலேயே மனோ இச்சையின் காரணமாக, iஷத்தானின் தூண்டுதலால் அவர்களும் வழிகெட்டு, மக்களையும் வழி கெடுக்கிறார்கள் என்பதை அல்லாஹ் அல்குர்ஆன் 4:118-121, 7:27, 14:22, 16:63,100, 17:61-65, 19:83, 22:3, 26:221,222,223, 35:6, 58:19 போன்ற எண்ணற்ற இறைவாக்குகளில் எச்சரித்திருந்தும், அவற்றைக் கவனத்தில் கொள்ளாமல் இருக்கிறார்கள் என்பது உண்மைதானே?

ஆம்! முஸ்லிம்களில் மிகப் பெரும்பாலோர் இஸ்லாத்தில் நுழைய அடிப்படை உறுதிமொழியான கலிமா கூட தெரியாமல் இருக்கிறார்கள். அதனால்தான் மவ்லவிகள் திருமண சமயத்தில் மணமகனுக்கு முதலில் கலிமாவை சொல்லிக் கொடுத்து அதன் பின்னரே திருமணம் முடித்து வைக்கின்றனர். இன்றைய பெரும்பான்மை முஸ்லிம்களின் நிலை, நபி(ஸல்) அவர்களின் காலத்தில் நாட்டுப் புறத்து அரபிகள் ஈமான் கொள்ளவில்லை. ஆயினும் அவர்கள் தங்களை முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொள்ளலாம் என்று 49:14-ல் அல்லாஹ் அனுமதி அளித்துள்ளபடி, இன்றைக்கு கலிமா தெரியாதவர்களும், இஸ்லாம், ஈமான் தெரியாதவர்களும் தங்களை முஸ்லிம்களே என்று கூறிக்கொள்ள அல்லாஹ்வின் அனுமதியைப் பெற்றிருக்கிறார்கள். ஆனால் நாளை நியாயத் தீர்ப்பு நாளிலோ அவர்களின் நிலை பரிதாபத்திற்குரியதும், பெரும் நட்டத்pற்குரியதுமாகும் என்பதை மறுக்க முடியுமா? அன்று நாட்டுப்புறத்து அரபிகளுக்கு அல்குர்ஆனுடன் நேரடித் தொடர்பு இல்லாதிருந்ததுபோல், இன்றைய பெரும்பான்மை முஸ்லிம்களுக்கு அல்குர்ஆனுடன் நேரடித் தொடர்பு இல்லாதிருப்பதே இதன் காரணமாகும்.

இதற்குக் காரணம் என்ன? அல்லாஹ் அல்குர்ஆனில் பல இடங்களில் அல்குர்ஆன் எழுதப்படிக்கத் தெரிந்த, தெரியாத, அரபி மொழி தெரிந்த, தெரியாத அனைத்து மக்களுக்கும் தௌ;ளத் தெளிவாக, அவர்கள் புரியும் மொழியில் அல்குர்ஆனை படித்துக் காட்டினால் காதால் கேட்ட மாத்திரத்தில் அதைப் புரிந்து கொள்வார்கள் என்று கூறி உறுதிப்படுத்தி இருக்க, பெரும்பான்மை அறிஞர்கள் அவர்களின் சுயநலம் காரணமாக அல்குர்ஆன் மவ்லவி அல்லாத சாதாரண மக்களுக்கு விளங்காது என்று பொய்யாகக் கூறி முஸ்லிம்களை அல்குர்ஆனை நெருங்க விடாமல் தடுத்து வைத்துக்க கொண்டிருப்பதே, மக்கள் இஸ்லாத்தை விளங்காமல் இருப்பதற்குத் தலையாய காரணம் என்பதை மறுக்க முடியுமா?

மவ்லவிகள் தங்களின் இந்த சுயநல போக்கை மாற்றிக் கொள்ள முன் வர வேண்டும். அல்லாஹ் அல்குர்ஆனில் சொல்வது போல் அனைத்து நாட்டு, அனைத்து மொழி பேசும் மக்களும் அவரவர்களுக்குத் தெரிந்த மொழியில் அல்குர்ஆனிலுள்ள இறைக் கட்டளைகள் படித்துக் காட்டப்பட்டால், அவர்களால் நிச்சயமாகத் தெளிவாக விளங்க முடியும் என்று பகிரங்கமாக சொல்ல முன் வர வேண்டும். அல்லாஹ்வை, விட அவனது தூதரை விட மார்க்கத்தை விளக்கும் ஆற்றல் உலகில் எந்த அறிஞருக்கும் இல்லை என பகிரங்கமாகக் கூற முன்வர வேண்டும்.
அல்லாஹ் அல்குர்ஆனில் சொல்லியுள்ளதை, நபி(ஸல்) அவர்கள் மார்க்கமாகச் சொல்லி யுள்ளதை எவ்வித கூட்டலோ, குறைத்தலோ, திரித்தலோ, மறைத்தலோ, வளைத்ததோ இல்லாமல் உள்ளதை உள்ளபடி சுயவிளக்கமே இல்லாமல் சொல்ல அறிஞர்கள் முன்வந்தால் மட்டுமே முஸ்லிம் சமுதாய ஒற்றுமை சாத்தியப்படும். அதற்கு மாறாக அற்பமான இவ்வுலக ஆதாயத்தைக் குறிக்கோளாகக் கொண்டு தங்களின் சுயக்கருத்துக்களை மார்க்கத்தில் நுழைப்பவர்கள் 2:159, 160, 161, 162 இறை எச்சரிக்கைகளையும், இன்னும் பல இறைவாக்குகளையும் படித்து விளங்;கினால், அவர்கள் நாளை மறுமையில் அடையப்போகும் மிகக் கொடிய தண்டனைகளை, நரகில் கிடந்து வெந்து வேதனைப் படுவதைத் தவிர்க்க முடியும்.

5:3, 7:3, 3:19,85, 33:21,36,66,67,68 59:7 போன்ற இறைவாக்குகளைப் படித்து விளங்கினால், நபி(ஸல்) அவர்களின் மறைவுக்குப் பிறகு மனிதக் கற்பனையில் மார்க்கமாகப் புகுத்தப்பட்ட அனைத்துப் பிரிவுகள் மற்றும் இவர்களால் கற்பனை செய்யப்பட்டு நடத்தப்படும் புரோகித மதரஸாக்கள் இவை எதுவுமே அல்லாஹ்வாலோ, அவனது தூதராலோ அங்கீகரிக்கப்பட்டவை அல்ல என்பதை அவற்றில் ஈடுபாட்டுடன் பெருமை பேசுகிறவர்களும் மறுக்க முடியாது.

21:92, 23:52 இறைக் கட்டளைகளுக்கு முரணாக உள்ள இவை அனைத்தும் 3:103,105, 6:153,159, 30:32, 42:13,14 மற்றும் 12:108 இறைக்கட்டளைகளுக்கு நேர் முரணானவை என்பதையும் இப்பிரிவுகளிலுள்ளோர் மறுக்க முடியாது. ஆதம்(அலை) அவர்களை ஏமாற்றிய iஷத்தான் இவர்களையும் ஏமாற்றுகிறான். உலகியல் ஆதாயங்களைப் பெரிதாகக் காட்டி இவர்களின் பிரிவுகளில் பெருமை பேசும் நிலைக்குத் தள்ளி, இவர்களைப் பழி வாங்கி நரகில் தள்ளுகிறான் என்பதை இங்கு உணர முடியாவிட்டாலும் நாளை மறுமையில் நிச்சயம் உணரவே போகிறார்கள்.
இவர்கள் கற்பனை செய்துள்ள பிரிவுகளில் ஒன்றில் உலக முஸ்லிம்களை ஓரணியில் ஒன்றிணைப்பது சாத்தியமா? அல்லது அல்லாஹ் பெயர் சூட்டி (22:78, 41:33) நபி(ஸல்) நடைமுறைப்படுத்திய ஷஷஜமாஅத் அல் முஸ்லிமீன்|| என்ற பெயரில் உலகளாவிய முஸ்லிம்களை ஓரணியில் ஒன்றிணைப்பது சாத்தியமா? என அறிவு குறைந்த ஒருவனிடம் கேட்டாலும், உடனே எவ்வித தயக்கமும் இன்றி அவன் ஷமுஸ்லிம்| என்ற நிலையில் ஜமாஅத் அல் முஸ்லிமீனில் ஒன்றிணைப்பதே சாத்தியம் என்று சொல்லி விடுவான். இந்த நிலையில் இவற்றைச் சரிகாணும் மவ்லவிகளும் அவர்களின் ஆதரவாளர்களும்; தங்களின் அறிவை ஷைத்தானிடம் அடகு வைத்து விட்டார்கள் என்பதை மறுக்க முடியுமா?

எனவே நபி(ஸல்) அவர்களின் மறைவுக்குப்பிறகு அதாவது ஹிஜ்ரி 11க்குப் பிறகு இந்தச் சமுதாயத்தில் மனிதக் கற்பனையில் உருவான – மனிதர்களாகச் சூட்டிக் கொண்ட அனைத்துப் பிரிவுப் பெயர்களும் புதியவையே – பித்அத்தே – வழிகேடே – நரகில் சேர்ப்பவையே என்றும், சமுதாய ஒற்றுமைக்கும், முஸ்லிம்களின் ஈருலக வெற்றிக்கும் அல்லாஹ் பெயர் சூட்டியபடி (22:78, 41:33) முஸ்லிம்| என்றும் முஸ்லிம்களில் உள்ளவன் என்றும், நபி(ஸல்) நடைமுறைப்படுத்திய ஜமாஅத் அல் முஸ்லிமீன்||-ல் இணைந்து ஒன்றுபடுவதே ஒரே வழி என்றும் உறுதியான முடிவுக்கு குர்ஆன், ஹதீஸ் ஒளியில் நாங்கள் வந்திருக்கிறோம். இந்த எங்களின் முடிவு தவறு என்றால் 16-8-2009 ஞாயிறன்று (இன்ஷh அல்லாஹ்) பெரம்பலூர் J.K மஹாலில் இடம் பெறும் கருத்தாய்வுக் கூட்டத்திற்கு வருகை தந்து உங்களின் மேலான கருத்தை குர்ஆன், ஹதீஸ் ஆதாரத்துடன் எடுத்து வைக்க அன்புடன் அழைக்கிறோம். இதையே அழைப்பாக ஏற்று வருகை தாருங்கள். இது எங்கள் வீட்டு திருமண விழா அல்ல, நேரில் வந்து அழைக்க. எங்கள்மீதும், உங்கள்மீதும் கட்டாயக் கடமை. நேரில் வரும் வாய்ப்பு இல்லை என்றால், கடித மூலம் உங்களின் கருத்தை எழுதி அனுப்ப வேண்டுகிறோம். இந்த இரண்டு வாய்ப்புக்களுக்கும் நீங்கள் தயார் இல்லை என்றால், நாளை மறுமையில் அல்லாஹ்வின் தர்பாரில் இப்படி ஒரு அழைப்பு உங்களுக்கு வந்ததற்கு நீங்கள் சாட்சியாளராக இருங்கள். அல்லாஹ் போதுமானவன்.

ஒரு சிலர் சொல்லி மக்களை ஏமாற்றி வருவது போல் ஷஜமாஅத் அல் முஸ்லிமீன்| அபூ அப்தில்லாஹ்வின் ஜமாஅத் அல்லளூ பிரிவுகளை ஆதரிக்கும் ஜமாஅத்தும் அல்லளூ 22:78, 41:33 இறை வழிகாட்டலைப் படித்து விளங்குகிறவர்கள் இது அல்லாஹ்வின் ஜமாஅத் என்பதை அறிய முடியும். புத்துயிர் பெறப்போகும் இந்த ஒன்றுபட்ட ஜமாஅத்தில் ஒன்றிணைகிறவர்கள் குர்ஆன், ஹதீஸ் வழியில் தெரிவு செய்யும் அமீரின் கீழ் செயல்பட அபூ அப்தில்லாஹ் தனது ஒப்புதலை 19.07.2009 ஞாயிறன்று J.K மஹாலில்.நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தந்துவிட்டார்.
இந்த 15-ம் நூற்றாண்டில் முஸ்லிம்களின் ஒற்றுமைக்கும், அதன் மூலம் 3:139-ல் அல்லாஹ் கூறுவதுபோல் தைரியத்தை இழக்காது, கவலையும், துக்கமும் இல்லாது மிக மேலான முஃமின்களின் சமுதாயமாகவும், 24:55-ல் அல்லாஹ் வாக்களிப்பது போல் ஆட்சி அதிகாரங்களைப் பெற்ற சமுதாயமாகவும், இவ்வுலகிலும், மறு உலகிலும் ஈடேற்றம் பெறும் சமுதாயமாகவும் உயர அல்லாஹ் அருள்புரிய நாங்களும் துஆ செய்கிறோம். நீங்களும் துஆ செய்ய அன்புடன் வேண்டுகிறோம்.
உங்களின் மேலான வருகையை, குறைந்தபட்சம் உங்கள் அறிவுரையை எதிர்பார்த்து முடிக்கிறோம். வஸ்ஸலாம்.

குறிப்பு : 16.08.09 நிகழ்வை email, SMS மூலம் முஸ்லிம்களிடையே கொண்டு சேர்க்கும் சகோதர, சகோதரிகளுக்கு ஈருலக நன்மைகள் கிடைக்க துஆ செய்கிறோம்.
இப்படிக்கு

al abdul kalam

 

ஜமாஅத் அல்முஸ்லிமீன்
ஒருங்கிணைப்புக் குழுத்தலைவர்.

Previous post:

Next post: