ஐயமும்! தெளிவும்!!
ஐயம் : இறந்துபோன மகான்களும், வலிமார்களும் உயிருடன் அவர்கள் இருந்த போது எப்படி இருந்தார்களோ, அப்படித் தான் இறந்த பிறகும் இருப்பார்களாமே? உண்மையா? – R.K. அப்துல் ரஷீத், கும்பகோணம்.

தெளிவு : பிறகு ஏன் அவர்களை இறந்து விட்டார்கள் எனக் கூறுகிறீர்கள். அவர்களின் மய்யித்தை குளிப்பாட்டும் போது, உயிருள்ள உடம்பில் தண்ணீர் பட்டவுடன் ஏற்படும் சிலிர்த்தல் போன்ற உணர்வுகள் ஏற்படுவதில்லையே ஏன்? தாய் தந்தை மனைவி மக்கள் சகோதர சகோதரிகள் உற்றார் உறவினர்கள் கண்ணீர் சிந்தும் போது உயிருள்ளவர்களும் அழச் செய்வார்களே, இவர்கள் ஏன் அழுவதில்லை? அழாவிட்டாலும் குறைந்தபட்சம் மனவருத்த மாவது அவர்களின் முகத்திலிருந்து வெளிப்பட வில்லையே ஏன்? அவர்களது முகங்கள் மரக்கட்டையை போல் எந்தவித உணர்ச்சி பிரதிபலிப்பும் இல்லாமல் சவம் ஆக இருக்கிறதே ஏன்? கப்ரில் வைத்த அவர்கள் மீது மண்ணைத் தள்ளி மூடும்போது உயிருள்ள வர்களாயிருந்தால் எழுந்து ஓடி இருப்பார்களே. இவர் எழவும் இல்லை. ஓடவும் இல்லையே ஏன்? மூச்சு விட முடியாத அளவிற்கு கபன் துணியால் மய்யித்தை கட்டி விடுகிறார்களே? உயிரிருந்தால் அவர்கள் முரண்டுவார்கள் அல்லவா? ஏன் மய்யித்தாகக் கிடக்கிறார்கள். சவம் சவம்தான் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். குர்ஆன் வசனத்தைப் பாருங்கள்.

உயிருள்ளவர்களும், இறந்தவர்களும் சமமாக மாட்டார்கள் அல்குர்ஆன்:35:22

————————–

ஐயம்: அல்லாஹ் இருக்கிறானா? இருந்தால் எங்கே இருக்கிறான். – R.K.  அப்துல் ரஷீத், கும்பகோணம்

தெளிவு: அல்லாஹ் இருக்கிறான். ~~அல்லாஹ் என்றென்றும் ஜீவித்திருப்பவன்|| என்ற 2:255 (ஆயத்துல் குர்ஸீ) திருகுர்ஆன் வசனத்திலிருந்து அல்லாஹ் இருக்கிறான் என்றும் அவன் இறக்காமல் என்றென்றும் இருந்து கொண்டிருக்கிறான் என்றும் அறிய முடிகிறது.
~~அல்லாஹ் அர்ஷின் மீது அமைந்துள்ளான்|| என்பதை 20:5 வசனமும்;; தெரிவிக்கின்றது.

—————————

ஐயம் : ஷிர்க் செய்தவன் சுவர்க்கத்திற்கே போக முடியாதா? ஏன்? – R.K.  அப்துல் ரஷீத், கும்பகோணம்.

தெளிவு : ஷிர்க் செய்த நிலையிலேயே வாழ்ந்து மரணித்தும் விட்ட எவருமே சுவர்க்கம் செல்ல முடியாது என்பதை திருகுர்ஆன் தெளிவுபடுத்துகிறது. ~~எவன் ஒருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பானோ(ஷிர்க்) அவனுக்கு அல்லாஹ் சுவர்க்கத்தை நிச்சயமாக ஹரா மாக்கிவிட்டான். (சுவர்க்கம் செல்லவே முடியாது) மேலும் அவன் ஒதுங்குமிடம் நரக மேயாகும். அக்கிரமக்காரர்களுக்கு உதவி செய்பவர் எவரும் இல்லை||. அல்குர்ஆன்:5:72

ஷிர்க் செய்தால் ஏன் சுவர்க்கம் போக முடியாது என இன்னும் ஒரு கேள்வியையும் கேட்கிறீர்கள். மேலே குறிப்பிட்டுள்ள 5:72 வசனமே அதற்கு பதிலளிக்கிறது. அனைத்தை யும் படைத்த அல்லாஹ்வே மறுமை நாளின் அதிபதி அவனது தீர்ப்பே இறுதியாகும். தீர்ப்பு சொல்லக்கூடிய அந்த ஏகன் ஒருவன் கூறிய தீர்;ப்புதான் மேலே உள்ள 5:72 வசனத்திலுள்ள அல்லாஹ்வின் வாக்கு. எனவே ஷிர்க் செய்தால் சுவர்க்கம் போகமுடியாது என்பது அல்லாஹ்வின் தீர்ப்பு என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். இன்னும் விளக்கம் வேண்டு மானால் 4:48,116 வசனத்தையும் கவனியுங்கள். ~~நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை வைப்பதை மன்னிக்கமாட்டான், இதைத் தவிர (மற்ற பாவங்கள்) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான், யார் அல்லாஹ்வுக்கு இணை வைக்கிறார்களோ அவர்கள் மிகவும் பெரிய பாவத்தையே கற்பனை செய்கிறார்கள்||. அல்குர்ஆன் : 4:48

இணை வைப்பது பெரிய பாவம் என்றும் அது வெறும் ~~கற்பனை|| தான் என்பதையும் அந்த வசனம் தெளிவு படுத்துகிறது. அல்லாஹ் வின் தன்மைகள், சிறப்புகள் மற்ற எவருக்குமே கிடையாது. மற்றவர்களுக்கு இல்லாததை இருப்பதாகக் கற்பனை செய்து கொள்ளக் கூடாதல்லவா? அப்படி கற்பனை செய்து செயல்படுத்தியதன் காரணமாகத்தான் அல்லாஹ் இணை வைத்தவர்களை (கற்பனை செய்தவர் களை) சுவர்க்கத்தில் அனுமதிப்பதில்லை.

—————————–

ஐயம் : விதியைப் பற்றி அதிகம் பேசக் கூடாது என்கிறார்களே. இது சரியா? – அதாவுர் ரஹ்மான், புதுக்கோட்டை

தெளிவு : சரிதான், கீழே உள்ள ஹதீஸ் உங்கள் வினாவிற்கு விடையளிக்கிறது.
நபி தோழர்கள் விதியைப்பற்றி விவாதித்துக் கொண்டிருந்தபோது அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் வந்தனர். (அவர்களது வாதத் தைக் கண்டு) கோபத்தின் காரணமாக, அவர்களது முகத்தில் மாதுளை முத்துக்கள் வெடித்தது போல் சிவந்து விட்;டது. ~~இப்படித்தான் நீங்கள் கட்டளையிடப்பட்டீர்களா? அல்லது இதற்காகத்தான் நீங்கள் படைக்கப்பட்டீர்களா? குர்ஆனின் சில வசனங்களை, வேறு சில வசனங்களுடன் மோதச் செய்கிறீர்களா? உங்களுக்கு முன்னுள்ள சமுதாயத்தினர் இதற்காகத்தான் அழிக்கப்பட்டுவிட்டனர்|| என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். இந்த நிகழ்ச்சியைப் பற்றி அப்துல்லாஹ் இப்னு அம்ரு(ரழி) என்ற நபி தோழர் குறிப்பிடும்போது தெரிவிப்ப தாவது: ~~நபி(ஸல்) அவர்களது எந்த சபையிலும் நான் கலந்து கொள்ளாமல் இருப்பதை நல்லதென்று நினைத்தது இல்லை. ஆனால் நபி(ஸல்) அவர்களின் கடும் கோபத்திற்கு ஆளான இந்த சபையில் நான் கலந்து கொள்ளாதது பற்றி ரொம்பவும் சந்தோஷப்பட்டேன்||. -அபூ ஹ_ரைரா(ரழி)- திர்மிதி.

———————————————-

ஐயம்: எந்தப் பாவமும் செய்திராத சிறு குழந்தைகள் சிறு வயதில் இறந்து விட்டால் அவர்கள் சுவர்க்கவாதிகள் தானே? முஹம்மது இஸ்மாயீல், திருப்பூர்.

தெளிவு : தங்களுக்கேற்பட்டுள்ள ஐயத்திற்கான தெளிவை கீழே கொடுக்கப்பட்டுள்ள இரு ஹதீஸ்களிலிருந்து பெற்றுக்கொள்ளுங்கள்.
~~ஒரு குழந்தை இறந்து விட்டது. அப்பொழுது நான், ~அதற்கு நல்வாழ்வு உண்டா குக! அது சுவர்க்கத்pன் சிட்டுக் குருவிகளில் ஒரு சிட்டுக் குருவியாகும்|| என்று கூறினேன். அப்பொழுது நபி(ஸல்) அவர்கள், ~~நிச்சயமாக, அல்லாஹ் சுவர்க்கத்தையும் படைத்தான்  நரகத்தையும் படைத்தான். பின்னர் அதற்குரியவர்களையும் இதற்குரிய வர்களையும் படைத்தான் என்பதை நீர் அறிய மாட்டீரா? என்று கேட்டார்கள். அறிவிப்பவர்:அன்னை ஆயிஷா(ரழி), நூல்கள் : முஸ்லிம், அபூ தாவூத், நஸயீ

~~இணை வைப்பவர்களின் குழந்தைகளைப் பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப் பட்டதற்கு அவர்களைப் படைக்கும்போதே அவர்கள் என்ன செய்வார்கள் என்பதை மிகவும் அறிந்தவனாக அல்லாஹ் இருந்தான்|| என்று கூறினார்கள். அறிவிப்பவர்: : இப்னு அப்பாஸ்(ரழி), நூல்கள்: புகாரீ, முஸ்லீம், அபூதாவூத், நஸயீ.

—————————————————

ஐயம்: அல்லாஹ் ஒருவரை விரும்புகிறான் என்பதை நாம் எப்படித் தெரிந்து கொள்ள முடியும்? – ஹஸீனா பேகம், ஆரணி.

தெளிவு : இந்த உலக வாழ்க்கையை எடுத்துக் கொள்ளுங்கள். தம் சொற்படி கேட்டு நடக்கும் பிள்ளைகளை பெற்றோர் விரும்புகி றார்கள். கொடுத்த வேலையை சரியாக செய்யும் தொழிலாளியை முதலாளி விரும்புகிறார். தான் இட்ட கட்டளையை ஒழுங்குற நிறைவேற்றும் அடிமைகளை அந்த எஜமானன் அல்லாஹ் விரும்புவான் அல்லவா? அல்லாஹ் ஏவியதை பரிபூரணமாகச் செய்பவர்களையும், அல்லாஹ் தடுத்ததை விட்டும், தம்மை விலக்கிக் கொள்பவர்களையும், பாவமன்னிப்புக் கோருபவர்களையும் அல்லாஹ் விரும்பவே செய்வான். இப்படி அமல்கள் புரிவதற்கு ஒருவனுக்கு அடிப்படைத் தேவை மார்க்க ஞானம் அல்லவா? அல்லாஹ் தான் விரும்பும் ஒருவனுக்கு மார்க்க அறிவைத் தந்து விடுவான் என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ள ஹதீஸைப் பாருங்கள். ~~எவருக்கு இறைவன் நன்மையை நாடுகின்றானோ அவருக்கு மார்க்க அறிவை நல்குகிறான்|| என நபி(ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக முஆவியா(ரழி) அவர்கள் அறிவித்ததை நான் செவியுற்றேன்.|| இப்னு அப்பாஸ்(ரழி) திர்மிதீ, ஹமீது(ரழி), புகாரீ, முஸ்லிம்

எனவே, மார்க்க அறிவு பெற்று நல்ல அமல்கள் செய்பவர்களை அல்லாஹ் விரும்புகிறான். நம்மையையும் அச்;சிறு கூட்டத்தாரில் அல்லாஹ் ஆக்;கி அருள்புரிவானாக.

————————————————-

ஐயம்: இன்று சென்னை போன்ற நகரங்களில் பாங்கு சொல்லக்கூட தடை விதிக்கப்படுகின்றது. இப்பொழுது இது போன்ற தவறுகளை சுட்டிக்காட்ட ஒரு அமைப்புத் தேவை என்பது காலத்தின் கட்டாயம் தானே? நூர் முஹம்மது, புளியங்குடி

தெளிவு : நபி(ஸல்) அவர்களின் காலத்தில் இஸ்லாத்தின் மூலக் கொள்கையான ~~லாயிலாஹ இல்லல்லாஹ{|| என்பதை பிரகடனப் படுத்துவதற்கே கடுமையான எதிர்ப்பு இருந்தது. அதை சொன்ன எண்ணற்ற ஸஹாபாக்கள் சித்திரவதை செய்யப்பட்டனர் குற்றுயிராய் குருதி சிந்தினர். அப்போதெல்லாம் நபி(ஸல்) அவர்கள் அதற்கென எந்த ஒரு தனி அமைப்பையும் ஏற்படுத்தவில்லை. அகிலங்களின் ரப்பாகிய அல்லாஹூ தஆலாவின் மார்க்கத்திலிருந்து கொண்டுதான் எதிர்ப்புகளை சமாளித்து வந்தார்கள். அந்த முன் மாதிரி நமக்கு இன்னும் படிப்பினை தராதது, புரிந்து கொள்ளும்படியாக இஸ்லாம் இன்னும் எடுத்து வைக்கப்படவில்லை என்பதையேக் காட்டுகிறது.
அமைப்புகளினால் ஏற்பட்ட அவலங்களை அனுபவித்தும் இன்னும் உங்களுக்கு படிப்பினை தரவில்லையே! சகோதரர்களாய் வாழவேண்டிய முஸ்லிம்கள் சண்டைக்காரர்களாக மாறி விட்டது இந்த அமைப்புகளினால்தானே.பிரச்சனைகளை அனைத்து முஸ்லிம்களும் ஒன்றிணைந்து அணுகினாலே தீர்வு ஏற்பட வாய்ப்பிருக்கும்போது, அமைப்புகளை ஏற் படுத்தி ஒற்றுமையைக் குலைக்க நாம் காரண மாகி விடக்கூடாது.

————————————————

ஐயம் : தவ்ஹீது என்று சொல்லி ஒன்றாக இருந்த நீங்கள் இப்போது ஏன் பிரிந்து விட்டீர்கள் மார்க்க அடிப்படையிலா? சமுதாய அடிப்படையிலா? M.அசன்மைதீன், புளியங்குடி

தெளிவு : நாங்கள் முஸ்லிம்கள் என்று கூறுகிறோமே அல்லாமல் தவ்ஹீது என்று கூறுவதில்லையே. நாம் எவரிடமிருந்தும் பிரிய வில்லை  எம்முடன் இருந்தவர்கள்தான் பிரிந்து விட்டார்கள். பிரிந்தவர்கள் ஒரே ஒரு அமைப்பில் மட்டும் இதுவரை இருந்திருந்தால், எமது கூற்று அல்லது பிரிந்தவர்கள் கூற்று என்ற இந்த இரண்டில் ஒன்று மட்டுமே குர்ஆன், ஹதீஸின் படி சரி என எண்ண முடியும். ஆனால் பிரிந்த வர்கள் இன்னும் பல சிதறல்களாகி விட்டனர். எனவே அவர்களின் பிரிவு மார்க்க அடிப்படையிலும் இல்லை. சமுதாய அடிப்படையிலும் இல்லை உலகாதாய அடிப்படையிலேயே பிரிந்தார்கள் என்று எண்ணம் கொள்ள பற்பல சான்றுகள் புற்றீசல்களாய் புறப்பட்டுக் கொண்டிருக்கின்றன. நிதானமாய் நடுநிலையோடு நிகழ்வுகளை உற்று நோக்குங்கள். நீங்களே தெரிந்து கொண்டு தெளிவு பெறுவீர்கள்.

——————————————————

ஐயம் : தமிழகத்தில் முஸ்லிம் லீக் துவங்கப் பட்டு 50 ஆண்டாக ஒற்றுமையுடன் முஸ்லிம்கள் வாழ்ந்து வந்தனர். அப்போதே தேசிய லீக் ஒன்று உதயமாகியது. அப்போதெல்லாம் தூங்கி விட்டு, தாங்கள் ததஜ மக்களிடம் சென்றடைந்த பின் தற்போது படு சுறுசுறுப்பாக அதனை எதிர்த்துக் கூட்டம் போடுவது ஏன்?

தெளிவு : முஸ்லிம் லீக்கும், தேசிய லீக்கும் மத்ஹபுவாதிகளால் ஏற்படுத்தப்பட்டவை. ஏப்ரல் 86-ல் விழிப்புணர்வு பெற்று எமது பத்திரி கையை ஆரம்பித்தோம்.

மத்ஹபுகள் (பிரிவுகள்) இஸ்லாத்தில் இல்லை என்பதை அறிந்த பின்பே பத்ரிக்கை ஒன்று உதயமானது. இதனை சரி கண்ட அன்றைய த.மு.மு.க.வின் ஆரம்பக்கட்ட அமைப்பாளர் பிரிந்து சென்றதற்காக குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் காரணத்தைக் கூறிட வில்லை. சேற்றை வாரி இறைத்துத்தான் வெளியேறினார். எங்கெங்கோ இருந்தார். இருந்த இடங்களிலுள்ளவர்களின் மீதெல்லாம் சேற்றை வாரி இறைத்து விட்டு, புதுப்புது பரிணாமங்களில் வளர்ச்சி அடைந்து, த.மு.மு.க.வை ஆரம்பித்து விட்டு அதன்மீதும் சேற்றைவாரி இறைத்து வி;ட்டு, இன்று புதிய கோணத்தில் ததஜ என களமிறங்கியிருக்கிறார். குர்ஆன், ஹதீஸ் என்பதில் எல்லாம் அவருக்கு அக்கறை இல்லை என்பதை எடுத்துக்காட்ட எமது சுறுசுறுப்பு தவிர்க்க முடியாத அவசியமாகி விட்டது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். 1987லிலிருந்து எமது இந்த முயற்சி தொடர்கிறது என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.

————————————————–

ஐயம் : விடியல் வெள்ளி மாத இதழ் போஸ்டர் ஒட்டுவேன். இதன் காரணமாக நான் தவ்ஹீது பள்ளியில் என்னை தொழுகைக்கு அனுமதிப்பதில்லை. இது ஏன்? இது கூடுமா? விளக்கம் தரவும். K.முஹம்மது அலி ஜின்னா, புளியங்குடி

தெளிவு: ~~ஹய்ய அலஸ் ஸலாத்|| தொழுகைக்கு வாருங்கள் என மக்களை அழைப்பதற்கு மட்டுமே பள்ளி நிர்வாகத்தினருக்கு அனுமதி உண்டு. ~~தொழுகைக்கு வராதீர்கள்|| என்று சொல்லக்கூடியவர்கள் ~தொழுகைக்கு வாருங்கள்| என்று பாங்கின் மூலமாக அழைப்பது ஏன்? சொல் ஒன்று செயல் வேறு ஆக செயல்படும் முனாஃபிக்குகளா அவர்கள்? தங்களை ஆலிம்கள் (அறிஞர்கள்) எனக் கூறிக் கொள்பவர்களின் கட்டளைகளின்படிதான் பள்ளி நிர்வாகிகள் செயல்படுகின்றனர். இந்த முனாஃபிக்தனத்தின் மூலவித்து இந்த ஆலிம்கள் தான்! அது சுன்னத் வல்ஜமாஅத் பள்ளியாக இருந்தாலும் சரி. தவ்ஹீத் பள்ளியாக இருந்தாலும் சரியே! அமைப்புகள், பிரிவுகள் ஏற்பட்ட அலங்கோலங்களின் அருவருப்பான வெளிப்பாடுகளே இவை. தாங்கள் எந்தப் பத்திரிக்கைக்காகப் போஸ்டர் ஒட்டுகிறீர்களோ அப்பத்திரிக்கையும்; ஒரு அமைப்பின் சார்பாக செயல்பட்டுக் கொண்டிருப்பதை மறந்து விடாதீர்கள்.

———————————————–

ஐயம்: இஸ்லாமிய சமுதாயத்தில் அல்லாஹ் ஒருவன்தான் கடவுள். அந்த கடவுள் எந்த மாதிரியான இறை வணக்கத்தை விரும்புகிறான். ஹனஃபியா, ஷாஃபியா, ஹன்பலியா, மாலிக்கிய்யா, தவ்ஹீதா என்ற விபரத்தை தெரியப்படுத்தவும். M.அப்துல் காதர், புளியங்குடி

தெளிவு : தங்கள் வினாவிலேயே விடை ஒளிந்து கொண்டிருப்பதைத் தேடிக் கண்டு பிடியுங்கள். ~~இஸ்லாமிய சமுதாயம்|| எனக் குறிப்பிட்டிருக்கிறீர்கள் அல்லவா? இஸ்லாம் எனும் பெயரைத் தந்ததே ஒரே கடவுளான அல்லாஹ்தான் (பார்க்க அல்குர்ஆன் 5:3, 22:78, 41:33) ஹனஃபி, ஷாஃபி, மாலிகி, ஹன்பலி, தவ்ஹீதி என்றெல்லாம் அல்லாஹ் அறிமுகப்படுத்தவில்லை. அல்லாஹ்வின் மார்க்கமான இஸ்லாத்தை ஏற்று அதை மட்டுமே மக்க ளுக்கு அறிமுகப்படுத்திய இறைத்தூதர் நபி(ஸல்) அவர்கள் ~~என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே நீங்களும் தொழுங்கள்|| என்று இஸ்லாத்தின் தொழுகையை அறிமுகப்படுத்தினார்கள். ஹனஃபி தொழுகை, ஷாஃபி தொழுகை, மாலிகி தொழுகை, ஹன்பலி தொழுகை, தவ்ஹீது தொழுகை என்றெல்லாம் அறிமுகப்படுத்தவில்லை. தவ்ஹீத் என்ற பெயரில் கூட ஜமாஅத்தை அறிமுகப்படுத்த எவருக்கும் அதிகாரம் கிடையாது. அதுவும் ஒரு தவறான பிரிவாகிவிடும் என நாம் கூறி வருவது உண்மைதான் என்பதை தங்கள் கேள்வியும் நிரூபித்து விட்டது. எப்படியென்றால் மத்ஹபுகள் என்ற பிரிவுகளின் வரிசையிலேயே தாங்கள் தவ்ஹீதையும் சேர்த்து இருப்பதுதான் இதற்கான சான்று.

Previous post:

Next post: