ஐயமும்! தெளிவும்!!

in 2009 அக்டோபர்,ஐயமும்! தெளிவும்!!

ஐயமும்! தெளிவும்!!

ஐயம்: தப்லீஃக் ஜமாஅத்தில் இருந்த நீங்கள் நஜாத் என்ற பிரிவை ஏற்படுத்தினீர்கள். பிரிவு இருக்கக்கூடாது என்று சொல்லும் நீங்கள் இந்த பிரிவை ஏன் ஏற்படுத்தினீர்கள்? தப்லீக் கில் இருந்தே நீங்கள் நேர்வழிபடுத்தி இருக்கலாமே! S.முகைதீன், ஜின்னாநகர் 3வதுதெரு, புளியங்குடி

தெளிவு : பல முறை பதிலளிக்கப்பட்ட வினா இது. இருப்பினும் சுருக்கமாகக் கூறுகின்றோம். தப்லீஃக் ஜமாஅத்தினர் அவர்களின் நெறி நூலாக குர்ஆனை எடுத்துக் கொள்ளாமல், கப்ஸாக்களும் கட்டுக்கதைகளும் நிறைந்த, குர்ஆன், ஹதீஃதுக்கு முரண்பட்டவற்றை அதிகமாகக் கொண்ட அமல்களின் சிறப்புகள் புத்தகத்தை எடுத்துக் கொண்டிருக்கும் தவறான முரட்டுப் பிடிவாதக் கொள்கையை இரண்டு முறை டெல்லியிலுள்ள தப்லீஃக் மர்கஸில் போய் நேரடியாக தெளிவாக விளக்கி முறையிட்டும் அவர்கள் அதைப் பொருட்படுத்தாமல் அதில் தான் பரக்கத் இருக்கிறது என்று நினைப்பதை அவர்களின் செயல்பாடுகளிலிருந்து அறிந்தவுடன் நாம் அதிலிருந்து வெளியேறினோம். எந்த பிரிவையும் நாம் ஏற்படுத்தவில்லை. நெறிநூலான குர்ஆன் கூறும் குர்ஆன், ஹதீஸ் கொள்கைகள் மட்டுமே இஸ்லாம் என்பதை மக்களுக்கு எடுத்துச் சொல்லவே ஏப்ரல் 1986-ல் நஜாத் எனும் பெயரில் மாத இதழ் ஆரம்பிக்கப்பட்டது. பிரிவுகளை சரிகண்டவர்கள் பத்திரிக்கையின் பெயரையே குர்ஆன், ஹதீஸ் கூறுப வர்களுக்கு ~நஜாத்காரர்கள்| என்று சூட்டி மகிழ்ந்தார்கள், மகிழ்ந்து வருகிறார்கள் என்பதே நடைமுறை உண்மை.

இஸ்லாத்திற்கெதிரான கொள்கைகளைக் கூறிக்கொண்டிருக்கும் தப்லீஃக்கில் இருந்து கொண்டே நேர்வழிப்படுத்துவது எப்படி என் பதை நீங்கள் தான் விளக்க வேண்டும். இஸ்லாத்தில் இருந்து கொண்டுதான் நேர்வழிப் படுத்தலை செய்ய வேண்டும். இதுவே இறைக் கட்டளை (பாக்க 5:3, 3:19,85) எவ்வித அமைப்புகளிலிருந்து கொண்டும் செய்யக் கூடாது என்பதை மறந்து விடாதீர்கள்.

 

ஐயம் : பள்ளியில் அடி வாங்கினாலும் அங்கு தான் தொழவேண்டும் என்று சொல்லும் நீங்கள், நீங்கள் எல்லோரும் சேர்ந்து தானே முதலில் பள்ளியிலிருந்து வெளியாகினீர்கள். இதற்கு யார் பொறுப்பு? நீங்கள்தானே! இப்ராஹீம், புளியங்குடி.

தெளிவு: நாங்களாக பள்ளியிலிருந்து வெளி யேறினால் அதற்கு பொறுப்பு நாங்கள் ஆவோம். வெளியேற்றப்பட்ட போது கூட, மீண் டும் மீண்டும் வெளியேற்றப்பட்ட பள்ளிக்கே சென்று தொழுது வந்தோம். தொழுது வருகின்றோம்.
இந்த பிரச்சனைகளுக்கு பயந்து ஒதுங்கியவர்கள் தனிப்பள்ளிக் கட்டிக் கொண்டனர். இன்னும் பயந்தவர்கள் தமது பயந்தாளித்தனம் வெளியே தெரிந்து விடக்கூடாது என்பதற்காக குறிப்பிட்ட இமாம்களின் பின்னால் தொழக்கூடாது என்று தான் தோன்றித்தன மான ஃபத்வாக்களை வாரி இறைத்து, பெண்களைப் போல் வீட்டிலேயே தொழுது கொள்ளும் அடைகாக்கும் கோழிகள் போல் ஆகிவிட்டனர்.

பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்ட பின்பும் அதே பள்ளிகளுக்கே சென்று தொழுதுவரும் நாங்களா இதற்கு பொறுப்பாளி? அல்லது மத்ஹபு பள்ளிகளை விட்டுவிட்டு தனிப்பள்ளி கட்டிக் கொண்டவர்கள் இதற்கு பொறுப்பாளிகளா? அல்லது இமாம்களின் பின்னால் தொழக்கூடாது எனக்கூறி ஒதுங்கிக் கொண்டவர்கள் பொறுப்பாளிகளா? என தாங்களே சிந்தித்து முடிவெடுத்துக் கொள்ளுங்கள்.

 

ஐயம் : 3:14ம் வசனத்தின் பொருள் என்ன? குறிப்பாக ~ஆண்மக்கள்| என்று குறிப்பிடப்பட் டுள்ளதே. அதைப்பற்றியும் கூறவும்.
A. இர்ஃ;பான், தஞ்சை.

தெளிவு : அல்குர்ஆன் 3:14ம் வசனம் கீழே காட்டப்பட்டுள்ளது.
~~பெண்கள், ஆண் மக்கள், பொன்னிலும், வெள்ளியிலுமான பெருங்குவியல்கள், அடையாளமிடப்பட்ட குதிரைகள், (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) கால் நடைகள், சாகுபடி நிலங்கள் ஆகியவற்றின்மீதுள்ள இச்சை மனிதர்களுக்கு அழகாக்கப்பட்டிருக்கிறது. இவை உலக வாழ்வின் (நிலையற்ற) சுகப் பொருள்களாகும். அல்லாஹ் விடத்திலோ அழகான தங்குமிடமுண்டு||. அல்குர்ஆன் 3:14
~~ஆண் மக்கள் மீதுள்ள இச்சை மனிதர் களுக்கு அழகாக்கப்பட்டிருக்கிறது|| என்று மேற்கண்ட வசனத்தில் குறிப்பிட்டுள்ளதால், அதன் அர்த்தத்தை குறிப்பாக அறிந்து கொள்ள விரும்புகிறீர்கள்.

தாங்கள் எண்ணும் எண்ணத்தை இந்த வசனம் வெளிப்படுத்தவில்லை என்பதை கீழ்க்கண்ட வசனம் தெளிவுபடுத்துவதைப் பாருங்கள்.
~~லூத்(நபி) தம் சமூகத்தாரிடம் கூறினார்@ உலகத்தில் எவருமே உங்களுக்கு முன் செய்திராத மானக்கேடான ஒரு செயலைச் செய்யவா முனைந்தீர்கள்?|

~~மெய்யாகவே நீங்கள் பெண்களை விட்டு விட்டு, ஆண்களிடம் காம இச்சையை தனித் துக் கொள்ள வருகிறீர்கள். நீங்கள் வரம்பு மீறும் சமூகத்தாராகவே இருக்கின்றீர்கள்.|| அல்குர்ஆன் 7:80,81

~~(லூத் நபி) அவர்களுடைய சமூகத்தார், அவரிடம் விரைந்தோடி வந்தார்கள்” இன்னும் முன்னிலிருந்தே அவர்கள் தீய செயல்களே செய்து கொண்;டிருந்தார்கள். (அவர்களை நோக்கி லூத்) ~~என் சமூகத்தார்களே! இதோ இவர்கள் என் புதல்விகள்” இவர்கள் உங்களுக்கு(த் திருமணத்திற்கு)ப் பரிசுத்தமானவர் கள்” எனவே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங் கள்..|| என்று கூறினார். அல்குர்ஆன் 11:78

~~(லூத் நபி) இதோ! என் புதல்வியர் இருக் கிறார்கள். நீங்கள் (ஏதும்) செய்தே தீர வேண்டுமெனக் கருதினால் (இவர்களைத் திருமணம்) செய்து கொள்ளலாம்|| என்று கூறினார்.

~~(நபியே) உம் உயிர்மீது சத்தியமாக, நிச்சயமாக அவர்கள் தம் (கேவலமான செயல் களின்மீது கொண்டுள்ள) மதிமயக்கத்தில் தட்டழிந்து கொண்டிருந்தார்கள்.

~~ஆகவே பொழுது உதிக்கும் வேளையில், அவர்களை பேரிடி முழக்கம் பிடித்துக் கொண்டது” பின்பு அவர்களுடைய ஊரை மேல் கீழாகப் புரட்டி விட்டோம்” இன்னும் அவர்கள்மேல் சுடப்பட்ட களிமண்ணாலான கற்களைப் பொழியச் செய்தோம்||. அல்குர்ஆன் 15:71-74

ஆண்கள் ஆண்களின்மீது மோகம் கொள்வது தடுக்கப்பட்டுள்ளது என்பதையும் ஆண்கள் பெண்களை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதும் மேற்கண்ட வசனங்களில் தெளிவு படுத்தப்பட்டுள்ளது. ஆண்கள் ஆண்களின்மீது மோகம் கொள்ளும் செயல் அல்லாஹ்வின் கோபத்திற்கும் சாபத்திற்கும் உள்ளாக்கிவிடும் என்பதையும் மேற்கண்ட 15:73,73 வசனங்கள் குறிப்பிடுகின்றன.
~~… உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள்” இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன் நான்காகவோ” அல்குர்ஆன் 4:3

~~இன்னும் உங்களில் வாழ்க்கைத் துணை இல்லா(ஆண் பெண்டி)ருக்கும். அவ்வாறே ஸாலிஹான உங்கள் (ஆண், பெண்) அடிமை களுக்கும் விவாகம் செய்து வையுங்கள்….|| அல்குர்ஆன் 24:32

ஆண்கள், பெண்களையும், பெண்கள் ஆண்களையும் (முறைப்படி) திருமணம் செய்யுமாறு மேற்கண்ட வசனங்கள் தெளிவுபடுத்து கின்றன. எனவே தாங்கள் எண்ணும் எண்ணப்படி 3:14 வசனம் இல்லை என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

3:14 வசனம் தெரிவிப்பது யாதெனில், ~~(மனைவிகளாகிய) பெண்கள் (ஆண்கள் மீதும்), (கணவர்களாகிய) ஆண்கள் (பெண் கள்மீதும்), (மக்கள் அனைவரும்) பொன்னிலும், வெள்ளியிலுமான பெருங்குவியல்கள் (மீதும்), அடையாளமிடப்பட்ட குதிரைகள், கால்நடைகள், சாகுபடி நிலங்கள் ஆகியவற்றின் மீதும் (கொண்டுள்ள) இச்சை (விருப்பம்) மனிதர்களுக்கு அழகாக்கப்பட்டிருக்கிறது. (எனினும்) இவை உலக வாழ்வின் சுகப் பொருள்களாகும். அல்லாஹ்விடத்திலோ அழகான இடம் உண்டு| என்பதேயாகும்.

பொதுவாக வாரிசு என்ற அடிப்படையில் ஆண் பிள்ளைகளை விரும்புவது அழகாக்கப்பட்டுள்ளது என்பதையே இந்த 3:14 இறைவாக்கு கூறுகிறது.

 

ஐயம் : கழுதையின் மாமிசம் ஹலாலானது என்றும் ஸஹாபாக்கள் கழுதை இறைச்சியை சாப்பிட்டிருப்பதாகவும் சிலர் கூறுவது உண்மையா?  I.அன்வர், ராமநாதபுரம்.

தெளிவு : கழுதையின் மாமிசம் ஹலாலானது என்று எவரும் கூறி நாம் இதுவரை கேள்விப்பட்டதில்லை. சஹாபாக்கள் அதை உண் டிருப்பதாகக் கூறுவது பொய். இதனை பொய் என நிரூபிக்கும் ஹதீஸ் ஒன்று புகாரீயில் இடம் பெற்றுள்ளதை கீழே பிரசுரித்துள்ளோம் பார்வையிடுங்கள்.

~~கைபர் கோட்டையின் முற்றுகையில் ஈடுபட்டிருந்த நாங்கள் பசி பட்டினியால் பாதிக்கப்பட்டிருந்தோம். கைபர் போர் ஆரம்பித்த நாளன்று நாங்கள் காட்டுக் கழுதைகளை வேட்டையாடிப் பிடித்து அவற்றை அறுத்தோம். (அவை) பாத்திரங்களில் கொதிக்கத் தொடங்கிய போது, அல்லாஹ்வின் தூதருடைய அறிவிப்பாளர் ~~பாத்திரங்களைக் கவிழ்த்து விடுங்கள். கழுதைகளின் இறைச்சிகளில் சிறிதும் உண்ணாதீர்கள்|| என்று அறிவித்தார். இந்த அறிவிப்பைச் செவியுற்ற நாங்கள் ~~(அக் கழுதையாகிய) அதிலிருந்து ~குமுஸ்| எனும் நிதி செலுத்தப்படாமல் இருந்ததால்தான் இப்படி அறிவிக்கப்படுகிறது|| என்று சொன்னோம். ~~(அப்படியல்ல) அதை என்றைக்குமே நபி (ஸல்) அவர்கள் தடைசெய்து விட்டார்கள்|| என்று மற்றவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அபீ அல்ஃபர்(ரழி), நூல்: புகாரீ பாகம்3, ஹதீஸ் எண்3155(ரஅக)

அறப்போரில் எதிரிகள் விட்டுச் செல்லும் பொருட்களுக்கு ~~ஃகனீமத்|| (போர்ச் செல் வம்) என்பர். இவ்வாறு கிடைக்கும் செல் வத்தை 5 பாகங்களாகப் பிரித்து, 4 பாகங்கள் போரில் கலந்து கொண்ட வீரர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும். மீதியுள்ள ஒரு பாகம் குமுஸ் என்பதாகும். இந்த ஒரு பாகம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு உரியதாகும்” அவர்கள் அந்த ஒரு பாகத்தை தமக்குரிய நிதியாக அதாவது ஆட்சித் தலைவர் நிதியாக வைத்துக் கொண்டு, உரிய இனங்களில் செலவிடுவார்கள். இறைத் தூதருக்குப் பின், அரசுக் கருவூலத்தில் இந்த பங்கு சேர்க்கப்பட்டு உரியவர்களுக்கு வழங்கப்பட்டது.

Previous post:

Next post: