ஆதிகால வேதங்களும் இறுதி நெறிநூல் அல்குர்ஆனும்!

in 2010 பிப்ரவரி

 ஆதிகால வேதங்களும் இறுதி நெறிநூல் அல்குர்ஆனும்!
ஜனவரி தொடர் : 6

ஜாக், ததஜ, இதஜ போன்ற இயக்கங்களில் இருப்பவர்கள் நேரடியாகப்
படித்து சிந்தித்து உணர்ந்து அதன்படி நடக்க வேண்டிய இறைவாக்குகள்!

அப்போது நபி(ஸல்) அவர்கள், “”மக்கள் என்னை வெளியேற்றவா போகிறார்கள்?” என்று கேட்டார்கள். அதற்கவர் “ஆம்! நீர் கொண்டு வந்திருப்பது போன்ற சத்தியத் தைக் கொண்டு வந்த எந்த மனிதரும் (மக்களால்) பகைத்துக் கொள்ளப்படாமல் இருந்ததில்லை. (நீர் வெளியேற்றப்படும்) அந்த நாளை நான் அடைந்தால் உமக்குப் பலமான உதவி செய்வேன்” என்று கூறினார். அதன் பின் வரகா நீண்ட நாள் வாழாமல் இறந்து விட்டார். இந்த முதல் செய்தியுடன் வஹீ சிறிது காலம் நின்று போயிற்று. (ஸஹீஹுல் புகாரி-ஹதீஸ் இலக்கம்:3)

ஏற்கனவே பைபிள் வசனங்களும் நபி (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து துரத்தப்பட்டு மதீனா செல்வார்கள் என்ற சம்பவத்தை முன் அறிவிப்பு செய்திருந்தது. “வரகா’ வும் இதனையே இங்கு முஹம்மது நபி(ஸல்) அவர்களிடம் முன் அறிவிப்புச் செய்கிறார் கள். இதன் பின் முஹம்மது என்ற மனிதன் “அல்லாஹ்வைத் தவிர வணங்கி வழிபடக் கூடிய ஏக நாயன் வேறு யாருமில்லை எனவும், முஹம்மது நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடிமையும் தூதருமாவார் கள்” என அல்லாஹ் அறிவித்துள்ளான் என்று சொல்கிறார் என்ற செய்தி மக்களிடையே செல்கின்றது. இச் செய்தி இஸ்மாயீல் (அலை) இறைத் தூதராக வந்த பின் நீண்ட காலம் தூதர்கள் வராத மக்கா அரபியருக்கு, “அல்லாஹ்வைத் தவிர வணங்கி வழிபடக் கூடிய ஏக நாயன் வேறு யாருமில்லை” என்ற வார்த்தை புதியவையாக இருக்கும்; தமது மூதாதையர் காட்டிய பல தெய்வக் கொள்கைகளுக்கு மாற்றமாக இருக்கும். ஆனால் வேத அறிவு பெற்ற சமுதாய அறிஞர்களுக்கு இந்த வசனங்கள் புதியவைகள் அல்ல. அவதானியுங்கள்.

“யா இக் இத் முஸ்திஇ”
பொருள்: வணக்கத்துக்குரியவன் இறைவன் ஒருவனே” (ரிக் : 6:45:16)
“”நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தா” (உபாகமம்: 6:4)
“”நானே தேவன். வேறொருவரும் இல்லை. நானே தேவன். எனக்கு சமானன் இல்லை.” (ஏசாயா:-46:9)
“”எல்லா படைப்பினங்களையும் தனது சுய சக்தியால் இயக்கி வைக்கும் இறைவன் சகல மக்களின் இதயங்களிலும் குடி கொண்டிருக்கிறான். நீ உனது உடலால், மனதால், அறிவால், அந்த ஏக இறைவனிடம் மட்டும் சரணடைய வேண்டும். அவனுடைய அன்பு இருந்தாலே நிரந்தரமான சாந்தியும் சமாதானமும் கிடைக்கும். (பக்வத் கீதா:18:61,62)

பிசாசு, இயேசுவை மிகவும் உயர்ந்த மலையின் மேல் கொண்டு போய் உலகத்தின் சகல ராஜ்யங்களையும், அவைகளின் மகிமைகளையும் அவருக்குக் காண்பித்து “”நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து என்னைப் பணிந்து கொண்டால், இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன்!” என்று சொன்னான்.
அப்போது இயேசு, “அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்து கொண்டு அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே!” என்றார். (மத்தேயு :4:8-10)

முன்னைய வேதங்களில் எல்லாம் ஒரே இறைவனையே வணங்கி வழிபட வேண்டும் என்றே வலியுறுத்தப்பட்டது. மூஸா(அலை) அவர்களும் ஓர் இறைவனையே வணங்க வேண்டும் என வலியுறுத்தினார்; ஈசா(அலை) அவர்களும் இதனையே வலியுறுத்தினர்; இதே போல் அரேபியாவில் இறுதி இறைத் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களும் இதனையே வலியுறுத்தினார்கள். ஹுதை பியா உடன்படிக்கைக்குப் பின் மக்காவி லிருந்து ஒரு வியாபாரக் கூட்டம் சிரியா சென்றது. அதற்கு குறைஷ்களின் தலைவரான அபூஸுஃப்யான் தலைமை தாங்கிச் சென்றார். அவர் ரோமாபுரி மன்னன் யஹர்குலிஸைச் சந்தித்தார். அவர்கள் இருவருக்கும் இடையில் முஹம்மது நபி(ஸல்) அவர்களைப் பற்றி ஒரு கலந்துரையாடல் இடம் பெற்றது. இந்த உரையாடலில் இருந்து, வேதக்காரர்கள் எந்த அளவு முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வருகை பற்றி அறிந்து வைத்திருந்தார்கள் என்பதை அறியலாம். அந்த உரையாடலை உற்றுக் கவனியுங்கள்.

இப்னு அப்பாஸ்(ரழி) கூறினார்கள்:
(குறை´களின் தலைவன்) அபூ ஸுஃப் யானிடத்திலும் குறை´ காஃபிர்களிடத்திலும் நபி(ஸல்) அவர்கள் (ஹுதைப்பியா என்ற இடத்தில்) ஓர் உடன்படிக்கை செய்தார்கள். அச்சமயத்தில் (குறை´களில் சிலர்) ஒட்டகங்களில் வியாபாரிகளாக சிரியா நாட்டுக்குப் போயிருந்தார்கள். அந்தக் குறை´ வணிகக் கூட்டத்தில் ஒருவராகச் சென்றிருந்த அபூ ஸுஃப்யானை (ரோமாபுரி மன்னர்) யஹர்குலிஸ், பைத்துல் முகத்தஸ் ஆலயத்தில் முகாமிட்டிருந்த தம்மிடம் அழைத்து வரும்படித் தூதரை அனுப்பினார். அந்தத் தூதர் அபூ ஸுஃப்யானிடம் வந்து சேர்ந்தார். ரோமாபுரியின் அரசப் பிரதிநிதிகள் சூழ அமர்ந்திருக்கும் தமது அவைக்கு அவர்களை அழைத்திருந்தார். மன்னர் தமது மொழி பெயர்ப்பாளரையும் அழைத்து வரச் சொன்னார்.

அபூ ஸுஃப்யான் இது குறித்துக் கூறும் போது, (எங்களிடம்) மன்னர் தம்மை இறைவனின் உறவினர் யார்? எனக் கேட்டார். நானே அவருக்கு மிக நெருங்கிய உறவினன் எனக் கூறினேன். உடனே மன்னர், (தம் அதிகாரியிடம்) அவரை என் அருகே அழைத்து வாருங்கள்; அவருடன் வந்திருப்பவர்களையும் என் பக்கத்தில் கொண்டு வந்து அவருக்குப் பின்னால் நிறுத்துங்கள் என்று ஆணையிட்டார். பின்னர் தமது மொழி பெயர்ப்பாளரிடம், நான் அந்த மனிதரைப் பற்றி (அபூ ஸுஃப்யானாகிய) இவரிடம் கேட்பேன். இவர் என்னிடம் பொய்யுரைத்தால் அதை என்னிடம் கூறிவிட வேண்டும் என்று அவருடன் வந்திருப்பவர்களிடம் மொழி பெயர்த்துச் சொல் என ஆணையிட் டார். நான் பொய் கூறியதாக இவர்கள் சொல்லிவிடுவார்க¼ளா என்ற நாணம் மாத்திரம் அப்போது எனக்கு இல்லை என்றால் இறைவன் மீது ஆணையாக நபி(ஸல்) அவர்களைப் பற்றிப் பொய்யுரைத்திருப்பேன்.

பிறகு மன்னர் என்னிடம் கேட்ட முதல் கேள்வி, உங்களில் அவரது குலம் எத்தகையது? அதற்கு, அவர் எங்களில் சிறந்த குலத்தைச் சார்ந்தவர் என்றேன். இவருக்கு முன்னர் உங்களில் யாரேனும் எப்போதாவது இந்த வாதத்தைச் செய்ததுண்டா? என்று கேட்டார். இல்லை என்றேன். இவரது முன்னோர்களில் யாராவது மன்னர்களாக இருந்திருக்கிறார்களா? என்றார். இல்லை என்றேன். அவரைப் பின்பற்றுவோர் அம்மக்களில் சிறப்பு வாய்ந்தவர்களா? அல்லது சாமானியர்களா? என்றார். மக்களில் சாமானியர்கள் தாம் என்றேன். அவரைப் பின்பற்று வோர் அதிகரிக்கின்றனரா? அல்லது குறைகின்றனரா? என்று வினவினார். அவர்கள் அதிகரித்துச் செல்கின்றனர் என்றேன். அவரது மார்க் கத்தில் நுழைந்த பின் அதன் மீது அதிருப் தியுற்று யாரேனும் மதம் மாறியிருக்கின்ற னரா? என்று கேட்டார். நான் இல்லை என்றேன். அவர் இவ்வாறு வாதிப்பதற்கு முன் அவர் பொய் சொல்லக் கூடியவர் என்று எப்போதாவது நீங்கள் சந்தேகித்ததுண்டா? என்றார். நான் இல்லை என்றேன். அவர் வாக்கு மீறியது உண்டா? என்றார். (இது வரை) இல்லை என்று சொல்லிவிட்டு, நாங்கள் இப்போது அவர்களுடன் ஓர் உடன் படிக்கை செய்துள்ளேளாம். அதில் அவர் எப்படி நடந்து கொள்ளப் போகிறார் என்பது எங்களுக்குத் தெரியாது என்றேன். அப்போதைக்கு நபி(ஸல்)மீது குறை கற்பிக்க அந்த வார்த்தையை விட்டால் வேறு எந்த வார்த்தையையும் எனது பதிலில் நுழைத்திட எனக்கு வாய்ப்பில்லை! அவருடன் நீங்கள் போர் புரிந்திருக்கிறீர்களா? எனக் கேட்டார். ஆம் என்றேன். அவருடன் நீங்கள் நடத்திய போரில் முடிவுகள் எவ்வாறிருந்தன? என்றார். எங்களுக்கும் அவருக்குமிடையே வெற்றியும் தோல்வியும் மாறிமாறி வந்திருக்கின்றன. சில சமயம் அவர் எங்களை வென்றிருக்கிறார்; சில சமயம் நாங்கள் அவரை வென்றிருக்கிறோம் என்றேன். அவர் உங்களுக்கு என்ன தான் போதிக்கிறார்? என்று கேட்டார். அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள்: அவனுக்கு எதனையும் இணையாக்காதீர்கள்; உங்கள் முன்னோர்கள் கூறிவந்தவற்றையயல்லாம் விட்டுவிடுங்கள் என்கிறார். தொழுகை, உண்மை, கற்பு நெறி, உறவினர்களுடன் இணங்கியிருத்தல் போன்ற பண்புகளை ஏவுகிறார் என்றேன்.

மன்னர் தமது மொழிபெயர்ப்பாளரிடம் மொழி பெயர்க்கச் சொன்னதாவது: “அவரது குலத்தைப் பற்றி உம்மிடம் விசாரித்தேன். அதற்கு நீர் உங்களில் அவர் உயர் குலத்தைச் சேர்ந்தவர்தாம் என்று குறிப்பிட்டீர். எல்லா இறைத் தூதர்களும் அப்படித்தான் அவர்களின் சமூகத்திலுள்e உயர் குலத்தில் தான் அனுப்பப்பட்டுள்ளார் கள். உங்களில் யாரேனும் இந்த வாதத்தை இதற்கு முன் செய்ததுண்டா? என்று கேட்டேன். அதற்கு நீர் இல்லை என்று குறிப் பிட்டீர். இவருக்கு முன்னர் யாரேனும் இவ்வாதத்தைச் செய்திருந்தால், முன்னர் செய்யப்பட்டு வந்த ஒரு வாதத்தைப் பின் பற்றித்தான் இவரும் செய்கிறார் என்று நான் கூறியிருப்பேன். இவரது முன்னோர்களின் யாரேனும் மன்னராக இருந்திருக்கிறார்களா என்று உம்மிடம் நான் கேட்டபோது, இல்லை என்று சொன்னீர். இவரது முன்னோர்களில் யாராவது மன்னராக இருந்திருந்தால், தம் முன்னோர்களின் ஆட்சியை அடைய விரும்பும் ஒரு மனிதர் இவர் என்று சொல்லியிருப்பேன். இவ்வாதத்தைச் செய்வதற்கு முன் அவர் பொய் சொல்வதாக நீங்கள் அவரைச் சந்தேகிதத்துண்டா? என்று உம்மிடம் கேட்டேன். அதற்கு நீர் இல்லை என்று குறிப்பிட்டீர். மக்களிடம் பொய் சொல்லத் துணியாத ஒருவர் இறைவன் மீது பொய்யுரைக்கத் துணியமாட்டார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். மக்களில் சிறப்பு வாய்ந்தவர்கள் அவரைப் பின்பற்று கின்றனரா? அல்லது சாமானியர்களா? என்று கேட்டேன். சாமானிய மக்கள் தாம் அவரை பின்பற்றுகின்றனர் என்று குறிப்பிட்டீர். அப்படிப்பட்டவர்கள் தாம் இறைத்தூதர்களை (துவக்கத்தில்) பின்பற்றுவோராய் இருந்திருக்கிறார்கள். அவரைப் பின்பற்று கின்றவர்கள் அதிகரிக்கின்றனரா அல்லது குறைகின்றனரா என்றும் உம்மிடம் கேட்டேன். அவர்கள் அதிகரித்துச் செல்கின்றனர் என்று குறிப்பிட்டீர். இறை நம்பிக்கை, நிறைவு பெறும்வரை அப்படித்தான் (வளர்ந்து கொண்டே) இருக்கும். அவரது மார்க்கத்தில் நுழைந்த பின்னர் யாரேனும் அம்மார்க்கத்தின் மீது அதிருப்தியடைந்து மதம் மாறி இருக்கின்றனரா? என்று உம்மிடம் கேட்டேன். நீர் இல்லை என்று குறிப்பிட்டீர். அப்படித்தான் இதயத்தில் நுழைந்து விட்ட இறைநம்பிக்கையின் எழில் (உறுதியானது).

அவர் (எப்போதேனும்) வாக்கு மீறிய துண்டா? என உம்மிடம் நான் கேட்ட போது, இல்லை என்றீர். (இறைவனின்) திருத் தூதர்கள் அப்படித்தான் வாக்கு மீறமாட் டார்கள். அவர் உங்களுக்கு எதைக் கட்டளையிடுகிறார்? என்று உம்மிடம் கேட்டேன். அல்லாஹ்வையே வணங்க வேண்டும் என்றும் அவனுக்கு எதனையும் இணையாக் கக் கூடாது என்றும் உங்களுக்கு அவர் ஏவுவதாகவும், சிலை வணக்கங்களிலிருந்து அவர் உங்களைத் தடுப்பதாகவும் தொழுகை, உண்மை, கற்பு நெறி ஆகியவற்றை உங்களுக்கு அவர் ஏவுவதாகவும் நீர் கூறினீர். நீர் சொல்லியது அனைத்தும் உண்மையானால் (ஒரு காலத்தில்) எனது இரு பாதங்களுக்குக் கீழுள்ள இந்த இடத்தையும் அவர் ஆளுவார். (இப்படிப்பட்ட) ஓர் இறைத்தூதர் (வெகுவிரைவில்) தோன்றுவார் என்று நான் முன்பே அறிந்திருந்தேன். ஆனால் அவர் (அரபிகளாகிய) உங்களிலிருந்து தான் தோன்றுவார் என்று நான் கருதியிருக்கவில்லை. அவரைச் சென்றடையும் வழியை நான் அறிந்திருந் தால் மிகுந்த சிரமப்பட்டாவது அவரைச் சந்தித்திருப்பேன். (இப்போது) நான் அவரருகே இருந்தால் அவரது பாதங்களைக் கழுவி விடுவேன்.

புஸ்ராவின ஆளுநர் மூலம் யஹர்குலிஸ் மன்னரிடம் கொடுப்பதற்காக திஹியா வசம் நபி(ஸல்) அவர்கள் கொடுத்தனுப்பிய கடிதத்தைத் தம்மிடம் கொடுக்குமாறு மன்னர் ஆணையிட்டார். ஆளுனர் அதனை மன்னனிடம் ஒப்படைத்தார். மன்னர் அக்கடிதத்தைப் படித்துப் பார்த்தார். அக்கடிதத்தை வரும் இதழில் பார்ப்போம்.
 

Previous post:

Next post: