விமர்சனம் : குர்ஆன், ஹதீஸ் மட்டுமே மார்க்கம் என்று ஒப்புக்கொண்டு மத்ஹபுகளை விட்டு வெளியேறிய பல சகோதரர்கள் எந்த இயக்கத்திலும் சேராமல், எந்த அமீருக்கும் வழிப்படாமல் தனித்துச் செயல்படுவதே நேர் வழி என எண்ணிச் செயல்படுகிறார்கள். இது சரியா? அப்துல்லாஹ், திருச்சி

விளக்கம்: எண்ணற்ற சகோதரர்கள் இப்படிப்பட்ட அறிவீனமான சிந்தனைக்கு அடிமைப் பட்டிருப்பதால் அதை விரிவாக விளக்குவது நமக்கு அவசியமாக இருக்கிறது. ஓர் அமீரின் கீழ் இயக்கமாக செயல்படுவது வழிகேடு; குர்ஆன், ஹதீஸுக்கு முரணானது என்ற நச்சுக் கருத்தால், பொய்யன் பீ.ஜை.யின் தொடர் உபதேசத்தால் பலர் மூளை சலவைச் செய்யப்பட்டுள்ளனர். அபூ அப்தில்லாஹ் இயக்கமே இல்லாமல் செயல்படச் சொல்கிறார். அமீர் என்றால் ஆட்சி அதிகாரமுள்ளவராக இருக்க வேண்டும் போன்ற நச்சுக் கருத்துக்களை அவையாகும். இவை இரண்டுமே ஹிமாலயத் தவறுகளாகும்.

அபூ அப்தில்லாஹ் இயக்கமே இல்லாமல் செயல்பட வேண்டும் என்று என்றுமே சொன்னதில்லை. அல்லாஹ் கட்டளையிட்டு நபி(ஸல்) அவர்கள் நடைமுறைப்படுத்திக் காட்டிய “ஜமாஅத்துல் முஸ்லிமீன்” என்ற உலகளாவிய பேரியக்கம் இருக்கும் நிலையில், ஜாக், ததஜ, இதஜ போன்ற மனிதக் கற்பனைகளில் உருவான ஒரு குறிப்பிட்ட எல்லைக் குட்பட்ட குட்டி, குட்டி இயக்கங்களில் செயல் படாதீர்கள். அப்படிப்பட்ட குட்டி குட்டி இயக் கங்களான பிரிவுகளை விட்டும் வெளியேறி விடுங்கள் என நபி(ஸல்) கட்டளையிட்டு ள்ளதையே (தில்க்கல் பிர்க்கா) மீண்டும் மீண்டும் எடுத்து வைக்கிறோம். இதைப் பொய்யன் பீ.ஜை.யும் அந்நஜாத் ஆகஸ்ட் 1986 பக்கம் 12-ல் ஒரு விமர்சகர் “உங்கள் இயக்கம்” என்று விமர்சித்ததை மறுத்து “எங்களுக்கென்று இஸ்லாத்தைத் தவிர வேறு இயக்கம் இல்லை” என்று பகிரங்கமாக ஒப்புக்கொண்டு எழுதியவர்தான்.

1986-ல் அப்படி எழுதியவர்தான் 1987லிலே பல பல்ட்டிகள் அடித்து புதிதாக “ஜாக்’ மனிதக் கற்பனை இயக்கத்தை உருவாக்கியவர் இன்று 2010 வரை பல மனிதக் கற்பனை இயக்கங்கள் உருவாகக் காரணகர்த்தாவாக இருந்து வருகிறார். அந்தப் பொய்யன் “ஜமாஅத்துல் முஸ்லி மீன்” அபூ அப்தில்லாஹ்வின் ஜமாஅத்; அதுவும் ஒரு பிரிவு ஜமாஅத்து தான் என்று கூறி வருவதை பல சகோதரர்களும் கண்மூடி ஏற்று, நபி(ஸல்) அவர்கள் நடைமுறைப்படுத்தி விட்டுச் சென்ற “ஜமாஅத்துல் முஸ்லிமீன்”ஐ அபூ அப்தில்லாஹ்வின் ஜமாஅத் என்று கூறிக் கொண்டு, இஸ்லாம், முஸ்லிம் என ஜமாஅத்தாக இல்லாமல் தனியாகச் செயல்பட வேண்டும் என வழிகேட்டில் செல்கிறார்கள். ஒன்றுபட்டு ஒரே ஜமாஅத்தாக இல்லாமல் தனியாகச் செயல்படுவதும் வழிகேடு, மனிதக் கற்பனைகளில் உருவான பிரிவு ஜமாஅத்துகளில் செயல்படுவதும் வழிகேடு என்று குர்ஆன் ஹதீஸ் கூறுவதையே எடுத்துத் தருகிறோம்.

அல்குர்ஆன், “முஸ்லிம்’ எனத் தனித்துச் செயல்படச் சொல்லவில்லை. “முஸ்லிமீன்” முஸ்லிம்களில் உள்ளவன், முஸ்லிம் ஜமாஅத்தில் உள்ளவன் என்று கூறவே கட்டளையிடுகிறது. இந்த உண்மையை 3:102,103, 6:163, 10:72, 90, 22:78, 27:91, 39:12, 41:33, 46:15, 51:36 போன்ற இறைவாக்குகளை நடுநிலையோடு நேரடியாகப் படித்து விளங்குகிறவர்கள் உணர முடியும். இந்த இறைக்கட்டளைகள் அனைத்தும் முஸ்லிம் களில் ஒருவனாக அதாவது ஒன்றுபட்ட முஸ்லிம் ஜமாஅத்தில் ஒருவனாக இருந்து செயல்படக் கட்டளையிடுகின்றனவே அல்லாமல் தனித்து “முஸ்லிம்’ என்ற நிலையில் செயல்படக் கட்டளையிடவில்லை என்பதை விளங்க முடியும்.

பொய்யன் பீ.ஜை. 1987-ல் நம்மைவிட்டுப் பிரிந்து சென்று “ஜாக்’ பிரிவு ஜமாஅத்தை அமைத்துச் செயல்படும் போது அது குர்ஆன், ஹதீஸுக்கு முரண், வழிகேடு என நாம் எழுதும்போது, “ஜாக்’ வழிகேடு அல்ல; நேர்வழி என நிலை நாட்ட நம்மோடு நான்கு அமர்வுகளில் விவாதித்தார். அந்த அமர்வுகளில் அல்குர் ஆன் நேரடிக் கருத்தை மறுத்து சுய விளக்கங்கள் கொடுத்து தனது வழிகேட்டை நேர்வழி என நிலை நாட்ட முற்பட்டார். “”ஹுவ சம்மாக்கு முல் முஸ்லிமீன்” என்ற 22:78-ன் அர்த்தத்தை அனர்த்தமாக்கினார். பிறை பற்றிய ஹதீஸில் “­ஹிதூ’ என்ற அரபி பதத்தை சாட்சி சொன்னார்கள் என்று கூறாமல் கூறினார்கள், சொன்னார்கள் என்று இருட்டடிப்புச் செய்தது போல், இங்கும் “உங்களுக்கு முஸ்லிம்கள் என பெயரிட்டான்” என்பதை உங்களை முஸ்லிம்கள் என சொன்னான்-கூறினான் என இருட்டடிப்புச் செய்தார். நீண்ட விவாதத்திற்குப் பிறகு பெயரிட்டான் என்பதை ஒப்புக்கொண்டுவிட்டு முஸ்லிம்கள் என்பதை தமிழில் மொழி பெயர்க்க வேண்டும். முஸ்லிம்கள் என்பதை முற்றிலும் கட்டுப்பட்டு நடப்பவர்கள் என்றும், ஜமாஅத்துல் முஸ்லிமீன் என்பதை முற்றிலும் கட்டுப்பட்டு நடப்பவர்களின் கூட்டமைப்பு என்றும் தமிழில் மொழி பெயர்க்க வேண்டும் என விதண்டாவாதம் செய்தார். உடனே நாம் உங்களின் பெயர் என்ன என்று கேட்டோம். உடனே ஜைனுல் ஆபிதீன் என்றார். ஏன் உங்கள் பெயரை தமிழில் மொழி பெயர்க்காமல் அரபியிலேயே சொல்கிறீர்கள் என்று கேட்டோம். பீ.ஜை. திகைத்துப் போய் அது பெயர் என்றார். உடனேயே உங்கள் பெற்றோர் உங்களுக்கு சூட்டிய பெயரைத் தமிழில் சொல்லக் கூடாது; அல்லாஹ் இந்த சமுதாயத்திற்குச் சூட்டிய “முஸ்லிமீன்” என்ற பெயரை தமிழ்ப்படுத்த வேண்டும் என வாதிடுகிறீர்களே! இது உங்களுக்கே சரியாகத் தெரிகிறதா? என்று கேட்டோம்.

இப்படிப் பல விதண்டாவாதங்களைச் செய்து தோற்றுப் போய் இறுதியில் “ஜாக்’ எனப் பெயரிட்டுள்ளது தவறுதான்; இனி எங்கள் கூட்டங்களிலும், பத்திரிகைகளிலும் “ஜாக்’ என வெளியிடமாட்டோம். அமீரிடமும் (றீ.லு.) இதுபற்றிச் சொல்லிவிட்டு அடுத்த அமர்வில் இறுதி முடிவு எடுப்போம் என்று சொல்லிச் சென்றவர்தான் கடந்த 22 வருடங்களாக வருகிறார். இப்படி அவர் சொல்லும்போது சகோதரர் ஹாமித் பக்ரியும் அவருடன் இருந்தார். அவரே சாட்சி.

அல்லாஹ் சூட்டிய பெயரான “” முஸ்லிமீன்” “ஜமாஅத்துல் முஸ்லிமீன்” பெயர் அல்லாத வேறு பெயர் இல்லை; கூடாது என்று 1988-ல் ஒப்புக்கொண்டவர் தான் கடந்த 22 வருடங்களில் பல பிரிவுப் பெயர்கள் ஏற்பட காரணமா யிருக்கிறார். அப்படிப்பட்ட பொய்யனின் “ஜமாஅத்துல் முஸ்லிமீன்”-ம் ஒரு பிரிவுப் பெயர்தான்; அபூ அப்தில்லாஹ்வின் ஜமாஅத், ஆட்சி அதிகாரம் உள்ளவர்கள் மட்டுமே அமீராக முடியும்; மற்றவர்கள் அமீர் என்று சொல்வது பித்தலாட்டம் என்ற மூளையற்ற முழக்கத்தை அப்படியே வேதவாக்காக (?) ஏற்றுக் கொண்டு பிரசுரம் வெளியிட்ட சகோதரர் போன்றவர்கள் இப்படிக் கூறித்திரிவது ஒன்றும் ஆச்சரியமான விடயமல்ல.

4:59 இறைவாக்கில் “வஅத்தீவுர் ரசூல வ உலில் அம்ரி மின்கும்” என்று இணைத்துக் கூறி இருப்பதே சமுதாய ஒற்றமையைக் கட்டிக் காக்க அமீருக்கு வழிப்படுவது அல்லாஹ்வின் கட்டளை;-கண்டிப்பாக எடுத்து நடப்பது கடமை என்பதை உணர்த்துகிறது. மேலும் இக்கட்டளையை வலியுறுத்தும் ஹதீஸ்கள் இதோ!

காய்ந்த திராட்சை போன்ற தலையை யுடைய அபிசீனிய நாட்டுக்காரர் உங்களுக்கு அமீராக இருந்தாலும், நீங்கள் அவருக்குச் செவிசாயுங்கள். கட்டுப்படுங்கள் என நபி (ஸல்) கூறினார்கள். அனஸ்(ரழி), புகாரீ.

அல்லாஹ்வின் நெறிநூலின்படி உங்களை வழி நடத்திச் செல்லும், கருத்த, உடல் ஊனமுற்ற ஓர் அடிமை உங்களுக்கு அமீராக இருந்தாலும் அவருக்கு செவிசாயுங்கள். கட்டுப் படுங்கள் என்று நபி(ஸல்) கூறினார்கள். உம்முல் ஹுசைன்(ரழி) முஸ்லிம்.

பாவமான காரியத்தை ஏவாதவரை தான் விரும்பியவற்றிலும், விரும்பாதவற்றிலும் அமீருக்கு செவிசாய்த்து கட்டுப்படுவது முஸ்லிமான ஒவ்வொருவர் மீதும் கடமையாகும். அவர் பாவத்தை ஏவினால் செவிசாய்ப்பதோ கட்டுப்படுவதோ கூடாது அப்துல்லாஹ்பின் அம்ர்(ரழி) புகாரீ, முஸ்லிம்.

அமீருக்குக் கட்டுப்படுபவர் அல்லாஹ்வுக்கே கட்டப்பட்டவராவார் என்பது நபி மொழி. புகாரீ.

எங்களது விருப்பிலும் வெறுப்பிலும் எங்களது கஷ்டமான சூழ்நிலையிலும் இலகுவான சூழ்நிலையிலும் எங்கள் மீது பாரபட்சம் காட்டும் நிலையிலும் நாங்கள் அமீருக்கு செவிசாய்ப்போம்-கட்டுப்படுவோம் என்றும், அல்லாஹ்விடமிருந்து கிடைத்த ஆதாரத்தின் அடிப்படையில் தெளிவாகத் தெரியும் இறை நிராகரிப்பைக் காணாதவரை அதிகாரம் உடையவர்களிடம் போட்டி போடமாட்டோம் எனவும் நாங்கள் அல்லாஹ்வின் தூதரிடம் உடன்படிக்கை செய்தோம்.
உப்பாதாபின் சாமித்(ரழி) புகாரீ, முஸ்லிம்.

யார் தனது அமீரிடம் எதையேனும் கண்டு வெறுப்படைவாரானால் அவர் சகித்துக் கொள்வாராக! ஏனெனில் யார் அமீரை விட்டு ஒரு சான் அளவு வெளியேறிவிட்டாலும் அவர் அறியாமைக்கால மரணத்தைத் தழுவுவார் என இறைத் தூதர் (ஸல்) கூறினார்கள்.
இப்னு அப்பாஸ்(ரழி) புகாரீ.

பொய்யன் பீ.ஜை.யின் சுய விளக்கத்தைப் புறக்கணித்துவிட்டு நடுநிலையோடு 4:59 இறைவாக்கையும் மேலே எழுதப்பட்டுள்ள ஹதீஸ்களையும் படித்து விளங்குகிறவர்கள் 21:92, 23:52 இறைக் கட்டளைப்படி சமுதாய ஒற்றுமையைக் கட்டிக்காக்க ஆட்சி அதிகாரம் உள்ள அமீராக இருந்தாலும் ஆட்சி அதிகாரம் இல்லாத அமீராக இருந்தாலும் மார்க்கத்திற்கு உட்பட்டு அவருக்கு வழிப்பட்டு நடப்பது கட்டாயக் கடமை என்பதை விளங்க முடியும்.

ஆட்சி அதிகாரம் உள்ள அமீராக இருந்தால் மட்டும் அவருக்கு வழிப்படவேண்டும் என்ற பீ.ஜை.யின் சுய விளக்கம் சரி என்றால், குர்ஆனும், ஹதீஸ்களும் அந்த அமீருக்கு வழிப்படுவதை இந்த அளவு வலியுறுத்தத் தேவையே இல்லை. காரணம் அமீரது ஆட்சி அதிகாரத்திலுள்ள படைகளே அவர்களை பாவமான காரியங்களிலும் வழிப்பட வைத்து விடும். இந்த எச்சரிக்கைகள் தேவையே இல்லை.

இந்த எச்சரிக்கைகள் எல்லாம் ஆட்சி அதிகாரம் இல்லாத எண்ணற்ற நபிமார்களின் தலைமையில் நல்லடியார்கள் ஒன்றுபட்டிருந்தது போல், நபி (ஸல்) அவர்களின் ஆட்சி அதிகாரம் இல்லாத மக்கா வாழ்க்கையின் போது அவர்களின் தலைமையில் ஒன்றுபட்டிருந்தது போல், ஆட்சி அதிகாரம் இல்லாத அமீர்களுக்கு வழிப்பட்டு நடப்பதையே குறிப்பிட்டுக் கூறுகின்றன. நல்லாட்சி நடைபெறுவதற்கு மட்டுமே சமூக ஒற்றுமை என்ற பொய்யன் பீ.ஜை.யின் சுயக் கூற்று பெருந்தவறு. எந்த நிலையிலும் சமூக ஒற்றுமை மிகமிகப் பிரதானம் என்பதே குர்ஆன், ஹதீஸ் கட்டளை.

இதைக் கீழ்வரும் ஹதீஸ்கள் உறுதிப்படுத்துகின்றன. மூவர் பயணத்தில் புறப்பட்டாலும் அவர்கள் தம்மில் ஒருவரை அமீராக்கிக் கொள்ளட்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூசயீத் அல்குத்ரீ(ரழி) அபூதாவூது)

ஒரு பயணத்தில் மூவர் இருந்தால் அவர்களில் ஒருவரை அமீராக்கிக் கொள்ளட்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரழி) கூறினார்கள். இதை அபூ சலமா நாஃபிவு இடம் கூறியபோது நீங்கள் எங்கள் அமீராக இருங்கள் என்று நாஃபிவு கூறினார். (அபூதாவூது)

மூவர் கொண்ட ஒரு பிரயாணக் குழுவில் அமீராக இருப்பவரிடம் ஆட்சி அதிகாரம் இருக்குமா? இருப்பதற்கு வாய்ப்பே இல்லை. இவ்வளவு தெளிவாக இருக்கும் நபிவழியை மறுக்கும் நோக்கத்துடன் பொய்யன் பீ.ஜை. இதற்குக் கொடுக்கும் சுய விளக்கம் என்ன தெரியுமா?

பிரயாணத்தில் தனியாகத் தொழுது விடாமல் அம்மூவரில் ஒருவர் இமாமத் செய்ய வேண்டும் என்றே நபி(ஸல்) கட்டளையிட்டுள்ளார்கள் என்பதே அவரது மூளையற்ற சுய விளக்கம். பிரயாணத்தில் ஜும்ஆவும் கடமையில்லை. ஜமாஅத்தாகத் தொழுவதும் கடமையில்லை. நான்கு ரகாஅத்துகளை இரண்டாகச் சுருக்கியும், ளுஹர் அஸர் இரண்டையும் 2+2=4 என சேர்த்தும், மஃறிபு இஷா இரண்டையும் 3+2=5 என சேர்த்தும் தொழுவதற்குக் கட்டளையிட்ட நபி(ஸல்), பிரயாணத்தில் தனித்துத் தொழுது விடாமல் ஒருவர் இமாமத் செய்யட்டும் என கட்டளையிட்டிருப்பார்களா? என்ற அற்பமான அறிவும் பொய்யன் பீ.ஜைக்கு இல்லை. இதில் இன்னும் பெரிய அறிவீனம்! மூவரில் ஒருவர்தான் இமாமத் செய்ய வேண்டுமாம். இதைவிட அறிவீனம் உண்டா? மூவரில் ஒருவர்தான் இமாமத் செய்ய முடியும். மூவரோ இருவரோ நிச்சயமாக இமாமத் செய்ய முடியாது. ஆயிரம் பேர் இருந்தாலும் ஒருவர்தான் இமாமத் செய்ய முடியும். இந்த அடிப்படை அறிவும் இல்லாமல் பிரயாணத்தில் மூவரில் ஒருவர் இமாமத் செய்யட்டும் என்று நபி(ஸல்) கட்டளையிட்டுள்ளதாக நபி(ஸல்) மீது அப்பட்டமான ஒரு பெரும் பொய்யைக் கூறக்கூடியவர், என்மீது பொய்யை இட்டுக் கட்டிக் கூறுபவர்கள் தங்கள் இருப்பிடத்தை நரகத்தில் தேடிக் கொள்ளட்டும் என்ற பல நபிதோழர்கள் மூலம் அறிவிக்கப்படும் மிகமிக ஆதாரபூர்வமான நபியின் எச்சரிக்கைப்படி தன்னுடைய இருப் பிடத்தை எங்கே தேடிக் கொள்ள நேரிடும் என்பதை அறிய முடியாத மூடரை அறிஞராக ஏற்றிருப்பவர்கள் சுயசிந்தனையுடையவர்களாக இருக்க முடியுமா? (பார்க்க புகாரீ 1291)

பிரயாணத்தில்தான் மூவராக இருந்தாலும் குர்ஆன், ஹதீஸுக்கு முரண்படாத ஆளுக்கொரு கருத்தைச் சொல்லி முரண்பட நேரிடும். உதாரணமாக ஒருவர் பேருந்தில் செல்லலாம் என்பார்; மற்றொருவர் தொடர் வண்டியில் செல்லலாம் என்பார்; மூன்றாமவர் தனியாக சொகுசுந்தில் செல்லலாம் என்பார். இதில் எது ஒன்றும் குர்ஆனுக்கோ, ஹதீஸுக்கோ முரண் இல்லை. இங்குதான் ஒற்றுமை குலையாமல் ஒன்றுபட்டிருக்க ஓர் அமீர் தேவைப்படுகிறார். இதுவே நபி(ஸல்) அவர்களின் கட்டளையாகும். எந்த நோக்கத்திற்காக என்ன பணிக்காக ஒருவர் அமீராகத் தெரிவு செய்யப்படுகிறாரோ, அந்தப் பணிக்கான அதிகாரம் அவருக்குக் கொடுக்கப்படுகிறது. இதையே 4:59 இறைவாக்கு “அதிகாரம் வகிப்பவர்” எனக் கூறுகிறது.

மற்றபடி ஆட்சி அதிகாரம் உள்ளவர் மட்டுமே அமீராக முடியும் என்பது பொய்யன் பீ.ஜை.யின் குர்ஆன், ஹதீசுக்கு முரண்பட்ட சுய கருத்தேயாகும். மேலும் இந்த 4:59 இறைவாக்கின் பிற்பகுதி அமீருக்கு வழிப்படுவதெல்லாம் குர்ஆன், ஹதீசுக்கு உட்பட்டு மட்டுமே; மார்க்க முரணான ஒரு உத்திரவை அமீர் கட்டளையிடுவாரானால் அதற்கு வழிப் படுவது கூடாது என்பதையும் தெளிவாக வலியுறுத்துகிறது. குர்ஆன் வசனமோ, ஆதாரபூர்வமான ஹதீசோ எடுத்துக் காட்டப் பட்டால், “சமீஃனா வ அதஃனா” “செவிமடுத்தோம் வழிப்பட்டோம்” என்று உடனடியாக அமீராக இருந்தாலும், அவரை அமீராக ஏற்று செயல்படுகிறவர்களாக இருந்தாலும் குர்ஆன், ஹதீஸ் கட்டளைக்கு வழிப்பட வேண்டும். அதற்கு மாறாக பொய்யன் பீ.ஜை. ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு சில குர்ஆன் வசனங்கள் இவர்களுக்கு சாதகமாக இருந்தால் போதுமா? என்று தெனாவட்டாக எழுதியதுபோல், இந்தச் சகோதரரும் “”ஜமாஅத்துல் முஸ்லிமீன்” ஐயும் அதன் இமாமையும் பின்பற்றுங்கள் என்ற ஹதீஸை ஆதாரமாக வைத்து …..” என தெனா வட்டாக எழுதியுள்ளார். இப்படிப்பட்டவர்களுக்கு அல்குர்ஆன் 17:41 கூறுவது போல்,

இன்னும் அவர்கள் (சிந்தித்துப்) படிப்பினைப் பெறுவதற்காக இந்த குர்ஆனில் திட்டமாக(ப் பல்வேறு) விளக்கங்களைக் கூறியுள்¼ளாம். எனினும் (இவை யாவும்) அவர்களுக்கு (உண்மையிலிருந்து) வெறுப்பைத் தவிர (வேறெதையும்) அதிகப்படுத்தவில்லை. (17:41) என்று, தவறான வழியில் செல்பவர்களுக்கு வெறுப்பையே ஏற்படுத்துகிறது. ஆதம்(அலை) அவர்களை ஷைத்தான் சுய விளக்கம் கொடுத்து ஏமாற்றி அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறு செய்ய வைத்தது போல், இவர்களையும் ஷைத்தானின் ஏஜண்டுகளான பொய்யன் பீ.ஜை. போன்ற புரோகிதர்கள் சுய விளக்கம் கொடுத்து ஏமாற்றி அல்லாஹ்வின் நேரடிக் கட்டளைகளை நிராகரிக்கச் செய்கிறார்கள்.

நடுநிலையோடு குர்ஆன் வசனங்களையும், ஆதாரபூர்வமான ஹதீஸ்களையும் படித்து விளங்குகிறவர்கள் தனித்துச் செயல்படுவதும் தவறு; வழிகேடு; ஜமாஅத்தாகத்தான் செயல் பட வேண்டும்; அதுவும் நபி(ஸல்) நடைமுறைப் படுத்திய ஜமாஅத்துல் முஸ்லிமீனில் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். தங்களுக்குள் ஓர் அமீரை தெரிவு செய்து அவரின் கீழ் கட்டுக்கோப்புடன் ஒற்றுமையாகச் செயல் பட வேண்டும் என்பதை விளங்க முடியும்.

அப்படி ஒரு ஜமாஅத் இப்போது இருக்கிறதா? இல்லையே! என இப்புரோகிதர் திசை திருப்புகிறார். 25 வருடங்களுக்கு முன்னர் ஹனஃபி தொழுகை, ஷாஃபி தொழுகை என்று தான் தொழுது கொண்டிருந்தோம். நபி வழித் தொழுகை அன்று இருக்கவில்லை. நடைமுறையில் இல்லாமல் இப்புரோகிதர்களால் மறைக்கப்பட்டிருந்தது. இன்று நபிவழித் தொழுகையை எப்படி ஹயாத்தாக்கி இருக்கிறோம்? இதேபோல் தான் நபிவழியான “ஜமாஅத்துல் முஸ்லிமீன்” என்ற ஒன்றுபட்ட ஜமாஅத்தை இப்புரோகிதர்கள் பல பிரிவு ஜமாஅத்துகளை கற்பனை செய்து நடைமுறைப்படுத்தி இல்லாமலாக்கி மறைத்து வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு நபியின் வருகையின் போதும் அல்லாஹ்வை மட்டும் வணங்குவது நடைமுறையில் இல்லாமலிருந்தது. பல கடவுள்கள் வணக்கமே காணப்பட்டது. பல கடவுள்கள் வணக்கம் பெரும் தவறு; ஓரிறைவனை மட்டுமே வணங்க வேண்டும் என்று நபிமார்கள் போதித்தவுடன் பல கடவுள்களை வணங்கிக் கொண்டிருந்தவர்கள் ஒரு கடவுளை மட்டும் வணங்குவது இன்று நடை முறையில் இல்லையே! நம்முன்னோர்களிடமும் இப்படிக் கேள்விப்பட்டதில்லையே (7:70,11:62,87,14:10, 28:36) என்று கூறியே நபிமார்களை நிராகரித்தார்கள். அந்த அளவு இப்புரோகிதர்கள் ஷைத்தானின் துணையுடன் ஆதத்தின் சந்ததிகளை ஓரிறை வணக்கத்தை விட்டு, பல கடவுள்கள் வணக்கத்தில் தடம் புரளச் செய்திருந்தார்கள். அதே போல் தான் புரோகிதனான பொய்யன் பீ.ஜை. நபி வழியான “ஜமாஅத்துல் முஸ்லிமீன்” எங்கே இருக்கிறது என்று கேட்கும் அளவுக்கு முஸ்லிம் மதப் புரோகிதர்கள் ஜமாஅத்துல் முஸ்லிமீன் பேரியக்கத்தை விட்டு மத்ஹபு, தரீக்கா, இயக்கங்கள், அமைப்புகள் போன்ற எண்ணற்றப் பிரிவுகளில் தடம் புரளச் செய்துள்ளனர். நபிவழித் தொழுகையை ஹயாதாக்கியது போல் நபி வழியான “ஜமாஅத்துல் முஸ்லிமீன்”ஐயும் இப்போது ஹயாத்தாக்கி முஸ்லிம் சமுதாயத்தை ஓரணியில் ஒன்று திரட்ட முடியாதா?

கேவலம்! இவர்களாகக் கற்பனை செய்து உருவாக்கிக் கொண்ட குட்டி, குட்டி இயக்கத்தின் பெயரால் கிளைத் தலைவர், வட்டத் தலைவர், மாவட்டத் தலைவர், மாநிலத் தலைவர் என உப தலைவர்களை அமைத்துக் கொண்டு, அந்தக் குட்டி குட்டி இயக்கத் தலைமைக்குக் கட்டுப்பட்டு செயல்பட முடிகிறதென்றால், அது சாத்தியம் என்றால், உலகளாவிய பேரியக்கமான, அல்லாஹ்வால் அங்கீகரிக்கப்பட்ட, நபி (ஸல்)யால் நடைமுறைப்படுத்திக் காட்டப்பட்ட “”ஜமாஅத்துல் முஸ்லிமீன்”ல் நாடு, மாநிலம், மாவட்டம், வட்டம், ஊர் என உப அமீர்களைத் தெரிவு செய்து செயல்பட முடியாதா? ஆனால் ஒரு வித்தியாசம். இவர்களது கற்பனையில் உருவான புதிய இயக்கங்களில் முதலில் இயக்கத் தலைவர் அதன் பின்னரே, மாநில, மாவட்ட, வட்ட, ஊர் தலைவர்கள் நியமிக்கப்படுவார்கள். இப்புரோகிதர்களால் இருட்டடிப்புச் செய்யப்பட்டுள்ள ஜமாஅத்துல் முஸ்லிமீனில் குர்ஆன், ஹதீஸ் கட்டளைகளுக்குக் கட்டுப்பட்டு அந்தந்த ஊர்களில், ஓர் அமீரின் கீழ் கட்டுப்பட்டு செயல்படும் ஜமாஅத்கள் உருவாகிய பின்னர் வட்டம், மாவட்டம், மாநிலம் என அமீர்கள் தெரிவு செய்யப்படும் நிலையில் இருக்கிறோம்.

இந்த முயற்சி சரிவராது, நிறைவேறாது, கடினமான பணி என ஷைத்தான் பயமுறுத்துவான். ஆவதும், ஆவாததும் நம் கையில் இல்லை; அல்லாஹ் கையில் இருக்கிறது. நமது கடமை முயற்சி செய்வது மட்டும்தான் என்பதை விளங்கி முழு மூச்சாகச் செயல்பட்டால், நிச்சயம் அதற்குரிய பலன் உண்டு. எத்தனையோ நபிமார்கள் பின்பற்றுகிறவர்கள் ஒருவர்கூட இல்லாமல் தன்னந்தனியாக சுவர்க்கம் நுழைவார்கள் என ஹதீஸ்கள் வாயிலாக நாம் அறியும் போது நமக்கென்ன தயக்கம்? முழுமூச்சாக முயல்வோம். முடிவை அல்லாஹ்விடம் ஒப்படைத்து விடுவோம்.

மார்க்கத்தை வயிற்றுப் பிழைப்பாகக் கொண்ட கூலிக்கு மாரடிக்கும் இப்புரோகிதர்களை விட்டும் மக்களை விடுவித்து விட்டால், மக்கள் குர்ஆன், ஹதீஸை நேரடியாகப் படித்து சிந்தித்து விளங்க ஆரம்பித்துவிட்டால் அது சாத்தியமாகலாம். ஒவ்வொரு நபியும் அவர்கள் காலத்துப் புரோகிதர்களின் வசீகர, உடும்புப் பிடியிலிருந்து மக்களை விடுவிக்கவே பெரும் பாடுபட்டார்கள். இறைவனின் இறுதி இறைத் தூதரும் அவர்கள் காலத்துப் புரோகிதர்களான தாருந்நத்வா உலமாக்களிடமிருந்தும், அவர்களின் தலைவனான அவர்களால் மதிப்புடன் அபுல் ஹிக்கம்-ஞானத்தின் தந்தை என அழைக்கப்பட்ட அபூ ஜஹீலிடமிருந்தும் மக்களை விடுவிக்கவே பெரும் பாடுபட்டார்கள். அப்புரோகிதர்களின் பிடியிலிருந்து விடுபட்டவர்கள் சத்தியத்தை ஏற்று அதன்படி நடக்க முன் வந்தார்கள்.

இந்த நபிவழியைப் பின்பற்றித்தான் மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொண்டுள்ள இன்றைய ஜமாஅத்துல் உலமா மற்றும் அதைச் சார்ந்தவர்களையும், நாங்கள் தான் அரபி மொழி கற்ற ஆலிம்கள், எங்களுக்கே மார்க்கம் விளங்கும், மார்க்கத்தை மக்களுக்கு விளக்கும் அதிகாரம் பெற்றவர்கள் என ஆணவம் பேசும் அபூ ஜஹீல் வாரிசுகளைக் கடுமையாகச் சாடி அவர்களை சமுதாயத்திற்கு அடையாளம் காட்டி வருகிறோம். பெருமை அனைத்தும் அல்லாஹ்வுக்கு மட்டுமே சொந்தம் என்ற உண்மையை அறியாது ஆணவம் பேசி, அணுவத்தனை ஆணவம் பேசுபவனும் சுவர்க்கம் நுழைய முடியாது என்ற நபியவர்களின் கடுமையான எச்சரிக்கையைப் புறக்கணிக்கும் இவர்கள் ஆலிம்களாக இருக்க முடியுமா? ஜாஹில்களாக இருக்க முடியுமா? என முடிவுக்கு வாருங்கள்.

Previous post:

Next post: