இறந்தவர் (அல்லது) உயிருடன் உள்ளவர்களின் உடல் உறுப்புகளை தானம் செய்யலாமா?

in கேள்வி-பதில் (தொகுப்பு)

ஐயம் : இறந்தவர் (அல்லது) உயிருடன் உள்ளவர்களின் உடல் உறுப்புகளை தானம் செய்யலாமா?

தெளிவு : குர்ஆன், ஹதீஸ் ஒரே பதிலைத்தான் தரும். கூடும். கூடாது இருவகையான பதில்கள் வந்தால் அதில் ஒன்று குர்ஆன், ஹதீஸ் பதிலாக இருக்காது. மனிதர்களிடையேயுள்ள கருத்து வேறுபாடுகளைத் தீர்த்து வைப்பதற்காகவே அல்குர்ஆனும் அதற்கு முந்திய நெறி நூல்களும் இறக்கப்பட்டதாக அல்லாஹ் 2:213ல் உறுதியாகக் கூறுகிறான். மனிதர்களில், குறிப்பாக மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொண்டிருக்கும் புரோகிதர்களிடையே ஏற்படும் பொறாமையே மார்க்கம் இரவும் பகலைப் போல் வெள்ளை வெளேர் என்ற நிலையிலும் அவர்கள் மாறுபட்டு பிளவை உண்டாக்கக் காரணமாகிறது. மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொண்ட புரோகிதர்கள் அற்பக்கிரயத்தைப் பெறுவதற்காக மக்களை நேர்வழியிலிருந்து தடுத்து கோணல் வழிகளில் இட்டுச் செல்வார்கள் என்று 9:9,34,31:6 இறைவாக்குகள் எச்சரிக்கின்றன. அல்குர்ஆனிலுள்ளதை திரித்து வளைத்து,நேர்வழியை கோணல் வழிகளாக்கி எவர்கள் கூலி வாங்குகிறார்களோ அவர்கள் தங்கள் வயிறுகளில் நரக நெருப்பையே நிரப்புகிறார்கள் என்று அல்லாஹ் 2:174ல் கூறி கடுமையாக எச்சரிக்கிறான். ஆனால் புரோகிர்கள் உணர்வு பெறமாட்டார்கள்.

எனவே சில நொண்டிக் காரணங்களைச் சொல்லி மார்க்கப் பணியை சம்பளம் வாங்கிக் கொண்டு செய்து வருகிறார்களே அப்படிப்பட்ட புரோகித மவ்லவிகள் பின்னால் செல்பவர்கள் நேர்வழி விட்டு கோணல் வழிகளில் சென்று நரகை நிரப்புவார்கள் என்பதைத் திட்டமாக அறிந்து கொள்ளுங்கள்.

அடுத்து இந்தப் புரோக்த மவ்லவிகள் மார்க்க விளக்கம் சொல்லித்தான் மக்கள் மார்க்கத்தைப் புரிந்து கொள்ள முடியும் என்ற அரைகுறை நிலையில் மார்க்கம் இல்லை. 5:3, 3:19,85, 33:36,66,67,68 இறைவாக்குகளை படித்து விளங்கி இந்த மவ்லவி பூசாரிகளை விட்டும் முற்றிலுமாக ஒதுங்கி நேரடியாக குர்ஆன், ஹதீஸை தன்னம்பிக்கையுடன் பாருங்கள். அவை தெள்ளத் தெளிவாகவே மனிதர்கள் அனைவருக்கும் தெளிவாகவே விளங்கும்.

எலை எல்லாம் “வஹீ” மூலம் அறிவிக்கப்பட்டு அல்குர்ஆனில் பதியப்பட்டுள்ளனவோ, எவற்றை எல்லாம் நபி(ஸல்) அவர்கள் நடைமுறைப்படுத்தி விளக்கி இருக்கிறார்களோ அவற்றில் முழுமையான மார்க்க விளக்கம் கிடைக்கவே செய்யும். மறுமையில் நன்மைகளையும், உயர் பதவிகளையும் பெற்றுத்தரும் நற்காரியங்கள் பற்றி அப்படி செய்யும்படி அல்குர்ஆனிலோ, ஹதீஸிலோ ஏவப்பட்டுள்ளதா என்று பாருங்கள். அப்படி ஏவப்பட்டிருந்தால் மட்டுமே. நபி(ஸல்) அவர்களால் செய்து வழிகாட்டப்பட்டிருந்தால் மட்டுமே அவை நற்செயல்கள். அவற்றை மட்டுமே எடுத்து நடக்க வேண்டும். 5:3படி மார்க்கம் நிறைவு பெற்ற பின், நபி(ஸல்) அவர்களின் மறைவுக்குப் பின்னர் இப்புரோகிதர்களால் நற்செயல்கள் என அறிமுகப்படுத்தப்பட்டவை அனைத்தும் பித்அத்துகள் – வழிகேடுகள் – நரகில் கொண்டு சேர்ப்பவை என திட்டமாக விளங்கி அவற்றை விட்டு கண்டிப்பாக விலகி நடப்பவர்களே வெற்றியாளர்கள்.

அதேபோல், இவ்வலக வாழ்க்கையில் வசதிகளையும், சந்தோசத்தையும், ஆரோக்கியத்தையும் தருவதோடு, மறுமையில் நன்மையையும் பெற்றுத்தரும் விஷயங்கள் அல்குர்ஆனில் ஏவப்பட்டிருக்கிறதா என்ற பார்க்கக் கூடாது; அதற்கு மாறாக அவற்றிற்கு மார்க்கத்தில் தடை இருக்கிறதா என்று மட்டுமே பார்க்க வேண்டும். எவற்றை எல்லாம் சாப்பிடலாம். எவற்றை எல்லாம் உடுத்தலாம். எவற்றை எல்லாம் அனுபவிக்கலாம். எப்படிப்பட்ட தொழில்களைச் செய்யலாம் என்று அல்குர்ஆனில் ஏவலைப் பார்க்க முற்படக் கூடாது. இப்படிப்பட்ட காரியங்களில் மார்க்கத்தில் தடை இருக்கிறதா என்ற மட்டுமே பார்க்க வேண்டும். மார்க்கத்தில் தடை இருந்தால் மட்டுமே அதை விட்டு ஒதுங்கிக் கொள்ள வேண்டும். தடை இல்லை என்றால் தாராளமாக அதைச் செய்யலாம்.

இந்த அடிப்படையில் உடல் உறுப்புகளை தானம் செய்யலாமா? என்று பார்க்கும்போது அதற்குத் தடை இருக்கிறதா என்றே பார்க்க வேண்டும். அப்படிச் செய்ய குர்ஆனில் சொல்லப்பட்டிருக்கிறதா என்று பார்க்கக் கூடாது. அல்குர்ஆனில் உடல் உறுப்பு தானத்திற்குத் தடை இல்லை. உஹது யுத்த காலத்தில் ஹிந்தா என்ற பெண்மணி ஷஹீதான ஹம்ஸா(ரழி) அவர்களின் உடலைச் சிதைத்து அவர்களின் ஈரலை எடத்து மெண்டு துப்பினாள். இந்தப் புரோகித மவ்லவிகள் உடல் உறுப்பு தானம் கூடாது என்று சட்டம் சொல்வதற்கு அவர்களுக்கு இந்த ஹதீஸே ஒரே ஆதாரம்.

எவ்வித தேவையும் இல்லாமல் ஓர் உயிரைக் கொல்வது மட்டுமல்ல. ஒரு மரத்தின் கிளையை முறிப்பதும் மார்க்கத்தில் தடை செய்யப்பட்டதாகும். எனவே அப்பெண்மணி செய்தது ஓர் அடாத செயல் என்றே நபி(ஸல்) அவர்கள் கண்டித்தார்கள்.

எனவே இறந்தவரின் ஓர் உறுப்பை எடுத்து பிரிதொருவருக்குப் பொருத்தி அவரை வாழச் செய்யும் போது அது எப்படி அடாத செயலாக இருக்க முடியும்? அதற்கு மாறாக “எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்” என்ற 5:32 இறைக் கட்டளைப்படி நற்செயலேயாகும். ஒருவர் இறந்தவுடன் அவரது உடல் உறுப்பகள் அனைத்தும் உடனடியாக இறந்துவிட்டால், இன்றைய மருத்துவ விஞ்ஞானம் இந்த இறந்த உறப்பக்களைக் கொண்டு இன்னொரு உயிரைக் காப்பாற்ற முடியலே முடியாது. ஆனால் ஒருவர் இந்த பின்னர் அவரது உறுப்புகள் ஒரு சில மணி நேரம் உயிருடன் இருக்கும் அற்புத நிலையை அல்லாஹ் ஏற்படுத்தி வைத்திருக்கப்போய்தான் அந்த உறுப்பகளை மற்றவர்களுக்குப் பொருத்த முடிகிறது. இதிலிருந்தே இறந்தவர்களின் உறுப்புகளை மற்றவர்கள் உயிர் வாழ தாராளமாக தானம் செய்யலாம் என்பதைப் புரிய முடிகிறது. அதற்கு குர்ஆனிலோ, ஹதீஸிலோ தடை இல்லை என்பதே பிரதான காரணமாகும்.

எனவே இறந்தவர்களின் உடல் உறுப்புகளைத் தானம் செய்து மற்றவர்களை வாழ வைப்பதில் குர்ஆன் ஹதீஸில் எவ்விதத் தடையும் இல்லை. மார்க்கத்தைக் கொண்டு வயிறு வளர்க்கும் புரோகித முல்லாக்களே தங்களின் சுய கற்பனைகளை அவிழ்த்துவிட்டு இறந்தவர்களின் உடல் உறுப்புகளை தானம் செய்வது ஹராம் என மூடத்தனமான ஃபத்வா – தீர்ப்பு கொடுப்பார்கள்.

அடுத்து உயிருடன் இருக்கும் போது உடல் உறுப்பகளை தானம் செய்யலாமா? விற்கலாமா? என்பதைப் பார்ப்போம். அல்லாஹ் மனிதனை மிக அழகிய வடிவில் படைத்துள்ளான். அவனது உறுப்புகளில் சிலவற்றை இரட்டையாகவும் சிலவற்றை ஒற்றையாகவும் படைத்துள்ளான். தக்க காரணமின்றி சில உறுப்புகளை அல்லாஹ் இரட்டையாகப் படைக்கவில்லை. கை, கால், கண், காது, நுரை ஈரல், கிட்னி போன்றவற்றை இரட்டையாகப் படைத்துள்ளான். அவற்றில் இரண்டு கண்களில் ஒரு கண்ணை உயிருடன் இருக்கும்போது யாரும் தானம் அளிக்க முன் வருவதில்லை. ஆனால் ஒரு கிட்னியை தானம் அளிக்கும் வழக்கமும், அல்லது விற்கும் வழக்கமோ இன்று நடைமுறையில் இருக்கிறது. இரண்டு கண்களில் ஒன்றை தானம் அளித்தாலும் மனிதன் வாழ முடியும். ஆயினும் மனிதன் அதற்கு முன் வருவதில்லை. ஒரு கிட்னியை கொடுத்துவிட்டு ஒரு கிட்னியோடு வாழ்வது ஒரு கண்ணோடு வாழ்வதைவிட எளிதில் தீங்குக்கு ஆளாகும் நிலை என்பதை யாரும் மறுக்க முடியாது.

அல்லாஹ் இரண்டு கிட்னிகளை மனிதனுக்குக் கொடுத்திருக்கும் நிலையில் ஒரு கிட்னியோடு வாழ முடியும் என மனிதன் எண்ணுவது அல்லாஹ்வின் படைப்பில் குறை காண்பதாகும். அதாவது தேவையில்லாமல் அல்லாஹ் இரண்டு கிட்னிகளைப் படைத்து விட்டான் என் எண்ணுவது போலாகும். இது குற்றமாகும். தனக்கு மிஞ்சியதுதான் தானமாகும். எனவே உயிருடன் இருக்கும்போது உடல் உறுப்புகளை தானம் செய்வதோ அல்லது விற்பதோ அனுமதிக்கப்பட்ட செயல் அல்ல.

ஆனால் நல்ல திடகாத்திரமாக, ஆரோக்கியமாக இருக்கும் காலம் எல்லாம் இரத்த தானம் தாராளமாகச் செய்யலாம். நபி(ஸல்) உடல் ஆரோக்கியத்திற்கா இரத்தம் குத்தி எடுத்திருக்கிறார்கள். எனவே இரத்த தானம் செய்ய மார்க்கத்தில் தடை இல்லை.

Previous post:

Next post: