நீயெல்லாம் ஒரு தவ்ஹீத்வாதியா? குர்ஆன் ஹதீஸைப் பின்பற்றுபவரா?

in 2010 ஏப்ரல்,விமர்சனங்கள்! விளக்கங்கள்!!

விமர்சனம் : அந்நஜாத் மாத இதழின் வாசகர் நான். பலமுறை தங்களின் பத்திரிக்கையை படித்திருக்கிறேன். தங்களின் பத்திரிக்கையில் தமிழகத்தின் தலைசிறந்த மார்க்க அறிஞரும், தவ்ஹீது புரட்சி தமிழகத்தில் ஏற்பட முழுக் காரணகர்த்தாவும், தவ்ஹீதுவாதிகளின் வழி காட்டியும், இன்று வரை இஸ்லாமியர்கள் சுவர்க்கம் செல்ல வேண்டும் என்றும், தமிழக முஸ்லிம்கள் தங்களின் உரிமைகளைப் பெற போராடக் கற்றுத்தந்துவரும், தவ்ஹீது வாதிகளின் உள்ளங்களில் வாழ்பவருமான எங்கள் ஆசானும் அண்ணனுமாகிய பீ.ஜெய்னுல் ஆபிதின் அவர்களை தங்களது பத்திரிக்கையில் பொய்யன் என்றும் ஆகாசப் பொய்யன் என்றும் புளுகன் என்றும் தொழாதவன் என்றும், அமானித மோசடிக்காரன் என்றும் புழுதி வாரித் தூற்றும் நீயெல்லாம் ஒரு தவ்ஹீத்வாதியா? குர்ஆன் ஹதீஸைப் பின்பற்றுபவரா? என்ற சந்தேகத்திற்கு பதிலளிக்கவும்.
அபூ உமர், மதினா நகர், பழனி-624601 செல்: 9944474869

விளக்கம்: திருடனை திருடன் என்றுதான் சொல்ல முடியும். கள்வனை கள்வன் என்று தான் சொல்ல முடியும். கொள்ளைக்காரனை கொள்ளைக்காரன் என்றுதான் சொல்ல முடியும். அதேபோல் பொய்யனை பொய்யன் என்றுதான் சொல்ல முடியும். புளுகனை புளுகன் என்றுதான் சொல்ல முடியும். தொழாதவனை தொழாதவன் என்றுதான் சொல்ல முடியும். அமானித மோசடிக்காரனை அமானித மோசடிக்காரன் என்றுதான் சொல்ல முடியும். இவற்றில் இல்லாத ஒன்றை நாம் இட்டுக்கட்டிச் சொல்லி இருந்தால் நிச்சயம் நாம் அல்லாஹ்வுக்கு அஞ்சி தவ்ஹீதை நிலை நாட்டியவராக மாட்டோம். அதே சமயம் 4:49, 53:32 இறைக் கட்டளைகளைப் புறக்கணித்து நிராகரித்து 2:39 இறைவாக்குப்படி குஃப்ரிலாகி எம்மை நாமே பீற்றிக்கொண்டு “தவ்ஹீத்வாதி” என்று ஒருபோதும் சொன்னதில்லை. இனியும் ஒருபோதும் தவ்ஹீத்வாதி என சொல்ல மாட்டோம்.

அந்நஜாத்தைப் பலமுறை படித்து வருவதாகச் சொல்லும் நீங்கள் “தவ்ஹீத்வாதி”, தவ்ஹீத் ஜமாஅத், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்று பீற்றுவது கொண்டு 42:21, 49:16படி குஃப்ர், ஷிர்க்கில் மூழ்கி அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாகி நரகம் புகாதீர்கள் என்று பலமுறை எழுதியும் விளங்காதிருக்கிறீர்கள். 18:102-106 இறைவாக்குகள் அல்லாஹ்வுடைய அடியார்களை (அவுலியாக்களை) வசீலாவாக-பாதுகாவலர்களாகக் கொண்டு நரகம் புகாதீர்கள் என்று கூறுவதை விளங்காமல் கபுரு சடங்குகள் செய்யும் கபுரு வழிபாட்டினர் போல், 7:3, 9:31, 33:36.66.67.68 இறைவாக்குகள் யாரையும் தக்லீது செய்யாமல் நேரடியாக குர்ஆன், ஹதீஸை படித்து விளங்கி அதன்படி செயல்படுங்கள் என்ற கட்டளையை நிராகரித்து நரகம் புகும் தரீக்கா, மத்ஹபினர் போல், 7:55 இறைவாக்கு துஆ மவுனமாகவும், பணி வாகவும் இருக்க வேண்டும் என்று கூறுவதை 2:39படி நிராகரித்து பின்னால் தொழுபவர்களுக்கு இடையூறாக சப்தமிட்டு துஆ செய்து கோரஸாக ஆமீன் சொல்ல வைத்து குஃப்ரிலாகும் மத்ஹபு இமாம்கள் போல், அல்லாஹ்வுக்கும் அடியானுக்கும் இடையில் அல்லாஹ் 2:213, 16:44,64, 33:36, 59:7 இறை வாக்குகள்படி அனுமதித்த இறுதித் தூதரை தவிர வேறு யாரும் இடைத்தரகர்களாக வரமுடியாது, நல்லவர்களான சலஃபுகளையும் பின்பற்றக் கூடாது என்று கூறும் 2:134,141, 7:3, 33:66,67,68 இறை வாக்குகளை நிராகரித்து நரகம் புக இருக்கும் சலஃபு பிரிவினரைப் போல், தவ்ஹீத்வாதிகள், தவ்ஹீத் ஜமாஅத் என பீற்றிக்கொள்ளும் நீங்கள் அனைவரும் 4:49, 53:32, 3:102,103,105, 6:153,159, 30:32, 42:13,14,21, 49:16 போன்ற பல இறைவாக்குகளை நிராகரிப்பது கொண்டு 2:39 சொல்வது போல் நரகம் புக இருப்பதை விளங்காதிருக்கிறீர்கள். அதனால்தான் தவ்ஹீத் வாதி என பெருமையாகப் பீற்றிக் கொள்கிறீர்கள். தவ்ஹீத் புரட்சி ஏற்பட முழுக்காரண கர்த்தா எனவும் அல்லாஹ்வை மறந்து பீற்றி இருக்கிறீர்கள்.

நாம் எம்மை என்றுமே தவ்ஹீத் வாதி எனப் பீற்றிக் கொண்டதில்லை. குர்ஆன், ஹதீஸை சொல்லிலும், செயலிலும் பின்பற்றுகிறவர்கள் ஒருபோதும் தவ்ஹீத்வாதி, தவ்ஹீத் ஜமாஅத் என ஒருபோதும் ஷிர்க்கான, குஃப் ரான பிரகடனத்தைச் செய்ய மாட்டார்கள். இதை முதலில் அறிந்து கொள்ளுங்கள். குர்ஆன், ஹதீஸ் மட்டுமே மார்க்கம் என வாயளவில் பீற்றிக் கொண்டு செயலில் குர்ஆன், ஹதீஸை நிராகரித்து உலக ஆதாயம் அடைய முற்படுகிறவர்கள் மட்டுமே தவ்ஹீத்வாதி, தவ்ஹீத் ஜமாஅத் எனப் பிரகடனப்படுத்தி பீற்ற முடியும். அந்த அறியாமைக் கூட்டத்தில் நீங்களும் இருப்பது குறித்து எங்களின் ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

இப்போது விடயத்திற்கு வருவோம். நாம் இப்படிப் பகிரங்கமாக எழுதுவதில் கடுகளவு பொய் இருந்தாலும் உங்களது ஆசான் எம்மை விட்டு வைப்பாரா? “நாம் அனுப்பிய நோட்டீஸ் ஆங்கிலத்தில் இருந்தது. எனக்கு ஆங்கிலம் தெரியாது. நாலாம் வகுப்புவரை மட்டுமே படித்துள்ளேன். அதனால் அந்த நோட்டீஸை இருவரிடம் கொடுத்து படித்துக் கேட்ட பின்னரே அதிலுள்ளதை அறிந்து கொண்டேன். அதனால் எனது மானம் போய் விட்டது” எனக் கூறி எம்மீது மான நட்ட வழக்குத் தொடர்ந்து தோல்வியுற்ற உங்களது அண்ணன், இவ்வளவு கடுமையான விமர்சனங்கள் எழுத்திலே வந்தும் மெளனம் சாதிக்கிறார் என்றால் அதன் பொருள் என்ன? அவை அனைத்தும் உண்மை என்பதால்தானே?

ஆம்! அவை அனைத்திற்கும் அவர் கைப்பட எழுதிய கடிதங்கள், பேசிப் பதிவான பதிவுகள், நேரில் கேட்ட சாட்சிகள் உண்டு. 1987 ஜூனில் எம்மை விட்டு வெளியேறியதிலிருந்து கடந்த 23 வருடங்களாக நம்மைப் பற்றி பரப்பி வந்த “அமானித மோசடி”, பிறருக்குச் சொந்தமா னதை தனதாக்கிக் கொள்ளல், “அந்நஜாத்திற்கு வாங்கிய சொத்தை தனது பெயரில் பதிவு செய்து கொண்டது” இப்படிப்பட்ட அவதூறுகளை, கோவை குண்டு வெடிப்பு வழக்கில் அரசு தரப்பு சாட்சியாகி, அவ்வழக்கில் அணுவளவும் சம்பந்தமே இல்லாத எம்மை இழுத்து “அந்நஜாத்திற்காக வாங்கிய சொத்தை அபூ அப்தில்லாஹ் தனது பெயரில் பதிவு செய்து கொண்டதால், அந்தத் துரோகத்தைப் பொறுக்க முடியாமல் நான் அந்நஜாத்திலிருந்து ஒரு வருடத்திலேயே வெளியேறிவிட்டேன் என்று தார்ப்பாயில் வடித்தெடுத்த பொய்யை வாக்கு மூலமாகக் கொடுத்ததுடன், தனது கைத்தடிகள், பக்தர்கள் மூலம் இப் பொய்ச் செய்திகளைக் கடந்த பல வருடங்களாகப் பரப்பித் திரிந்தவர், நீதிமன்ற விசாரணையில் கூண்டிலேறி தனது தரப்பு நிலையை குறுக்கு விசாரணைக்குப் பயந்து சொல்ல மறுத்தவர்; வழக்கின் இறுதிக் கட்டத்தில், கொடுப்பவர்களுக்கு கொடுப்பதைக் கொடுத்து குறுக்கு விசாரணையை முடக்கி அந்த அசட்டுத் துணிச்சலில் நீதிபதி முன் “”நான் அப்படிச் சொல்லவே இல்லை” என்ற ஓர் அண்டப் புளுகைச் சொன்னவர் பற்றி வேறு எப்படி விமர்சிக்க முடியும்? அவர் ஆசிரியராக இருந்த 1986 ஏப்ரல் முதல் 1987 ஜூன் வரையுள்ள அந்நஜாத் இதழ்களைப் படித்துப் பாருங்கள். அவர் பகிரங் கமாக ஒப்புக்கொண்ட மார்க்க உண்மைகளை மறுத்துப் பொய்யாக இப்போது பேசி வருகிறார், எழுதி வருகிறார் என்பதை நீங்கள் அறிய முடியும்.

உங்களுக்குச் சந்தேகம் இருந்தால் நேரில் வாருங்கள். அனைத்து ஆதாரங்களையும் உங்கள் முன்னால் வைக்கிறோம். தவ்ஹீதுவாதிகளின்(?) உள்ளங்களில் வாழ்பவரின்(?) பொய் முகத்தை நீங்களே அறிந்து கொள்வீர்கள். உங்களைப் போன்றவர்கள் எதார்த்த நிலையை அறிந்து கொள்ளாமல் ஒருவரின் பேச்சில், நடிப்பில் மயங்கி அவரை ஆபத்பாந்தவனாக ஏற்பதால்தான் பொய் நபி மிர்சா குலாம் காதியானி உருவானார். ஒரு ரஷாத் கலீஃபா பொய் ரசூல் உருவானார். அப்பொய்யர்களைப் போன்ற ஒரு பொய்யரை நீங்களும், உங்களைச் சார்ந்தவர்களும் உருவாக்கிக் கொண்டிருக்கிறீர்கள். உங்களது ஆசானுடன் அந்நஜாத் ஆரம்பிக்கு முன்னர் சில மாதங்களும், அந்நஜாத் ஆரம்பித்து 15 மாதங்களும் கூடவே இருந்து, பிரயாணம் செய்து, கொடுக்கல் வாங்கல் செய்து அவரது எதார்த்த நிலையை அறிந்தவர் நாம். நீங்கள் ஒரே ஒரு மாதம் அவருடன் கூடவே இருந்து பாருங்கள். அவரது பொய் முகம் உங்களுக்கும் தெரியும்.

இஸ்லாம் அல்லாத இயக்கமில்லை. முஸ்லிம்கள் இடைத்தரகர்கள்-புரோகிதர்கள் இல்லாமல் மார்க்கக் காரியங்களைச் சுயமாக நிறைவேற்ற முன்வர வேண்டும். நாங்கள் புரோகிதர்களை சப்ளை செய்வதில்லை. மவ்லவிகளுக்கு ஒரு 10 நிமிடம் அரபியில் பேச முடியுமா? அவர்கள் மதரஸாவிலுள்ள ஒரு கிதாபை எடுத்து அதில் நாங்கள் எடுத்துக் கொடுக்கும் பக்கத்தை அரபியில் படித்து தமிழில் மொழிபெயர்க்க முடியுமா? குருகுலக் கல்வியே அரபி மதரஸா பாடத் திட்டம் என்றெல்லாம் நயவஞ்சகப் பொய்யாகக் கூறி எம்மை ஏமாற்றியவர், நம்பிக்கை துரோகம் செய்தவர், அமானித மோசடியாளரைப் பற்றி வேறு எவ்வாறு சொல்ல முடியும்?

அவர் எம்மிடம் வாக்களித்தது போல், புரோகிதத்தை ஆதரிக்காமல், மத்ஹபுகளை விட்டு குர்ஆன், ஹதீஸ் மட்டுமே மார்க்கம் என்று வந்தவர்களை மீண்டும் இயக்க மத்ஹபுகளில் சிக்க வைக்காமல், 1986லிருந்து இன்று 2010 வரை ஒரே ஜமாஅத்தாக இருந்து பாடுபட்டிருந்தால், முஸ்லிம் உலகில் பிரம் மிக்கத்தக்க எப்படிப்பட்ட மாறுதல் ஏற்பட்டிருக்கும்? எத்தனை ஹனஃபி, ஷாஃபி, அஹ்ல ஹதீஸ், முஜாஹித் பள்ளிகள் அல்லாஹ்வுடைய பள்ளிகளாக ஆகி இருக்கும்? என்று சிந்தித்துப் பாருங்கள். மேலும் 7 மத்ஹபுகளைக் கற்பனை செய்து உங்கள் ஆசான் இந்த முஸ்லிம் சமுதாயத்திற்கு இழைத்திருக்கும் மாபெரும் கொடுமையை-தீங்கை நீங்களே உணர்வீர்கள். குர்ஆன், ஹதீஸ் மட்டுமே மார்க்கம் என்பவர்கள் இன்று ஏழு மத்ஹபுகளாகி இருப்பதற்கும், பரம்பரை நான்கு மத்ஹபினர் இந்த புதிய 7 மத்ஹபினரைக் கிண்டல் செய்வதற்கும் உங்கள் ஆசான்தான் காரணம் என்பதை உங்களால் மறுக்க முடியுமா?

ஒரு மாபெரும் உண்மையை நீங்களும், உங்களைப் போன்றவர்களும் அறிந்து கொண்டால் அது உங்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். அல் லாஹ்வால் இறுதி நபியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நபி முஹம்மது(ஸல்) அவர்கள், அல்லாஹ்வின் 2:213, 16:44,64, 59:7 கட்டளைகள் படியும், 52:48ன்படி அவனது நேரடிக் கண்காணிப்பிலும் இருந்த இறுதித் தூதரைத் தவிர மனிதர்களின் வேறு யாரையும் அல்லாஹ்வுக்கும் தங்களுக்கும் இடையில் இடைத்தரகர்களாக-புரோகிதர்களாக ஆக்கிக் கொள்கிறார்களோ அவர்கள் 7:3, 33:21,36,66,67,68 இறைக் கட்டளைகள்படி வழிகேட்டில் சென்று நரகம் புகுகிறவர்களே!

நாங்கள்தான் மதகுருமார்கள், வேதங்களை(?) நன்கு அறிந்தவர்கள், வேதமொழி கற்றவர்கள், எங்களின் உதவி இல்லாமல் எவரும் நேர்வழி பெற முடியாது; சுவர்க்கத்தை அடைய முடியாது என்றும் இன்னும் இப்படிப் பல பசப்பு வார்த்தைகளைக் கூறி அல்லாஹ்வுக்கும் அடியானுக்கும் இடையில் தரகர்களாகப் புகுகிறார்களோ, இறைப்பணியை வயிற்றுப் பிழைப்பாகக் கொள்கிறார்களோ அவர்களை விடக் கேடுகெட்ட ஜென்மம் இந்த வானத்தின் கீழ் வேறு எந்தப் படைப்பும் இல்லை. இந்த உண்மையை 7:175 முதல் 179 வரை, 21:92, 93, 23:52,53,54,55,56 இறைவாக்குகள் உறுதிப்படுத்துகின்றன. உலகில் அவர்களுக்குக் கிடைக்கும் பட்டம், பதவி, செல்வம், சொகுசு வாழ்க்கையில் மயங்குகின்றனர். அவர்கள் தங்கள் வயிறுகளில் 2:174 சொல்வது போல் நரக நெருப்பை நிரப்பிக் கொண்டு நாளை மறுமையில் நரகம் புகுகிறவர்களே! 2:159,161,162, 33:66,67.68 போன்ற பல இறைவாக்குகள் இவர்களையே சுட்டிக்காட்டுகின்றன.

அதே சமயம் 32:13, 11:118,119 இறைவாக்குகள் கூறுவது போல் மனிதர்களில் அல்லாஹ் அருள் புரிந்த மிக சொற்பமான சிலரைத் தவிர, நரகத்தை நிரப்ப இருக்கும் மிகமிகப் பெருங் கொண்ட மக்கள் இந்த இடைத்தரகர்களான, மார்க்க வியாபாரிகளான, இறைப்பணியை வயிற்றுப் பிழைப்பாகக் கொண்ட மதகுருமார்களின் பின்னால்தான் கண்மூடி அணி வகுப்பார்கள் என்பதில் அணுவளவும் சந்தேகமே இல்லை. மதகுருமார்களின் மன்மத லீலைகள் பற்றிய சமீபத்திய ஊடகச் செய்திகள் இதை உறுதிப் படுத்துகின்றன. இதில் ஹிந்து, கிறித்தவ, பெளத்த, முஸ்லிம் மத குருமார்கள் அனைவரும் அடக்கம். அனைத்து மதகுருமார்களும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே!

Previous post:

Next post: