மீண்டும் வெள்ளையனுக்கு அடிமையாகும் இந்தியா!
நீண்ட காலமாக நமது இந்திய நாட்டை ஹிந்து, முஸ்லிம் மன்னர்கள் ஆண்டு வந்ததாக வரலாறு. வியாபாரம் செய்யும் நோக்கத்துடன் இந்தியா வந்த வெள்ளையன் இங்குள்ள கனிம வளங்கள், நீராதாரம், மனிதவளம் இவை அனைத்தையும் பார்த்துப் பொறாமைப்பட்டு, இந்தியாவை தனது அடிமை நாடாக்கத் திட்ட மிட்டான். சூழ்ச்சி செய்தான். அவனது சூழ்ச்சிக்கு மேல் ஜாதியினரில் பலர் இரையாகினர். இந்திய ஆட்சியாளர்களைக் காட்டிக் கொடுத்து இந்தியாவை வெள்ளையருக்கு அடிமைப் படுத்தினர். அவனிடம் கையூட்டுப் பெற்றனர்.
அதற்கு முன்னர் மிக நீண்டகாலமாக ஹிந்துக்களும், முஸ்லிம்களும் ஒருதாய் மக்கள் போல் ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்தனர். இதைக் கவனித்த வெள்ளையனுக்கு பொறி தட்டியது. ஹிந்துக்களும், முஸ்லிம்களும் ஒற்றுமையாக இருந்தால், தான் நீண்ட காலம் அகன்ற இந்தியாவை அடிமைப்படுத்தி ஆதாயம் அடைய முடியாது என்பதை உணர்ந்தான்.
பிரித்தாளும் சூழ்ச்சி மூலம் ஹிந்துக்களையும், முஸ்லிம்களையும் பிரித்து அவர்களுக்குள் சண்டையிட வைத்தால் மட்டுமே தான் நீண்ட காலம் அகன்ற இந்தியாவை ஆள முடியும் என்ற முடிவுக்கு வந்து அதில் முனைப்பாக ஈடுபட்டான். இந்திய வரலாற்றையே தலைகீழாக மாற்றினான். ஹிந்துக்களும், முஸ்லிம்களும் ஒருவரை ஒருவர் வெறுத்து கீரியும், பாம்பும் போல் பகைமை பாராட்டும்படி செய்தான். வந்தேறிகளான ஆரியர்களில் பலரும் இதற்குத் துணை நின்றனர். காரணம் முஸ்லிம்கள் எழுச்சியுற்றால் தங்களின் பிழைப்பில் மண் விழும் என அவர்கள் அஞ்சினர். ஆரிய புரோகிதர்கள் வெள்ளைய னுக்குத் துணை நின்றனர். குற்றேவலும், எழுதக் கூசும் செயல்கள் மூலமும் வெள்ளையனின் அன்பைப் பெற்றனர். விழுந்து விழுந்து ஆங்கிலம் படித்து வெள்ளையனின் ஆட்சியில் பெரும் பெரும் பதவிகளில் அமர்ந்தனர். அதன் பலனாக இந்தியா சுதந்திரம் பெற்று 63 ஆண்டுகள் ஆகியும் அவர்களே ஆட்சி அதிகாரத்தைத் தங்கள் முழு கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். காங்கிரஸ் ஆண்டாலும், பா.ஜ.க. ஆண்டாலும் ஆட்சி அதிகாரம் அனைத்தும் அவர்கள் கையிலேயே இருக்கிறது.
பாபர் மஸ்ஜித் விவகாரத்தில் முஸ்லிம்கள் இன உணர்வுக்கு ஆளாகி பா.ஜ.க.வை வளர்த்து விட்டு, ஆரிய மேல் ஜாதியினர் ஆட்சியைக்கைப்பற்றி அந்த அதிகாரத்தை மேலும் வலுப்படுத்த வாய்ப்பளித்தனர். அதற்கு மாறாக முஸ்லிம் மதப் புரோகிதர்களின் நிலை வேறுவிதமாக இருந்தது. முஸ்லிம்கள் ஆங்கில மொழி கற்றால் தங்கள் பிழைப்பில் மண் விழும் என அவர்கள் அஞ்சினர். அதனால் முஸ்லிம்கள் ஆங்கிலம் கற்பதும், ஆங்கிலேயர் ஆட்சியில் பதவி வகிப்பதும் ஹராம்-கொடிய குற்றம் என ஃபத்வா (தீர்ப்பு) அளித்தனர். இப்புரோகிதர்களைக் கண் மூடிப் பின்பற்றிய முஸ்லிம்கள் ஆங்கிலம் படிப்பதையும், வெள்ளையனின் ஆட்சியில் பதவி வகிப்பதையும் கைவிட்டனர். அதனால் முன்னர் முஸ்லிம்களின் ஆட்சியில் பெரும் பெரும் அரசு பதவிகளில் இருந்த முஸ்லிம்கள் பதவி இழந்து பின்னுக்குத் தள்ளப்பட்டனர். இன்று இட ஒதுக்கீடு கேட்டு அதே புரோகிதர்களின் பின்னால் அணி வகுக்கின்றனர்.
வாழ்வுரிமை மாநாடு என்றும், ஒடுக்கப் பட்டோரின் உரிமை மாநாடு என்றும் முஸ்லிம்கள் இன உணர்வுக்கு அடிமைப்பட்டு தங்கள் செல்வத்தை வாரிவாரிக் கொட்ட இவர்கள் சுக வாழ்வு வாழ முற்படுகின்றனர். இப்படி பெரும் சூழ்ச்சிகள் செய்து ஹிந்து முஸ்லிம்களிடையே பெரும் வேற்றுமையை வளர்த்தாலும் அடிமைத் தளையின் கெடுதியை உணர்ந்த ஹிந்து, முஸ்லிம் அறிஞர்கள் இணைந்து கடுமையாகப் போராடி விடுதலைக்கு வழி வகுத்தனர். வெள்ளையனும் இதற்கு மேலும் அகன்ற இந்தியாவை அடிமைப்படுத்தி ஆள முடியாது என உணர்ந்தான். அதனால் விடுதலை கொடுக்க முன் வந்தான். ஆயினும் சுமார் 150 வருடங்கள் இந்தியாவின் கனிம வளங்களையும், நீர் வளத்தையும், மனித வளத்தையும் கொள்ளை இட்டதோடு சொந்த அனுபவத்தில் அவற்றின் பலன்களை கண்ட வெள்ளையனுக்குப் பீதி ஏற்பட்டது.
ஹிந்துக்களும், முஸ்லிம்களும் ஒற்றுமையாக உழைத்தால் இந்திய நாடு தங்களின் வெள்ளை நாடுகளைவிட பெரும் வல்லரசாக உயர்ந்து விடும். தாங்கள் இந்தியாவுக்கு முன்னால் கைகட்டி நிற்க நேரிடும் என்பதை உணர்ந்தார்கள். இந்தியாவின் வளர்ச்சியை முறியடிக்க என்ன வழி என மூளையைக் கசக்கினார்கள். ஹிந்துக்களையும், முஸ்லிம்களையும் நிரந்தரமாகப் பிரித்து விட்டால் அவர்களது முன்னேற்ற முயற்சி பெரிதும் தடைபடும் என திட்டம் தீட்டி அகன்ற இந்தியாவைப் பிளவு படுத்தச் சதித்திட்டம் தீட்டினர். இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்குத் தேன் தொட்டு வைத்தனர்.
முஸ்லிம்கள் தனி நாடு பெற்று விலகிச் சென்று விட்டால் அவர்களது குறுக்கீடு இல்லாமல் மக்கள் தொகையினரில் பெரும் பான்மையினரான தாழ்த்தப்பட்ட மக்களை தாங்கள் ஆட்டிப் படைக்கலாம் என்ற தீய நோக்குடன் மேல் ஜாதி ஆரியர்கள் இந்திய பாகிஸ்தான் பிரிவினைக்கு வெள்ளையனோடு இணைந்து தூபம் போட்டனர். முஸ்லிம் மதப் புரோகிதர்கள், மற்றும் அவர்களது அடிவருடிகளின் துர்போதனையால் இறை உணர்வை இழந்து இன உணர்வுக்கு அடிமைப்பட்ட முஸ்லிம்களும் அதற்கு வழி மொழிந்தனர். விளைவு ஒருங்கிணைந்த இந்தியா துண்டாடப்பட்டது. அத்தோடு விட்டார்களா வெள்ளையர்கள்? வடக்கில் கிழக்கிலும், மேற்கிலுமுள்ள முஸ்லிம்கள் நிறைந்த இரு தனித்தனிப் பகுதிகளை பாகிஸ்தானுக்கு விட்டுக் கொடுக்கும் வகையில் திட்டம் தீட்டிய வெள்ளையர்கள், முஸ்லிம்கள் நிறைந்த கஷ்மீர் பகுதியை யாருக்கு என்று முடிவு செய்யாமல் இந்தியாவும், பாகிஸ்தானும் காலமெல்லாம் சண்டையிட்டு பொருளாதாரத்தை இழந்து இந்தியா வல்லரசாவதைத் திட்டமிட்டுத் தடுக்கும் வகையில் விட்டுச் சென்றனர்.
ஆக 1947லிலிருந்து கடந்த 63 ஆண்டுகளாக காஷ்மீர் விவகாரம் தீரவில்லை. இதுவரை 1000 காஷ்மீர்களை வாங்கும் அளவில் இந்தியப் பொருளாதாரம் வீணடிக்கப்பட்டுள்ளது. அப்படியும் காஷ்மீர் விவகாரம் தீர்ந்தபாடில்லை. இரு தரப்பிலும் வரட்டு வீண் பெருமையே தலைதூக்கி நிற்கிறது. இந்த நிலையிலும் வெள்ளையர்கள் திட்ட மிட்டதற்கு முரணாக இந்தியா வல்லரசாகும் வழியில் முன்னேறி வருகிறது. பல ஏவுகணைச் சோதனைகளில் வெற்றி பெற்று வருகிறது. வெள்ளையர்கள் இந்தியா வல்லரசாக ஆகி விடக் கூடாது என்ற தீய நோக்குடன் பெரும் முட்டுக்கட்டைகளை ஏற்படுத்தியும் இந்தியா அமெரிக்காவை விட முன்னேறிச் செல்லும் வகையில் முயன்று வருகிறது என்பதை வெள்ளையர்களால் ஜீரணிக்க முடியவில்லை. சமீபத்தில், அமெரிக்கா இரண்டாம் இடத்திற்கு ததள்ளப்படுவதா? அதை ஏற்க முடியுமா என அமெரிக்க தற்போதைய அதிபர் முபாரக் ஹுசைன் ஒபாமா முழக்கமிட்டதாக ஊடகங்களில் செய்தி!
இந்தியாவை ஒடுக்குவதில் ஒபாமா குறி ! எனவே இந்தியாவின் முன்னேற்றத்தை முறியடிக்கப் பெரும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது அமெரிக்கா. பின்லேடனை வளர்த்து விட்டது போல், தாலிபான்களை வளர்த்து விட்டது போல், சதாம் ஹுசேனை வளர்த்து விட்டது போல், பல நாடுகளின் ஒற்றுமையைக் குலைக்க அந்நாடுகளின் சிலரை அமெரிக்க டாலர்களைக் காட்டி மயக்கி அவர்களைக் கொண்டு உள்நாட்டுக் கலவரங்களை ஏற்படுத்தி அந்நாடுகளின் முன்னேற்றத்தைத் தடுத்தது போல், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமிடையில் சிண்டு மூட்டி விட சில முஸ்லிம் பெயர் தாங்கி அமைப்புகளை அமெரிக்க டாலருக்கு அடிமைப்படுத்தி களத்தில் இறக்கி விட்டிருக்கிறது அமெரிக்கா. இஸ்ரேலின் மொசாத் அமைப்பும் ஹிந்துத்துவா வெறியினரும் இந்தத் தீய செயலுக்குத் துணை புரிகின்றனர்.
சிறிது சிந்தித்துப் பாருங்கள். வெறும் பத்தே பத்து தீவிரவாதிகள் இவர்களின் துணையின்றி மூன்று நாட்கள் நமது இந்திய திருநாட்டின் அனைத்து ரகப் பாதுகாப்பு வளையங்களையும் தாண்டி இந்தியாவையே கதிகலங்கச் செய்திருக்க முடியுமா? நிச்சயம் முடியாது. அப்படியானால் நமது அனைத்து ரகப் பாதுகாப்புப் படையினரும் கையாலாகாதவர்கள். அவர்களுக்குப் பல்லாயிரம் கோடிகளை விரயம் செய்வது வீண் என்று நாம் ஒப்புக் கொள்ள வேண்டும். அல்லது நம் பாதுகாப்புப் படையிலுள்ள கருப்பு ஆடுகளின் முழு ஒத்துழைப்புடன் மும்பை சம்பவம் அரங்கேறி இருக்க வேண்டும். எது உண்மை? மும்பை சம்பவம், நடந்து முடியவில்லை; உடனடியாக அமெரிக்க வெளியுறவு மந்திரி, பல உயர் அதிகாரிகள் என இந்தியா வந்து குதித்தது எதற்காக? நரபலி மோடி எவ்வித பாதுகாப்போ மரண பயமோ இன்றி சம்பவ இடத்திற்கு வந்தது எதற்காக எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல்? உண்மை வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறதே!
மஹாராஸ்ட்ராவின் காவல்துறையில் மிக உயர்ந்த பதவியில் இருந்த முஸ்ரிப் என்ற உயர் அதிகாரி “கர்கரேயை கொலை செய்தது யார்?” என்று ஒரு நூல் வெளியிட்டுள்ளார். அதில் இந்தியப் புலனாய்வுத் துறையின் முக்கிய அதிகாரிகள் அமெரிக்கத் துணையுடன், காவி வகையினரின் துணையுடன் நடத்திய ஒரு சதித்திட்டம் என உரிய ஆதாரங்களுடன் தெளிவு படுத்தியுள்ளார். அமெரிக்க டாலர்களுக்கு விலை போய் ஊடகத் துறையினர் அனைவரும் அமெரிக்கா தரும் பொய்ச் செய்திகளுக்கே முக்கியத்துவம் கொடுத்து மீண்டும் மீண்டும் பரப்பி வருகின்றனர். உண்மைச் செய்திகளை இருட்டடிப்புச் செய்கின்றனர். உண்மைக் குற்றவாளிகள் யார் என்று திட்டமாகத் தெரிந்த நிலையில் அவர் களைத் தப்பவிட்டு அப்பாவிகளையோ, அமெரிக்க டாலருக்கு விலை போன முஸ்லிம் களையோ பிடித்துத் தண்டிப்பதால், தீவிரவாதம், வன்முறைச் செயல்கள் மேலும் மேலும் வளருமா? அல்லது குறையுமா?
பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் நுழைகிறார்கள் என எங்கோ இருக்கும் அமெரிக்க உளவுத்துறை தெரிந்து அறிவிக்கிறது. நமது நாட்டினுள் தீவிரவாதிகள் நுழைவதை நமது நாட்டுப் புலனாய்வு, உளவுத் துறையினர் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் இதன் மர்மம் என்ன? சிறு குழந்தையும் விளங்குமே. இந்திய ஆட்சியாளர்களால் விளங்க முடியவில்லையா? அமெரிக்கா, இந்தியாவின் முன்னேற்றத்தைத் தடுக்க தீவிரமாக முயன்று வருகின்றது. இன்றைய நிலையில் அமெரிக்காவை விட ஒரு தீவிரவாத அமைப்பு, வன்முறையைக் கட்ட விழ்த்து விடும் ஓர் அமைப்பு உலகில் வேறு எங்கும் இல்லை. உலகில் எங்கு தற்கொலைப் படை த்தாக்குதல் நடந்தாலும், வன்முறைச் செயல்கள் நடந்தாலும், எப்படிப்பட்ட அக்கிரமச் செயல் நடந்தாலும் உள்நாட்டுக் குழப்பங்கள் இடம் பெற்றாலும் அங்கு அமெரிக்காவின் கை நிச்சயம் இருக்கும் என்பதே அறிவு ஜீவிகளின் கருத்து.
அமெரிக்காவின் ஒரே குறிக்கோள் தன்னை மிஞ்சி எந்த நாடும் வளர்ந்து விடக்கூடாது. உலகிற்கே சட்டாம் பிள்ளையாக பேட்டை ரவுடியாக தான் மட்டுமே இருக்க வேண்டும் என்ற ஆணவமிக்க அகந்தை எண்ணமே! அதற்காக எப்படிப்பட்ட கொடூர, மாபாதகச் செயலைச் செய்யவும் அமெரிக்கா தயங்காது. குற்றவாளிகளை விட்டு விட்டு அப்பாவிகளைத் தண்டிப்பதால் உலகில் மேலும் மேலும் அராஜகச் செயல்களும், அட்டூழியங்களும் மலிந்து உலக மக்கள் நிம்மதி இழந்து தவிக்கும் நிலையே ஏற்படும். மும்பை சம்பவம் குறித்து பாகிஸ்தானை ஒரு பக்கம் அமெரிக்கா மிரட்டுகிறது. மறு பக்கம் பாகிஸ்தானுக்குத் தேவையான ஆயுத உதவிகளையும் செய்து, பொருளாதார உதவியும் செய்து வருகிறது.
அதன் நோக்கம் என்ன? ஆம்! காஷ்மீரினால் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயுள்ள பிணக்குத் தீரவே கூடாது. இரு நாடுகளும் சதா சண்டையிட்டுக் கொண்டே இருக்க வேண்டும். இரு நாடுகளுக்கும் ஆயுதங்கள் கொடுத்து தனது ஆயுத வியாபாரத்தை ஆதாயமுடன் தொடர வேண்டும். அத்துடன் உலக தாதா தான்தான் என்று நிலைநாட்டிக் கொண்டிருக்க வேண்டும். அமெரிக்க டாலர்களைக் கொடுத்து முஸ்லிம் பெயர்தாங்கிகளை விலைக்கு வாங்கி அவர்களுக்குப் பயிற்சி கொடுத்து திட்டமிட்டு நுழைக்க வேண்டும். பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் நுழையப் போகிறார்கள் என தனது புலனாய்வுத்துறை மூலம் செய்தி வெளியிட வேண்டும். வெள்ளையர்களின் நாடுகள் அனைத்தும் அதற்குத் துணை நிற்க வேண்டும்.
இந்திய ஆட்சியாளர்கள் அமெரிக்கா, மற்றும் வெள்ளையர்களின் நாடுகள் கொடுக்கும் இச்செய்திகளைக் கேட்டு அரண்டு போய், இந்தியா தனது பாதுகாப்புப் படைகளை உஷார்படுத்தி பெரும் பொருளாதாரத்தை வீணடிக்க வேண்டும். இந்தியா வல்லரசாக முன்னேறக் கூடாது; இதுவே அமெரிக்காவின் இலட்சியக் கனவு. அமெரிக்கா தனது சுய ஆதாயத்திற்காக இப்படி கனவு காணலாம். ஆனால் நமது இந்திய ஆட்சியாளர்கள் அமெரிக்காவின் சுய நலக் கனவுச் செய்திகளுக்கு விலை போகலாமா? அமெரிக்காவுடன் சேர்ந்து இந்தி யாவை அடகு வைக்கலாமா? இந்தியாவுக்குள் நுழையும் தீவிரவாதிகள் பற்றி எங்கோ இருக்கும் அமெரிக்க புலனாய்வுத்துறை தகவல் கொடுப்பதாக இருந்தால், இந்தியப் புலனாய் வுத் துறையினர் குறட்டை விட்டுத் தூங்குகின்றனர் என்று சொல்லலாமா? இந்திய அரசின் ரீமோட் கண்ட்ரோல் அமெரிக்கா விடமா? ஆம்! இந்தியா மீண்டும் வெள்ளையனிடம் அடிமையாகப் போகிறது.