ஆதிகால வேதங்களும் இறுதி நெறிநூல் அல்குர்ஆனும்!

in 2010 ஜுன்

ஆதிகால வேதங்களும் இறுதி நெறிநூல் அல்குர்ஆனும்!

ஏப்ரல் தொடர் : 8         MTM.முஜீபுதீன், இலங்கை

முஸ்லிம் என்போர் யார்?
முஸ்லிம் என்ற அரபு சொல்லுக்கு கீழ்ப்படிகின்றவர், சாந்தியளிப்பவர் என்பது சொற்பொருள் ஆகும். ஏக இறைவன் மீது நம்பிக்கை கொண்டு இறைநெறிச் சட்டங்களுக்கும், இறைத் தூதரின் வழிமுறைகளுக்கும் கீழ்ப்படிகின்றவர் என்பதாகும். எல்லா தூதர்களும் தம்மை தமது தாய் மொழியில் முஸ்லிம் என்றே அழைத்தனர். இறைத்தூதர்கள் நம்பிக்கை கொண்டவர்களையும் அவ்வாறே அழைக்கப் பணித்தனர்.
இன்று உலகில் பெரும்பான்மையான மக்கள் இறைநம்பிக்கை கொண்டவர்களாகவே இருக்கின்றனர். இவர்கள் இறைவன் ஒருவன் இருக்கிறான் என நம்புகின்றனர். அந்த இறைவனின் விதியின்படியே சகல கருமங்களும் நடைபெறுகின்றன, இறைவனின் விதியின் படியல்லாது ஓர் அணுவும் அசையாது என்று நம்புகின்றனர். இவர்கள் தம்மைப் படைத்த இறைவனின் கட்டளைக்கு முற்றிலும் கீழ்ப்படிந்து வாழவே ஆசைப்படுகின்றனர். அத்து டன் இவர்கள் இறைவனை அல்லது தேவனை அல்லது கர்த்தரை அல்லது பஹவானை அல்லது அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு இருக்க விரும்புகின்றனர். இதன்படி அல்லாஹ்வின் நெறிநூல் கட்டளைக்கு முற்றிலும் கீழ்ப்படிந்து வாழக்கூடிய நம்பிக்கையுள்ள, இறைவிசுவாசிகளையே அரபு மொழியில் முஸ்லிம் என அழைக்கின்றார்கள். இதே அடிப்படையில் இறுதி இறைத் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களுக்கு முன் வாழ்ந்த இறைத் தூதர்களையும் நெறிநூல்களையும் நம்பிக்கை கொண்ட மக்களும், இறைவனுக்கு அல்லது தேவனுக்கு(அல்லேலூயா) அல்லது பஹவானுக்கு கீழ்ப் படிந்து வாழவேண்டும் என நினைக்கின்றனர். ஆகவே நெறிநூல் வழங்கப்பட்ட எல்லா சமுதாயங்களும் தமது தாய் மொழியில் தேவனை நம்பி கீழ்ப்படிந்தவன் எனச் சொல்லவே விரும்புகின்றனர். இதனையே இறுதி இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களும் ஏனைய நபிமார்கள் அல்லது இறைத் தூதர்களும், அல்லாஹ்வினால் அனுப்பப்பட்டுள்ளனர் என நம்பிக்கை கொண்டுள்ளோர், அரபு மொழியில் தம்மை முஸ்லிம் என்றே சகலரும் அழைக்க வேண்டும் என விரும்புகின்றனர்.

இன்று உலகில் 125 கோடிக்கும் அதிகமான மக்கள் முஸ்லிம்களாக இருக்கின்றனர். அவர்கள் முஹம்மது நபி(ஸல்) அவர்களை தமது உயிரிலும் மேலாக மதிக்கின்றனர். அதைப் போல் மற்ற இறைத்தூதர்களையும் சமமாக மதிக்கின்றர். இவ்வாறே எல்லா இறைத் தூதர் களையும் வேறுபாடுகள் இன்றி சமமாக மதிக்க வேண்டும் என அல்குர்ஆன் அவர்களுக்கு கட்டளையிட்டுள்ளது. அதனை அவதானியுங்கள்:

“அல்லாஹ்வையும், எங்கள் மீது அருளப்பட்டதையும், இன்னும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப், அவர்களின் சந்ததியர் ஆகியோர் மீது அருள் செய்யப்பட்டவற்றையும், இன்னும் மூஸா, ஈஸா இன்னும் மற்ற நபிமார்களுக்கு அவர்களுடைய இறைவனிட மிருந்து அருளப்பட்டவற்றையும் நாங்கள் விசுவாசம் கொள்கிறோம். அவர்களில் எவரொருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்ட மாட்டோம்; நாங்கள் அவனுக்கே (முற்றிலும் சரணடையும்) முஸ்லிம்கள் ஆவோம்” என்று (நபியே!) நீர் கூறுவீராக. (அல்குர்ஆன்:3:84)

இந்த இறைவசனங்களின்படி உலகிலுள்ள எந்த முஸ்லிமும் எந்த இறைத்தூதரையும், அவமதிப்பது பெரும் பாவமாகும் என்றே கருதுகிறார்கள். இன்று உலகில் வாழும் சில வேற்று மத சகோதரர்கள், முஸ்லிம்களின் மீது ஏற்பட்ட வெறுப்பின் காரணமாக இறுதி இறைத் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களை தூற்றுகின்றனர். அவரை அவமதிக்க வேண்டும் என்ற தீய நோக்குடன் கேலிச் சித்திரங்களை வரைகின்றனர். ஆனால் முன்னைய நெறிநூல்களும் இறுதி இறைத்தூதர் முஹம்மது நபியே என முன்னறிவிப்பு செய்ததை அறியாது போனமையே இவ்வாறு நிந்திப்பதற்கு காரணமாகும். இவ்வாறு தூற்றுபவர்கள் அல்குர்ஆனை அல்லது முஹம்மது நபி(ஸல்) அவர்களின் உண்மை வாழ்க்கை வரலாற்றை அறிந்திருப்பின் இவ்வாறு எழுதியிருக்க மாட்டார்கள். இந்த அவதூறுகளை அவதானித்த அரபு மொழியை தாய்மொழியாக கொள்ளாத பிரதேச முஸ்லிம் பக்திவான்கள் தமது எதிர்ப்புகளை பல வழிகளிலும் வெளிக்காட்டுகின்றனர். ஆனால் இவ்வாறு எதிர்ப்பைக் காட்டுகின்ற முஸ்லிம்கள் இயேசுவை அல்லது அவர் தாய் மேரி(மர்யம்) அன்னையை அல்லது வேறு இறைத்தூதர்களை தமது எதிர்ப்பை வெளிக்காட்ட எப்போதாவது தூற்றிய துண்டா? ஒருபோதும் இல்லை! இல்லவே இல்லை! 125 கோடி முஸ்லிம்களும் தூற்றாமைக்கு கார ணம் இறுதித் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் போதனைகள் அல்லவா? முஹம்மது நபி(ஸல்) அவர்களைத் தூற்றுபவர்களே நீங்கள் யாரைத் தூற்றுகிறீர்கள் என்று சிந்தியுங்கள். யூதர்கள் மர்யமை அவதூறு கூறி நிந்திக்கின்ற போது, கிறித்தியர்களாகிய நீங்கள் உயர்வாக மதிக்கும் மர்யமை(மேரி) மிக உயர்வான பெண்ணாக மதிப்பதை விட உயர்வாக முஹம்மது நபி(ஸல்) அவர்கள் மதிக்கிறார்கள். அவ்வாறு மதிக்கும் இறுதி இறைத்தூதரையே நீங்கள் யூதர்களுடன் சேர்ந்து கொண்டு தவறான முறையில் நிந்திக்கிறீர்கள்.

1400 ஆண்டுகளுக்கு முன் யூதர்களும் நெறி நூல் அறியாதவர்களும் ஈசா(இயேசு)வைத் தூற்றினார்கள். மர்யம்(அலை) (மேரி) அவர்களுக்கு அவதூறு கூறினார்கள். ஈசா(அலை) அவர்களை துன்புறுத்தினார்கள். இயேசுவை சிலுவையில் அறையவும் முற்பட்டார்கள். ஆனால் அல்லாஹ் அவர்களை தன்னளவில் உயர்த்திக் கொண்டான். ஆனால் முஹம்மது நபி(ஸல்) அவர்களும், முஸ்லிம்களும் அவர்களின் பிறப்பை தூய்மையானது என மேன்மைப்படுத்தினார்கள். அல்குர்ஆன் மர்யம்(மேரி) (அலை) அவர்களைத் தூற்றும் யூதர்களுக்கு கொடுக்கும் உண்மையான விளக்கத்தை அவதானியுங்கள்.

அல்குர்ஆனின் பார்வையில் மரியமின் மாண்புகள் உம்மைத் தூய்மைப்படுத்தினான்; அகிலத்துப் பெண்கள் அனைவரைவிடவும் உம்மை மேன்மையாக்கினான்’ என வானவர்கள் கூறியதை எண்ணிப் பாருங்கள். (அல்குர்ஆன் 3:42)

மரியம்(அலை) அவர்களின் சிறப்பு குறித்து பைபிள் புதிய ஏற்பாட்டில் காணப்படுவதாவது: “”மரியமே! அல்லாஹ் உம்மைத் தேர்ந்தெடுத்தான்; பிரவேசித்து கிருபை பெற்றவளே, வாழ்க கர்த்தர் உன்னுடனே இருக்கிறார். ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள் என்றான். (லூக்கா: 1:28) யூதர்கள் மர்யமை அவதூறாக கதைத்த போது நபி(ஸல்) அவர்கள் அல்குர்ஆன் மூலம் மர்யமின் மாண்பை உயர்வாக மதித்து, அவரது புனிதத் தன்மையை சமுதாயத்திற்கு முன் வைத்தார்கள். அத்துடன் அல்குர்ஆன், ஈசா (அலை) அவர்களின் பிறப்பின் உயர்வை பின் வருமாறு மனித சமுதாயத்திற்கு முன் வைக்கிறது. இதன்படி உலக மக்களில் சிலர் ஈசா (அலை) மீது முன் வைத்துள்ள அவதூறுகளை அல்குர்ஆன் பின்வரும் வசனங்கள் மூலம் களைய முனைவதை அவதானியுங்கள். “மரியமே! அல்லாஹ் தனது வார்த்தை (யால் பிறக்கப்போகும் குழந்தை)யைக் கொண்டு உமக்கு நற்செய்தி கூறுகின்றான். அவரது பெயர் மரியமின் மைந்தர் ஈசா மஸீஹ் என்பதாகும். அவர் இம்மையிலும், மறுமையிலும் மாண்பு மிக்கவராகவும் (இறைவனுக்கு) நெருக்கமானவர்களில் ஒருவராகவும் விளங்குவார்” என்று வானவர்கள் கூறியதை எண்ணிப் பாருங்கள்.

அவர் தொட்டில் பருவத்திலும் பேரிளமைப் பருவத்திலும் மக்களிடம் உரையாடுவார். நல்லோர்களில் ஒருவராகவும் திகழ்வார். (என்றும் கூறினார்). (அதற்கு) மர்யம், “”என் இறைவா! எந்த ஆணும் என்னைத் தொடாத நிலையில் எனக்கு எங்ஙனம் குழந்தை பிறக்கும்?” என்று கேட்டார். அதற்கு, “”அப்படித்தான்; தான் நாடுவதை அல்லாஹ் படைப்பான். ஒன்றை அவன் தீர்மானித்து விட்டால் அ(தைச் செயல் படுத்துவ)தற்கு அவன் சொல்வதெல்லாம் “ஆகு’ என்பதையே, உடனே அது ஆகிவிடும்” என்று (இறைவன்) கூறினான். (அல்குர்ஆன் 3:45-47)

எந்தளவு உயர்வாக அல்குர்ஆனும், முஹம்மது நபி(ஸல்) அவர்களும் மர்யத்தையும், இறைத் தூதர்களில் ஒருவரான ஈசா(அலை) அவர்களையும் உயர்வாக மதித்திருக்கின்றார்கள். இதனை பைபிள் புதிய ஏற்பாடு பின் வருமாறு விபரிக்கின்றது: தேவதூதர் அவளை நோக்கி; மரியாளே, பயப்படாதே; நீ தேவனிடத்தில் கிருபை பெற்றாய், இதோ, நீ அவள்(மர்யம்) இருந்த வீட்டில் தேவதூதன் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய்; அவருக்கு “இயேசு’ என்று பெயரிடுவாயாக. (லூக்கா:1:30,31)

எழுத வாசிக்கத் தெரியாத, அல்குர்ஆனுக்கு முன் அருளப்பட்ட நெறிநூல்களை ஓதத் தெரியாத உம்மி நபி முஹம்மது(ஸல்) அவர்கள் அல் லாஹ்வின் இறை அறிவைப் பெற்றே இந்த மறைவான செய்திகளை வெளிப்படுத்துகிறார்கள். அன்று யூதர்கள் ஈசா(அலை) அவர்களை ஒரு நல்ல மனிதராகவே ஏற்கவில்லை; மிக மோசமாக விமர்சித்தனர். ஈசா(அலை) அவர்களின் பிறப்பை அல்லாஹ் ஆதம் அவர்களின் படைப்புடன் ஒப்பிட்டு யூதர்களுக்கும், ஏனைய நிந்திப்பவர்களுக்கும் பதில் அளிக்கும் அடிப்படையில் விளக்குகிறான், அவதானியுங்கள்.

அல்லாஹ்விடம் ஈசாவின் நிலை, ஆதமின் நிலையைப் போன்றதே, அவரை(ஆதமை) மண்ணிலிருந்தே அவன் படைத்தான், பின்பு அவரை நோக்கி “ஆகு’ என்றான். உடனே அவர் ஆகிவிட்டார். (அல்குர்ஆன் 3:59)

பைபிளின் புதிய எற்பாட்டில் மரியால் தனக்கு எவ்வாறு குமாரன் பெறமுடியும். புரு ­ன் இல்லையே என கேட்பதையும், தேவன் கொடுக்கும் பதிலையும் அவதானியுங்கள். அதற்கு மரியாள் தேவதூதனை நோக்கி; இது எப்படியாகும்? புருஷனை அறியேனே என்றாள். (லூக்கா : 1:34)

இக்கேள்விக்கு பைபிள் மூலம் கொடுக்கப்படுகின்ற பதிலை அவதானியுங்கள். தேவனாலே கூடாத காரியம் ஒன்றுமில்லை என்றான். (லூக்கா: 1:37)

கிறித்தவர்களில் பெரும்பான்மையானோர் அவர் உயர்த்தப்பட்ட பின் வழிதவறினார்கள். அவர் தந்தை இன்றிப் படைக்கப்பட்டதனால் அவரை இறைவனின் மகன் எனவும், மரியாலை இறைவனின் மனைவி எனவும் கூறினர். ஈஸா (அலை), தான் இறைவனின் தூதர் என உறுதிப்படுத்த இறைவனின் அங்கீகாரத்துடன் பல அற்புதங்களை நிகழ்த்திக் காட்டினார். இதனால் இறைவன் மூவர் அவர்கள் தேவன், மகன், மனைவி எனக்கூறி கிறித்தவ கொள்கையை உருவாக்கினர். இதனையும் அல்லாஹ் அல்குர் ஆன் மூலம் மறுக்கின்றான்.

இறைத்தூதர் ஈசா(இயேசு) (அலை) அவர்கள் ஆண் துணையின்றி, தந்தை இல்லாது பிறந்த காரணத்தினால் அவரை தெய்வ குமாரன் எனக் கூறினர். ஆனால் ஆதம்(அலை) அவர்களை தாயும், தந்தையும் இன்றி மண்ணால் அல்லாஹ் படைத்தான். அதேபோல் ஹவ்வா(அலை) தாய், தந்தையின்றி ஆதமின் விலா எலும்பினால் படைக்கப் பட்டார்கள். இவர்களை ஏன் கிறித்தவர்கள் இறைவனின் மகனாக ஏற்கவில்லை. ஆகவே இறைவனுக்கு மகனோ அல்லது மனைவியோ இல்லை. இது அல்லாஹ்வை நிந்திக்கும் பெரும் பாவச் செயலாகும். மறுமை நாளில் அல்லாஹ் ஈசா(அலை) அவர்களிடம் விசாரிப்பதாகவும் அதனை அத்தூதர் மறுப்பதாகவும் அல்குர்ஆன் விளக்குகிறது.

“மரியமின் மைந்தர் ஈசாவே! அல்லாஹ்வை விடுத்து என்னையும் என் தாயாரையும் கடவுள்களாக ஆக்கிக்கொள்ளுங்கள் என்று நீர் மக்களி டம் சொன்னீரா?” என்று (மறுமையில்) அல்லாஹ் கேட்பதை (நபியே!) நீர் எண்ணிப் பார்ப்பீராக.

அப்போது அவர் “”நீ தூயவன், எனக்கு தகுதியில்லாத ஒன்றைச் சொல்ல எனக்கு எந்த உரிமையும் கிடையாது. நான் அவ்வாறு சொல்லியிருந்தால் அதை நிச்சயம் நீ அறிந்திருப்பாய்; என் உள்ளத்தில் உள்ளதை நீ அறிவாய்; ஆனால் உன் உள்ளத்தில் உள்ளதை நான் அறியேன்; நிச்சயமாக நீயே மறைவானவற்றை நன்கு அறிந்தவன்.” என்று கூறுவார். நீ எனக்கு கட்டளையிட்டதைத் தவிர – அதாவது என் இறைவனும் உங்களின் இறைவனுமாகிய அல்லாஹ்வை வழிபடுங்கள் என்பதைத் தவிர -வேறெதையும் நான் அவர்களிடம் கூறவில்லை. நான் அவர்களிடையே இருந்தவரை அவர்களைக் கவனித்துக் கொண்டிருந்தேன். என்னை நீ கைப்பற்றிக் கொண்டபோது,  நீயே அவர்களைக் கண்காணிப்ப வனாக இருந்தாய், நீயே அனைத்துப் பொருட்களின் கண்காணிப்பாளன் ஆவாய். அவர்களை நீ வேதனை செய்தால், அவர்கள் உன் அடியார்களே, அவர்களுக்கு நீ மன்னிப்பு வழங்கினால் நிச்சயமாக நீ வல்லமை மிக்கவனும் ஞானம் நிறைந்தோனும் ஆவாய் (என்றும் அவர் கூறினார்). (அல்குர்ஆன்:5:116-118)

Previous post:

Next post: