பாவ மன்னிப்பு :

மூமின்களே! நீங்கள் அனைவரும் அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடுங்கள்! நீங்கள் (மறுமையில்) வெற்றி பெறலாம். (அல்குர்ஆன் 24:31)

தினமும் எழுபது தடவைக்கும் அதிகமாக அல்லாஹ்விடம் நான் பாவமன்னிப்புத் தேடுகிறேன்” என்று நபி(ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) நூல்: புகாரி

“மனிதர்களே! அல்லாஹ்விடம் பிழை பொறுக்கத் தேடுங்கள்! ஏனெனில் (எல்லாப் பாவங்களும் மன்னிக்கப்பட்டுவிட்ட) நானே நாளொன்றுக்கு நூறு முறை (அல்லாஹ்விடம்) பிழை பொறுக்கும்படி வேண்டுகிறேன்” என்று நபி(ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர் : அகர்இப்னுயஸார்(ரழி) நூல்: முஸ்லிம்

உலகில் சிறந்தவை

(உலகப்) பொருள்களில் நாங்கள் எதனைத் தேடிக் கொள்ளலாமா? என்று உமர்(ரழி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டபோது, நன்றி செலுத்தும் உள்ளத்தையும், திக்ரு செய்யும் நாவையும், மறு உலகக் காரியங்களில் உங்களுக்குத் துணையாக இருக்கக் கூடிய மூமினான மனைவியையும் தேடிக் கொள்ளுங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் பதில் தந்தனர். அறிவிப்பவர்: ஸவ்பான்(ரழி) நூல்: இப்னுமாஜா

பொறுப்பை நிறைவேற்று

நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்புடையோராவீர்! உங்கள் பொறுப்பில் உள்ளவை பற்றி (இறைவனால்) நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள்! ஒவ்வொரு தலைவனும் பொறுப்புடையவனாவான். ஒரு ஆண்மகன்; தன் குடும்பத்தினர் மீது பொறுப்புடையவனாவான். ஒரு பெண் தன் கணவனின் வீட்டுக்கும், அவனது குழந்தைக்கும் பொறுப்பாளியாவாள். (எனவே உங்கள் பொறுப்பை சரியாக நிறைவேற்றுங்கள்) ஏனெனில் நீங்கள் ஒவ்வொருவரும் தங்கள் பொறுப்பில் உள்ளவை பற்றி விசாரிக்கப்படுவீர்கள்! என்று நபி(ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு உமர்(ரழி) நூல் : புகாரி.

Previous post:

Next post: