குளிப்பு கடமையானவர் – குளத்தில் – குளிக்கலாமா? எந்த முறையில் குளிக்க வேண்டும்?

in 1996 ஆகஸ்ட்,ஐயமும்! தெளிவும்!!,கேள்வி-பதில் (தொகுப்பு)

ஐயமும்! தெளிவும்!!

  ஐயம் : குளிப்பு கடமையானவர் – குளத்தில் – குளிக்கலாமா? எந்த முறையில் குளிக்க வேண்டும்? ஹதீஸ் ஆதாரத்துடன் விபரம் தேவை?  குளத்தில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும ஆடு – மாடுகள் (மிருகங்கள்) குளிக்கின்றன. மேற்கொண்டு பெண்கள் மாதவிடாய் துணிகள் உட்பட கழுவுகின்றனர். E. ஜாபர் அலி, கத்தார்.

தெளிவு: தண்ணீரை எப்பொருளும் அசுத்தம் செய்ய முடியாது என்பதற்குக் கீழ்க்காணும் ஹதீஸ் ஆதாரமாக இருக்கிறது.   

    “புழாஆ” என்ற கிணற்றில், நாய்களின் மாமிசம், மாதவிடாய்த்துணிகள், மனிதர்களின் கழிவுப் பொருட்கள் போடப்பட்டு வந்தன. அந்தக் கிணற்று நீரைப் பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்ட போது, தண்ணீரை எந்தப் பொருளும் அசுத்தப்படுத்த முடியாது என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஸயீதுல் குத்ரீ(ரழி)

நூல்கள் :அஹ்மத், அபூதாவூத், நஸயீ,

இப்னுமாஜ்ஜா, தாரகுத்னீ, ஹாக்கிம், பைஹகீ.

    ஒரு கிணற்றைப் பற்றியே நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு கூறி இருக்கின்றார்கள். நீங்களோ குளத்தில் குளிப்பது பற்றிக் கேட்டிருக்கிறீர்கள்.

    கிணற்றை விட குளம் அளவில் பெரிதாகவே இருக்கும். எனவே குளிப்புக் கடமையானவர் குளத்தில் குளிப்பதற்குத் தடையேதும் இல்லை. எந்த முறையில் குளிக்க வேண்டும் என்று கேட்டுள்ளீர்கள். அதைக் கீழ்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது.

    நபி(ஸல்) அவர்கள் கால்களை விட்டுவிட்டு தொழுகைக்கு ஒளூ செய்வது போன்று ஒளூ செய்வார்கள். மேலும் தங்கள் மர்ம ஸ்தலத்தையும் உடலில்பட்ட அசுத்தங்களையும் கழுவுவார்கள். பின்னர் தங்கள் மீது தண்ணீரை ஊற்றுவார்கள். பின்னர் சிறிது நகர்ந்து நின்று தங்கள் இரு கால்களையும் கழுவுவார்கள். இதுதான்  நபி(ஸல்) அவர்ளின் கடமையான குளிப்பாக இருந்தது.

மைமூனா(ரழி), புகாரீ

குளத்தில் குளிக்கும் போது தண்ணீரில்தான் நிற்க வேண்டிவரும். எனவே ஒளூவுடைய நிய்யத்தில் கால்கள் தவிர்த்து இதர உறுப்புகளைக் கழுவிக் கொண்டு குளிக்க ஆரம்பித்து, குளத்தை விட்டு வெளிவரும் போது கால்களைக் கழுவிக் கொண்டு வெளியேறினால், ஒளூவும் முழுமையாகிவிடும்.

Previous post:

Next post: