ஐயமும்! தெளிவும்!!
ஐயம்: பெண் பிள்ளைகள் பெற்றெடுப்பதற்கு மனைவியை மட்டும் குறை கூறும் ஆண் ஆதிக்க வர்க்கத்தின் வாயடைக்க நல்லதொரு பதிலை தாருங்கள். பாத்திமா, திருவான்மியூர்.
தெளிவு: பெண்களிடையே போதிய கல்வியறிவு இன்மையே ஆண் ஆதிக்க வர்க்கத்தின் அறிவற்ற, நியாயமற்ற இது போன்ற கூற்றுகளுக்குக் காரணமாகும். ஓரளவு S.S.L.C அல்லது +2 வரையிலாவது பெண்கள் கல்வியறிவு பெற்றிருப்பார்களானால் இது போன்ற வினாக்களுக்கு அழகாக நியாயமான விடை அளிக்க முடியும். நாம் கூறப்போகும் பதில் தாங்களும் அறிந்ததே!
1. ஆண் பிள்ளையோ, பெண் பிள்ளையோ அதற்கான வித்தை மனைவியின் கர்ப்பப்பையில் செலுத்தியவர்ன கணவனான ஆண்தான்.
2. ஆண், பெண் பிள்ளைகள் நிர்மாணிக்கும் X,Yகுரோமோசோம்ஸ் என்ற இனப்பெருக்க செல்கள் கணவனின் ஆண் விந்தணுக்களில் தான் உள்ளது. மனைவியின் அண்ட அணுவில் இல்லை. பெண்ணின்
அண்ட அணுவில் X,Yஎன்ற இனப் பெருக்க அணுக்கள் மட்டுமேயுள்ளன. ஆணின் Xzரோமோசோம் பெண்ணின் Xயுடன் சேருகையில் பெண்பிள்ளையும், ஆணின் Yகுரேமோசோம் பெண்ணின் Xவுடன் சேரும்போது ஆண் பிள்ளையும் உருவாவதாக இன்றைய நவீன மருத்துவ துறைகள் கண்டறிந்துள்ளன. இதனடிப்படையில் ஆண், பெண் பிள்ளைகளை நிர்மாணிக்கும் பொறுப்பு ஆணின் விந்தணுக்களான Xக்ஷுக்கு இருக்கிறதேயன்றி பெண்ணின் X, Xக்கு இல்லை என்பது தெளிவாகிறது.
3.பெண்ணின் அண்ட அணு (Ovum)எவ்வித அசைவுமின்றி மனைவியின் கர்ப்பப்பையில் உள்ளது. கணவனால் பீச்சப்படும் விந்தனுக்கள்தான் போட்டிப் போட்டுக் கொண்டு நீந்தி சென்று பெண்ணின் அண்ட அணு (Ovum)வுடன் சேர்ந்து சூழ் கொள்கிறது. ஆணின் விந்தணுவிலுள்ள Xஅணு(Ovum)த்துடன் சேர்ந்தால் பெண் Y சேர்ந்தால் ஆண். இங்கும் ஆணின் விந்தணுவின் முயற்சியே ஆண், பெண் சிசு உருவாக காரணமாகிறது. பெண்ணின் அண்ட அணு (Ovum)ஆணின் X யோ தேர்ந்தெடுப்பதில்லை. ஆணின் X,Yதான் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.
எனவே ஆண், பெண் பிள்ளைகள் உருவாவதற்கு முழு முதற்காரணமே ஆண்தான். பெண்ணல்ல. இதற்கு பெண்களை காரணமாக்குவது அநீதமாகும். இவையனைத்தும் அல்லாஹுவின் நாட்டத்தை குறைக்காணும் ஆண் ஆதிக்க வர்க்கத்தின் அறியாமையாகும்.