நல்லோர்க்கு கிடைத்த சொல்லடிகள்

in 1989 நவம்பர்

குர்ஆனின் நற்போதனைகள்:           தொடர் : 10

    தொகுப்பு : ஏ. முஹம்மது அலி, M.A., M.Phil.,

1. (நம்) தூதர்களிலிருந்து ஒருவர் வரும்போதெல்லாம், அவர்கள் அவரை சூனியக்காரர் அல்லது பைத்தியக்காரர் என்று கூறாமல் இருந்ததில்லை.     (51:52)

2. அவர்கள் அவரை விட்டுப் பின்வாங்கிக் கொண்டு (மற்றவர்களால்) இவர் “கற்றுக்கொடுக்கப்பட்டவர்; பைத்தியக்காரர்” என்று கூறினார்.          (44:14)

3. மூஸா(அலை) அவர்களிடம், நமது தெளிவான அத்தாட்சிகளுடன் வந்தபோது அவர்கள் “இது இட்டுக்கட்டப்பட்ட சூனியமேயன்றி வேறில்லை”. இன்னும் “நம்முடைய மூதாதையர்களிடமும் இதைக் கேள்விப்பட்டதில்லை” என்று கூறினார்.            (28:36)

4. ஃபிர்அவ்னின் சமூகத்தாரைச் சேர்ந்த தலைவர்கள், (மூஸாவை நோக்கி)” இவர் நிச்சயமாகத் திறமைமிக்க சூனியக்காரரே” என்று கூறினார்கள்.          (7:109, 26:34)

5. ஃபிர்அவ்ன், ஹாமான், காரூன் அனைவரும் (மூஸாவை) இவர் பொய்யுரைப்பவர், சூனியக்காரர் என்று கூறினார்கள்.       (40:24)

6. (ஃபிர்அவ்ன் தன்) வல்லமையின் காரணமாக (மூஸாவைப்) புறக்கணித்து” “இவர் ஒரு சூனியக்காரர் அல்லது பைத்தியக்காரர் என்று கூறினான்.       (51:39)

7. ஃபிர்அவ்ன் “நிச்சயமாக உங்களிடம் அனுப்பப்பட்டிருக்கிறாரே உங்களுடைய தூதர் (அவர்) ஒரு பைத்தியக்காரரே ஆவார்” என்று கூறினான்.   (26:27)

8. இவர்களுக்கு முன்னர் நூஹின் சமூகத்தினர் (மறுமையைப்) பொய்யாக்கினார். ஆகவே அவர்கள் நம் அடியாரைப் போய்ப்பித்து (அவரைப்) பைத்தியக்காரர்” என்று கூறினார்; அவர் விரட்டவும் பட்டார்.     (54:9)

9. (தமூது கூட்டத்தார், ஸாலிஹ்(அலை) அவர்களை நோக்கி) நம்மிடையே இருந்து இவர்மீது தானா (நினைவுறுத்தும்) நல்லுபதேசம் இறக்கப்பட வேண்டும்! அல்ல. அவர் “ஆணவம் பிடித்த பெரும் பொய்யர்” என்று கூறினர்.      (54:25)

10. (நூஹ் (அலை) கூட்டத்தினர்) இவர் “ஒரு பைத்தியக்கார மனிதரேயன்றி வேறில்லை” என்று கூறினர்.    (23:25)

Previous post:

Next post: